Saturday, May 8, 2010

நெஞ்சு பொறுக்குதில்லை.

சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக்கொள்கை விளக்கக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
2009 -ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை: 1644
கொலைகளுக்கான காரணங்கள்:
குடும்ப சண்டை: 453,
வாய்த்தகராறு : 372,
சொந்தப்பகை : 282,
காதல் விவகாரம்:217,
பண பரிமாற்றம்: 68,
நிலத்தகராறு : 102,
குடிபோதையில் தகராறு :96,
அரசியல் கொலைகள் :4,
கண்டு பிடிக்க முடியாதவை:46,
சாதி சண்டை :4.
**************************************************************************************
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.344 உயர்ந்து,தற்போது பவுன் ரூ.13,440-க்கு விற்பனை.
**************************************************************************************
அண்மையில் தமிழகம் முழுவதும்," காலணி பாதுகாப்பு இலவசம்" என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது, ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் தற்போது இரு ஜோடி காலணிக்கு ரூ.2 வசூல் செய்கிறார்கள்.
**************************************************************************************
மதுரைக்கு "தூங்கா நகரம்" என்றும் பெயர் உண்டு,இரவில் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் நீங்கள் வயிறார சாப்பிடமுடியும்,
சாதாரண,சாலையோர கையேந்தி பவன்களில் மூன்று வகை சட்னி வைத்து,சுடச்சுட இட்லி சாப்பிடும் சுகமே தனி....ஆனால் சில நாட்களுக்கு முன்பு,ரயில் நிலையம் அருகில் இருந்த கடையில் கெட்டுப்போன புரோட்டாவை சாப்பிட்டு,கடலூர் மாணவன் பலியாகிப்போனான்.அதையடுத்து சுறுசுறுப்பான அரசு எந்திரம்,ஓட்டல்கள்,கடைகளில் சோதனை நடத்தி "ரூபாய் 60,000-- மதிப்புள்ள
"காலாவதி" உணவுப்பொருட்களை கைப்பற்றி அழித்துள்ளனர்.
**************************************************************************************
திருப்பதி ஏழு மலையானுக்கு வெள்ளிகிழமை தோறும்,அபிஷேகம் மற்றும் வஸ்திர அலங்கார சேவை நடைபெறும்.ஒரு மணி நேரம் பகவானை தரிசிக்கும் வகையிலான இந்த சேவைக்கான அனுமதி டிக்கெட் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது,ஆனால் சிலர் இந்த டிக்கெட்டுகளை "கள்ள மார்க்கெட்டில் "ரூ.10 லட்சங்கள் வரை விற்பனை செய்து கொள்ளை லாபம் அடித்திருக்கிறார்கள்.
**************************************************************************************
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்,விபத்தில் காயமடைந்தவருக்கு அறுவை சிகிச்சையின் போது,3-மீட்டர் பேண்டேஜ் துணியை உள்ளே வைத்து தைத்ததால் கால் பாதிக்கப்பட்டவர் ரூ.5-லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
**************************************************************************************
திருமங்கலத்தில் 150 -கிலோ "கஞ்சா" பறிமுதல்.
*************************************************************************************


29 comments:

வானம்பாடிகள் said...

3 மீட்டர் துணி கைமறதியாவா வைக்க முடியும்? படுபாவிங்க.:))அடிக்கடி போடுங்ணோவ் இப்புடி தொகுப்பு:)

க.பாலாசி said...

//திருப்பதி ஏழு மலையானுக்கு வெள்ளிகிழமை தோறும்,அபிஷேகம் மற்றும் வஸ்திர அலங்கார சேவை நடைபெறும்.ஒரு மணி நேரம் பகவானை தரிசிக்கும் வகையிலான இந்த சேவைக்கான அனுமதி டிக்கெட் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது//

அதுவும் 2020 வரையும் புக் ஆயிடுச்சுங்களாம்.... புக் பண்ணினதுகூட ஒரு 10-20 வி.ஐ.பிங்க மட்டும் புரோக்கர்ஸ்தான்னு இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க....

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

நல்ல தொகுப்பு ...!

ஈரோடு கதிர் said...

ரொம்ப பிஞ்சு நெஞ்சா இருக்கே

ர‌கு said...

ப‌சியெடுக்குதேன்னு ப‌ரோட்டாவை கூட‌ இனிமே தைரிய‌மா சாப்பிட‌முடியாது போல‌ருக்கு :(

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

கையேந்தி பவன்களில் சாப்பிடும் சுகமே தனி .உண்மையில் இதனை மதுரைவாசிகளால் மட்டுமே உணரமுடியும் .
ம் ...அது ஒரு காலம் ...
பகிர்வுக்கு நன்றி .

D.R.Ashok said...

//குடும்ப சண்டை: 453//
குடும்ப வன்முறைதாங்க நெம்பர் ஒன் :(

//பவுன் ரூ.13,440-//
கமாடிட்டி ட்ரேடிங் ஒரு காரணம்... இந்தியா போன்ற ஏழை(?) நாடு ஒரு காரணம்

//புரோட்டாவை சாப்பிட்டு,கடலூர் மாணவன் பலியாகிப்போனான்//
அடிப்பாவமே

//"கள்ள மார்க்கெட்டில் "ரூ.10 லட்சங்கள்//
எழுமலையானுக்கு எப்பவுமே எல்லாத்துலயும் மார்க்கெட் டாப்புங்க

//3-மீட்டர் பேண்டேஜ் துணியை உள்ளே வைத்து தைத்ததால் கால் பாதிக்கப்பட்டவர்//
டாக்டர் ஒரு ஹாப் போட்டுயிருப்பாரோ?

பதிவு கொஞ்சம் பயமுறுத்தலா இருந்தது :)

நேசமித்ரன் said...

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

சூடு கொஞ்சம் கம்மிதான் :)

மதுரை சரவணன் said...

good sharing .thanks.

நாடோடி said...

தொகுப்புக‌ள் ந‌ல்லா இருக்கு சார்..

ஜெரி ஈசானந்தன். said...

பாலாண்ணா இனி அடிக்கடி போட்ருவோம்..சுடச்சுட ......

ஜெரி ஈசானந்தன். said...

பாலாசி...எல்லாமே ...ப்ரோகரிங் ....ஆகிபோச்சு..

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி ஜீவன்..

Chitra said...

2009 -ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை: 1644

....கவுன்ட் குறைவு மாதிரி தெரியுதே...

150 கிலோ கஞ்சா...... ஆஆஆஆ ....

Rs.50,000 ticket - Rs.10 lakhs - கள்ள பணம் எப்படி எல்லாம் விளையாடுது?

இந்த மாதிரி தொகுப்பு - மற்ற ஊர்களையும் சேர்த்து - அடிக்கடி போடுங்க.

ஜெரி ஈசானந்தன். said...

இனி கொஞ்சம் ...ஆழ ...அகலமா செய்தி போட்டுடலாம் கதிர்..

ஜெரி ஈசானந்தன். said...

ரகு...நீங்க சொல்றது உண்மை தான்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஹும்ம்..!:(

சி. கருணாகரசு said...

தொகுப்பு.... பாதிப்பு!

தேவன் மாயம் said...

அரசியல் கொலைகள் :4//

இது நம்ப முடியுதா?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தங்கம் விலை உயர்வு மிகவும் வருத்தமான செய்தி.. டாக்டர்கள் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.. ரொம்ப ஞாபக மறதி அவர்களுக்கு.. குடும்ப பிரச்சினைகளினால் தான் கொலைகள் அதிகம் நடக்கிறதா.. அடக கொடுமையே...

நன்றி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தொகுப்பு

ஜெரி ஈசானந்தன். said...

நண்டு..ஈரோடு-நன்றி,
அசோக் -நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

நேச மித்திரன்-நன்றி,
மதுரை சரவணன்-நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நாடோடி-நன்றி,
சித்ரா-நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

சங்கர்-நன்றி,
கருணாகரசு-நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

தேவன் மாயம்-நன்றி,
பிரகாஸ்-நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ராதா கிருஷ்ணன்-நன்றிகள் பல.

மங்குனி அமைச்சர் said...

//அதையடுத்து சுறுசுறுப்பான அரசு எந்திரம்///


நம்ம அரசு எந்திரம் எப்பவுமே லேட் பிக் அப் தான்

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி அமைச்சரே.