Wednesday, August 18, 2010

கார்மென் பிராம்ளி.

Carmen Bramly

இன்றைய தேதியில் பிரான்ஸ் நாட்டில் ஹாட்டஸ்ட் டாபிக் இந்த பதினைந்து வயது பள்ளிச்சிறுமி தான்,கவிதைகளையும்,சிறு கதைகளையும் எழுதி கொண்டிருந்த கார்மென் சத்தமில்லாமல் கடந்த ஒரு வருடமாக எழுதி முடித்த முதல் நாவலை [Pastel Fauve] பிரான்சின் புகழ் பெற்ற புத்தக நிறுவனம் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறது.

அப்படி என்ன அதில் ஸ்பெசல் என்றால்,கார்மெனின் கதை நாயகி "பலோமா" தனது பதினான்காவது வயதில் தனது கன்னித்தன்மையை அவளது காதலன் "டோஹர்டிக்கு "காதல் பரிசாக கொடுத்ததை பற்றியும்,இன்னபிற கிளுகிளுப்பான விசயங்களையும் அப்பட்டமாக எழுதியிருப்பதால் இலக்கிய உலகின் இள வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வரிசையில் கார்மெனும் இடம் பெற்று விட்டார்,பிரான்ஸ் நாட்டின் கலை இலக்கிய வளமும்,பண்பாடும் உண்மையிலேயே உலகிற்கு ஒரு கொடை தான்,இந்நேரம் நம் நாடாக இருந்திருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப்பார்த்தேன் ...

இங்கே பெண்களால் ஒளிவு மறைவின்றி,மனசுக்கு பட்டதை எழுதி விடமுடியுமா? காதலர் தினத்தைகூட பயந்து ..பயந்து தானே கொண்டாட வேண்டியிருக்கிறது,கலாச்சார தாலிபான்களால் நாம் காவல் காக்கப்படுகிறோம் என்பது தான் உண்மை,நான் இங்கே குறிப்பிடுவது ஒழுக்கம் சார்ந்த விடயமல்ல,"சுதந்திரமான ,பரந்துபட்ட,கலை இலக்கிய வெளியை."
32 comments:

Chitra said...

/////இங்கே பெண்களால் ஒளிவு மறைவின்றி,மனசுக்கு பட்டதை எழுதி விடமுடியுமா?//////


...... நல்ல கேள்வி..... காதலையும் காமத்தையும் விட்டுத் தள்ளுங்க..... ஒரு சாதாரண விஷயத்தில் கூட, சுதந்திரமாக கருத்து சொன்னால், "ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பேசுற பேச்சை பாரு....." என்று தானே முதல் response வருகிறது .

தேவன் மாயம் said...

இதோ வருகிறேன்!

cheena (சீனா) said...

அன்பின் ஜெரி

அருமையான சிந்தனை - நன்று நன்று

நல்வாழ்த்துகள் நண்பா ஜெரி
நட்புடன் சீனா

தேவன் மாயம் said...

,இந்நேரம் நம் நாடாக இருந்திருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப்பார்த்தேன் ...
//
நினைப்பு பொளைப்பைக் கெடுத்துறாம...

வானம்பாடிகள் said...

நல்லாச் சொன்னீங்க ஜெரி:)

தேவன் மாயம் said...

அப்படி என்ன அதில் ஸ்பெசல் என்றால்,கார்மெனின் கதை நாயகி "பலோமா" தனது பதினான்காவது வயதில் தனது கன்னித்தன்மையை அவளது காதலன் "டோஹர்டிக்கு "காதல் பரிசாக கொடுத்ததை பற்றியும்,இன்னபிற கிளுகிளுப்பான விசயங்களையும் அப்பட்டமாக எழுதியிருப்பதால் இலக்கிய உலகின் இள வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
//
எப்புடிப்பு இதெல்லாம் உம்ம கண்ணுல படுது!

தேவன் மாயம் said...

இன்றைய தேதியில் பிரான்ஸ் நாட்டில் ஹாட்டஸ்ட் டாபிக் இந்த பதினைந்து வயது பள்ளிச்சிறுமி தான்,//

நம் ஊரிலும் பிள்ளை பெத்துக்கிறாங்க்க.. என்ன கதையா எழுதுறதில்லை!

நாடோடி said...

ஆகா!! இதெல்லா வேற‌ ந‌ட‌க்குதா... :)

//எப்புடிப்பு இதெல்லாம் உம்ம கண்ணுல படுது! ///

ரிப்பீட்டு!!!!!!

தருமி said...

இதையும் பாருங்கள். நீங்கள் சொன்ன வேற்றுமை நன்கு புரியும்.

வெறும்பய said...

இங்கே பெண்களால் ஒளிவு மறைவின்றி,மனசுக்கு பட்டதை எழுதி விடமுடியுமா?//

ஆணுக்கு பெண் சமம் என்ற சொல் இன்றளவும் நம் நாட்டில் ஒரு பேச்சுக்கு மட்டும் இருக்கிறது....

க.பாலாசி said...

கடைசி பத்தியில மொத்தத்தையும் கொட்டிட்டீங்க... அதுதானே உண்மையும்கூட..

பதிவுலகில் பாபு said...

கரெக்டா சொன்னீங்க.. வாழ்த்துக்கள்..

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் ஜெர்ரி

A.சிவசங்கர் said...

மொத்தத்தில் நல்லா எழுதிருக்காங்க எல்லரும்

ஜோதிஜி said...

ஏன் ஆசிரியரே பசங்க ரொம்பவே பாடு படுத்துறாங்களோ?

எழுதுறதே இல்ல?

ஜெரி ஈசானந்தன். said...

Thanks for your immediate Response chithra.

ஜெரி ஈசானந்தன். said...

தேவா.....எல்லாம் நீங்க கொடுக்கிற "டானிக்" தான்.

ஜெரி ஈசானந்தன். said...

சீனா ஐயா உங்க அன்புக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

வானம் பாடும் பாலாண்ணாவுக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

நாடோடி ஸ்டீபனுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

தருமி ஐயா அடிக்கடி வந்து கலக்குங்க.

ஜெரி ஈசானந்தன். said...

வாங்க ஜெயந்த்,.........i like your lattest kavithai.

ஜெரி ஈசானந்தன். said...

பாலாசிக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

பாபுவுக்கு நன்றி. நாளும் அன்பில் தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தன். said...

// Mahi_Granny said...
வாழ்த்துக்கள் ஜெர்ரி

நன்றிமா..

ஜெரி ஈசானந்தன். said...

சிவசங்கருக்கு நன்றிகள்.

ஜெரி ஈசானந்தன். said...

நலமா ஜோதிஜி....கொஞ்சம் வேலை தான்,அப்புறம் மின் தடை வேற.....இதையெல்லாம் தாண்டி தான் வரவேண்டி உள்ளது.

ஹேமா said...

சரியாச் சொல்றீங்க ஜெரி.நானும் சிலசமயங்களில் பேச்சு வாங்கிறேன்தானே !

ஜெரி ஈசானந்தன். said...

ஹேமா நலமா? வீட்டில் எல்லோரும் சுகம் தானே. தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இங்கே பெண்களால் ஒளிவு மறைவின்றி,மனசுக்கு பட்டதை எழுதி விடமுடியுமா?//

உண்மைதான் ஜெரி,,
BRAVO..:))

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி தேனம்மை..

உங்களோடு... said...

உண்மைதான்..சுதந்திரமாக வாசிக்கவோ,எழுதவோ முடியாதபடி ஏதோ ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்தி விட்டது இந்த சமுதாயம்..'உனக்கான வெளி சமையலறை தான்' என்று ஆழ்மனம் உணர்த்திக் கொண்டே இருக்கும்படி மூளைச் சலவை செய்யப்பட்டு விட்டோம்...