Monday, March 29, 2010

உளறல்ஸ்....

மதுரை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சாதனை:Intelligentsia.
சிங்கை வலைப்பதிவர்கள் குழுமமும்,தமிழ் வெளியும் இணைந்து மிரட்டிய "மணற்கேணி -2009" கட்டுரைப்போட்டிகளில் மூன்று பரிசுகளையும் ஒட்டுமொத்தமாக மதுரைக்குழுமம் தட்டிச்சென்றிருக்கிறது.
அரசியல்/சமூகம் பிரிவில் தருமியும்,
அறிவியல் பிரிவில் தமிழ் துளி டாக்டர் தேவன் மாயமும்,
இலக்கியப்பிரிவில் பிரபாகரும் வெற்றி பெற்றுள்ளனர்,இந்த மூன்று பேருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு என் கட்டி முத்தங்களை ப்பரிசாக த்தருகிறேன்.[சும்மா ...பேச்சுக்கு ..இல்லப்பு...நெசமாவே..நேர்ல பாக்குறப்போ .....சும்மா ..நச்சுனு குடுப்போம்ல...]
****************************************************************************************************************************
சென்னை ப்பதிவர்கள் சந்திப்பு:"lack of Clemencia.....and..Hasty Rendezvous"
பதிவுலக ஜாம்பவான்கள் அதிகம் இருக்கும் சென்னையில்,நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு,பலத்த ஏமாற்றத்தையும்,பதிவர்கள் வட்டங்களில் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சில .....லாம்கள்:
1,உலகெங்கும் உள்ள தமிழ் வலைப்பதிவர்களிடம்,குறைந்த பட்சம்..தமிழகமெங்கும் உள்ள பதிவர்களிடத்திலாவது,கருத்துகள் கேட்டிருக்கலாம்,
2,சில வாரங்கள் முன்னமே "சென்னை பதிவர்களிடத்திலாவது "சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி.."கருத்து ஒற்றுமைக்கு"வந்த பிறகு,இந்த சந்திப்பை நடத்தி இருக்கலாம்.
3,பதிவர் சந்திப்பில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிந்தும்,உடனடியாக,அடுத்த சுற்று பேச்சு வார்த்தை "பிறகு ஒருநாள் தொடரும்"என அறிவித்து விட்டு,நடந்து முடிந்த குழப்பத்தை,வெளியே கசிய விடாமல்,"off the Record" ஆகவாவது,செய்திருக்கலாம்.

ஆளாளுக்கு சுடச்சுட பதிவுகளைப்போட்டு "இப்படியா..உங்கள் இமேஜை நீங்களே...சரியச்செய்வது..?
மீண்டு வருவீர்கள் என நம்புகிறேன்...மீண்டு வரவேண்டும் என யாசிக்கிறேன்.
இந்த விசயத்தில்..நம்மால் உதவ முடியுமா?என்ற கண்ணோட்டத்தில் மதுரை குழும உறுப்பினர்களின் கலந்தாலோசனை கூட்டத்தை,மூத்த ப்பதிவரும்,தேர்ந்த அனுபவத்தால் எங்களை வழி நடத்தி வருபவருமான "தருமி ஐயா" கூட்டவிருக்கிறார்.Off The Record-ஆகத்தான்.கலந்து பேசிவிட்டு ,பிறகு தேவை ஏற்படின் நமது விருப்பத்தை முறைப்படி தெரிவிப்போம் எனக்கூறி இத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.
***********************************************************************************************************
"மதுரை தாதா-வரிச்சியூர் செல்வம்:Running out of.....Nostalgia."
முந்தா நாள் ஒரு வேலையாக மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் செல்ல வேண்டி வந்தது,என் உடன்,எனது குடும்ப நண்பரும்,மதுரையில் பிரபல வழக்கறிஞருமான "ஸ்டாலின் மணி"வந்திருந்ததார்,அங்கே இருந்த போது,காவல் நிலைய வளாகத்தில்,நின்றிருந்த கருப்பு நிற டாட்டா சியாரா லேட்டஸ்ட் மாடல் காரை க்காட்டினார்.
பெரிய கொட்டை எழுத்துகளால் ஆன..ஸ்டிக்க்கரில் "வேட்டைப்புலி"என்று காரின் இடது ,வலது பாடி முழுவதும்,ஒட்டப்பட்டிருந்தது,
யார் வண்டி ஸ்டாலின்? என்றேன்...
நம்ம வரிச்சியூரான் வண்டி தான்,ஆள் எஸ்கேப் ....வண்டிய மட்டும் புடிச்சு வந்துருக்க்காயங்க....என்றார்.
பின் நம்பர் பிளேட்டை பாரு ஜெரி என்றார்,பார்த்தேன்...302 என்று இருந்தது.

மதுரையை ஆண்டு வரும் பல தாதாக்களுள் முக்கியமானவர் தான் இந்த"வரிச்சியூர் செல்வம்"பத்தாண்டுகளுக்கும் மேலாக தாக்கு ப்பிடித்து நிற்பவர்.இவரது கழுத்தில் எப்பொழுதும் கிடக்கும் 300-பவுன் தங்க நகைகளைப்போல,கொலைகள்...கற்பழிப்பு ...ஆள்கடத்தல்...என..எண்ணற்ற பல வழக்குகள் விரவிக்கிடக்கின்றன..
அண்மையில் மகளிர் விடுதி ஒன்றில்,வார்டனை மிரட்டிய வழக்கில்...தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டு,உயிர் பிழைக்க ...ஓடிக்கொண்டே இருக்கிறார்.

இனி மதுரை திரும்புவது கடினம்,ஒரு பத்து மாதம் மட்டும் எப்படியாவது,தாக்கு ப்பிடித்து இருந்தால்,ஒருவேளை பிழைத்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது,...தேர்தல் வந்துவிடும்,தேர்தல் வேலைபார்க்க,[அதாங்க...வேட்பாளரை மிரட்டுதல்,கடத்துதல்..இன்னபிற]ஆள் பற்றாக்குறைக்கு,அரசியல் வாதிகளே,மீண்டும் இவரை Recruit-செய்து கொள்வார்கள்.அதற்கிடையில் சிக்கினால் ...Encounter Confirm -என நம்ப த்தகுந்த வட்டாரம் சொல்கிறது.
****************************************************************************************************************
இனி அடிக்கடி உளறல் சத்தம் கொஞ்சம் சவுண்டாகவே கேட்கும்,எப்பவும் போல வாங்க..."பழகலாம்"
உங்கள் ஜெரி.மதுரை.
************************************************************************************************************30 comments:

பழமைபேசி said...

உளரலுக்கு வாழ்த்துகள் தலைமையார்!

Madurai Saravanan said...

வரிச்சூரை விட சூடா செய்தி, மற்றும் சென்னைப் பற்றி நக்கல்,அது சரி என்ன எப்பவும் போலிஸ் ஸ்டேசன்...மதுரைக்காரன் எங்க சுத்தினாலும் மறைக்க முடியாது , ஒளிய முடியாது.... நல்ல பதிவு.

Chitra said...

இது உளறலா? இல்லை, இல்லை. மதுரை காரர் சவுண்டு விட்டுகிட்டு போய் இருக்கார். தூள் கிளப்பி இருக்கு!

துபாய் ராஜா said...

'ஊர்நடப்ஸ்' எல்லாம் புட்டுபுட்டு வச்சுட்டு 'உளறல்ஸ்'ன்னு சொன்னா எப்படி...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

உளரல்னு சொல்லமுடியாது .
நல்ல முயற்சி .
வாழ்த்துகள் .

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி பழமை பேசி.

ஜெரி ஈசானந்தன். said...

வாங்க சரவணன்...."பொழுது போகணும்ல..."

ஜெரி ஈசானந்தன். said...

சித்ராவுக்கு நன்றி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் ஜெரி

BaMa said...

வாழ்த்துகள்!

ஜெரி ஈசானந்தன். said...

துபாய் ராஜா நன்றிகள் பல.

padma said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்கிறீர்களா?

padma said...

அத்தனையும் தூள்

ஜெரி ஈசானந்தன். said...

நண்டு ராஜசேகருக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

thanks alot T.V.Radha krishnan.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி பாமா.தொடர்வோம்.

LK said...

chennai pathivar santhippai pattri ungal karthukkal sorry ularagal super

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////// என் கட்டி முத்தங்களை ப்பரிசாக த்தருகிறேன்.[சும்மா ...பேச்சுக்கு ..இல்லப்பு...நெசமாவே..நேர்ல பாக்குறப்போ .....சும்மா ..நச்சுனு குடுப்போம்ல...]///////


இது எப்ப இருந்து .?????????????

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

நாங்களும் மதுரைதான் .

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி பத்மா மேம்,

ஜெரி ஈசானந்தன். said...

thank you...L.K

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி பனித்துளி சங்கர். இப்படி அடிக்கடி வந்து குளிர வைங்க..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பதிவர்களுக்கும் சென்னை மதுரை என பிரிவினை ஆரம்பித்து விட்டதா..? இல்லை வெகு காலம் நடந்து நான் லேட்டாக வந்து விட்டேனா..?

பயமா இருக்கு.. இங்கே யார் குழப்பம் விளைவிப்பவர்கள் என்றே புரியவில்லை...

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி பிரகாஷ்.

ஜெரி ஈசானந்தன். said...

thank you prakash.

ரோஸ்விக் said...

உளறல்ஸ் தொடர்ந்து உரத்துக் கேட்கட்டும் சார். :-)

ரோஸ்விக் said...

மூணு ஊர்க்காரங்களும் சிங்கை வரட்டும்... நான் கண்டிப்பாக அவர்களை சந்திப்பேன். நானும் மதுரைக்கு அருகில் உள்ளவன் தான்... :-)

அக்பர் said...

இது உளறல்கள் இல்லை அலறல்கள் (படிக்கிறங்க போடுறது)

அருமை. தொடர்ந்து இது போல் தகவல்களை படிக்க விருப்பம்.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி ரோஸ் விக்.

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி அக்பர்.