Thursday, January 27, 2011

தோல் பாவைக்கூத்து.

என்னவோ செய்கிறாளே? என்று
தலை தூக்கிப்பார்க்கையில் தான்,
என் கால்விரல்களை த்தொட்டு
கண்களில் ஒற்றிக்கொண்டே ...
"இன்னைக்கு நம்ம கல்யாண நாளுங்க"
என்று வண்ணமதி சொன்னபோது,
எனக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

"லட்சுமியக்கா லீவு..
இன்னைக்கு வேலைக்கு வராது...
அதனால வெளிய பூட்டிட்டு ப்போறேன்...
சாப்பாடு பக்கத்துலயே இருக்கு...
பேசாம டி.வி.ய பாருங்க...
ஆபிஸ்ல இருந்து சீக்கிரமே வந்துடுவேன்"
என்ற போது படபடப்பும் பற்றிக்கொண்டது.

வழக்கம் போல
மாத்திரையின் மாயத்தால்,
இரவு எட்டுமணிக்கு
கண்விழித்தபோது,
தலை துவட்டிக்கொண்டிருந்தாள் வண்ணமதி.

அவளது அலுவலக
மடிக்கணினி அருகில்
அவள் வாங்கி வைத்திருக்கும்,
மல்லிகையிலிருந்து வரும் வாசனை,
நாசியில் நுழைந்து,
இதயத்தை ப்பிசைந்தது.

துண்டை ச்சேரில் போட்டவள்,
பூவை எடுத்து,
கொஞ்சம் கிள்ளி,
ரமணர் படத்துக்கு வைத்துவிட்டு,
மீதியை தலையில் ஏற்றியபடி....
பீரோவைத்திறந்து,
இடுப்பு பெல்ட்டுடன் கூடிய,
செயற்கை ஆணுறுப்பை
எடுத்துக்கொண்டு,
ஏதோ ஒரு ஹிந்திப்பாடலை,
முணுமுணுத்தபடி...
என் அருகில் வந்து,
என் இடுப்பைச்சுற்றி,
லாவகமாய் பொருத்தியபோது....

என்னையறியாமல், என் கண்களில்..
கசிந்த கண்ணீரை ..புறங்கையால் மறைத்துக்கொண்டேன்.28 comments:

♠ ராஜு ♠ said...

கவிதையும் அதன் தலைப்பும் கச்சிதம்!

MANO நாஞ்சில் மனோ said...

ஹொ மனதை பிசையும் கவிதை, சூப்பர்......

ஜெரி ஈசானந்தன். said...

அன்புக்கு நன்றி ராஜு.

ஜோதிஜி said...

இதுவரைக்கும் எத்தனையோ கவிதைகள் படித்து இருப்பேன். ஆனால் இது கவிதை என்பதை விட மனதிற்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளுக்கு மனதை விட்டு அகலாது.

பிரபு எம் said...

//கசிந்த கண்ணீரை ..புறங்கையால் மறைத்துக்கொண்டேன்.//

இது ஒவ்வொரு வாசகனுக்கும் பொருந்தும்...

ரொம்ப அழுத்தமான பதிவு மாமா....

நெருப்புக்கு மேல் ஒரு நூல் கட்டி நடந்திருக்கீங்க... ஒரு வார்த்தை பிசகியிருந்தாலும் பேராபத்து...
ஆனால் முழுக்க முழுக்க உணர்வுப் பூர்வமாக.... ஒரு சிறுகதையின் கருவைக் கவிதையா உருக்கிக் கொடுத்திருப்பது வியப்புக்குரியது! வலி.. வேதனை.... வேண்டாம் இது விரோதிக்கும்...

//கசிந்த கண்ணீரை ..புறங்கையால் மறைத்துக்கொண்டேன்.//

அருமை..

பிரபு எம் said...

"தலைப்பு" படித்துமுடித்தபின் மீண்டும் கவிதை சொல்லுது..! சிறந்த தேர்வு..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

என்னே கற்பனை........மனதை நெருடும் கவிதை நண்பரே.......

ஆனந்தி.. said...

ம்ம்...வலிமையான...மனதை பிசையும் கவிதை ஜெர்ரி..

சி. கருணாகரசு said...

கவிதை மிக அதிர்வு....

பாராட்டுக்கள்

Chitra said...

so sad.....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சுவாமிநாதன் said...

// என்னையறியாமல், என் கண்களில்..
கசிந்த கண்ணீரை ..புறங்கையால் மறைத்துக்கொண்டேன். //

அருமையான வரிகள்

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நாஞ்சிலாரே.

செ.சரவணக்குமார் said...

சூப்பர் தலைவரே.

வருணன் said...

மிக மிக கவனிக்கத் தக்க முயற்சி. தங்களது சொல்லாடல் உரைநடை பாங்கில் இருப்பினும், பாடுபொருளின் தேர்வில் சாதித்து விட்டீர்கள். எல்லாருடைய மனநிலையும், அதன் ஏக்கங்களும் இயலாமைகளும் கவிமொழியில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமே...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.

ஜெரி ஈசானந்தன். said...

ஜோதிஜி அவர்களின் அன்பு, என் பாக்கியம்.

ஜெரி ஈசானந்தன். said...

மாப்பிளை பிரபுவுக்கு...நன்றியும்,அன்பும்.

ஜெரி ஈசானந்தன். said...

நித்திலம் -சிப்பிக்குள் முத்துவின் தொடர்ந்த அன்பிற்கு நன்றிகள்.

ஜெரி ஈசானந்தன். said...

ஆனந்திக்கு நன்றிகள் பல..

கே.ஆர்.பி.செந்தில் said...

உள்ளிருந்து எழும் கேவலும், வெறுமையும்... இக்கவிதையின் விளைபொருளாய் ...

ஜெரி ஈசானந்தன். said...

கருணாகரசுக்கு நன்றியும்,அன்பும்.

ஜெரி ஈசானந்தன். said...

Thank you chitra.

ஜெரி ஈசானந்தன். said...

சுவாமி நாதனுக்கு நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

பாசப்பறவை சரவணக்குமாருக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

வருணன் வருகைக்கு நன்றியும்,அன்பும்

ஜெரி ஈசானந்தன். said...

கே.ஆர்.பி.செந்திலுக்கு நன்றிகள்.

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

உங்களோடு... said...

இதயத்தை செயல் இழக்க செய்த உணர்ச்சிகளின் கலவை....