Monday, March 1, 2010

"என் உயிர் தோழா."

சதையினாலும்,குருதியினாலும்,நிறைந்திருந்த சாதாரண மனிதன் தான்,ஆனால்,சமரசமற்ற போராளி.
.உயிர்க்கொடை செய்துகொண்ட,W.R வரதராஜன்,அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டி இக்கவிதாஞ்சலி.
----------------------------------------------------------------------------------------------------------------------------
இனம் அழிந்தால் என்ன!
மொழி ஒழிந்தால் என்ன!

இசம் என்ற,
பித்து மட்டும்,
பிடித்திருந்தால் போதும்,
வேறு தகுதி தேவையில்லை.

பிறகென்ன,
உனக்கான....
மூக்கனாங்கயிறையோ,
கடிவாளத்தையோ..
கழுத்துப்பட்டையையோ ...
கட்சி பார்த்துக்கொள்ளும்.

"இது...
பொலிட் பீரோ
முடிவென்று"
தாயைப்புணர ச்சொன்னால் கூட,
தயாராக வேண்டும்.

ஆம் ..என்றால்,
காம் ரெட்.
முடியாது என்றால்,
அடிமாடு தான்.

கடைசி வரை....
உள்கட்சி,
பயங்கர வாதத்திற்கும்,
தப்பிப்பிழைக்கவேண்டும்.

எதிர்த்துப்போரிட்டால்,
இறுதியில்,
இரண்டே வாய்ப்புகள்,
எஞ்சி நிற்கும்.

நடை பிணமாய் திரிந்தலைவது....
உயிர்க்கொடை செய்துகொள்வது....

இதில் உனக்கு...
எது வாய்த்திருக்கிறது?
என் உயிர் தோழா.


44 comments:

D.R.Ashok said...

//கடைசி வரை....
உள்கட்சி,
பயங்கர வாதத்திற்கும்,
தப்பிப்பிழைக்கவேண்டும்.//
:)

//நடை பிணமாய் திரிந்தலைவது....
உயிர்க்கொடை செய்துகொள்வது....//
இரண்டுமே வாய்க்கவில்லை... என்றே எண்ணுகிறேன் :(

பிரபு . எம் said...

கடுமையான பதிவு...
கொடுமைகள் நடந்தேறும்போது கடுமை காட்டத் தகுதியான ஆர்வலர்கள் இன்றும் ஆதங்கத்துடன் பேனா பிடிப்பதே இறந்தவருக்கு உண்மையான அஞ்சலி....
அவரது ஆத்மா ஷாந்தி அடையட்டும்....

Chitra said...

நடை பிணமாய் திரிந்தலைவது....
உயிர்க்கொடை செய்துகொள்வது....


......சிவப்பு எழுத்துக்களில் காரமான கேள்விகள்.........

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வரதராஜன் சார் தியாக மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்; அஞ்சலிகள்.

அன்னார் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

தேவன் மாயம் said...

மூக்கனாங்கயிறையோ,
கடிவாளத்தையோ..
கழுத்துப்பட்டையையோ ...
கட்சி பார்த்துக்கொள்ளும்.
//

வேறு வழியற்ற ஒரு வழிப்பாதையா?

தேவன் மாயம் said...

கவிதை கசப்பான எச்சங்களைக் கடுமையாய் சொல்கிறது!!!

தேவன் மாயம் said...

இதில் உனக்கு...
எது வாய்த்திருக்கிறது?
என் உயிர் தோழா.///

தோழன் - தோழர்- ஐத் துறப்பதுவே சரி!!!

தேவன் மாயம் said...

ஒரு காலத்தில் நாங்களும் “என்ன தோழர்” அனுதாபிகளாய் இருந்ததுண்டு!!

தேவன் மாயம் said...

வரதராஜன் அவர்களின் இழப்பு- மக்களின் நம்பிக்கைகளின் மீதான மரண் அடி!!

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க அசோக்,நலமா?கருத்துக்கு நன்றி.[அதான் தற்கொலை [உயிர்க்கொடை] செய்துகொண்டாரே

ஜெரி ஈசானந்தா. said...

பிரபுவுக்கு நன்றிகள் பல..

ஜெரி ஈசானந்தா. said...

/......சிவப்பு எழுத்துக்களில் காரமான கேள்விகள்.........//
நன்றி சித்ரா.

ஜெரி ஈசானந்தா. said...

ஸ்டார் ஜன் நன்றிகள் பல.

வானம்பாடிகள் said...

அற்புதமான மனிதருக்கு அவலமான முடிவு வாய்த்திருக்க வேண்டாம்.:(

க.பாலாசி said...

நல்ல மனிதரை நினைவுகூர்ந்தமை சிறப்பு....

ஈரோடு கதிர் said...

சுடுகிறது சிவப்பு வரிகள்

கண்ணகி said...

எத்தனை வேதனை பட்டிருந்தால் இந்தமுடிவு எடுத்திருப்பார்....கவரிமான்..

ஹேமா said...

ஜெரி...நானும் கை கோர்த்துக் கொள்கிறேன் உங்கள் அனுதாப அஞ்சலியோடு !

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி தேவா

ஜெரி ஈசானந்தா. said...

வானம்பாடும் பாலாண்ணா நன்றிகள் பல..

ஜெரி ஈசானந்தா. said...

பாலாசிக்கு நன்றி.

vidivelli said...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

சி. கருணாகரசு said...

கனல் தெறிக்கிறது... கவிதையில் ....

அய்யாவிற்கு எமது இரங்கல்.

ஜெரி ஈசானந்தா. said...

ஈரோட்டு கவிஞர் கதிருக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

கண்ணகி,சொல்ல ..சொல்ல...இனிக்கும் பெயர்,தங்களின் வருகை எனக்கு பெருமிதம்.

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமாவுக்கு நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தா. said...

விடிவெள்ளி நன்றி..

ஜெரி ஈசானந்தா. said...

கருணா கரசுக்கு நன்றிகள் பல.

நேசமித்ரன் said...

சிவப்பு அஞ்சலி கவிதை

!!!!!

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி நேசமித்திரன்.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled '"என் உயிர் தோழா."' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st March 2010 04:56:07 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/194909

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நசரேயன் said...

நல்லா இருக்கு ஐயா

murugan said...

ஜீவாவோடு முடிந்து விட்டது கம்மியுனிசம்.இப்போது பினராய் விஜயன்,சோம்னத் சட்டர்ஜி காலம்யா,பொழைக்க தெரியாம போயி சேர்ந்திட்டிய தோழா.

சத்ரியன் said...

//"இது...
பொலிட் பீரோ
முடிவென்று"
தாயைப்புணர ச்சொன்னால் கூட,
தயாராக வேண்டும்.//

ஈசா,

குருதி நிற எழுத்துக்களில் கொப்பளிக்கும் கோப வரிகள்...!

ஜோதிஜி said...

குடும்ப அவலத்தையும் கோடிட்டு காட்டியிருக்கலாம். சாட்டையடி.

ஸாதிகா said...

///பிறகென்ன,
உனக்கான....
மூக்கனாங்கயிறையோ,
கடிவாளத்தையோ..
கழுத்துப்பட்டையையோ ...
கட்சி பார்த்துக்கொள்ளும்.///உண்மை வரிகள்.காராசாரமான கவிதை.

ஜெரி ஈசானந்தா. said...

நசரேயன்-நன்றி.
முருகன்-நன்றி,
சத்ரியன்-நன்றி,
ஜோதிஜி-நன்றி,
ஸாதிகா-நன்றி.
நாளும்..அன்பில்..தொடர்வோம்

ரோஸ்விக் said...

சரித்திரமும்... நம் தரித்திரமும் சிவப்பு எழுத்துக்களில் பொருத்தமாய்.

மிகவும் வருத்தமாய். :-(

பிரபு . எம் said...

வணக்கம் மாமா..
எப்படி இருக்கீங்க?
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் (பிடித்த பத்துப் பெண்கள்)
லிங்க்: http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html
நீங்க எழுதலைன்னா... "சொப்பன ஸ்கலிதம்" கவிதை பற்றி அத்தை கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கும்!! ;‍)
ஹி ஹி.. :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஜெரி,

சிகப்பு கொப்பளிக்கிது..

--

:(

ஜெரி ஈசானந்தா. said...

அன்பின் ரோஸ் விக் ,மாப்பு பிரபு, ஆருயிர் சங்கர் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

என்னுடைய அஞ்சலி'யையும் இணைத்து விடுங்கள்...

நன்றி.

Jaleela said...

தோழருக்காக நல்ல தொரு பகிர்வு,

கிருஷ்ணமூர்த்தி said...

இதற்குப் பேர் அஞ்சலியா ஜெரி?

அந்த நல்ல மனிதனை அறிவீர்களா? அவருடைய தொழிற்சங்க ஈடுபாடு, தன்னுடைய இயக்கத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, இவைகளில் ஒரு சிறிதேனும் அறிந்திருப்பீர்களா? அப்படி அறிந்திருந்தால், தாயை புணரக் கூடச் சொன்னால் என்ற மாதிரி வார்த்தைகள் எல்லாம் வருமா? உங்களுக்கு ஈழப் பிரச்சினையில் இருக்கிற பிடிப்பை, இறந்து போன ஒரு நல்ல மனிதனைப் பற்றி எழுதும்போது கூடவா வெளிப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? குப்பிகளின் மீது இருக்கும் கரிசனம், ஒரு மனிதன் மீது இல்லாமல் போனதேன்?

WRV யை அறிந்தவன், அவரிடம் தொழிற்சங்கப் பாடங்களைக் கற்றுக் கொண்டவன் என்ற முறையில், இந்தப் பதிவு, தோழரின் மரணத்தைவிட மிகக் கொடுமையானதாக,வேதனை தருவதாக இருக்கிறது.