Saturday, December 4, 2010

கழிவிரக்கம்.

வழக்கமாய்
வீசி எறிந்து செல்லும்
பேப்பர்க்காரன் கூட,
இப்போதெல்லாம்
பவ்யம் காட்டிச்செல்கிறான்.

வலிய..வலிய
ஊற்றுகிறான்
பால்க்காரன்

பலசரக்கு பாக்கி தர,
பத்து தேதி தாண்டினாலும்,
"பரவாயில்ல ..
இப்ப என்ன அவசரம்?"
என்கிறான் மளிகை கடைக்காரன்.

உங்களுக்கு த்தெரியுமா?
இவையெல்லாம்
"கைம் பெண்ணிற்கான
கழிவிரக்கமென்று..?"



31 comments:

Chitra said...

அந்த படமே, கவிதையில் உள்ள வலியை சொல்கிறது.

RVS said...

பேப்பர், பால், பலசரக்கு சொல்கிறது அவள் கைம்பெண் என்று.. நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது.. ;-)

ankithavarma said...

கேடுகெட்ட ஆண்கள் உள்ள சமுதாயத்தில் மானமுள்ள பெண் வாழ முடியாது, உண்மை தான். .. ஆனால் பழிச்சொல் சுமப்பதோ அவள். தான். வலிமிகு கவிதை அருமை. ...

வெறும்பய said...

வலியை சொல்லும் வரிகள்...

ஜெரி ஈசானந்தன். said...

வருகைக்கு நன்றி சித்ரா.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி RVS..,,,துணையற்று நிற்கும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைய ..அவளை சுரண்ட...காத்திருப்போரின் பட்டியல் நீளமானது..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமை....நண்பரே. கவிதையின் கருத்தைவிட, தங்கள் பின்னூட்டத்தின் தெளிவான கருத்து உடன்பாடு....அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

சிநேகிதன் அக்பர் said...

கழிவிரக்கம் என்பதை கழிவு கெட்ட இரக்கம் எனலாம் போல...

மனதை தொட்ட கவிதை அண்ணா.

ஜோதிஜி said...

வாத்தியார்ன்னா சும்மாவா சொன்னாங்க?

ஹேமா said...

ம்ம்....சின்ன வரிகளில் சொல்லி முடித்தாலும் வாழ்நாள் முழுதும் அவளின் அவஸ்தை !

ஸாதிகா said...

கவிதை மனதினை பிழிந்து விட்டது ஜெரி சார்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மெல்ல வலி ஏற்றும் வார்த்தைகள் . அருமையானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி

செ.சரவணக்குமார் said...

கவிதையும் அதற்கான படமும் மிக அருமை ஜெரி அண்ணா.

நிலாமதி said...

படமும் பதிவும் அழகாய் வலி சொல்லுகிறது. பாராட்டுககள.

எஸ்.கே said...

அருமை!

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி வெறும்ப ஜெயந்த்.

ஜெரி ஈசானந்தன். said...

அங்கிதா வர்மா. நலமாய் உள்ளீர்களா? வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நித்திலம்.

ஈரோடு கதிர் said...

நேரில் கண்டிருக்கிறேன்!!!!

தேவராஜ் விட்டலன் said...

உணர்வு பூர்வமான வரிகள்
தேவராஜ் விட்டலன்

கே.ஆர்.பி.செந்தில் said...

அனலாய் சுடுகிறது கவிதை ...

பிரபு . எம் said...

க்ளாஸ்!!
சட் டென ஏறும் புருவங்கள் இறங்க நேரமாகிறது...

பார்ப்பது தானே வாழ்க்கையில்... ச்சே..

சுவாமிநாதன் said...

ஆழமான கவிதை.......

ஜெரி ஈசானந்தன். said...

தம்பி அக்பர்..வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி ஜோதிஜி.

ஜெரி ஈசானந்தன். said...

ஹேமாவின் வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ஸாதிகா மேடம்...நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பனித்துளி சங்கருக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பாசக்கார த்தம்பி சரவணனுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நிலாமதி :
எஸ்.கே :
ஈரோடு கதிர்:
தேவராஜ் விட்டலன்:
கே.ஆர்.பி.செந்தில்:
மாப்புள பிரபு:
சுவாமி நாதன்: உங்கள் அனைவருக்கும் என் அன்பும்,நன்றியும்.

cheena (சீனா) said...

அன்பின் ஜெரி, கவிதை அருமை - கைம்பெண்ணின் நிலை - வலி - அதிகம் - ம்ம்ம்ம் - படமும் அருமை. ஆமா எப்ப கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சீங்க