Friday, April 9, 2010

தண்ட காரண்யம்.

வணக்கம் தோழர்களே,இந்திய நடுவண் அரசாங்கத்தின் "பச்சை வேட்டை" தாக்குதலுக்கு எதிராக,மாவோயிஸ்டுகள் பதுங்கி ப்பாயும் கோட்டை தான் "தண்ட காரண்யம்"ஆந்திரா,மகா ராஷ்டிரா,சத்தீஸ்கர்,மத்திய ப்பிரதேசம்,ஜார்கண்ட்,மற்றும்,ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கிய அடர்ந்த வனப்பகுதி "தண்ட காரண்யம்."

தேசத்தின் மையப்பகுதியில் இருக்கும் இந்த வனப்பகுதி 40,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கொண்டது.இந்த வனத்தை மட்டுமே நம்பி,வனத்திலேயே வாழும் பூர்வ குடி மக்களான மலை வாழ் பழங்குடி மக்களுக்கு மின்சார வசதியோ,குடிநீர் வசதியோ,சாலைகளோ, பள்ளிக்கூடமோ,மருத்துவ மனைகளோ,தேவையாய் இருந்தது இல்லை,அதனாலோ என்னவோ அரசாங்கமும் இவர்களை கண்டு கொண்டதில்லை.

.இதெல்லாம் 1995 -ம் ஆண்டு வரைதான்,நிம்மதியாக காட்டை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இம்மக்களுக்கு "உலக மயமாக்கல்"என்ற இடி விழுந்தது.சேட்டிலைட் உதவியுடன் தண்ட காரண்யா வனப்பகுதியில் பாக்சைட் உள்ளிட்ட ஏராளமான "கனிம வள தாதுக்கள்"இருப்பதை கண்டறிந்த பன்னாட்டு வணிக நிறுவனங்களின் [Modern East Indian Companies] பார்வை இந்த வனப்பகுதியில் பட்டது,மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கிடைக்கப்போகும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அந்த நிறுவனங்களை இங்கே "காட்டை அழித்து சுரங்கங்களை நிறுவ ஊக்குவித்தது"

.கட்சி வேறுபாடின்றி,ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரும் தங்கள் கட்சிகளுக்கு தேர்தல் கால நன்கொடைகளை கோடிக்கணக்கில் "பன்னாட்டு கம்பெனிகளிடம் "பெற்றுக்கொண்டு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை ப்பற்றி க்கண்டு கொள்ளவே இல்லை.எனவே ஆளுங்கட்சிகளும்,பன்னாட்டு கம்பனிகளும் கைகோர்த்து மலை வாழ் மக்களை முழுவதுமாக "வனத்திலிருந்து அப்புறப்படுத்த "எண்ணி கிராமம்,கிராமமாக பெயர்த்தெடுத்து தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளனர்,இளைஞர்களை போலீஸ் விசாரணை,பாலியல் வல்லுறவு என இலங்கையில் தமிழர்களுக்கெதிரான அனைத்து கொடுமைகளும் தலைவிரித்து ஆடுவது போல இங்கேயும் நடப்பது தான் ஆச்சரியம்.

மாவோயிஸ்டுகளின் வளர்ச்சி:மலை வாழ் மக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சிகளும்,சமூக அமைப்புகளும்,முன்வராத நிலையில் இவர்களுக்கு மாவோயிஸ்டுகள் மட்டுமே கைகொடுத்தனர்.மலை வாழ் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்ட மாவோயிஸ்டுகள் இப்போது அசூர வளர்ச்சி அடைந்துள்ளனர்.

1.இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை கைப்பற்றி உள்ளனர்,
2 இந்தியாவின் 16 மாநிலங்களில் ஊடுருவி உள்ளனர்,
3 இந்தியாவில் உள்ள 460 மாவட்டங்களில் ஏறத்தாழ 175 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் நேரடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளது,
4 மாவோயிஸ்டுகளின் முழு ஆளுமையின் கீழ் இருக்கும் மாவட்டங்கள்:58,
5 ஓரளவு ஆளுமையில் இருக்கும் மாவட்டங்கள்:54,
6 மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரிக்கும் மாவட்டங்கள்:83,
7 கடந்த ஆண்டில் மட்டும் பலியான காவல் துறையினர் எண்ணிக்கை :312

தற்போதைய சூழலில் ஆபரேசன் பச்சை வேட்டைக்கு உதவ ஆளில்லா உளவு விமானங்களும் நான்கு ஹெலி காப்டர்களும் கொண்டு வேட்டையை தீவிரப்படுத்தினாலும் அரசுத்தரப்பில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.இப்படியாக நடந்துவரும் பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை க்கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள புத்திஜீவிகளில் பெரும்பாலோர் மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கினர்,இந்த விஷயம் குறித்து சமூக ஆர்வலரும்,பிரபல எழுத்தாளருமான "அருந்ததி ராய் " தி கார்டியன் இதழில் எழுதிய கட்டுரை சர்வதேச சலசலப்பை ஈர்த்தது,ஆனால் ப.சிதம்பரமோ "புத்திஜீவிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்"என்று பேட்டி கொடுத்து ...மலை வாழ் மக்களுக்கு ஆதரவாக நீளும் கரங்களுக்கு எதிராக ஒரு மாயச்சுவற்றை எழுப்பி,அவர்களை தனிமை படுத்துகின்றார்.

தினமும் செய்தியாளர்கள் முன்னால் நின்று சத்தமில்லாத ஆங்கிலத்தில்...சூது நிறைந்த வார்த்தைகளில் மிரட்டும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வேண்டுமென்றால் நடந்து முடிந்த பாராளுமன்ற த்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையின் போது காரைக்குடியில் இருந்த தேர்தல் அதிகாரிகளும்,மாவட்ட ஆட்சி நிர்வாகமும் பயப்பட்டிருக்கலாம்,ஆனால்....சொந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக உயிராயுதம் ஏந்தி நிற்கும் "தண்ட காரண்யா கள ப்போராளிகள்" எப்படி பயப்படுவார்கள்?என எனக்கு த்தெரியவில்லை.25 comments:

நேசமித்ரன் said...

இதே இதேதான் ஜெர்ரி அடிச்சு பட்டைய கிளப்புங்க

ஜெரி ஈசானந்தன். said...

உங்கள் அக்கறைக்கு நன்றியும்,அன்பும் நேசா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தினமும் செய்தியாளர்கள் முன்னால் நின்று சத்தமில்லாத ஆங்கிலத்தில்...சூது நிறைந்த வார்த்தைகளில் மிரட்டும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வேண்டுமென்றால் நடந்து முடிந்த பாராளுமன்ற த்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையின் போது காரைக்குடியில் இருந்த தேர்தல் அதிகாரிகளும்,மாவட்ட ஆட்சி நிர்வாகமும் பயப்பட்டிருக்கலாம்,ஆனால்....சொந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக உயிராயுதம் ஏந்தி நிற்கும் "தண்ட காரண்யா கள ப்போராளிகள்" எப்படி பயப்படுவார்கள்?என எனக்கு த்தெரியவில்லை.//

Excellent

வி.பாலகுமார் said...

உணர்வுப்பூர்வமான எழுத்து.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி ராதா கிருஷ்ணன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதிவு மிக அருமை

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆக்கபூர்வமான கருத்துக்கள்.., எல்லோரும் அக்கறை கொள்ளவேண்டும்.

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, அருந்ததி ராய் வந்தாலும் சரி, இல்லை யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும், எங்க நாட்டுக்கு எது பாதுகாப்புன்னு எங்களுக்குத் தெரியுமுங்க. தீவிரவாதத்தை எப்படி அடக்குறதுன்னு எங்களுக்குத் தெரியும். நாங்கதான் இலங்கைக்கே கத்துக் குடுத்தது தெரியுமா? இந்திய 'இரை'ஆண்மைக்கு எதிரா யாரு வந்தாலும் கடிச்சுக் குதறிப்பிடுவோம். சாக்கிரதை. காட்டுவாசியை எல்லாம் நாட்டுவாசியா மாத்தலாம்னா உட மாட்றீங்களேய்யா. ஏன்யா, நீங்க மட்டும் நல்லா சிட்டியில ஏசியில குந்திக்கின்னு கம்பூட்டரு தட்டுவிங்க, நாங்கமட்டும் காட்டுக்குள்ள கெழங்கு தின்னுகிட்டு கெடக்கணுமா? போங்கய்யா நீங்களும் உங்க சொதந்திர தாகமும்! சொம்மா இணையத்துல பொட்டி தட்டுறதுல ஒன்னும் ஆவாது தம்பி ஈசானந்தா. எறங்கு, அல்லாத்தையும் களத்துல எறக்கு. வீதிக்கு வா. போராடு. இங்கிலீஸ்ல எழுதிப் பரப்பு. அல்லாட்டி சொம்மா கமெண்டு வந்திருக்கான்னு மெயிலைப் பாத்துக்கினே ஒக்காந்துக்கோ!

ஜோதிஜி said...

வண்டி சரியாதை பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு ஜனநாயக கூத்து.

அடக்காமல் விட மாட்டேன். அமைச்சர்

நீங்கள் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை பதவியில் இருப்பவர். அமைச்சரின் மனைவி.

எப்பூடி?

சிவகெங்கை மாவட்டம் முழுமையும் எப்பொழுதாவது வாய்ப்பு கிடைத்தால் உள் கிராமப்பகுதிகளில் சுற்றிவரப் பாருங்கள்.

இந்த புத்திசாலியின் கால் நூற்றாண்டு பங்கு தெரியும்??????????????

Chitra said...

நாட்டு நடப்பின் உள்குத்து எல்லாம், இந்த மாதிரி பதிவு படிக்கும் போது தான் தெரியுது. இல்லை என்றால், ஊடகம் சொல்லும் வழிதான்.
பகிர்வுக்கு நன்றி.

தேவன் மாயம் said...

ஜெர்ரி!! நல்ல பதிவு!!

தேவன் மாயம் said...

கட்சி வேறுபாடின்றி,ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரும் தங்கள் கட்சிகளுக்கு தேர்தல் கால நன்கொடைகளை கோடிக்கணக்கில் "பன்னாட்டு கம்பெனிகளிடம் "பெற்றுக்கொண்டு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை ப்பற்றி க்கண்டு கொள்ளவே இல்லை//

உண்மை!! இதனை ஆங்கில ஏடுகள் வீக் போன்றவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன!!

shankar said...

ஜெர்ரி ,
என் முதல் வருகை இது .., மிக சிறந்த பதிவு ..,

//அடக்காமல் விட மாட்டேன். அமைச்சர்//

அதனால் தன ஐயா வாங்கிகட்டிகொல்கிறார் ....,பிரச்சனை எங்கே இருந்து வருகிறது என்று பார்பதற்கு துப்பு இல்லை .,

கவிதன் said...

மிக நல்ல பதிவு சார்!

செல்வா said...

@ அக்கிநிச்சித்தன் , களத்தில் இறங்கி போராடுவது மட்டும்தான் போராட்டமல்ல. முடிந்த ஒரு துரும்பையாவது எடுத்துப் போடுவதுதான் முதல் அடி. அனைவராலும் களப் போராட்டத்தில் இறங்க முடியாது. அப்படி இறங்கியிருப்பவர்களை புரிந்து கொள்ளவாவது இது போன்ற பதிவுகள் அவசியம்.
// சித்ரா ..
நாட்டு நடப்பின் உள்குத்து எல்லாம், இந்த மாதிரி பதிவு படிக்கும் போது தான் தெரியுது. இல்லை என்றால், ஊடகம் சொல்லும் வழிதான். //
இது போல் பலரும் அறிந்து கொண்டு, தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்கையில்தான் ஒட்டுமொத்த மக்களின் புரிதல் மேம்படும் . வெளி வேஷம் போடும் போடும் அரசியல் வாதிகளின் முகத்திரை கிழியும். இல்லையெனில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பிட்டு உறங்க வேண்டியதுதான். அநியாயாமாக நசுக்கப்படும் மக்களுக்காக சொந்த நாட்டில் கூட குரல் எழும்பாத நிலை உருவாகும். சுரணையற்ற மக்கள் கூட்டமாக நாடு மாறியவுடன் நாளை பன்னாட்டு கம்பனிகள் + அரசியல் கொள்ளை கும்பலால் அழித்தொழிக்கப் படுவது நீங்களும் நானுமாக கூட இருக்கலாம்.

துபாய் ராஜா said...

அநேகம் பேருக்கு தெரியாத விஷயத்தை அருமையான விளக்கங்கள் மூலம் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

Sangkavi said...

அனைவரும் அறிய வேண்டிய விசயம்...

jaffer erode said...

இதே இதேதான் ஜெர்ரி அடிச்சு பட்டைய கிளப்புங்க

அக்கினிச் சித்தன் said...

//முடிந்த ஒரு துரும்பையாவது எடுத்துப் போடுவதுதான் முதல் அடி. // ஏனுங்க செல்வா, நீங்க சொல்றது சரிதானுங்க. நம்ம தம்பி ஜெர்ரி மேல நமக்குத் தனிப் பாசம், அதான் அக்கினி கொஞ்சம் சூடாப் போச்சு. தம்பி தப்பா எடுக்காதுன்னு எனக்குத் தெரியும்.

அது கெடக்கட்டுமுங்க. இங்க தம்பி பழமை ஒரு வீடியோ போட்டுருக்காரு பாத்தீங்களா?
http://maniyinpakkam.blogspot.com/2010/04/blog-post_09.html

ரோஸ்விக் said...

சிதம்பரம் ஐயாவை எதுக்கு காங்கிரசுல வச்சிருக்காங்க... அவருதான் அங்க வசூல் ராஜா...

முதலாளிககிட்ட வாங்குற காசுக்கு வஞ்சகம் பண்ணமாட்டரு...

நிறைய விஷயங்கள் இதன் மூலம் தெரிந்துகொண்டேன் தோழரே. :-)

பிரபு . எம் said...

க்ரீன் ஹன்ட் பற்றியும் மாவோயிஸ்ட்கள் பற்றியும் வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாகவே தேடிக் கொண்டிருந்தேன்...
அழகுத் தமிழில் தங்களின் அருமையான தொகுப்பில் முற்றுப் பெற்றது என் தேடல்....

அருந்ததி ராயின் கட்டுரைகள் இந்த விவகாரத்தில் முக்கியமானவை....

பேச்சுவார்த்தை என்கிற வழக்கமான ஆறப்போட்டு குழப்பும் அஸ்திரம் இங்கும் கையிலெடுக்கப் பட்டிருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் குட்டையை எப்படிக் குழப்பிவிடுவார்கள் என்று....

காஷ்மீர் தீவிரவாதிகள் உச்சத்தில் இருந்தபொழுது கூட அவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 3000 எனதான் கணிக்கப் பட்டிருந்தது.. ஆனால் தற்போது மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 15000 என கணிக்கப்படுகிறது.. நீங்கள் கொடுத்திருக்கும் புள்ளிவிவரப்படியும் தினசரி தலைப்புச் செய்திகளையும் பார்க்கும்போது வீரியம் புரிகிறது.....

உள்துறை அமைச்சகம் அதிவேகமாய் ஈகோக்களை விட்டுவிட்டு மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்

நன்றியும் வாழ்த்துக்களும் மாமா.. அருமையான கட்டுரை...

சத்ரியன் said...

//கட்சி வேறுபாடின்றி, ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரும் தங்கள் கட்சி...//

ஜெரி,

செம காரம்.

சாதாரண மக்களைப் பற்றிய அக்கறை எந்த நாய்க்கும் (மண்ணு மோகன் உட்பட) இல்லை என்பதே நிதர்சனம்.

ராமலக்ஷ்மி said...

அறியாத பலவற்றையும் அறியத் தந்துள்ளீர்கள். நல்ல பதிவு.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஜெரி ஈசானந்தன். said...

இந்த பதிவிற்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.