Wednesday, December 8, 2010

"எங்க ஊர் I.T PARK."

மதுரையில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு வந்து பல வருடங்களாகி விட்டது,மதுரை காமராசர் பல்கலைக்கு சொந்தமான 300 ஏக்கர் இடத்தை அரசாங்கம் கையகப்படுத்தியது,[தற்போது பல்கலைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கரையும் மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராசனின் தந்தை பி.டி.ராசன் அவர்கள் கொடுத்தது.]உடனே சுதாரித்துக்கொண்ட ரியல் எஸ்டேட் மாபியாக்கள் சுத்துபட்டு ஏரியா முழுவதையும் கூட்டணி அமைத்து ....விலையேற்றி..இன்றைக்கு I.T.PARK வருதோ..இல்லையோ..வீட்டுமனையின் விலை..கற்பனைக்கு எட்டாத விலை.

இந்த பகுதியில் தான் எனது வீடும் உள்ளது,தினமும் இந்த "வரும்...ஆனா..வராது"நிலைமையில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவின் வழியாகத்தான் பயணம் செய்வேன்.ஒரு நாளைக்காவது இந்த பூங்காவிற்குள் போய் அப்பிடி என்னதான் நடக்குது என்று பார்த்து வர ஆசை,அது இன்றைக்கு தான் வாய்த்தது, உள்ளே,,கொஞ்சம் தொலைவுக்கு தார் சாலை மட்டும் போட்டு இருக்கிறார்கள், பிறகு எங்கு பார்த்தாலும் கருவேலங் காடாய் காட்சி தெரிகிறது,...ஆள் அரவமில்லை, டாஸ்மாக் பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன, சமூக விரோதிகள் தான் இந்த பூங்காவுடன் இப்போதைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருப்பது அங்கே காணக்கிடைக்கும் பொருட்களை வைத்து ப்பார்த்தால் தெரிகிறது.

இப்படி பரிதாபமாக க்காட்சி தரும் இந்த பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பேசிக்கொள்கிறார்கள், போலிஸ் காரர்கள் நிலைமை இன்னும் மோசம், மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் ரோந்து சுற்றும் High Way Patrol வண்டி எண்:669 -ல் பந்தாவாக பவனிவரும் இவர்கள் கிட்ட தட்ட வழிப்பறி கொள்ளையர்களாகவே மாறி இருக்கிறார்கள்.இவர்களை கவனித்து விட்டு எதையும் செய்யலாமாம், பத்து இருபது என சில்லரையாக கொடுத்தாலும் வாங்கி கொள்கிறார்களாம். இந்த நிலைமை இப்படியே போனா..பாவம் ஆட்சிக்கு த்தான் கெட்ட பேரு...குறைந்தபட்சம் I.T.பார்க் வருதோ..இல்லையோ..அங்க தொங்கி கொண்டிருக்கும் கதவுக்கு ஒரு பூட்டாவது போடலாமே.


22 comments:

Chitra said...

இப்படி பரிதாபமாக க்காட்சி தரும் இந்த பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பேசிக்கொள்கிறார்கள், போலிஸ் காரர்கள் நிலைமை இன்னும் மோசம்,...


........Illegal Task (I T ) park?????

Jeyamaran said...

ஹாஹா அங்க தான் எங்க காலேஜ் கூட இருக்கு அனால் இதுவரை அந்த இடத்த பார்க்கவில்லை ஜெர்ரி அண்ணனின் சமுக தொண்டிற்கு வாழ்த்துகள்

கே.ஆர்.பி.செந்தில் said...

இடமாவது ஒதுக்கி இருக்கங்களே, அதுக்கு சந்தோசபட்டுகுங்க..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//// போலிஸ் காரர்கள் நிலைமை இன்னும் மோசம், மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் ரோந்து சுற்றும் High Way Patrol வண்டி எண்:669 -ல் பந்தாவாக பவனிவரும் இவர்கள் கிட்ட தட்ட வழிப்பறி கொள்ளையர்களாகவே மாறி இருக்கிறார்கள்///////////

இதுதான் வேலியே பயிரை மேய்ந்தக் கதையென்று சொல்லுங்க .

சங்கவி said...

இடத்த பிளாட் போட்டு விக்காம இருந்தாங்களே சந்தோசப்படுங்க...

பிரபு . எம் said...

இவனுங்க இதைக் கட்டி முடிச்சா மதுரைப்பக்கம் வந்து வேலை பார்க்கலாம்னு நினெச்சா... நான் ரிடையர் ஆனதுக்கப்புறம்தான் நாட்டின அடிக்கல்லையே நகத்துவானுங்க போல...
ஜஸ்ட் நிலத்தோட விலையை ஏத்துறதுக்கு ஆடின ஸ்டண்ட் இது... சூப்பர் கான்செப்ட் மாமா .. நன்றி... :)

வானம்பாடிகள் said...

இப்புடி ஒரு இடம் இருக்கறத ஒரு பயலும் சொல்லலையேன்னு எத்தன பேருக்கு ஆட்டயப் போடுற யோசனையில தூக்கம் போகுமோ:)

சுவாமிநாதன் said...

தண்ணி ஊத்தி பேஸ்மட்டத்த ஸ்ட்ரோங் பண்ணுறாங்க, அப்பத்தான் பில்டிங்க இருக்கும் சார்..............

ரோஸ்விக் said...

//அங்க தொங்கி கொண்டிருக்கும் கதவுக்கு ஒரு பூட்டாவது போடலாமே.//

எல்லாத்தையும் அவுங்களே செய்யனுமா? நீங்க ஒரு பூட்டை வாங்கி போடுங்க தலைவரே! ;-)))

அப்படியே யாரையாவது பத்து எருமை மாட்டை வாங்கி உள்ளை அடைச்சுவைச்சு பால் வியாபாரம் பண்ணச்சொல்லுங்க.

நீங்க ஒரு சைக்கிள் ஸ்டாண்ட் செட் போட்டு வாடகைக்கு விடுங்க. உங்களை தொழில் முனைவோர் லிஸ்ட்-ல சேர்த்திட சொல்லுவோம். :-)))

ரோஸ்விக் said...

இது எந்த ஏரியாவுல இருக்கு சார்?

ஜெரி ஈசானந்தன். said...

வருகைக்கு நன்றி சித்ரா

ஜெரி ஈசானந்தன். said...

தம்பி ஜெயமாரனுக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

கே.ஆர்.பி செந்திலுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பனித்துளி சங்கர் ..அன்பும் நன்றியும்.

ஜெரி ஈசானந்தன். said...

சங்கவியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ம்ம்....எல்லாம் கொடுமைதான்.....

ஜெரி ஈசானந்தன். said...

மாப்புள பிரபு ...போற போக்க பாத்தா நீ மும்பையிலேயே செட்டில் ஆகணும் போல.

ஜெரி ஈசானந்தன். said...

வானம் பாடும் பாலா அண்ணாவுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

சுவாமி நாதனுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ரோஸ் விக் இது நாகமலை பகுதியில் உள்ளது. நீங்க சொல்லறது மாதிரி பூட்டு வாங்கி போட்டுறலாம் ....ஆனா சாவிய என்ன பண்ண?

ஜெரி ஈசானந்தன். said...

வருகைக்கு அன்பும் நன்றியும் நித்திலம்

sakthi said...

கே.ஆர்.பி.செந்தில் said...
இடமாவது ஒதுக்கி இருக்கங்களே, அதுக்கு சந்தோசபட்டுகுங்க..

உண்மை தான் ஜெரி இப்போதைய நிலைமைக்கு ஏதோ இடமாவது கிடைத்ததே என பெருமிதம் கொள்ளவேண்டியது தான் :(