Friday, April 9, 2010

தண்ட காரண்யம்.

வணக்கம் தோழர்களே,இந்திய நடுவண் அரசாங்கத்தின் "பச்சை வேட்டை" தாக்குதலுக்கு எதிராக,மாவோயிஸ்டுகள் பதுங்கி ப்பாயும் கோட்டை தான் "தண்ட காரண்யம்"ஆந்திரா,மகா ராஷ்டிரா,சத்தீஸ்கர்,மத்திய ப்பிரதேசம்,ஜார்கண்ட்,மற்றும்,ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கிய அடர்ந்த வனப்பகுதி "தண்ட காரண்யம்."

தேசத்தின் மையப்பகுதியில் இருக்கும் இந்த வனப்பகுதி 40,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கொண்டது.இந்த வனத்தை மட்டுமே நம்பி,வனத்திலேயே வாழும் பூர்வ குடி மக்களான மலை வாழ் பழங்குடி மக்களுக்கு மின்சார வசதியோ,குடிநீர் வசதியோ,சாலைகளோ, பள்ளிக்கூடமோ,மருத்துவ மனைகளோ,தேவையாய் இருந்தது இல்லை,அதனாலோ என்னவோ அரசாங்கமும் இவர்களை கண்டு கொண்டதில்லை.

.இதெல்லாம் 1995 -ம் ஆண்டு வரைதான்,நிம்மதியாக காட்டை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இம்மக்களுக்கு "உலக மயமாக்கல்"என்ற இடி விழுந்தது.சேட்டிலைட் உதவியுடன் தண்ட காரண்யா வனப்பகுதியில் பாக்சைட் உள்ளிட்ட ஏராளமான "கனிம வள தாதுக்கள்"இருப்பதை கண்டறிந்த பன்னாட்டு வணிக நிறுவனங்களின் [Modern East Indian Companies] பார்வை இந்த வனப்பகுதியில் பட்டது,மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கிடைக்கப்போகும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அந்த நிறுவனங்களை இங்கே "காட்டை அழித்து சுரங்கங்களை நிறுவ ஊக்குவித்தது"

.கட்சி வேறுபாடின்றி,ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரும் தங்கள் கட்சிகளுக்கு தேர்தல் கால நன்கொடைகளை கோடிக்கணக்கில் "பன்னாட்டு கம்பெனிகளிடம் "பெற்றுக்கொண்டு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை ப்பற்றி க்கண்டு கொள்ளவே இல்லை.எனவே ஆளுங்கட்சிகளும்,பன்னாட்டு கம்பனிகளும் கைகோர்த்து மலை வாழ் மக்களை முழுவதுமாக "வனத்திலிருந்து அப்புறப்படுத்த "எண்ணி கிராமம்,கிராமமாக பெயர்த்தெடுத்து தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளனர்,இளைஞர்களை போலீஸ் விசாரணை,பாலியல் வல்லுறவு என இலங்கையில் தமிழர்களுக்கெதிரான அனைத்து கொடுமைகளும் தலைவிரித்து ஆடுவது போல இங்கேயும் நடப்பது தான் ஆச்சரியம்.

மாவோயிஸ்டுகளின் வளர்ச்சி:மலை வாழ் மக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சிகளும்,சமூக அமைப்புகளும்,முன்வராத நிலையில் இவர்களுக்கு மாவோயிஸ்டுகள் மட்டுமே கைகொடுத்தனர்.மலை வாழ் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்ட மாவோயிஸ்டுகள் இப்போது அசூர வளர்ச்சி அடைந்துள்ளனர்.

1.இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை கைப்பற்றி உள்ளனர்,
2 இந்தியாவின் 16 மாநிலங்களில் ஊடுருவி உள்ளனர்,
3 இந்தியாவில் உள்ள 460 மாவட்டங்களில் ஏறத்தாழ 175 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் நேரடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளது,
4 மாவோயிஸ்டுகளின் முழு ஆளுமையின் கீழ் இருக்கும் மாவட்டங்கள்:58,
5 ஓரளவு ஆளுமையில் இருக்கும் மாவட்டங்கள்:54,
6 மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரிக்கும் மாவட்டங்கள்:83,
7 கடந்த ஆண்டில் மட்டும் பலியான காவல் துறையினர் எண்ணிக்கை :312

தற்போதைய சூழலில் ஆபரேசன் பச்சை வேட்டைக்கு உதவ ஆளில்லா உளவு விமானங்களும் நான்கு ஹெலி காப்டர்களும் கொண்டு வேட்டையை தீவிரப்படுத்தினாலும் அரசுத்தரப்பில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.இப்படியாக நடந்துவரும் பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை க்கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள புத்திஜீவிகளில் பெரும்பாலோர் மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கினர்,இந்த விஷயம் குறித்து சமூக ஆர்வலரும்,பிரபல எழுத்தாளருமான "அருந்ததி ராய் " தி கார்டியன் இதழில் எழுதிய கட்டுரை சர்வதேச சலசலப்பை ஈர்த்தது,ஆனால் ப.சிதம்பரமோ "புத்திஜீவிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்"என்று பேட்டி கொடுத்து ...மலை வாழ் மக்களுக்கு ஆதரவாக நீளும் கரங்களுக்கு எதிராக ஒரு மாயச்சுவற்றை எழுப்பி,அவர்களை தனிமை படுத்துகின்றார்.

தினமும் செய்தியாளர்கள் முன்னால் நின்று சத்தமில்லாத ஆங்கிலத்தில்...சூது நிறைந்த வார்த்தைகளில் மிரட்டும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வேண்டுமென்றால் நடந்து முடிந்த பாராளுமன்ற த்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையின் போது காரைக்குடியில் இருந்த தேர்தல் அதிகாரிகளும்,மாவட்ட ஆட்சி நிர்வாகமும் பயப்பட்டிருக்கலாம்,ஆனால்....சொந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக உயிராயுதம் ஏந்தி நிற்கும் "தண்ட காரண்யா கள ப்போராளிகள்" எப்படி பயப்படுவார்கள்?என எனக்கு த்தெரியவில்லை.Friday, April 2, 2010

"இயேசு கிறிஸ்துவும்,பிரபாகரனும்."

மக்களையும்
மண்ணையும் மீட்க
அன்பையே ஆயுதமாகவும்
ஆயுதத்தையே அன்பாகவும் ஏந்தி
பன்னிருவரிலும்
பன்னிருமடங்கிலும்
விடுதலை வீரர்களை
சீடர்களாக்கிநீர்கள்
மக்களை மன்னித்தவன்
மத விரோதியாம்
மண்ணை நேசித்தவன்
தீவிர வாதியாம்
இது....
ஆட்சியாளர்களின்
கொலைக்கள தீர்ப்பு
கேத்செமனியிலும்
முள்ளி வாய்க்காலிலும்
காட்டிக் கொடுக்கப்பட்டு
சிலுவை பாடுகளையும்
சித்தர வதைகளையும்
தோள் மாற்றி சுமந்தீர்கள்
கல்வாரியின் கதறல்
நந்திக்கடலில் எதிரொலித்தது
பேயின் ஆட்சியாளர்களுக்கு
புரிவதில்லை ...
உடல்
வெட்ட..வெட்ட..
முளைக்குமென்று .
மீட்பின் பயணத்தை
முப்பத்தி மூன்று ஆண்டுகளில்
முடித்துக்கொண்டாலும்
உயிர்த்து நிற்கிறீர்கள்
உங்களின் கனவுகளை
எங்களுள் விதைத்து.

வதை முகாம் சித்ரவதையை பார்க்கவும்:


Thursday, April 1, 2010

"சற்றே நீண்ட காது."


பக்கத்தில வராத..சீய்....வெட்கமா..இருக்கு,
ஏய்..அங்க பாரு சண்டைய,
என்ன? உன் ஆளை இன்னும் காணோம்.?
ஏய்..நீ ..இடம் மாறி உட்கார்ந்து இருக்க,

இதெல்லாம்.....
ஒருநாள் மாலை வேளையில்,
மரங்கள் அடர்ந்த சோலையில்,
பலதரப்பட்ட பறவைகள்,
பேசிக்கொண்டதில் சில.......