Tuesday, August 24, 2010

"காவ்யா ஜெயராம்."

ஹைதராபாதில் நடைபெறும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாதில் கடந்த 19-ல் துவங்கிய இந்த மாநாடு வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட கணித அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில் விளையாட்டாக சுற்றித் திரியும் 12 வயதுச் சிறுமி காவ்யா ஜெயராம், சில நாள்களுக்கு முன்பு "இன்டெகர் பார்ட்டிஷனிங்".

குறித்து தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தபோது கணிதவியல் ஜாம்பவான்கள் எல்லாரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். இந்த சிறுமிக்குள் இவ்வளவு கணித ஞானமா என்று வாய்விட்டு கேட்டவர்கள் பலர்.

ஆனால், இதெல்லாம் சாதாரணம், காவ்யாவின் ஆய்வு முடிவுகள், சர்வதேச எண் கணித இதழில் ஏராளம் வெளிவந்துள்ளன என்று அவரது தாயார் சுபத்ரா பெருமிதம் பொங்க கூறுகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பே பகுதியில் வசிக்கும் காவ்யாவின் குடும்பத்தினர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் சிறுமியின் அறிவுப் பசிக்கு ஆசிரியர்களால் தீனி போட முடியவில்லை.

ஐந்து வயதில் அவர் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார். 7 வயதில் உயர் கல்வியை முடித்து விட்டார். இப்போது கல்லூரியில் படித்து வரும் காவ்யா, சிறு வயது முதல் கணக்கையே முழுநேர உணவாக உண்டு வாழ்கிறாள்.

"வீட்டில் அவருக்கு யாரும் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. பள்ளி முடிந்து வந்ததும் அவராகவே கணக்குப் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் துவங்கி விடுவார். இயல்பாகவே அவர் ஒரு குழந்தை மேதாவி. அவரைப் போல உள்ள குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்து இணையதள பிளாக்கில் நான் அறிவுரை கூறி வருகிறேன்' என்கிறார் அவரது தாயார் சுபத்ரா.

தாய்மொழியான தமிழில் காவ்யாவுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும். ஆனால், சரளமாகப் பேச வராது என்று கவலைப்படுகிறார் சுபத்ரா.

மலைமலையாக குவியும் பாராட்டுகளைக் கண்டுகொள்ளாமல் மான்குட்டியாகத் துள்ளித் திரியும் காவ்யா, மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.

"குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை கணக்கு என்றால் ஏன் கசக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. கணக்கைப் போன்ற இனிமையான பாடம் வேறு எதுவும் இல்லை' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் அச் சிறுமி.

சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் படிக்க விரும்புவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவில் உள்ள பெர்க்கிலே அல்லது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கணிதம் மட்டுமன்றி இசையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறாள் காவ்யா. மேற்கத்திய இசையோடு, இந்திய இசையை ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வரும் அவர், "கலிபோர்னியா யூத் சிம்பொனி' இசைக் குழுவில் பிரதான வயலின் இசைக் கலைஞராகவும் ஜொலிக்கிறார்.
உலகின் அறிவார்ந்த சமூகம் நம் தமிழ் சமூகம் என்பது, உலகரங்கில் தொடர்ந்து நிருபிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியைத்தருகிறது,உங்களோடு சேர்ந்து இந்த குட்டிச்செல்லத்தை வாழ்த்துகிறேன்.


33 comments:

Mrs.Menagasathia said...

congrats kavya!!

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

வெறும்பய said...

ஆச்சர்யப் பட வைக்கிறது அந்த சிறுமியின் சாதனை...

காவியாவுக்கு வாழ்த்துக்களும் .. பகிவுக்கு உங்களுக்கு நன்றியும்..

நாடோடி said...

சிறுமி காவியா மேலும் ப‌ல‌ சாத‌னைக‌ள் புரிய‌ வாழ்த்துக்க‌ள்... ந‌ல்ல‌ ப‌கிர்வு ஜெரி சார்.

ராமலக்ஷ்மி said...

ஆச்சரியம். காவ்யாவை வாழ்த்துவோம். பகிர்வுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி மேனகா மேடம்.

ஜெரி ஈசானந்தன். said...

தமிழ் உலகிற்கு நன்றி....

ஜெரி ஈசானந்தன். said...

வெறும்ப ஜெயந்துக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நாடோடி ஸ்டீபன்.

theva said...

great!

Raas said...

காவியாவுக்கு வாழ்த்துக்க‌ள்... ந‌ல்ல‌ ப‌கிர்வு.....

கே.ஆர்.பி.செந்தில் said...

காவ்யாவுக்கு வாழ்த்தும் .. உங்களுக்கு வந்தனமும் ...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இப்பொழுது உள்ள இளைய சமுதாயம் சாதிக்கப் பிறந்தவர்கள்தான் . மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது இந்த இளைய வயதில் இவர்களின் ஆர்வத்தையும் , திறமைகளையும் பார்க்கும் பொழுது . சிறந்த தகவலை தந்தமைக்கும் நன்றி நண்பரே

வானம்பாடிகள் said...

வாவ். பகிர்வுக்கு நன்றி.

சென்ஷி said...

சிறுமி காவ்யா மேலும் ப‌ல‌ சாத‌னைக‌ள் புரிய‌ வாழ்த்துக்க‌ள்... ந‌ல்ல‌ ப‌கிர்வு ஜெரி சார்.

பா.ராஜாராம் said...

காவ்யா, வாழ்த்துகள்!

பகிர்விற்கு நன்றி ஜெரி சார்!

Chitra said...

Congratulations, Kavya! We are proud of you.

ஜோதிஜி said...

தாய்மொழியான தமிழில் காவ்யாவுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும். ஆனால், சரளமாகப் பேச வராது என்று கவலைப்படுகிறார் சுபத்ரா.


வாழ்த்துகள் சொல்ல வரும் போது லேசாக கவலைப்பட வேண்டிய விசயமாகவும் இருக்கிறது.

ஜெரி ஈசானந்தன். said...

ராம லச்மிக்கு நன்றிகள்.....

காவேரி கணேஷ் said...

பதிவுலகமே பொதுவான விசயங்களை பங்கிட்டு கொள்ளும் பொழுது, இந்த பதிவு ,காவ்யா போன்றவர்களை வெளிகொணரும் உங்களின் சமூக ஆய்வு சிலிர்க்கிறது

ஜெரி ஈசானந்தன். said...

Thank you Deva...and ..Raas.

ஜெரி ஈசானந்தன். said...

கே ஆர்.பி..செந்தில்...வணக்கம்.நன்றிகள்.

ஜெரி ஈசானந்தன். said...

பனித்துளி சங்கருக்கு நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தன். said...

வானம்பாடும் பாலண்ணா ...நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி சென்ஷி..

ஜெரி ஈசானந்தன். said...

பா.ராவின்....வருகை பெருமிதம்..

பிரபு . எம் said...

அருமையான பகிர்வு மாமா :)
காவ்யா பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு ரொம்ப நன்றி...

"அட நம்ம பொண்ணு!!" என்று நம்ம அனைவருக்குமே பெருமைதான்!!
இவ்ளோ அறிவுள்ள பொண்ணுக்குத் தாய்மொழி கத்துக்க எவ்ளோ நேரமாகப்போகுது... :)
அடுத்த சாதனை செய்யும்போது காவ்யாவுக்குத் தமிழ் தெரியும்ணு நம்புவோம்...

செ.சரவணக்குமார் said...

காவ்யாவிற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி சார்.

ஜெரி ஈசானந்தன். said...

வாழ்த்துக்கு நன்றி சித்ரா.

ஜெரி ஈசானந்தன். said...

கருத்துக்கு நன்றி ஜோதிஜி....அதெல்லாம் போக போக சரியாயிடும்..அதான் காவ்யா சென்னை வந்து படிக்கப்போகிறாள் ...அப்புறமென்ன "சென்னை தமிழிலும் விளையாடும்"

ஜெரி ஈசானந்தன். said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி காவேரி கணேஷ்...{ஊருக்கு எப்போ வர்றீங்க?]

ஜெரி ஈசானந்தன். said...

மாப்ள பிரபு..சௌக்கியமா..?மும்பை வாழ்கை எப்படி இருக்கு?மாமாவையும் மும்பைக்கு கூப்பிட்டு கவனிக்கிறது...தான.

ஜெரி ஈசானந்தன். said...

சரவணக்குமாரின் வருகை,எனக்கு மகிழ்ச்சி.