Friday, March 26, 2010

"பதிவெழுத வந்த கதை".

வணக்கம் நண்பர்களே,வலைச்சரத்தில் கொடுத்த வாக்கின்படி,எனது 50- வது பதிவாக,பதிவரான கதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
--------------------------------------------------------------------------------
பெயர்கள் பலவிதம்:
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த எனக்கு,பெற்றோர் ஆலயத்தில் வைத்த பெயர் "ஜெரால்டு ஞான குழந்தை ராஜ்,அது பள்ளிக்கூடத்திற்காக சுருங்கி "ஜெரால்டு ராஜ்"ஆனது.1988-90 களில்-"ஜி.பி.ஜெரா"என்ற பெயரில் தேவி,மாலைமதி இதழ்களில் துணுக்கு செய்திகள் எழுதியிருக்கிறேன்.பின் சில வருடங்கள் [2000-2003] the new Indian Express-நாளிதழில் ஜெரி ஈசானந்தா என்ற பெயரில் letters to the editor-பக்கத்திலும்,சில துணுக்கு செய்திகளும் எழுதியிருக்கிறேன்.அதே பத்திரிக்கையில் தேசிய அளவில் வெளிவந்த எனது சிறு கட்டுரையை ப்பாராட்டி கேரளாவில் இருந்து 72-வயது முதியவர் எனக்கு எழுதிய பாராட்டுக்கடிதத்தை,ஒரு புக்கர் பரிசை ப்போல பத்திரமாய் வைத்திருக்கிறேன்.[இந்த சிறு கட்டுரையை புத்தக வடிவில் விரிவுபடுத்துவது என்பது, எனக்கு நானே செய்து கொண்ட சபதம்] இடையில் சொந்த வீடு கட்ட வேண்டி வாசிப்பிற்கும்,எழுத்துக்கும் பெரிய இடைவெளி விழுந்தது.அப்புறம் தொழிற்சங்க கட்டமைப்பு என முற்றிலும் வேறு திசையில்என்பயணம் இருந்திருந்தது.தற்சமயம்,ஏற்பட்ட"TheAnanda'sAversion"காரணமாக,இனி என்பெயரில் ஒரு "ன்"சேர்த்து,"ஜெரி ஈசானந்தன்"என தமிழ் படுத்திக்கொள்ள வாய்ப்புக்கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------
வந்த கதை:
கடந்த இரு வருடங்களாகவே வீட்டில் இணையம் இருந்தாலும்,பொழுதுபோக்கிற்கு இருந்த முதலிடத்தை "ஈழ ப்போராட்டம்"திசை திரும்ப வைத்தது,tamil net,puthinam,போன்ற இன்னபிற ஈழ ஆதரவு இணைய த்தளங்களை ப்படித்துவிட்டு ஒவ்வொரு நாளும் பெருமூச்சோடு கடந்து செல்வேன்.

முத்துக்குமாரின் உயிர் தியாகம் வேறு இடியைப்போல த்தாக்க இன்னும் மேலதிக செய்தி தேடி இணைத்தில் தற்செயலாய் tamil blogs- என டைப்பிட,அதில் "உண்மை தமிழன்"பெயர் பிடித்துப்போய் கிளிக்கினால் மனுஷன் அவரது வலைப்பூவில் போன் நம்பரோடு சிரித்துகொண்டிருந்தார்.உடனே போன் செய்து பேசினேன்,தமிழில் இப்படியெல்லாம் வலைப்பக்கங்கள் இருக்கிறதா?தமிழில் எழுதமுடியுமா?என வாய் பிளந்து கேட்டேன்.மனுஷன் பொறுமையாய் பேசினார்,சில வாரங்கள் கடந்து போனது,பிறகு தற்செயலாய் "தமிழ்நதியின்-இளவேனில் "வலைப்பூவில் நுழைந்து விட்டேன்,அவரது பதிவுகளை படித்துவிட்டு ஒவ்வொரு கணமும் ஸ்தம்பித்து நிற்பேன்,நான் இதற்கு முன் வாசித்தறியா மொழிநடை,லாவகமான சொல்லாடல்,கனல் கக்கும் வார்த்தைகள்,என பதிவுகளை படித்துவிட்டு கமெண்ட் போடத்தெரியாமல் திருதிருவென முழித்து,பிறகு முக்கித்தக்கி கமெண்ட் போட்டு என் பதிவுலக அக்கவுண்டை அவரது வலைப்பூவில் இருந்து ஆரம்பித்தேன்,

என்னை எழுந்து,நிமிர்ந்து நிற்க ச்செய்த நாள்-மே19-ஈழ விடுதலைக்கு தலைமையேற்று போராடிய மாவீரன் பிரபாகரனின் மரணசெய்தி,அப்பொழுதே முடிவு செய்தேன்,நான் பிறந்த தமிழ் இனத்திற்கு என்னாலான பங்களிப்பை "குறைந்த பட்சம்"தமிழில் எழுதியாவது,ஏதாவது செய்வோம் என........அதற்கடுத்து ஜூன்-1 ந்தேதி பத்தே நிமிடத்தில் "தடுப்புமுகாம் கவிதை"என தலைப்பிட்டு எழுதி,என் வலைப்பூவில் முதல் இடுகையிட்டேன்,உடனே இயக்குனர் செந்தமிழன் சீமானின் உதவியாளரும், தொழில் அதிபருமான "செல்வராஜ் முருகையனிடம்"ஈமெயில் அனுப்பினேன்,அடுத்த வினாடியே அவர் பாராட்டிவிட்டு,அக்கவிதையை சீமானின் இணையப்பக்க முகப்பில் போட்டுவிட்டார்.

பின் தொடர்ச்சியாய் கவிதை எழுதிவந்தேன்,படிக்கத்தான் ஆட்கள் வரவில்லை,அப்பொழுது எனக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகளை ப்பற்றி த்தெரிந்து இருக்கவில்லை.பிறகு தான் தமிழ்மணம் பற்றி தெரிந்து,அதில் இணைக்கத்தெரியாமல்முழித்து,பின் "திரட்டி"நிறுவனர் புதுச்சேரி வெங்கடேசனிடம் தொடர்புகொண்டேன்,நண்பர் ஒரு மணி நேரத்தில் இணைத்துக்கொடுத்தார்.

தமிழ்மணத்தில் நான் இணைத்த முதல் இடுகை "போதிமர நிழலில் வாதைகளின் கூடாரம்"என்ற கவிதை,பிறகு என் பதிவில் கமெண்ட் போட்டுவிட்டு தன் அலைப்பேசி என்னையும் கொடுத்தார் "தமிழ் துளி டாக்டர் தேவன்மாயம்."உடனே பேசினேன்,மதுரை சகபதிவர்களை பற்றி சொன்னார்,பரஸ்பரம் எல்லோரிடமும் பேசிக்கொண்டேன்,பிறகு மதுரையில் நடந்த "உயிர்மை பதிப்பக"புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானும் சென்றேன்,அங்கு வைத்து மதுரை பதிவர்களையும்,சென்னையில் இருந்து வருகை தந்திருந்த பதிவர்கள் "தண்டோரா என்ற மணிஜி,அகநாழிகை வாசு,butterfly suryaa,சந்திக்க வாய்ப்பு கிடைத்தது,சற்று நேரத்தில் தேவன்மாயம் வந்தார்,செல்வேந்திரன் வந்தார்,கார்த்தி,ஸ்ரீ,தருமி ஐயா,என எல்லோரும் வந்தனர்.

அதற்குபின் சென்னையில் நடந்த "உரையாடல் "அமைப்பு நடத்திய சிறுகதை பட்டறைக்கு சென்றேன்,மனதில் பட்டதை சொல்வதென்றால்,மதுரைக்கு வந்த மணி,வாசு,சூர்யாவுக்கு பதிலுக்கு சென்னை சென்று மரியாதை நிமித்தம் பார்க்க ஆசை,நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்,சென்னை அண்ணாநகரில் என் உடன் பிறந்த சகோதரன் இருக்கிறார்,அவரது மனைவி அங்குள்ள பன்னாட்டு வங்கியில் துணைத்தலைவராக பணிசெய்கிறார்,என் தம்பியே அவனது காரில் ஒட்டிக்கொண்டு வந்து என்னை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ட்ராப் செய்துபோனான்,இவ்வளவு ஆர்வமாக சென்ற எனக்கு ஏமாற்றமே,நேரமின்மையால்,பதிவர் அறிமுகம் நடக்கவில்லை,கிடைத்த இடைவெளி நேரங்களில் வழிய சென்று பலரிடம் பேசினேன்,விரும்பி பேசியவர்கள்,வெடுக்கென்று திரும்பியவர்கள்,என அந்த நாள் கழிந்தது,புனைவுகளின் அரசன் யுவன் சந்திர சேகரரின் நட்பும் அன்பும் கிடைத்தது,தொலைப்பேசி எண்கொடுத்தார்.
.இப்பவும் அவர் கதை படிக்கும் போது,சந்தேகம் என்றால் எந்த நேரமென்றாலும் உரிமையோடு தொல்லைகொடுத்து வருகிறேன்,அப்புறம் அங்கே நான் பார்த்து வியந்த மனிதன் பைத்தியக்காரன் என்ற சிவராமன்,[what a great personality?...i love you siva.].

அதற்கு பிறகு... ...ஈரோட்டில் வலைப்பதிவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது,அங்கும் ஆர்வமாக சென்று கலந்து கொண்டேன்,ஏராளமான பதிவர்களை பார்க்க,பழக வாய்ப்பு கிடைத்தது,நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகு நேர்த்தியாய்,கட்டமைத்திருந்தனர்.இத்தனை தமிழ் சாதி சொந்தங்களை நான் பெற்றது இந்த "ஈரோட்டு சங்கமம்"நிகழ்ச்சியில் தான்.[தயவுசெய்து..தமிழ்நாட்டில் எங்காவது...எந்த நிகழ்ச்சியானாலும்....நடத்தவேனுமென்று முடிவுசெய்தால் ஈரோடு தமிழ் சொந்தங்களிடம் கலந்து கொண்டு செய்யுங்கள் என்பது என் தாழ்மையான கருத்து.]

பின் ஒரு வார காலத்திற்கு "வலைச்சர ஆசிரியராக"இருந்து புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தும் பணியை அன்பின் சீனா ஐயா வழங்கினார்,இது மறக்க முடியாத அனுபவம்,என்னை நானே மீட்டெடுக்க கிடைத்த வாய்ப்பு,பல புதிய நண்பர்களையும்,புதிய சொந்தங்களையும் இந்த வலைச்சரம் வழங்கியது.
இப்படியே தான் என் பயணம் தொடர்கிறது...நண்பர்களே.......
அவரவர்களுக்கான உலகம்....அதில் ....அவரவர்களுக்கான பயணம்.....இதில் ..நானும் ஒரு வழிப்போக்கன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே....
வாருங்கள் ....நாளும் ...அன்பில்....தொடர்ந்து .....பயணிப்போம்.
56 comments:

தமிழ் பிரியன் said...

50 க்கு வாழ்த்துக்கள்! சிறுகதை பட்டறைக்கு நான் வந்து இருந்தேன்.. :-)
\\[what a great personality?...i love you siva.].\\ Yes.

சசிகுமார் said...

நன்றாக எழுதி உள்ளீர்கள், உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

இவ்வளவு பின்புலங்களை அறிந்தபிறகு வெறும் வாழ்த்துடன் பிரிவதில் வருத்தம்தான்...

என்போன்ற மாணவர்களுக்கு ஆசிரியராகவும் இருக்கிறீர்கள்....

மின்னல் said...

விரைவில் சதம் அடிக்க வாழ்த்துகள்

V.Radhakrishnan said...

தொடர்ந்து எழுதி சாதனை புரிய வாழ்த்துகள்.

ஜெரி ஈசானந்தன். said...

தமிழ் பிரியனுக்கு நன்றிகள் பல.....

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி சசிக்குமார்.....

வி.பாலகுமார் said...

நல்லா கோர்வையா சொல்லி இருக்கீங்கண்ணே, ஐம்பதுக்கு வாழ்த்துக்கள், தொடருங்கள் :)

ஜெரி ஈசானந்தன். said...

பாலாசி தங்களின் வருகைக்கு நன்றியும்,அன்பும்.....எழுத வந்த பிறகு....ஆசிரியர் என்ன?மாணவர் என்ன? we are all unique creatures....and have tremendous potencial .

padma said...

வாழ்த்துக்கள் சார் .சேம் பின்ச் நானும் இன்று ஐம்பதாவது பதிவு போட்டிருக்கிறேன் .மிகவும் நன்றாக உள்ளது உங்கள் அனுபவம்

வானம்பாடிகள் said...

அருமையான அறிமுகம் ஜெரி. பதிவுலகத்திற்கு வந்ததும் சேம் ப்ளட். ஐம்பது விரைவில் ஐன்னூறாகட்டும்:) வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

அவரவர்களுக்கான உலகம்....அதில் ....அவரவர்களுக்கான பயணம்.....இதில் ..நானும் ஒரு வழிப்போக்கன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே..//

நெகிழ்ச்சியான வரிகள்!!

தேவன் மாயம் said...

தமிழ்மணத்தில் நான் இணைத்த முதல் இடுகை "போதிமர நிழலில் வாதைகளின் கூடாரம்"என்ற கவிதை,பிறகு என் பதிவில் கமெண்ட் போட்டுவிட்டு தன் அலைப்பேசி என்னையும் கொடுத்தார் "தமிழ் துளி டாக்டர் தேவன்மாயம்."உடனே பேசினேன்,மதுரை சகபதிவர்களை பற்றி சொன்னார்,பரஸ்பரம் எல்லோரிடமும் பேசிக்கொண்டேன்,///

நினைவுகூர்ந்தமைக்கு நன்றி!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அதுக்குள்ள ஐம்பதாவது பதிவா..?

ஜமாயுங்க ஜெரி..!

தேவன் மாயம் said...

பதிவர்களை பார்க்க,பழக வாய்ப்பு கிடைத்தது,நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகு நேர்த்தியாய்,கட்டமைத்திருந்தனர்///

ஈரோடு மக்களுக்கு வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

.அதே பத்திரிக்கையில் தேசிய அளவில் வெளிவந்த எனது சிறு கட்டுரையை ப்பாராட்டி கேரளாவில் இருந்து 72-வயது முதியவர் எனக்கு எழுதிய பாராட்டுக்கடிதத்தை,ஒரு புக்கர் பரிசை ப்போல பத்திரமாய் வைத்திருக்கிறேன்.[///

தேசிய அளவில் பிரபலமா? சொல்லவே இல்லையே!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இவ்வளவு ஆர்வமாக சென்ற எனக்கு ஏமாற்றமே, நேரமின்மையால், பதிவர் அறிமுகம் நடக்கவில்லை, கிடைத்த இடைவெளி நேரங்களில் வழிய சென்று பலரிடம் பேசினேன், விரும்பி பேசியவர்கள், வெடுக்கென்று திரும்பியவர்கள், என அந்த நாள் கழிந்தது]]]

இப்படீல்லாம் தப்பா நினைக்கக் கூடாது.. யதேச்சையா செஞ்சிருக்கலாம். அதோட முதல் முறையா நேர்ல பார்க்குறதாலேயும், புதுசா இருக்கிறதாலேயும் என்ன பேசுறதுன்னு யோசிச்சிருக்கலாம்..!

தேவன் மாயம் said...

உண்மைத் தமிழன் சொல்வது உண்மையாக இருக்கலாம்!

ஜெரி ஈசானந்தன். said...

உண்மை தமிழன் சொல்வது உண்மைதான்,.....என் மனசில பட்டதை சொன்னேன்....அவ்ளோதான்..

Chitra said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

Selva said...

வாழ்த்துக்கள் ஜெர்ரி..
உங்களை போன்றவர்களின் முன் முயற்சியால் தான், அந்த முத்துக்குமார் ஏற்றி வைத்த சுடர் அணையாமல் உலகெங்கும் கொண்டுசெல்லப்பட்டு விழிபுணர்வுக்கு வழி கோலுகிறது...
முயற்சி தொடர வாழ்த்துக்கள்...

பிரபு . எம் said...

ஆஃப் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் மாமா... :)

நல்ல எண்ணத்துடன் துவங்கும் எந்தவொரு காரியமும் சிறப்பாக ஈடேறும்... ஆரோக்யமான சிந்தனைகளுடன் பதிவைத் துவங்கியிருக்கும் உங்களுக்கு செஞ்சுரியும் சீக்கிரம் சாத்தியமாகும் இன்னும் பலமடங்கு விரிவடைந்த வாசகர் மற்றும் நட்பு வட்டத்துடன் :)

ஜெரி ஈசானந்தன். said...

மின்னலுக்கு நன்றிகள் பல....இப்படி அடிக்கடி வந்து மின்னுங்க...மின்னல்..

பழமைபேசி said...

வாழ்த்துகள் தலைமையாரே!

ஜெரி ஈசானந்தன். said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled '"பதிவெழுத வந்த கதை"' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th March 2010 01:56:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/211798

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வாழ்த்துகள் ஜெரியாரே..:)
--
வலையுலகில் என்னை கவர்ந்த பெயர்களில் உங்களுடையதும் ஒன்று.:))

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

50 க்கு வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்களின் பயணம் ...

D.R.Ashok said...

50க்கு வாழ்த்துகள்(பதிவுக்குதாங்க)... நிறைவா பகிர்ந்திருக்கீங்க... :)

துபாய் ராஜா said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

தமிழ் இனமான எழுச்சி உணர்வால் இழுக்கப்பட்டு பதிவெழுத வந்த தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு தலைவணங்குகிறேன்
தலைமை ஆசிரியரே...

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள் ஜெரி. எதிர்பார்த்த இடங்களிலிருந்து முட்களும் எதிர்பாராத இடங்களிலிருந்து மலர்களும் சொரியக்காண்பது இக்கோடையின் சிறப்புப் போலும்… சகமனிதரை நேசிக்கும் தண்மையான குணம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. உற்சாகத்தோடு தொடர்ந்து எழுதுங்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பா..:-)))

kavisiva said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

kutipaiya said...

vaazhthukkal Jerry..
keep going!

தங்க முகுந்தன் said...

// எனது சிறு கட்டுரையைப் பாராட்டி கேரளாவில் இருந்து 72-வயது முதியவர் எனக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தை, ஒரு புக்கர் பரிசைப்போல பத்திரமாய் வைத்திருக்கிறேன் //

அருமையான - உணர்வுள்ள எழுத்துக்கான பரிசாக நான் எண்ணுகிறேன்!

தங்களின் ஐம்பதாவது பதிவுக்கு எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

தொடரட்டும் தங்கள் பணி!

ஸாதிகா said...

///ஜி.பி.ஜெரா"என்ற பெயரில் தேவி,மாலைமதி இதழ்களில் துணுக்கு செய்திகள் எழுதியிருக்கிறேன்.///ஓ..அந்த ஜெராவா நீங்க்??!!வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சதம் அடிக்க வாழ்த்துகள்

ஜோதிஜி said...

பள்ளியில் நுழைந்து பதிவு பேரேடுகளில் பெயர்களை அழைத்து முடிந்து போக வேண்டிய உங்கள் வாழ்க்கையை பதிவு வரைக்கும் அழைத்து வந்ததும், அதனை இன்று வரைக்கும் தொடர வைத்ததும் ஈழம் சார்ந்த விருப்பங்கள் என்பதை உணர்ந்த போது?

ஐம்பது நூறு என்ற எண்ணிக்கையை விட என்னை ஈழம் குறித்து அதிகம் யோசிக்க வைத்த எழுத்துக்கள் உங்கள் கவிதைகள். எப்போது போலவே பார்க்கும் இடுகையில் மின் அஞ்சல் வசதி இருந்தால் பதிந்து விட்டு வருவதைப் போல இயல்பாக நடந்தது.

ஆனால் வந்து விழுந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு சம்மட்டி கவிதையும் மனதை பிசைந்த நாட்கள் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

நம்மால் என்ன முடியும்? என்பதை விட என்னால் முடிந்தது இது தான் என்பதாகத் தான் உங்கள் எழுத்துக்கள் உரமாக இருந்தது என்பது உண்மை.

25 வருட புத்தக வாசிப்பும், உள்ளே இருந்தவைகளை உணராமல் ஓடிக்கொண்டுருந்த வாழ்க்கையை எத்தனையோ பேர்கள் ஒரு ஓழுங்குக்கு கொண்டு வந்துள்ளார்கள். இடுகை வாயிலாக நீங்கள்.

கல்லூரியில் செபிலான் வில்லவன் கோதை என்ற கிறிஸ்துவ நண்பன் இப்போது எங்கு வாழ்ந்து கொண்டுருக்கின்றான் என்பதே தெரியவில்லை. அவன் உருவாக்கிய ஆர்வங்கள் என்னை மாற்றிய தாக்கங்கள் எல்லாமே அவனைப் போலவே நாடோடியாக போகவிருந்த காலத்தில் உங்கள் அன்பு கிடைத்தது பாக்யமே.

குறைவான பங்களிப்பு என்றாலும் நிறைவான வாக்குகள் போல உருவாக்கிய தாக்கமும் நட்புகளும் அதிகமே.

அது தான் நீங்கள் உணர்ந்து எழுதும் எழுத்தின் வலிமை.

நல்வாழ்த்துகள் ஆசிரியரே.

ஜெரி ஈசானந்தன். said...

thanks alot v.radha krishnan.

ஜெரி ஈசானந்தன். said...

பாசக்கார தம்பி பாலாவுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பத்மாவுக்கும் சேம் பின்ச்.

நாடோடி said...

ஐம்ப‌தாவ‌து ப‌திவுக்கு வாழ்த்துக்க‌ள் சார்..

ஜெரி ஈசானந்தன். said...

தேவன் மாயம்----நன்றி,
உண்மை தமிழன்---நன்றி,
வானம்பாடி பாலாண்ணா---நன்றி,
வெட்டி பேச்சு சித்ரா---நன்றி,
செல்வா----நன்றி,
மாப்ள பிரபு----நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பழமை பேசி----நன்றி,
சங்கர்----நன்றி,
நண்டு ராஜ சேகர்---நன்றி,
அசோக் ----நன்றி,
துபாய்ராஜா---நன்றி.

நேசமித்ரன் said...

50 தா வாழ்த்துகள் ஜெர்ரி

உங்களின் சிந்தனையின் வேகம் எழுத்துக்கும் தாருங்கள் 100 தூரம் இல்லை

மின்மினி said...

அருமையான பதிவு.., 50 வது பதிவுக்கு என் இனிய வாழ்த்துகள்.

நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ஜெரி சார்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள் ஜெரி சார்..,

உங்களை பற்றி அறிந்து கொண்டேன். 50 வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஜெரி ஈசானந்தன். said...

அன்பின் தமிழ்நதி வணக்கம்,இப்படி என்னை இன்ப அதிர்ச்சியில் தள்ளுவீர்கள் என நான் எதிர்பார்க்கவேயில்லை .......
யாருக்கும் நீங்கள் பின்னூட்டம் இட்டு நான் பார்த்ததில்லை, திடுமென உங்கள் பெயரை பார்த்துவிட்டு,என் மனைவியிடம் காட்டினேன்,சின்னமகன் கரிகாலனும் வந்து.."தமிழ்நதி"என்று வாசித்துப்போனான்.பக்கத்து..எதிர்வீட்டுக்காரர்களை த்தான் கூப்பிட்டு காட்டவில்லை,உங்கள் வாழ்த்து எனக்கு...புதிய உத்வேகத்தையும் ...உற்சாகத்தையும் பரிசளித்து இருக்கிறது,நன்றி சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை...தமிழ்

ஜெரி ஈசானந்தன். said...

கார்த்திகை பாண்டியன்---நன்றி,
கவிசிவா----நன்றி,
அன்பின் சீதா ---நன்றி,
தங்க முகுந்தன்---நன்றி,
அன்பின் "ஸாதிகா மேம் "--நன்றி,
டி.வீ.ராதா கிருஷ்ணன் --நன்றி,
ஜோதிஜி ----நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தன். said...

நாடோடி--நன்றி,
அன்பின் நேசா----நன்றி,
ஸ்டார் ஜன்--நன்றி,
மின்மினி-நன்றிகள்.

பைத்தியக்காரன் said...

வாழ்த்துகள் ஜெரி...

50 இடுகை என்பதெல்லாம் உங்கள் வாழ்க்கை அனுபவத்துக்கும், வாசிப்புக்கும், புரிதலுக்கும் சாதாரணமே...

தொடர்ந்து பல அழுத்தமான இடுகைகளை எழுத வாழ்த்துகள் நண்பா :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

geetha santhanam said...

50-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் --கீதா

ஜெரி ஈசானந்தன். said...

தங்களின் "ஆசிருக்கு நன்றி சிவராமன்."

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி கீதா சந்தானம்...

கமல் said...

பதிவெழுத வந்த அனுபவத்தை அருமையான சொல்லாடல்களால் பல்சுவையும் கலந்து சொல்லியுள்ளீர்கள். நீங்கள் இன்னும் நிறையப் படைப்புக்களை மதுரைத் தமிழ் மண் வாசனையோடு வழங்க வேண்டும்.

வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பின்வரிசை மாணவன் நான்.(பிந்திய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்) :))

ஜெரி ஈசானந்தன். said...

நன்றி கமல்.நாளும் அன்பில் தொடர்வோம்.

உங்களோடு... said...

உங்களது அனுபவங்கள் எங்களுக்கு நல்ல வழிகாட்டி...வாழ்த்துக்கள்!