Monday, September 20, 2010

சீனா ராசி ..குமர லக்னம்.


வலைச்சர சீனா ராசியில் குமர லக்னத்தில் உதவிகள் சுப ஜெனனம்.நைஜீரியா ராகவன் அண்ணன் அண்மையில் மதுரைக்கு வந்திருந்த போது,மதுரை ப்பதிவர்கள் ராயல் கோர்ட் ஹோட்டலில் சந்தித்து க்கொண்ட வேளையில் அருகில் அமர்ந்திருந்த ஐயா சீனா அவர்கள் குமரன் என்ற மதுரையை ச்சேர்ந்த வலைப்பதிவர் அமெரிக்காவில் பணிசெய்கிறார் என்றும்,தற்போது விடுமுறையில் மதுரைக்கு வந்திருப்பதாகவும் ,மதுரையை சுற்றி உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை,போன்ற உதவிகளை அவர் மூலமாக செய்து வருகிறார் என்றும்,இதுவரை இரண்டு லட்சம் மதிப்புள்ள உதவிகளை கண்டறிந்து செய்து விட்டோம்,உங்கள் பள்ளிக்கு ஏதாவது வேண்டுமா எனக்கேட்டார்.


மீதிப்பணம் 17,000 ரூபாய் இருக்கிறது,அதற்குள் உங்கள் பள்ளிக்கு த்தேவையான தை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்,அதன்படி ,உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள செல்லம் பட்டி ஊராட்சியை சேர்ந்த நடுநிலைப்பள்ளிக்கு, 130 மாணவர்கள் பயன் பெரும் வகையில் சீருடையும்,மைக் செட்டும் [Public Distribution System] நன்கொடையாக பெற்றுக்கொடுத்தார்,கடந்த 12-ந்தேதி சீனா ஐயாவையும்,அவரது துணைவியார் செல்வி சங்கரியையும் காரில் அழைத்து சென்றேன்,அன்றைய தினம் அவர்களுக்கு திருமண நாள் வேறு..மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள்முன்னிலையில்"கேக்"வெட்டிமகிழ்ச்சியாகஅந்தநாளைக்கொண்டாடினோம்..மாணவர்கள் அனைவருக்கும் பொறுமையாக இருவரும் சீருடைகளை வழங்கினர்...அந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைந்தது,இதற்கு மூல காரணமாக இருந்த பதிவர் குமரனுக்கு என் நன்றியை த்தெரிவித்து க்கொள்கிறேன்.
"Charity begins at Home."


18 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

சீனா ஐயா தம்பதியினருக்கு என் வாழ்த்துக்களும் ... பாராட்டும் ...

Mrs.Menagasathia said...

சீனா ஐயா தமப்திகளுக்கு பாராட்டுக்களும்,இனிய மணநாள் வாழ்த்துக்களும்....

Chitra said...

பதிவர் குமரனுக்கு பாராட்டுக்கள்! அவரது நல்ல குணத்துக்கு ஒரு குறையும் வராமல் இருக்கட்டும்.
சீனா ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

சீனா ஐயா தம்பதியினருக்கு என் வாழ்த்துக்களும் ... பாராட்டும் ...

வானம்பாடிகள் said...

குமரன் அவர்களுக்கு பாராட்டுகள். சீனா தம்பதியினருக்கு இனிய மணநாள் வாழ்த்துகள்.

சுவாமிநாதன் said...

சீனா ஐயா தம்பதியினருக்கு இனிய மணநாள் வாழ்த்துகள்.தங்களின் நல்லெண்ணம் மென்மேலும் வளர இறைவனை பிராத்திக்கின்றேன். குமரன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வி.பாலகுமார் said...

மிக்க மகிழ்ச்சி. குமரன் அவர்களுக்கு வாழ்த்துகளும், சீனா ஐயா தம்பதியினருக்கு வணக்கங்களும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சீனா அய்யா அவர்களுக்கும் செல்வியம்மா அவர்களுக்கும் என்னுடைய இனிய மணநாள் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி. சீனா சாருக்கும், பதிவர் குமரனுக்கும் வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

ஜெரி ! வாழ்த்துகள்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சீனா அய்யா தம்பதிகள் நீடூழி வாழ்க

மதுரை சரவணன் said...

good. thank u for sharing such things. kumaran is great . cheena sir helped many children to uplift their life . both of them help for education benefits.

Noddykanna said...

பதிவர் குமரன் அவர்களுக்கும்,சீனா தம்பதியர்க்கும், உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நல் வாழ்த்துகள்!

ஜெரி ஈசானந்தன். said...

பின்னூட்டம் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சினிக்க நன்றி.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

குமரன்., சீனா சார்., ஜெரிக்கு வாழ்த்துக்கள்..:))

குமரன் (Kumaran) said...

சீனா தம்பதியரின் உடனிருந்து இப்பணியைச் செவ்வனே செய்து தந்ததற்கு மிக்க நன்றி ஜெரி. என்னால் நேரில் வர இயலவில்லையே என்று வருத்தம் தான். ஆனால் என்ன? நல்ல நண்பர்கள் மூலமாக உதவி சேர வேண்டிய இடத்தில் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

வேறு இடங்களில் என்னால் செய்ய முடிந்த சிறு உதவிகளைப் பற்றி இங்கே படிக்கலாம்.

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_20.html

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_21.html

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_24.html

ஹேமா said...

நல்ல மனங்கள்....இன்னும் நல்லது செய்ய வேண்டிக்கொள்கிறேன் !