Wednesday, March 31, 2010

பீட்டர் என்கிற சின்னமாயாண்டி.

முன்குறிப்பு:மதுரையைசுற்றிஉள்ளஉசிலம்பட்டி,திருமங்கலம்,விருதுநகர்,வட்டாரங்களில் ...தங்கள் வீடுகளில் படுத்த படுக்கையாய் கிடக்கும்,முதியவர்களை,இனியும் பராமரிக்க முடியாமல்,மலசலம் அள்ள சலித்துப்போய் கருணைக்கொலை செய்ய [Mercy Killing] முடிவெடுத்து,"தலைக்கு ஊத்துதல்"என்ற சடங்கின் மூலம் மேலுலகம் அனுப்பி வைப்பது அடிக்கடி நடக்கும்.

ஆளை த்தூக்கி உட்கார வைத்து,உடல் முழுவதும்,நல்லெண்ணெய் தேய்த்து,சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டி,உடனே,இளநீரை குடிக்க க்கொடுத்து பின் படுக்கையில் போட்டால்,சில மணித்துளிகளில் ஜன்னி கண்டு உயிர் அடங்கும்,இதிலென்ன கொடுமை என்றால்..அந்த பெருசு நம்மை கொல்லத்தான் போகிறார்கள் என தெரிந்து ...சுத்தி நிற்கும்,தன் மகளையோ,மகனையோ,மருமகனையோ,தூரமாய் தள்ளி நின்று ரகசியமாய் எட்டி ப்பார்க்கும்,பேரன் பேத்திகளையோ கண்களில் கசிந்து வரும் கண்ணீரோடு மலங்க ...மலங்க..பார்ப்பது இருக்கே......காற்றில் ...நரகத்தின் ...நெடி...தாங்க முடியாததாக இருக்கும்.

பொருள்:சீயான்-தாத்தா,பஞ்சாயம்-ஊர்க்கூட்டம்,அல்லது பஞ்சாயத்து,தீத்து-கணவன் மனைவி இருவரும் ஊர் முன்னிலையில் விவாகரத்து கோரி உடனே பிரிந்து போகுதல்,
**************************************************************************************
எங்க சீயான் பேரு..
பீட்டர் என்கிற சின்ன மாயாண்டி,

அந்த காலத்துல...
இவர் கூட்டுற
பஞ்சாயம் பார்க்க,
ஏழூர் சனமும் வந்து நிக்கும்.

தீத்துவிட்டு நிக்கிறவளுக்கும்,
திருடிபுட்டு நிக்கிறவனுக்கும்,
கூட்டிக்கிட்டு வந்தவளுக்கும்,
வெட்டிப்போட்டு வந்தவனுக்கும்,

வழிய சொன்ன பெரியாம்ள...
போக வழி தெரியாம,
படுக்கையில உருளுது...
முழுச்சுக்கிட்டே அழுகுது.

அதனால .....
எங்களுக்குள்ள பேசிமுடிச்சு,
நாளைக்கே..
"தலைக்கு ஊத்துறோம்"

39 comments:

Chitra said...

என கொடுமை சரவணா, இது? எந்த வயதிலும், நோய்வாய்ப்பட்டு இருக்கிறவர்களுக்கு இந்த நிலைமை இனி வந்து விடும் போல.
நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, இளநீர் குடித்தால் ஜன்னி (?) வருமா? இல்லை இளநீருடன் வேறு ஏதாவது கலந்து இருக்குமோ?

மணிஜீ...... said...

கொடுமைதான்...

நாடோடி said...

இப்ப‌டி ந‌ட‌க்குதா முத‌ல் முறையாக‌ கேள்வி ப‌டுகிறேன்.. கொடுமை..

தேவன் மாயம் said...

என்னங்க இது? உண்மையா?

தேவன் மாயம் said...

வயசாயிட்டா நம்ம ஊர்ப் பக்கம் வந்துவிடுங்க மக்கா!!

தேவன் மாயம் said...

சீயான்-தாத்தா,///

அப்படியா?

க.பாலாசி said...

அட... இப்டி ஒண்ணு இருக்குங்களா... எனக்கு இத்தன நாளு தெரியாதுங்க சார்...

கணம்.....

ஜெரி ஈசானந்தன். said...

சித்ராவுக்கு நன்றி....இதெல்லாம் இந்தபக்கம் சாதாரணம்.

வானம்பாடிகள் said...

இப்படியும் நடக்குதா:((

நேசமித்ரன் said...

ஜெர்ரி இதுதான் இதேதான் விட்றாதீங்க

கவிதை மேலே விளக்கம் கீழ இருந்தா நல்லா இருக்கும்ல

தெற்கத்தி மண்வாசம் - ஒரு தொடர் போல எழுதலாமே நீங்க

அன்புடன் மலிக்கா said...

அம்மாடியோ என்னக்கொடுமைசார் இது..

நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்..

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்..

கமல் said...

உங்கள் ஊரில் முதியவர்களைப் பராமரிக்கும் அநாதை இல்லம் ஏதுமில்லையா? இந்த நவீன உலகத்திலும் இப்படிக் கொடுமையா நண்பா?


மண்வாசனை கலந்து கிராமத்துப் பதிவினை எம்மோடு பகிர்ந்து கொண்டதோடு எங்களையும் மதுரைப் பக்கம் அழைத்துச் சென்ற நண்பன் ஜெரி இற்கு நன்றிகள்.

ஜாக்கி சேகர் said...

இது எல்லா கிராமங்களிலும் காலம் காலமாய் நடந்து வருவதுதான்... அதே போல் இளநி பேச்சை எடுத்தாலே.. சரி முடிக்கபோறாங்கன்னு அர்த்தம்... பொதுவா ரொம்பவும் இழுத்து பரிச்சிக்கினு இருக்கறவங்களுக்குதான் அது போல செய்வாங்க..

பிரபு . எம் said...
This comment has been removed by the author.
kavisiva said...

என்ன கொடுமை இது? கள்ளிப்பால் ஊத்துபவர்களுக்கு தலைக்கு ஊத்துவதா சிரமம் :(.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உண்மையா?கொடுமை

துபாய் ராஜா said...

எங்க ஊர் பக்கமும் இந்த பழக்கம் இருந்தது. :((

இப்பதான் உயிருக்கு கியாரண்டியே இல்லையே...

கார்த்திகைப் பாண்டியன் said...

கொடுமை..:-((((

padma said...

நானும் கேள்விபட்டிருக்கிறேன் .உங்கள் கவிதை படிக்கையில் பஞ்சடைத்த விழிகள் ரெண்டு என்னை பார்ப்பது போல் இருக்கிறது

padma said...

நானும் கேள்விபட்டிருக்கிறேன் .உங்கள் கவிதை படிக்கையில் பஞ்சடைத்த விழிகள் ரெண்டு என்னை பார்ப்பது போல் இருக்கிறது

வி.பாலகுமார் said...

அண்ணே, விளக்கத்தை ஏன் முதலிலேயே கொடுத்தீங்க.

//"தலைக்கு ஊத்துறோம்"//

இன்றும் நடக்கத்தானே செய்கிறது... :(

அக்பர் said...
This comment has been removed by the author.
அக்பர் said...

பால் ஊத்துறதும் அதுக்குத்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். செரிக்காதாம்.

என்ன கொடுமை இது.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இது கொடுமையிலும் கொடுமை.

மின்மினி said...

கொடுமையான விஷயம் இது.

ஸ்ரீராம். said...

வயதானவர்களை கொல்லுவது உண்மையில் மெர்சியே இல்லாத செயல்.. அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காட்சியை கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.

ஸாதிகா said...

ஈஷானந்தா சார்..பொய்..பொய்..பொய்யான பதிவுதானே இது?எந்த ஊடகங்களிலும் நான் படித்ததில்லை,கேட்டதில்லையே?புதுசு,புதுசா பீதியைக்கிளப்பறீங்க??

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தடுக்கப்படவேண்டிய விசயம் .
உரிய நடவடிக்கை எடுத்தல் நலம்.
செய்வீர்கள் என நினைக்கின்றேன் ...
செய்யவேண்டும் என்பது என் அவா.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி மணிஜி,
நன்றி நாடோடி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி தேவன் மாயம்.

ஜெரி ஈசானந்தன். said...

பாலாஜி -நன்றி,
பாலாண்ணா- நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நேசா,என்ன செய்ய?நம்ம மக்கள் கவிதையை படிச்சுட்டு ஓடி போயிடுவாங்க,அதனால முன்னால இடி மாதிரி முழங்கிட்டு பின் மழையாய் இறங்கினேன்.தெற்கத்தி மண்வாசனை நல்ல யோசனை,செய்யலாம்.

ஜெரி ஈசானந்தன். said...

மலிக்கா-நன்றி,
கமல்-நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

கவிசிவா-நன்றி,
டி.வீ.ராதா கிருஷ்ணன்,நன்றி,
துபாய் ராஜா-நன்றி,
கார்த்தி-நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பத்மா -நன்றி,
அன்பு தம்பி பாலா-நன்றி,
அக்பர்-நன்றி,
ஸ்டார் ஜன்-நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

மின்மினி-நன்றி,
ஸ்ரீராம்-நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

ஸாதிகா மேம்,இதெல்லாம் சத்தியமா எங்க ஊர் பக்கம் அப்பப்போ நடக்கிற விஷயம் தான்,வெளிய தெரியாது,கடந்த மாதம் கூட மதுரை பதிப்பு தினத்தந்தி செய்தி வெளியிட்டு இருந்தது.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி நண்டு..

உங்களோடு... said...

நெகிழ்ச்சி...