Wednesday, September 7, 2011

"Some" போகம்.


தடுமாறும்

தருணங்களில்,

ஊன்றுகோலாய்

உதவுகிறது,

"நடுவிரல்".


Friday, August 26, 2011

வேடிக்கை மனிதனா நீ?

Saturday, June 25, 2011

" தின்னக்கொடுப்பவளின் எண்ணக் குறிப்புகள்."
முதன் முதலாய் தொழிலுக்கு
முகங்குப்புற த்தள்ளியவனின்
முகம்.

முதல் வாடிக்கையாளன்.

முதல் ஆணுறை.

முதல் "குழு வதை."

முதல் மாத்திரை.

முதல் கஞ்சா.

முதல் ஊசி.

பண்டமாற்றாய் சக உருப்படிகளுடன் வாய்த்த
முதல் பயணம்.

முதல் ரெய்டு.

என நீளும் இந்த வாதைகளின் பட்டியல்
தாங்கவொண்ணா க்கவுச்சியா
கடைசி வர த்துரத்துது.

Saturday, May 28, 2011

வீ..மிஸ்..யு ரஜினி.
\நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் சிங்கப்பூர் செல்வது முன்பு அவரது ஆடியோ பதிவு மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த ஆடியோவை கேட்கும் போது மனசு மிகவும் துடிக்கிறது,ரஜினி ஒரு அதீத ஆண்மையின் அடையாளம்....என்று சொல்வதை த்தவிர என்னால் இங்கு ஒன்றும் எழுதமுடியவில்லை.அவர் பூரண குணமடைந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என எல்லாம் வல்ல இயற்கையை ப்பிரார்த்திக்கிறேன்.Tuesday, April 12, 2011

நம்ம வோட்ட இப்படி போட்டா என்ன பாஸ்? 49[o]

இன்று காலையில் முகநூலில் இருந்த போது...அன்பு நண்பர்..வார்த்தை நெசவாளர் ஈரோடு கதிர் இந்த உணர்வான பாடலை பகிர்ந்து இருந்தார்,,,இந்த பாடல் சில நாட்களுக்கு முன்னால் வந்திருந்தால்.....இன்னும் நிறைய பேருக்கு சென்றடைய ச்செய்துருக்கலாம்.இப்போதும் ஒன்றும் குறையில்லை...நண்பர்களே...ஒருதடவை இந்த வீடியோவை கேளுங்க,...பிடுச்சிருந்தா....மத்தவங்களுக்கும் பரிந்துரை பண்ணுங்க......


Thursday, March 31, 2011

தீ

அன்பே..
ஆச்சரிய அமுதூட்டி
உயிர்த்தீயை
வளர்க்கிறாய்.

அதிசயங்களின் பூமியில்
என்றாவது ஒருநாள்
என்னை க்குடியேறவும்
அனுமதிப்பாய்.

அதனால் தான்...
எனை க்கடக்கும்
முகங்களில்
உச்சம் கிளரும்
உன் மச்சம் தேடி..
உன்மத்தமாய் அலைகிறேன்.Thursday, January 27, 2011

தோல் பாவைக்கூத்து.

என்னவோ செய்கிறாளே? என்று
தலை தூக்கிப்பார்க்கையில் தான்,
என் கால்விரல்களை த்தொட்டு
கண்களில் ஒற்றிக்கொண்டே ...
"இன்னைக்கு நம்ம கல்யாண நாளுங்க"
என்று வண்ணமதி சொன்னபோது,
எனக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

"லட்சுமியக்கா லீவு..
இன்னைக்கு வேலைக்கு வராது...
அதனால வெளிய பூட்டிட்டு ப்போறேன்...
சாப்பாடு பக்கத்துலயே இருக்கு...
பேசாம டி.வி.ய பாருங்க...
ஆபிஸ்ல இருந்து சீக்கிரமே வந்துடுவேன்"
என்ற போது படபடப்பும் பற்றிக்கொண்டது.

வழக்கம் போல
மாத்திரையின் மாயத்தால்,
இரவு எட்டுமணிக்கு
கண்விழித்தபோது,
தலை துவட்டிக்கொண்டிருந்தாள் வண்ணமதி.

அவளது அலுவலக
மடிக்கணினி அருகில்
அவள் வாங்கி வைத்திருக்கும்,
மல்லிகையிலிருந்து வரும் வாசனை,
நாசியில் நுழைந்து,
இதயத்தை ப்பிசைந்தது.

துண்டை ச்சேரில் போட்டவள்,
பூவை எடுத்து,
கொஞ்சம் கிள்ளி,
ரமணர் படத்துக்கு வைத்துவிட்டு,
மீதியை தலையில் ஏற்றியபடி....
பீரோவைத்திறந்து,
இடுப்பு பெல்ட்டுடன் கூடிய,
செயற்கை ஆணுறுப்பை
எடுத்துக்கொண்டு,
ஏதோ ஒரு ஹிந்திப்பாடலை,
முணுமுணுத்தபடி...
என் அருகில் வந்து,
என் இடுப்பைச்சுற்றி,
லாவகமாய் பொருத்தியபோது....

என்னையறியாமல், என் கண்களில்..
கசிந்த கண்ணீரை ..புறங்கையால் மறைத்துக்கொண்டேன்.