Saturday, November 6, 2010

நான் ஷோபாசக்தி ஆவது எப்படி?

புலிகளை துரோகி என்றேன்.
அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள்.
ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன்.
பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள்.
பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,
நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன்.
எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள்.
போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன்.
சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன்.
என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.
வெளிப்படையாக வரவா என்றேன்.
இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான்
எங்களுக்கு வசதி என்றார்கள்.
இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன்.
அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும்
வீசப்பட்ட மக்களைக் காட்டினார்கள்;
கூடவே எலும்புக் கூடுகளையும்.
இப்போது நான் சொன்னேன்
அவர்களே அவர்களை அழித்துக் கொண்டார்கள் என்று.
இனி எனது நூல்கள்
ஜெர்மன், டேனிஷ், பிரெஞ்ச், மொழிகளிலும் வரும்....
நானும் மாற்றுக்கருத்துப் பாரம்பரியத்தில் வந்த ஒருவனாவேன்.

- யாழினி

நன்றி:கீற்று


28 comments:

அரவிந்தன் said...

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஷோபா சக்தி :(-

ஜெரி ஈசானந்தன். said...

இத கவிதையை எழுதியவர்...யாழினி.....கீற்று இணைய இதழில் படித்தவுடன் உங்களோடு பகிரவேனுமென்று நினைத்தேன்.நன்றி கீற்று....யாழினி.

ஜெரி ஈசானந்தன். said...

யாழினி செதுக்கிய இந்த பாரச்சிலுவை ஒன்றே போதும்...சோபா சக்தி தன் வாழ்நாள் முழுவதும் சுமந்தலைய....

கே.ஆர்.பி.செந்தில் said...

//இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஷோபா சக்தி :(-//

அரவிந்த் சார்.. ரொம்ப நாளா எழுதுவதில்லையே ஏன் ..?

அரவிந்தன் said...

//அரவிந்த் சார்.. ரொம்ப நாளா எழுதுவதில்லையே ஏன் ..//

என்னையும் ஒரு பதிவர் என்று கருதி கேட்ட தம்பி செந்திலுக்கு நன்றிகள் பல.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ம்ம்ம்....

தேவன் மாயம் said...

என்ன ஜெரி!! காட்டமான கவிதை!!

வானம்பாடிகள் said...

/யாழினி செதுக்கிய இந்த பாரச்சிலுவை ஒன்றே போதும்...சோபா சக்தி தன் வாழ்நாள் முழுவதும் சுமந்தலைய.../

ஆம். முற்றிலும் உண்மை. பகிர்வுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் அரவிந்தன்...நலமா?வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

கே.ஆர்.பி.செந்தில் நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நித்திலம்.

ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் தேவா..இது யாழினி எழுதிய கவிதை.

ஜோதிஜி said...

யாழினி செதுக்கிய இந்த பாரச்சிலுவை ஒன்றே போதும்...சோபா சக்தி தன் வாழ்நாள் முழுவதும் சுமந்தலைய....

ஜோதிஜி said...

என்னையும் ஒரு பதிவர் என்று கருதி கேட்ட தம்பி செந்திலுக்கு நன்றிகள் பல.

நிறைகுடம் தழும்பாதோ?

ஜெரி ஈசானந்தன். said...

வானம் பாடும் பாலாண்ணாவுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ஜோதி ஜி வருகைக்கு நன்றிகள்.

Padiham said...

//அவரவர்களுக்கான உலகம்,அதில் அவரவர்களுக்கான பயணம்,இதில் நானும் ஒரு வழிப்போக்கன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.//
மேற்கண்ட வரிகள்...
எங்கேயோ பார்த்தது போல இருக்கலாம் ஜெர்ரிக்கு...
''என்னடா, எழுதியவனே நானாயிருக்க, இது என்ன பொருத்தமற்ற யோசனை?''
உங்கள் மனக்குரல் விளங்கியவரை நான் அதிர்ஷ்டம் செய்தவன்...
பிரச்சனை எங்கேயென்றால், நீங்கள் எழுதியதை நீங்களே மறந்த மாயை எனக்கு தோன்றுகிறது.
ஷோபா சக்தியின் உலகத்தில் ஷோபா சக்திக்கான பயணம்...
அதில் ஷோபா சக்தி ஒரு வழிப்போக்கன்...
எங்கிருந்து புலிகளின் இடையூறும் ஆக்கிரமிப்பும் அவரை அல்லது அவர் சார்ந்த சமூகத்தை ஆட்கொண்டு துன்புறுத்தியதென்பதற்கு நீங்கள் எதிர் விமர்சனம் வைப்பது சரியானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
புலிகளால் இதுவரை எந்த இனமும் துன்புறுத்த படவில்லை, ஆக்கிரமிக்கப்படவில்லை என்று சொல்லிவிடுவதால் மட்டும் அது உண்மையாகி விடப்போவதுமில்லை...
அப்படி வெறுமனே மழுப்புவதனால் என்னுடைய பார்வையில் உங்களுக்கும், இன்று தமிழ்மக்களை கொடுமைக்குள்ளாக்கியிருக்கும் அந்த காடையர்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை...
இந்த கருத்துரையை நீங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு பதில் தருவீர்கள் என்று நம்புகின்றேன்...
மேலதிக விபரங்களுக்கு...
http://www.paa-maran.blogspot.com/

Anonymous said...

RAJAPAKSE IS GOOD. YOU TAMILIANS ARE THE PROBLEM
http://annakannan.blogspot.com/2010/11/blog-post.html

Anonymous said...

RAJAPAKSE IS GOOD. YOU TAMILIANS ARE THE PROBLEM
http://annakannan.blogspot.com/2010/11/blog-post.html
WE SUPPORT RAJAPAKSE. HE LIBERATED US. TAMILIANS ENJOY TRAVELING SRI LANKA

Rathi said...

புலிகளை விமர்சிக்கிறோம் என்கிற பேரில், அவர்களை குறை சொல்லத் தெரிந்தால் இங்கே பலர் தாம் புனிதர்கள் ஆகிவிடுவோம் என்று நம்புகிறார்களோ!! :))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

கீற்றில்.... வாசித்தேன்


நன்றி ஜெரி

Anonymous said...

WE LOVE PRESIDENT RAJAPAKSE. YOU TAMILIANS CREATE THE PROBLEM
http://annakannan.blogspot.com/2010/11/blog-post.html
PRESIDENT RAJAPAKSE LIBERATED US. TAMILIANS ENJOY SRI LANKAN HOSPITALITY.

ஹேமா said...

ஷோபா சக்தியை விமர்சிக முடியாது.
பச்சோந்திகளை விமர்சிக்க முடியும்!

ம.தி.சுதா said...

எங்கள் வலிகளும் வேதனைகளும் பலரது பேரை உலகறிய வைக்கும் போது தான் அதிகமாக வலிக்கிறது ஏன் எனக் கேட்கிறிர்களா சகோதரம் இருக்கு இல்லை என்பதை விட இல்லை என்று சொல்லிக் கொண்டால் கொஞ்சம் நிம்மதியாகவாவது வாழலாம்.

ஜெரி ஈசானந்தன். said...

பின்னூட்டம் இட்ட அனைத்து நல உள்ளங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.நேரமின்மையால் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை.

பிரபு . எம் said...

ரொம்பவும் காட்டமான க‌விதையா இருக்கே...
நிறைய பண்ணிட்டாருதான் ஷோபா ச‌க்தி

"கொரில்லா" ஒரு ந‌ல்ல‌ ப‌டைப்புன்னு நினைச்சிருக்கேன் அதைப் ப‌டிச்ச‌கால‌த்தில்...
ஆனால் அப்போ இருந்த‌ ஈழ‌த்தைப் ப‌ற்றிய‌ தேட‌லும் எண்ண‌மும் வேறுப‌ட்டது....

ஏன் மாமா எழுதுற‌தில்ல‌.. ரொம்ப‌ நாள் ஆச்சே...

உங்களோடு... said...

ஷோபா சக்தியின் மீது படிந்துள்ள சாயலை அறிய உதவியதற்கு நன்றி...