Tuesday, August 31, 2010

"இரண்டு கால் மிருகங்கள்."

அதெப்படி முடிகிறதென்று தெரியவில்லை?பெற்ற பிள்ளையை,அதுவும் வயசுக்கு வந்த சிறுமியை,அவளது நடத்தையை காரணம் காட்டி,தன் கூட்டாளிகளோடு சேர்ந்து,வீட்டில் மனைவி இல்லாத நேரம் பார்த்து,விஷ ஊசியை காலில் போட்டு கொன்றதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை,கௌரவ க்கொலையா என்பது கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது,ஆனாலும் பாருங்கள் ....மதுரைக்கு ஒன்றும் இந்தமாதிரி கௌரவ கொலைகள் ஒன்றும் புதிதல்ல....மதுரையை ச்சுற்றி உள்ள கிராமங்களில் அடிக்கடி நடப்பதுதான்.ஆனால் வெளி உலகிற்கு இது தற்கொலை என்று சொல்லப்பட்டு .கிராமத்து மயானத்தில் உடனே உடல் எரிக்கப்பட்டுவிடும்.....பெரும்பாலும் காதலும் ,சாதியும் தான் இந்த கௌரவக்கொலைக்கு காரணங்கள்.ஒரு பத்தாண்டுகளுக்கு முன் மதுரையை உலுக்கிய "கௌரவக்கொலை "இன்னும் மனசை உலுக்குக்கிறது.....

மதுரையை ஒட்டி உள்ள "செக்கானூரணி "என்ற ஊரில் இருக்கும் ஆங்கில மீடியம் பள்ளியில் பணிபுரிந்த விளையாட்டு ஆசிரியர் ஒருவர்,தன் மனசை தன்னோடு பழகிய பெண்ணிடம் பறிகொடுக்க,அது நாளடைவில் காதலாய் கசிந்துருகி,,,வீட்டுக்குத்தெரிய வர,பிரச்சினை தொடங்கியது,இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான்,அந்த பையன் மிக ஏழ்மையான குடும்பம்,பொண்ணோ அதிக வசதி......பிரித்துப்பார்த்தும் முடியவில்லை,காவலுக்கு ஆள் வைத்தும்,காதலர்கள் தப்பி ப்போய்...யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு,வெளியூரில் செட்டிலாகி விட்டனர்,பல மாதங்கள் கழித்து,பெற்ற மகள் மாசமாக [கருவுற்று] இருக்கிறாள் என செய்தியைககேள்வி ப்பட்டவுடன் ஊர் பெரியவர்களுடன் சேந்து போய்,பார்த்து பேசி,சமாதானம் ஆகி,பின் சில மாதங்களில் வந்த வளைக்காப்பு முடித்து,தாய் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வருகிற வழியில் .....காரில் வைத்து கூட்டி வருகின்றனர், வயல் வெளிகளை த்தாண்டி,தென்னந்தோப்புகளைத்தாண்டி....ஒதுக்கு புறமாக உள்ள "மோட்டார் ரூம்" அருகில் வந்தவுடன்,அம்மாகாரி காரை விட்டு கீழே இறங்கி,மோட்டார் ரூமிற்கு போய் சேலைய மாத்தி வருகிறேன் என்று சொல்லி நடக்க ஆரம்பிக்க,தந்தையோ..மகளிடம் "ஆத்தா. அம்மா தனிய போகுதுல்ல,கூட துணைக்கு போ தாயி.."என்று சொல்லி அனுப்பி வைத்து,மகள் உள்ளே நுழைந்தவுடன்,தாய்,தந்தை இருவரும் சேர்ந்து,வீர வசனங்கள் பேசிக்கொண்டே ...."கழுத்தை நெரித்து கொன்று விடுகின்றனர்."
எப்படி......படிக்கிறப்பவே ..தலை சுத்துதா?இது மாதிரி எத்தனையோ,..இன்னும் நடக்குதுங்க....பேருந்துல எறங்கி வேலைக்கு நடந்து போய் கிட்டு இருக்கறப்பவே செய்தி காதுல வந்து விழும்,"என்னா வாத்தியாரே,நான் தான் சொன்னேன்ல....நேத்து பொழுசாயமே...மாயன் மக...சின்னவ லெட்சுமிய கட்டி த்தூக்கிட்டாணுக ப்பா"..அப்படீனா...அடிச்சுகொன்னு,தற்கொலை செய்து கொண்டது போல கயிற்றில் கட்டிவிடுவது.

கடந்த சனிக்கிழமை 28-ந் தேதி,மதுரையில் உள்ள Bell ஹோட்டலுக்கு உறவினர்களோடு இரவு சாப்பிட வந்தேன்,ஒரே நேரத்தில் 1000-பேர் கூட அமர்ந்து சாப்பிட முடியும்,
வசதியான,அனைத்துவகை உணவுகளும் கிடைக்கும் உணவகம்,நான்கு டேபிள் தாண்டி இயக்குனர் சேரன் அவரது உறவினர்களோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்,அவரைப்பார்த்தவுடன் எங்கள் டேபிளில் சினிமா பற்றிய பேச்சு வந்து ,சாப்பிட்டு முடித்து அப்பிடியே,இரவுக்காட்சி சினிமா போக முடிவுசெய்து,அருகில் உள்ள மாணிக்க வினாயகரில் "நான் மகான் அல்ல "சென்றோம்,படம் எனக்கு பிடித்து இருந்தது,இன்றைய இளைஞர்களின் தறிகெட்ட நிலையை ஆவணப்படுத்தியிருக்கிறார்,அந்த இளைஞர்களை ப்போல எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்,சென்னைக்கு,ஒரு மெரினாவும் .....கிழக்கு கடற்க்கரை சாலை போல,மதுரையிலும்,அழகர்கோவில் இருக்கிறது,சபலத்தோடு,தனியாக ஒதுங்கும் காதலர்களை குறிவைத்து,கற்பழிக்கும் கொடுரக்கும்பல் இன்னமுமிருக்கிறது,
ஆனாலும் சென்னை ECR-ல் அடர்ந்து நிற்கும் சவுக்கு த்தோப்புகளில்....எத்தனையோ இளம்பெண்கள்,இந்த மாதிரி "சைக்கோகளிடம்" சிக்கி சீரழிகின்றனர்.

காதலர்கள் மீதான வன்முறைகளும்,பாலியல் சுரண்டல்களும் சென்னை ECR- ல் அதிகம்,,,,பொதுவாக இந்த மாதிரி இரண்டு கால் மிருகங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது,நம்முடன் பயணிக்கும் சக பயணியாக இருக்கலாம்,உங்கள் வீட்டுக்கு எதிர் வீடாகவோ,பக்கத்து வீடாகவோ,இருக்கலாம்,அவ்வளவு ஏன்..?உங்க காசிலேயே பாரில் தண்ணியடித்து ....உள்ளூர் இலக்கியம் முதல் ,உலக இலக்கியம் வரை பேசும் உங்கள் நண்பனாகக்கூட இருக்கலாம்,....உங்கள் வீட்டில் உங்களோடு கூட வசிப்பவராக க்கூட இருக்கலாம்,இன்னைக்கு தேதியில மூணாறில் Hottest Tourist Spot-எது தெரியுமா? சென்னையில் இருந்து தன் கணவனை இன்ப சுற்றுலா கூட்டி வந்து,இங்கே மூணாறில் தனது கள்ளக்காதலனோடு கொன்று போட்ட இடம் தான், இப்படி இந்த மிருகங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாது,தானாக வந்து மாட்டும் வரை, அது வரை கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.45 comments:

Anonymous said...

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அப்பாவி பெண்களை சீரழித்தது இரவுடிகளும்,சைக்கோக்களும் மட்டுமல்ல..கொஞ்சம் விசாரித்து பாருங்கள்.வேலியே பயிரை மேய்ந்த கதைகள் நிறைய உண்டு.

பிரபு . எம் said...

காமம் பெண்ணைத் தாயாக்குகிறது... ஆணைத் தந்தையாக்குகிறது...
மொத்தமாக மனிதனை மிருகமாக்குகிறது....

என்னத்த சொல்ல??

க‌வுர‌வ‌க் கொலைக‌ளாம்... இந்த‌ப் பேரு வெச்ச‌வ‌ன‌ மொத‌ல்ல‌ உதைக்க‌ணும்...

ந‌ம்ம‌கூட‌வே வாழுற‌ ம‌னித‌ர்க‌ளுக்கு ந‌டுவுல‌ இம்மாதிரி சில மிருக‌ங்க‌ள் ஒளிஞ்சிருக்குன்னு நீங்க‌ சொல்லுறதை ப்ராக்டிகலா ஏத்துக்குறேன் மாமா.... ஆனா சுயத்தையும் சேர்த்து எல்லா ம‌னித‌ர்க‌ளுக்குள்ளயும் மிருக‌ங்க‌ள் ஒளிஞ்சிருக்க‌த்தான் செய்யுது.... த‌குதியான‌ தாய் த‌ந்தைக்குப் புள்ளையா பிற‌க்குற‌ வாய்ப்பு இப்போதெல்லாம் ரொம்ப‌ க‌ம்மி.... ந‌ல்ல‌ ஆசிரிய‌ர்க‌ளும் இருக்க‌ப்போற‌தில்ல‌....
ஸோ கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம்தான்..... அவ‌ச‌ர‌த்துக்கு நாலுபேர‌ அடிச்சுப் போடுற‌ அள‌வுக்கு இருக்குற‌து அத்தியாவ‌சிய‌ம் ஆக‌ப்போகுது!! :) க‌ராத்தே மாஸ்ட‌ர்க‌ளுக்கு அடுத்த‌ அஞ்சு வ‌ருஷ‌த்துல‌ ந‌ல்ல‌ ஓப‌னிங்ஸ் இருக்கும்னு கிள‌ப்பிவிட்ருவோம்!!! :)

அக்க‌றையான‌ ப‌திவு மாமா ....

க.பாலாசி said...

முன்னமே அறிந்த விசயம்தான், படிக்கும்போது இன்னும்கொஞ்சம் பதற்றமும், பயமும் ஏற்படுகிறது... எத்தனை கொடூரங்கள் இங்கே கேட்பாரற்று நடக்கிறது.

க.பாலாசி said...

பிரபுவின் பின்னூட்டமும் இந்த சூழ்நிலைக்கு பொருந்துகிறது.

கே.ஆர்.பி.செந்தில் said...

இது இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது ... காரணம் நாகரிகம் வளர வளர தலைமுறை இடைவெளிகளும் .. பசங்களின் அதீத ஆர்வமும் இதற்கு தீனி போட்டு அவர்களையே கொன்று விடும்.. இன்னும் இருபது ஆண்டுகள் கடக்க வேண்டும் ஒரு மாற்றம் நிகழ ...

வெறும்பய said...

நீங்கள் மேலே சொன்னது போன்ற மதுரையிலும், சென்னையிலும் மட்டுமல்ல.. ஏறக்குறைய மொத்த இந்தியாவிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.. சாதி, மதம், இனம், மொழி என ஒவ்வொரு விசயத்திற்க்காகவும் இது போன்ற வான் செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன... இது எல்லாவற்றையும் எடுத்து விழுங்குவது போன்ற பல செய்திகள் சமீபத்தில் வந்தன.. தந்தையே தான் மகளை கற்பழித்து கொலை செய்ததது.. அறுபது எழுபது வயது கிழங்களின் சபலத்தர்க்காக சீரழிந்த மழலைகள்... கள்ள காதல்.. என எல்லா தவறுகளுக்கும் பறை வோவது உயிர்கள் தான்..

சம்பவங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தால் நா கூசும் அளவுக்கு சொல்லல்லாம்..

காமம்...காதலும்.. உயிர்களை உருவாக்கவும் செய்கிறது... அழிக்கவும் செய்கிறது..

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி அனானி.

ஜெரி ஈசானந்தன். said...

மாப்ள பிரபு ....அடிக்கடி வாங்க மாப்பு

தருமி said...

:(

தருமி said...
This comment has been removed by the author.
சங்கவி said...

இதுவரை இப்படி நடந்து இருந்தாலும்.... இந்த விசயம் தான் அதிகம் வெளியே தெரிந்தது... இவைகளை தடுக்க முடியாது...

சத்ரியன் said...

செய்திகளாய்ப் படித்து விட்டுப் போகிற குணம் இருக்கும் வரை ....இதுபோல் இன்னும் இன்னும் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

ம.தி.சுதா said...

இலங்கையிலும் இதைவிட மோசமா நடக்குது... ஆனால் என்ன உலகுக்கு தெரிவதில்லை.... தெரிந்தால்..?..

வானம்பாடிகள் said...

கிலியாத்தான் இருக்கு:(.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கொடுமைங்க :(

நாடோடி said...

ரெம்ப‌ க‌ஷ்ட‌ம் தான்.. பின்னோக்கி செல்கிறோமா? என்று தான் தோன்றுகிற‌து..

ஈரோடு கதிர் said...

இரண்டு கால் மனிதர்கள்னே தலைப்பு வச்சிருக்கலாம்

மிருகங்கள் இப்படியெல்லாம் செய்கிறதா என்ன?

தேவன் மாயம் said...

தந்தையோ..மகளிடம் "ஆத்தா. அம்மா தனிய போகுதுல்ல,கூட துணைக்கு போ தாயி.."என்று சொல்லி அனுப்பி வைத்து,மகள் உள்ளே நுழைந்தவுடன்,தாய்,தந்தை இருவரும் சேர்ந்து,வீர வசனங்கள் பேசிக்கொண்டே ...."கழுத்தை நெரித்து கொன்று //

படிக்கவே கஷ்டமாக இருக்கு ஜெரி!

malgudi said...

உள்ளிருக்கும் கொடூரத்தை தலைப்பிலே சொல்லிவிட்டீர்கள்.
பெறுவதற்கே உரிமையிருக்கே தவிர கொல்லுவதற்கு அல்ல.
சிந்திக்க வேண்டிய கருத்துக்களை நிறையவே சொல்லி இருக்கிறீர்கள்.

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

ஜெரி ஈசானந்தன். said...

கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி பாலாசி.

ஜெரி ஈசானந்தன். said...

மாப்ள பிரபுவின் கருத்துகள் ....ஆழமாகவே இருக்கிறது. நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

கே.ஆர்.பி .செந்திலுக்கு ....சட்ட ஒழுங்கை சரியாக நிர்வகித்தாலே போதும்,குற்றங்கள் குறையும்,கருத்துக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

வெறும்பய ஜெயந்த் ...வருகை மகிழ்ச்சி..

ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் தருமி ஐயா...

ஜெரி ஈசானந்தன். said...

சங்கவியின் வருகைக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

அருமையான கருத்து சத்ரியன்,....நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

சுதாவின் கருத்துகளில் இயலாமை தெரிகிறது,"மாற்றம் வரும்".வருகைக்கு நன்றி சுதா.....

ஜெரி ஈசானந்தன். said...

பாலாண்ணாவுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி சங்கர்..

ஜெரி ஈசானந்தன். said...

நாடோடி ஸ்டீபனுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ஈரோடு கதிருக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி தேவன் மாயம்..

ஜெரி ஈசானந்தன். said...

மால்குடிக்கு நன்றி...

ஜெரி ஈசானந்தன். said...

மதுரை சரவணன் வணக்கம்,நலம் தானே..

ம.தி.சுதா said...

//....சுதாவின் கருத்துகளில் இயலாமை தெரிகிறது,"மாற்றம் வரும்".வருகைக்கு நன்றி சுதா.....//
அதைத் தான் சகோதரா கடவுளை வேண்டிக் கொள்கிறேன்...

ஜெரி ஈசானந்தன். said...

சுதாவின் வேண்டுதலை கடவுள் கேட்க...வாழ்த்துகிறேன்.

சுவாமிநாதன் said...

இன்றைய தமிழ் பேப்பர்கள் விற்பனைக்கு காரணம் கள்ளக் காதலும், நரபலி செய்திகளும் அதிக மாகிக் கொண்டே இருப்பதால் தான்.

பறவையை பார்த்தான் விமானம் படைத்தான் - அன்றைய மனிதன்

இந்த காலத்துப் படக்ங்களை பார்த்தான் - இப்படில்லாம் தவறுகள் செய்யலாமா என்று யோசிக்க முடியாத அளவுக்கு கூட தவறுகள் செய்ய பழகி கொண்டான்.

அறிவியல் வளர வளர மனிதனின் மனம் குறுகிக் கொண்டே போகிறது.

அழுத்தமான பதிவு சார்.......

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி சுவாமிநாதன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

என்ன ஜெரி சும்மா ஜாலியா இருந்த என்ன இப்படி
பயப்பட வைச்சிட்டீங்க..
நடுக்கமா இருக்கு..திகில் படம் பார்த்தாப்புல..திரில்லர்ல வர்ற மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி..

Anonymous said...

பொருத்தமான தலைப்பு

ஸாதிகா said...

விழிப்புணர்வு மிக்க பகிர்வுக்கு நன்றி!

virutcham said...

தனி மனித ஒழுக்கம் இல்லாத இடத்தில் சட்டம் என்ன பெரிதாக செய்து விட முடியும்?. காரணம் சட்டத்தை அமுல்படுத்துவதும் மனிதர்கள் தானே.

@senthil
//இன்னும் இருபது ஆண்டுகள் கடக்க வேண்டும் ஒரு மாற்றம் நிகழ ...//
எப்படிங்க இருபது ஆண்டுகளில் மாற்றம் ? ஏதாவது அற்புதம் நிகழப் போகுதா?

Thekkikattan|தெகா said...

ம்ம்ம் :(( - வெக்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள்.

இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் அடிப்படை கல்வியை... பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...

உங்களோடு... said...

//உள்ளூர் இலக்கியம் முதல் ,உலக இலக்கியம் வரை பேசும் உங்கள் நண்பனாகக்கூட இருக்கலாம்,....//
so true....