Tuesday, May 18, 2010

தமிழை அழிக்க முயற்சியா?

தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டும் என்று தமி​ழ​றி​ஞர் ஆர்.இளங்​கு​ம​ர​னார் தெரி​வித்​துள்​ளார்.​÷பு​துச்​சே​ரி​யில் புதுச்​சேரி வலைப்​ப​தி​வர் சிற​கம் அமைப்பு சார்​பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு,​​ புதுவை வணிக அவை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்​தது.​

÷இ​தில் ஆர்.இளங்​கு​ம​ர​னார் பேசி​யது:​ தமி​ழக அரசு வரும் ஜூன் மாதத்​தில் கோவை​யில் உல​கத் தமிழ் செம்​மொழி மாநாடு நடத்த உள்​ளது.​÷இ​தில் தமிழ் மொழி​யில் எழுத்து சீர்​தி​ருத்​தம் குறித்து அறி​விப்பு வெளி​யி​டப்​ப​டும் என செய்தி வெளி​யா​கி​யுள்​ளது.​அவ்​வாறு சீர்​தி​ருத்​தம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டிய நிலை உள்​ளது.​ தமி​ழில் குறைந்த கல்​வி​ய​றிவு பெற்​ற​வர்​கள் முற்​றி​லும் கல்​லா​த​வர்​க​ளாக மாற நேரும்.​

÷த​மி​ழக அர​சின் இந்த முயற்​சிக்கு பல்​வேறு தரப்பி​லி​ருந்து எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.​ உலக அள​வில் தமிழ் அறி​ஞர்​க​ளும்,​​ கணினி வல்​லு​நர்​க​ளும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்​துள்​ள​னர்.÷த​மி​ழக அரசு இது குறித்து எந்த விளக்​க​மும் இது​வரை அளிக்​க​வில்லை.​ தமிழ் எழுத்தை மாற்​றும் முயற்​சி​யில் முன்​னாள் துணை வேந்​தர் வா.செ.குழந்​தை​சாமி முதன்​மை​யாக உள்​ளார்.​

÷அ​வர் எழு​தி​யுள்ள கட்​டு​ரை​யின்​படி உயிர் மெய் இகர,​​ ஈக​ரஸ உகர,​​ ஊகர எழுத்​துக்​கள் 72-க்கும் மாற்​றாக குறி​யீ​டு​க​ளு​டன் கூடிய எழுத்​துக்​கள் பயன்​ப​டுத்த வேண்​டு​மென அறி​கி​றோம்.÷இ​தன்​படி எழுத்து மாற்​றம் செய்​தால் தமிழ் மொழி அறி​வி​யல் மொழி​யா​க​வும்,​​ கணி​னி​யில் எளி​தில் பயன்​ப​டக்​கூ​டிய மொழி​யா​க​வும்,​​ வளர்ச்சி பெறும் என்று கருத்து முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது.​

÷72 எழுத்​துக்​க​ளில் மாற்​றம் என்​பது தமி​ழில் 59 சத​வீ​தம் மாற்​றத்தை ஏற்​ப​டுத்​தம் என்று ஆய்​வா​ளர்​கள் கணக்​கிட்டு கூறி​யுள்​ள​னர்.​ 59 சத​வீத எழுத்து மாற்​றம் தமிழ் மொழி​யையே மாற்​றி​வி​டும்.÷இ​த​னால் தமி​ழில் ஏற்​கெ​னவே உள்ள பல்​லா​யி​ரக்​க​ணக்​கான அரிய நூல்​க​ளும்,​​ இணை​ய​த​ளத்​தில் உள்ள பல்​துறை சேர்ந்த ஆயி​ரக்​க​ணக்​கான பக்​கங்​க​ளில் உள்ள செய்​தி​க​ளும் பய​னற்று போகும்.​

÷உ​லக அள​வில் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் உள்ள நிலை​யில் தமிழ்​நாட்​டில் மட்​டும் இந்த எழுத்து மாற்​றம் தமி​ழர்​க​ளி​டையே பிரி​வி​னையை ஏற்​ப​டுத்​தும்.​ தமிழ்​நாட்டு தமி​ழர்​களை உல​கத் தமி​ழர்​க​ளி​ட​மி​ருந்து தனி​மைப்​ப​டுத்​தும்.÷இ​த​னால் தமிழ் மொழி​யின் வளர்ச்சி பின்​ன​டை​யும் என்​ப​தோடு,​​ தமி​ழர்​க​ளின் நிலை மேலும் பின் தள்​ளப்​ப​டும்.​ எழுத்து மாற்​றம் குறித்து வற்​பு​றுத்​து​வோர் கூறும் கார​ணங்​கள் எது​வும் ஏற்​கும்​ப​டி​யாக இல்லை.​

÷எ​ழுத்து மாற்​றத்​தால் கணிப்​பொ​றி​யில் உழைப்பு குறை​யும்,​​ விரை​வாக செயல்​பட முடி​யும் என கூறப்​ப​டும் கருத்தை கணினி வல்​லு​நர்​கள் சான்​று​க​ளு​டன் மறுத்​துள்​ள​னர்.÷த​மிழ் எழுத்து வடி​வத்​தில் மாற்​றம் கொண்டு வர எவ்​வித கார​ண​மும் இல்​லா​த​போது,​​ தமி​ழக அரசு இவ்​வா​றாக முயற்சி மேற்​கொள்​வது தமிழ் மீது கொண்​டுள்ள பற்று கார​ண​மல்ல.​

÷மா​றாக பல்​வேறு அர​சி​யல் கார​ணங்​க​ளுக்​கா​க​வும்,​​ தன்​னல விளம்​ப​ரங்​க​ளுக்​கா​க​வும் தான் என்​ப​தில் மாற்​றுக் கருத்​தில்லை.​÷எ​ழுத்து மாற்​றம் செய்​ய​வேண்​டு​மா​னால் பல்​துறை சேர்ந்த அறி​ஞர்​கள் கொண்ட குழு அமைத்து,​​ மிக நுணுக்​க​மாக ஆராய்ந்து படிப்​ப​டி​யாக மக்​கள் ஏற்​கும்​படி செய்ய வேண்​டும்.​ ÷அதை விடுத்து அவ​சர கோலத்​தில் அள்​ளித் தெளித்​தது போல் தமிழ் எழுத்து மாற்​றம் செய்​வது என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என்​றார்.​

÷இ​வர் எழு​திய தமிழ் வரி​வ​டிவ சீர்த்​தி​ருத்​தமா சீர​ழிப்பா என்ற நூலை பேரா​சி​ரி​யர் ம.லெ.தங்​கப்பா வெளி​யிட,​​ மக்​கள் உரிமை கூட்​ட​மைப்பு செய​லா​ளர் கோ.சுகு​மா​ரன் பெற்​றுக் கொண்​டார்.​÷வி​டியோ கான்​ப​ரன்​சிங் முறை​யில் அமெ​ரிக்​கா​வில் உள்ள தமிழ்​ம​ணம் வலைப்​ப​தி​வு​க​ளின் திரட்​டி​யின் நிர்​வாகி சொ.சங்​க​ர​பாண்டி,​​ செüதி அரே​பி​யா​வில் உள்ள பொறி​யா​ளர் நாக.இளங்​கோ​வன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​

÷பு​துவை வலைப்​ப​தி​வர் சிற​கம் ஒருங்​கி​ணைப்​பா​ளர் ரா.சுகு​மா​ரன்,​​ பேரா​சி​ரி​யர் நா.இளங்கோ,​​ மென்​பொ​ருள் வல்​லு​நர் க.அரு​ண​பா​ரதி,​​ பொறி​யா​ளர் மு.மணி​வண்​ணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

.​
நன்றி:தினமணி,திரட்டி வெங்கட்.
21 comments:

வானம்பாடிகள் said...

தமிழர் புத்தாண்டோடு நில்லாமல் தமிழையே மாற்றிய தலைவனாகி விழாக்காண ஆசையோ? தமிழன் தலையெழுத்து மட்டுமல்ல தமிழின் தலையெழுத்துமா?

Anonymous said...

தமிழ் எழுத்துச்சீர்மை தந்த தானைத்தலைவனுக்கு பாராட்டு விழா 2011

நாடோடி said...

மாற்ற‌ம் என்று இவ‌ர்க‌ள் எதை எதிர்பார்க்கிறார்க‌ள் என்று புரிய‌வில்லை... க‌டைக‌ளின் போர்டுக‌ளையும், திரைப‌ட‌த்தின் பெய‌ர்க‌ளை த‌மிழில் வைத்தால் த‌மிழ் வ‌ள‌ர்ந்து விடுமா?... ச‌ம‌ச்சீர்க‌ல்வி ச‌ம‌ச்சீர்க‌ல்வி என்று ஒன்று சொன்னார்க‌ள்.... இப்போது கோவிந்த‌ சாமி அறிக்கைக்கு அப்புற‌ம் அதை ப‌ற்றிய‌ செய்தியையே க‌ணோம்.... ம்ம்ம்ம்ம்

ஜெரி ஈசானந்தன். said...

வாங்க வானம்பாடும் பாலாண்ணா.

ஜெரி ஈசானந்தன். said...

செந்தழல் ரவியின் வருகை எனக்கு பெருமிதம்..

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நாடோடி.ஸ்டீபன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

,,,,,,,

அப்பாவி முரு said...

இந்த புது தமிழை படித்து நேரத்தை வீணாக்குவதை விட(நாளைக்கி அம்மா வந்து வேற மாத்தப்போக்குது) நான் சைனீஸ் படிக்கப் போறேன்...

:))))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கருத்துக்கள்.

தனபால் said...

///உ​லக அள​வில் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் உள்ள நிலை​யில் தமிழ்​நாட்​டில் மட்​டும் இந்த எழுத்து மாற்​றம் தமி​ழர்​க​ளி​டையே பிரி​வி​னையை ஏற்​ப​டுத்​தும்.​ தமிழ்​நாட்டு தமி​ழர்​களை உல​கத் தமி​ழர்​க​ளி​ட​மி​ருந்து தனி​மைப்​ப​டுத்​தும்///

மிகச் சிறந்த கருத்து.அருமையான பதிவு.

Chitra said...

உ​லக அள​வில் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் உள்ள நிலை​யில் தமிழ்​நாட்​டில் மட்​டும் இந்த எழுத்து மாற்​றம் தமி​ழர்​க​ளி​டையே பிரி​வி​னையை ஏற்​ப​டுத்​தும்.​ தமிழ்​நாட்டு தமி​ழர்​களை உல​கத் தமி​ழர்​க​ளி​ட​மி​ருந்து தனி​மைப்​ப​டுத்​தும்.÷இ​த​னால் தமிழ் மொழி​யின் வளர்ச்சி பின்​ன​டை​யும் என்​ப​தோடு,​​ தமி​ழர்​க​ளின் நிலை மேலும் பின் தள்​ளப்​ப​டும்.​ எழுத்து மாற்​றம் குறித்து வற்​பு​றுத்​து​வோர் கூறும் கார​ணங்​கள் எது​வும் ஏற்​கும்​ப​டி​யாக இல்லை.​


..... சரியான கருத்து.

ஷஸ்னி said...

தமிழர்கள் இறக்கும் போது குரல் கொடுக்காமல் தமிழுக்கு குரல் கொடுத்து என்ன பயன்

கமலேஷ் said...

நல்ல பயன்னுள்ள வாதங்களும், விளக்கங்களும்...நிறைய சிந்திக்க வைத்திருக்கிறது உங்களின் இந்த பதிவு...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி..ஜெர்ரி சார்..

ஸாதிகா said...

அருமையான கருத்துக்கள்

ஜெரி ஈசானந்தன். said...

வானம்பாடி-பாலாண்ணா-நன்றி,
செந்தழல் ரவி-நன்றி,
நாடோடி-ஸ்டீபன் -நன்றி,
நண்டு-ராஜசேகர்-நன்றி,
அப்பாவி முரு-நன்றி,
ஸ்டார் ஜன்-நன்றி,
தனபால்-நன்றி,
சித்ரா-நன்றி,
ஷஷ்னி-நன்றி,
கமலேஷ்-நன்றி,
ஸாதிகா மேம்-நன்றி.

சி. கருணாகரசு said...

தமிழினத்தை அழிக்க காரணமானவர்கள்.
தமிழழிக்க காரணமாகிறார்கள்.

நம் அடையாளத்தை அழித்து ... தன்னை
”அடையாள”ப்படுத்தி கொள்கிறார்கள்.

//தமிழர் புத்தாண்டோடு நில்லாமல் தமிழையே மாற்றிய தலைவனாகி விழாக்காண ஆசையோ? //

வேறேதுக்கு?

Mrs.Menagasathia said...

நல்லதொரு அருமையான கருத்துக்கள்!!

சி. கருணாகரசு said...

என்னங்க ஆளையே காணும்???

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு சார்.

வானம்பாடிகள் பாலா சாரின் கருத்தை வழிமொழிகிறேன்.

சி. கருணாகரசு said...

இந்த படத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கின்றார்... அவர்தான் முனைவர் திரு நா. இளங்கோ. அவர்கள்.

பகிர்வுக்கு நன்றி.

அண்ணாமலை..!! said...

எழுத்துகளை மாற்றாமல் இன்னும் வேறெந்த வழிகளிலெல்லாம் தமிழை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற வழிகளில் அரசு கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.
ஏற்கனவே செய்த சீர்திருத்தங்களினாலே தான் நமக்குப் பழைய நூல்களின் எழுத்துகள் புரியவில்லை!

இது அவசியம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று!

எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் கட்டபொம்மனைப் போல தங்களது பெயர் நிலைக்கும் என்பதைக் காட்டிலும்,கரணம் தப்பினால்
எட்டப்பன் பெயராக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளமை
பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அறிய வேண்டும்!

நன்றிகள்!