Saturday, October 16, 2010

"போர் முகங்கள்."

தலையை, தசையை, கண்ணை, கைகளை ஓவியமாக்கலாம். ஆற்றல் ஒன்றும் தேவையில்லை; பயிற்சியே போதும். ஆனால், பெருமூச்சை ஓவியமாக்குவது எப்படி? அதுதான் புகழேந்தியின் கலை. பாதிக்கப்பட்டவர்களின் பெருமூச்சையே புகழேந்தி ஓவியங்களாய் விதைக்கிறார். பார்க்கிறவனோ பெருமூச்சையல்ல - புயலை அவர் ஓவியங்களிலிருந்து அறுவடை செய்கிறான். துன்பப்படுகிறவர்கள், தாழ்த்தப்படுகிறவர்கள், ஒடுக்கப்படுகிறவர்கள், மிதிக்கப்படுகிறவர்கள், கொல்லப்படுகிறவர்கள் பற்றியே அவரது ஓவியங்கள் துடிப்போடு பேசுகின்றன.

கண்ணைக் கிழிக்காத, கருத்தில் உறைக்கின்ற வண்ணங்களாய் - மாந்தனின் இயல்பான விடுதலை உணர்வால் புடைத்து எழும் நரம்பாய் - தசையாய் - நாளமாய் - வெறும் அப்பல்களாய் இல்லாத வலிமைமிக்க வீச்சுக்களாய் - அவர் ஓவியங்கள்.

-
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.
******************************************************************************
கடந்த ஆண்டு மதுரை புத்தகக்கண்காட்சியில் ஓவியர் புகழேந்தி எழுதியுள்ள "தமிழீழம்"-நான் கண்டதும் என்னை க்கண்டதும்.என்ற புத்தகத்தின் மூலமாகத்தான் புகழேந்தியை ததெரிந்து கொண்டேன்.பக்கத்துக்குபக்கம் கவிஞர் காசி ஆனந்தன் சொன்னதைப்போல பெருமூச்சு தான் வருகிறது.அவரது ஓவியக்கண்காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அப்பொழுதேத்தொற்றிக்கொண்டது.என் காத்திருப்பு என்னை கைவிட்டுவிடவில்லை,இன்று மதுரையில் ஓவியர் புகழேந்தியின் ஈழத்தைப்பற்றிய கண்காட்சி வடக்குமாசி வீதியில் உள்ள தருமை ஆதீனம் சொக்கநாதர் திருமணமண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக,திரு.வை.கோ அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

நான் உள்ளே நுழைந்தபோது பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துகொண்டிருந்தார்,உணர்ச்சிபூர்வமாக பேசினார்.....இடையில் கலைஞருக்கே வந்திருக்கும் கொலைமிரட்டல்களைப்பற்றி கொஞ்சம் நகைச்சுவையாக பேசினார்...இன்னும் கொஞ்சம் போனால்..கலைஞருக்கு வான்வழி த்தாக்குதல் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக..கலைஞரே.. அறிக்கையும் விடுவார் என்றவுடன் சபை ஒருநிமிடம் சிரித்து அடங்கியது.பின் பேட்டி முடிந்து மண்டப்பதை விட்டு கிளம்பியவுடன் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கண்காட்சிக்கு வரத்தொடங்கினர்,ஓவியர் புகழேந்தியை சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டு ஓவியங்களை பார்க்கத்தொடங்கினேன்.

கொஞ்சம் கனத்த இதயத்தோடு புகைப்படங்களை எடுத்து முடித்து பார்வையாளர் கருத்துப்பதிவேட்டில் சட்டென மனசிற்குள் பட்டதை"தமிழீழம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது."என்று எழுதி பதிவிட்டு வந்தேன்.ஓவியர் புகழேந்தியை ப்போல நூற்றுக்கு ஒரு தமிழன் இருந்தால் போதுமே....."ஈழம் என்ற விடுதலை நெருப்பை அணையாமல் காக்க." என்ன நண்பர்களே..நான் சொல்வது உண்மைதானே.

ஓவியங்களை பிகாசாவில் பதிவிட்டு இருக்கிறேன்..ஒருநிமிடம் பாருங்கள்..அந்த போர் முகங்கள் சொல்லும் சேதி என்னவென்று.....


21 comments:

ஜெரி ஈசானந்தன். said...

ஓவியர் புகழேந்தியின் விலாசம்:
5-D,பொன்னம்பலம் சாலை,
கே.கே.நகர்,சென்னை-78
phone:044-24811189,mobile:9444177112,
email:oviarpugal@yahoo.com,
website:www.oviarpugazh.com

வி.பாலகுமார் said...

அண்ணே, தெரியத்தந்தமைக்கு நன்றி. கண்காட்சி எத்தனை நாள் நடைபெறுகிறது?

ஜெரி ஈசானந்தன். said...

தம்பி பாலா...நாளை வரை நடைபெறுகிறது.

S.Sudharshan said...

தகவலுக்கு நன்றி அண்ணா ... நிச்சயம் தர்மம் வெல்லும் ...

சற்று சிந்திப்போம் ...இன்று என்ன நாள் ..வெட்கம் கொள்வோம்
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

ஜெரி ஈசானந்தன். said...

வருகைக்கு நன்றி சுதர்சன்.

எஸ்.கே said...

மனதை உருக்கும் படங்கள்!

Chitra said...

ஓவியங்கள் - மனதை உலுக்குகின்றன.

ஜெரி ஈசானந்தன். said...

வருகைக்கு நன்றி எஸ்.கே

Jeyamaran said...

anna picasala oviyam parthen migavum arumai anna..............

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஓவியம்தான் என்றாலும் உயிர்க்கும் அய்யா..........

நிலாமதி said...

சோகங்களின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை ஈழத்தில் இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மன நிலை குழம்பி தொழில் இன்றி உறவுகளைபிரிந்து சமுதாய கலாசாரம் சிதைந்து குழந்தைகள் கல்வியின் பால் ஈர்ப்பின்றி மழுங்கடிக்க் படுகிறார்கள். ஆனாலும் என்றோ ஒரு நாள் உயிர்க்கும் என்ற நம்பிக்கை மட்டும் உண்டு . நன்றி நண்பரே. நட்புடன் சகோதரி நிலாமதி

நாடோடி said...

ப‌கிர்விற்கு ந‌ன்றி ஜெரி சார்.. க‌ண்டிப்பாக‌ அந்த‌ உண‌ர்வு வேட்கை அழியாது..

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

வானம்பாடிகள் said...

Thanks jery:(

தேவன் மாயம் said...

ஜெரி!! கண்ணீர் இன்னும் ஓயவில்லை! இனி வரும் நாட்கள் நல்லதாக அமையட்டும்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிக அருமையான படங்கள் .
நல்ல பகிர்வு .
பகிர்ந்தமைக்கு நன்றீங்க .

TechShankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

கே.ஆர்.பி.செந்தில் said...

புகழேந்தியின் ஓவிய கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன் .. ஈழ போரின் சாட்சியங்கள் அவை ...

kutipaiya said...

நல்ல பகிர்வு ஜெரி..இங்கே போகலாமென நினைத்தது.. ஆனால் முடியவில்லை...வருந்துகிறேன் :(

தேனம்மை லெக்ஷ்மணன் said...

தமிழீழம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது."என்று எழுதி பதிவிட்டு வந்தேன்//

உண்மைதான் ஜெரி.. பகிர்வு அருமை..

உங்களோடு... said...

தூரிகையில் தெறிக்கின்ற துயரம்!