Wednesday, March 31, 2010

பீட்டர் என்கிற சின்னமாயாண்டி.

முன்குறிப்பு:மதுரையைசுற்றிஉள்ளஉசிலம்பட்டி,திருமங்கலம்,விருதுநகர்,வட்டாரங்களில் ...தங்கள் வீடுகளில் படுத்த படுக்கையாய் கிடக்கும்,முதியவர்களை,இனியும் பராமரிக்க முடியாமல்,மலசலம் அள்ள சலித்துப்போய் கருணைக்கொலை செய்ய [Mercy Killing] முடிவெடுத்து,"தலைக்கு ஊத்துதல்"என்ற சடங்கின் மூலம் மேலுலகம் அனுப்பி வைப்பது அடிக்கடி நடக்கும்.

ஆளை த்தூக்கி உட்கார வைத்து,உடல் முழுவதும்,நல்லெண்ணெய் தேய்த்து,சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டி,உடனே,இளநீரை குடிக்க க்கொடுத்து பின் படுக்கையில் போட்டால்,சில மணித்துளிகளில் ஜன்னி கண்டு உயிர் அடங்கும்,இதிலென்ன கொடுமை என்றால்..அந்த பெருசு நம்மை கொல்லத்தான் போகிறார்கள் என தெரிந்து ...சுத்தி நிற்கும்,தன் மகளையோ,மகனையோ,மருமகனையோ,தூரமாய் தள்ளி நின்று ரகசியமாய் எட்டி ப்பார்க்கும்,பேரன் பேத்திகளையோ கண்களில் கசிந்து வரும் கண்ணீரோடு மலங்க ...மலங்க..பார்ப்பது இருக்கே......காற்றில் ...நரகத்தின் ...நெடி...தாங்க முடியாததாக இருக்கும்.

பொருள்:சீயான்-தாத்தா,பஞ்சாயம்-ஊர்க்கூட்டம்,அல்லது பஞ்சாயத்து,தீத்து-கணவன் மனைவி இருவரும் ஊர் முன்னிலையில் விவாகரத்து கோரி உடனே பிரிந்து போகுதல்,
**************************************************************************************
எங்க சீயான் பேரு..
பீட்டர் என்கிற சின்ன மாயாண்டி,

அந்த காலத்துல...
இவர் கூட்டுற
பஞ்சாயம் பார்க்க,
ஏழூர் சனமும் வந்து நிக்கும்.

தீத்துவிட்டு நிக்கிறவளுக்கும்,
திருடிபுட்டு நிக்கிறவனுக்கும்,
கூட்டிக்கிட்டு வந்தவளுக்கும்,
வெட்டிப்போட்டு வந்தவனுக்கும்,

வழிய சொன்ன பெரியாம்ள...
போக வழி தெரியாம,
படுக்கையில உருளுது...
முழுச்சுக்கிட்டே அழுகுது.

அதனால .....
எங்களுக்குள்ள பேசிமுடிச்சு,
நாளைக்கே..
"தலைக்கு ஊத்துறோம்"

Monday, March 29, 2010

உளறல்ஸ்....

மதுரை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சாதனை:Intelligentsia.
சிங்கை வலைப்பதிவர்கள் குழுமமும்,தமிழ் வெளியும் இணைந்து மிரட்டிய "மணற்கேணி -2009" கட்டுரைப்போட்டிகளில் மூன்று பரிசுகளையும் ஒட்டுமொத்தமாக மதுரைக்குழுமம் தட்டிச்சென்றிருக்கிறது.
அரசியல்/சமூகம் பிரிவில் தருமியும்,
அறிவியல் பிரிவில் தமிழ் துளி டாக்டர் தேவன் மாயமும்,
இலக்கியப்பிரிவில் பிரபாகரும் வெற்றி பெற்றுள்ளனர்,இந்த மூன்று பேருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு என் கட்டி முத்தங்களை ப்பரிசாக த்தருகிறேன்.[சும்மா ...பேச்சுக்கு ..இல்லப்பு...நெசமாவே..நேர்ல பாக்குறப்போ .....சும்மா ..நச்சுனு குடுப்போம்ல...]
****************************************************************************************************************************
சென்னை ப்பதிவர்கள் சந்திப்பு:"lack of Clemencia.....and..Hasty Rendezvous"
பதிவுலக ஜாம்பவான்கள் அதிகம் இருக்கும் சென்னையில்,நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு,பலத்த ஏமாற்றத்தையும்,பதிவர்கள் வட்டங்களில் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சில .....லாம்கள்:
1,உலகெங்கும் உள்ள தமிழ் வலைப்பதிவர்களிடம்,குறைந்த பட்சம்..தமிழகமெங்கும் உள்ள பதிவர்களிடத்திலாவது,கருத்துகள் கேட்டிருக்கலாம்,
2,சில வாரங்கள் முன்னமே "சென்னை பதிவர்களிடத்திலாவது "சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி.."கருத்து ஒற்றுமைக்கு"வந்த பிறகு,இந்த சந்திப்பை நடத்தி இருக்கலாம்.
3,பதிவர் சந்திப்பில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிந்தும்,உடனடியாக,அடுத்த சுற்று பேச்சு வார்த்தை "பிறகு ஒருநாள் தொடரும்"என அறிவித்து விட்டு,நடந்து முடிந்த குழப்பத்தை,வெளியே கசிய விடாமல்,"off the Record" ஆகவாவது,செய்திருக்கலாம்.

ஆளாளுக்கு சுடச்சுட பதிவுகளைப்போட்டு "இப்படியா..உங்கள் இமேஜை நீங்களே...சரியச்செய்வது..?
மீண்டு வருவீர்கள் என நம்புகிறேன்...மீண்டு வரவேண்டும் என யாசிக்கிறேன்.
இந்த விசயத்தில்..நம்மால் உதவ முடியுமா?என்ற கண்ணோட்டத்தில் மதுரை குழும உறுப்பினர்களின் கலந்தாலோசனை கூட்டத்தை,மூத்த ப்பதிவரும்,தேர்ந்த அனுபவத்தால் எங்களை வழி நடத்தி வருபவருமான "தருமி ஐயா" கூட்டவிருக்கிறார்.Off The Record-ஆகத்தான்.கலந்து பேசிவிட்டு ,பிறகு தேவை ஏற்படின் நமது விருப்பத்தை முறைப்படி தெரிவிப்போம் எனக்கூறி இத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.
***********************************************************************************************************
"மதுரை தாதா-வரிச்சியூர் செல்வம்:Running out of.....Nostalgia."
முந்தா நாள் ஒரு வேலையாக மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் செல்ல வேண்டி வந்தது,என் உடன்,எனது குடும்ப நண்பரும்,மதுரையில் பிரபல வழக்கறிஞருமான "ஸ்டாலின் மணி"வந்திருந்ததார்,அங்கே இருந்த போது,காவல் நிலைய வளாகத்தில்,நின்றிருந்த கருப்பு நிற டாட்டா சியாரா லேட்டஸ்ட் மாடல் காரை க்காட்டினார்.
பெரிய கொட்டை எழுத்துகளால் ஆன..ஸ்டிக்க்கரில் "வேட்டைப்புலி"என்று காரின் இடது ,வலது பாடி முழுவதும்,ஒட்டப்பட்டிருந்தது,
யார் வண்டி ஸ்டாலின்? என்றேன்...
நம்ம வரிச்சியூரான் வண்டி தான்,ஆள் எஸ்கேப் ....வண்டிய மட்டும் புடிச்சு வந்துருக்க்காயங்க....என்றார்.
பின் நம்பர் பிளேட்டை பாரு ஜெரி என்றார்,பார்த்தேன்...302 என்று இருந்தது.

மதுரையை ஆண்டு வரும் பல தாதாக்களுள் முக்கியமானவர் தான் இந்த"வரிச்சியூர் செல்வம்"பத்தாண்டுகளுக்கும் மேலாக தாக்கு ப்பிடித்து நிற்பவர்.இவரது கழுத்தில் எப்பொழுதும் கிடக்கும் 300-பவுன் தங்க நகைகளைப்போல,கொலைகள்...கற்பழிப்பு ...ஆள்கடத்தல்...என..எண்ணற்ற பல வழக்குகள் விரவிக்கிடக்கின்றன..
அண்மையில் மகளிர் விடுதி ஒன்றில்,வார்டனை மிரட்டிய வழக்கில்...தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டு,உயிர் பிழைக்க ...ஓடிக்கொண்டே இருக்கிறார்.

இனி மதுரை திரும்புவது கடினம்,ஒரு பத்து மாதம் மட்டும் எப்படியாவது,தாக்கு ப்பிடித்து இருந்தால்,ஒருவேளை பிழைத்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது,...தேர்தல் வந்துவிடும்,தேர்தல் வேலைபார்க்க,[அதாங்க...வேட்பாளரை மிரட்டுதல்,கடத்துதல்..இன்னபிற]ஆள் பற்றாக்குறைக்கு,அரசியல் வாதிகளே,மீண்டும் இவரை Recruit-செய்து கொள்வார்கள்.அதற்கிடையில் சிக்கினால் ...Encounter Confirm -என நம்ப த்தகுந்த வட்டாரம் சொல்கிறது.
****************************************************************************************************************
இனி அடிக்கடி உளறல் சத்தம் கொஞ்சம் சவுண்டாகவே கேட்கும்,எப்பவும் போல வாங்க..."பழகலாம்"
உங்கள் ஜெரி.மதுரை.
************************************************************************************************************Friday, March 26, 2010

"பதிவெழுத வந்த கதை".

வணக்கம் நண்பர்களே,வலைச்சரத்தில் கொடுத்த வாக்கின்படி,எனது 50- வது பதிவாக,பதிவரான கதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
--------------------------------------------------------------------------------
பெயர்கள் பலவிதம்:
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த எனக்கு,பெற்றோர் ஆலயத்தில் வைத்த பெயர் "ஜெரால்டு ஞான குழந்தை ராஜ்,அது பள்ளிக்கூடத்திற்காக சுருங்கி "ஜெரால்டு ராஜ்"ஆனது.1988-90 களில்-"ஜி.பி.ஜெரா"என்ற பெயரில் தேவி,மாலைமதி இதழ்களில் துணுக்கு செய்திகள் எழுதியிருக்கிறேன்.பின் சில வருடங்கள் [2000-2003] the new Indian Express-நாளிதழில் ஜெரி ஈசானந்தா என்ற பெயரில் letters to the editor-பக்கத்திலும்,சில துணுக்கு செய்திகளும் எழுதியிருக்கிறேன்.அதே பத்திரிக்கையில் தேசிய அளவில் வெளிவந்த எனது சிறு கட்டுரையை ப்பாராட்டி கேரளாவில் இருந்து 72-வயது முதியவர் எனக்கு எழுதிய பாராட்டுக்கடிதத்தை,ஒரு புக்கர் பரிசை ப்போல பத்திரமாய் வைத்திருக்கிறேன்.[இந்த சிறு கட்டுரையை புத்தக வடிவில் விரிவுபடுத்துவது என்பது, எனக்கு நானே செய்து கொண்ட சபதம்] இடையில் சொந்த வீடு கட்ட வேண்டி வாசிப்பிற்கும்,எழுத்துக்கும் பெரிய இடைவெளி விழுந்தது.அப்புறம் தொழிற்சங்க கட்டமைப்பு என முற்றிலும் வேறு திசையில்என்பயணம் இருந்திருந்தது.தற்சமயம்,ஏற்பட்ட"TheAnanda'sAversion"காரணமாக,இனி என்பெயரில் ஒரு "ன்"சேர்த்து,"ஜெரி ஈசானந்தன்"என தமிழ் படுத்திக்கொள்ள வாய்ப்புக்கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------
வந்த கதை:
கடந்த இரு வருடங்களாகவே வீட்டில் இணையம் இருந்தாலும்,பொழுதுபோக்கிற்கு இருந்த முதலிடத்தை "ஈழ ப்போராட்டம்"திசை திரும்ப வைத்தது,tamil net,puthinam,போன்ற இன்னபிற ஈழ ஆதரவு இணைய த்தளங்களை ப்படித்துவிட்டு ஒவ்வொரு நாளும் பெருமூச்சோடு கடந்து செல்வேன்.

முத்துக்குமாரின் உயிர் தியாகம் வேறு இடியைப்போல த்தாக்க இன்னும் மேலதிக செய்தி தேடி இணைத்தில் தற்செயலாய் tamil blogs- என டைப்பிட,அதில் "உண்மை தமிழன்"பெயர் பிடித்துப்போய் கிளிக்கினால் மனுஷன் அவரது வலைப்பூவில் போன் நம்பரோடு சிரித்துகொண்டிருந்தார்.உடனே போன் செய்து பேசினேன்,தமிழில் இப்படியெல்லாம் வலைப்பக்கங்கள் இருக்கிறதா?தமிழில் எழுதமுடியுமா?என வாய் பிளந்து கேட்டேன்.மனுஷன் பொறுமையாய் பேசினார்,சில வாரங்கள் கடந்து போனது,பிறகு தற்செயலாய் "தமிழ்நதியின்-இளவேனில் "வலைப்பூவில் நுழைந்து விட்டேன்,அவரது பதிவுகளை படித்துவிட்டு ஒவ்வொரு கணமும் ஸ்தம்பித்து நிற்பேன்,நான் இதற்கு முன் வாசித்தறியா மொழிநடை,லாவகமான சொல்லாடல்,கனல் கக்கும் வார்த்தைகள்,என பதிவுகளை படித்துவிட்டு கமெண்ட் போடத்தெரியாமல் திருதிருவென முழித்து,பிறகு முக்கித்தக்கி கமெண்ட் போட்டு என் பதிவுலக அக்கவுண்டை அவரது வலைப்பூவில் இருந்து ஆரம்பித்தேன்,

என்னை எழுந்து,நிமிர்ந்து நிற்க ச்செய்த நாள்-மே19-ஈழ விடுதலைக்கு தலைமையேற்று போராடிய மாவீரன் பிரபாகரனின் மரணசெய்தி,அப்பொழுதே முடிவு செய்தேன்,நான் பிறந்த தமிழ் இனத்திற்கு என்னாலான பங்களிப்பை "குறைந்த பட்சம்"தமிழில் எழுதியாவது,ஏதாவது செய்வோம் என........அதற்கடுத்து ஜூன்-1 ந்தேதி பத்தே நிமிடத்தில் "தடுப்புமுகாம் கவிதை"என தலைப்பிட்டு எழுதி,என் வலைப்பூவில் முதல் இடுகையிட்டேன்,உடனே இயக்குனர் செந்தமிழன் சீமானின் உதவியாளரும், தொழில் அதிபருமான "செல்வராஜ் முருகையனிடம்"ஈமெயில் அனுப்பினேன்,அடுத்த வினாடியே அவர் பாராட்டிவிட்டு,அக்கவிதையை சீமானின் இணையப்பக்க முகப்பில் போட்டுவிட்டார்.

பின் தொடர்ச்சியாய் கவிதை எழுதிவந்தேன்,படிக்கத்தான் ஆட்கள் வரவில்லை,அப்பொழுது எனக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகளை ப்பற்றி த்தெரிந்து இருக்கவில்லை.பிறகு தான் தமிழ்மணம் பற்றி தெரிந்து,அதில் இணைக்கத்தெரியாமல்முழித்து,பின் "திரட்டி"நிறுவனர் புதுச்சேரி வெங்கடேசனிடம் தொடர்புகொண்டேன்,நண்பர் ஒரு மணி நேரத்தில் இணைத்துக்கொடுத்தார்.

தமிழ்மணத்தில் நான் இணைத்த முதல் இடுகை "போதிமர நிழலில் வாதைகளின் கூடாரம்"என்ற கவிதை,பிறகு என் பதிவில் கமெண்ட் போட்டுவிட்டு தன் அலைப்பேசி என்னையும் கொடுத்தார் "தமிழ் துளி டாக்டர் தேவன்மாயம்."உடனே பேசினேன்,மதுரை சகபதிவர்களை பற்றி சொன்னார்,பரஸ்பரம் எல்லோரிடமும் பேசிக்கொண்டேன்,பிறகு மதுரையில் நடந்த "உயிர்மை பதிப்பக"புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானும் சென்றேன்,அங்கு வைத்து மதுரை பதிவர்களையும்,சென்னையில் இருந்து வருகை தந்திருந்த பதிவர்கள் "தண்டோரா என்ற மணிஜி,அகநாழிகை வாசு,butterfly suryaa,சந்திக்க வாய்ப்பு கிடைத்தது,சற்று நேரத்தில் தேவன்மாயம் வந்தார்,செல்வேந்திரன் வந்தார்,கார்த்தி,ஸ்ரீ,தருமி ஐயா,என எல்லோரும் வந்தனர்.

அதற்குபின் சென்னையில் நடந்த "உரையாடல் "அமைப்பு நடத்திய சிறுகதை பட்டறைக்கு சென்றேன்,மனதில் பட்டதை சொல்வதென்றால்,மதுரைக்கு வந்த மணி,வாசு,சூர்யாவுக்கு பதிலுக்கு சென்னை சென்று மரியாதை நிமித்தம் பார்க்க ஆசை,நான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்,சென்னை அண்ணாநகரில் என் உடன் பிறந்த சகோதரன் இருக்கிறார்,அவரது மனைவி அங்குள்ள பன்னாட்டு வங்கியில் துணைத்தலைவராக பணிசெய்கிறார்,என் தம்பியே அவனது காரில் ஒட்டிக்கொண்டு வந்து என்னை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ட்ராப் செய்துபோனான்,இவ்வளவு ஆர்வமாக சென்ற எனக்கு ஏமாற்றமே,நேரமின்மையால்,பதிவர் அறிமுகம் நடக்கவில்லை,கிடைத்த இடைவெளி நேரங்களில் வழிய சென்று பலரிடம் பேசினேன்,விரும்பி பேசியவர்கள்,வெடுக்கென்று திரும்பியவர்கள்,என அந்த நாள் கழிந்தது,புனைவுகளின் அரசன் யுவன் சந்திர சேகரரின் நட்பும் அன்பும் கிடைத்தது,தொலைப்பேசி எண்கொடுத்தார்.
.இப்பவும் அவர் கதை படிக்கும் போது,சந்தேகம் என்றால் எந்த நேரமென்றாலும் உரிமையோடு தொல்லைகொடுத்து வருகிறேன்,அப்புறம் அங்கே நான் பார்த்து வியந்த மனிதன் பைத்தியக்காரன் என்ற சிவராமன்,[what a great personality?...i love you siva.].

அதற்கு பிறகு... ...ஈரோட்டில் வலைப்பதிவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது,அங்கும் ஆர்வமாக சென்று கலந்து கொண்டேன்,ஏராளமான பதிவர்களை பார்க்க,பழக வாய்ப்பு கிடைத்தது,நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகு நேர்த்தியாய்,கட்டமைத்திருந்தனர்.இத்தனை தமிழ் சாதி சொந்தங்களை நான் பெற்றது இந்த "ஈரோட்டு சங்கமம்"நிகழ்ச்சியில் தான்.[தயவுசெய்து..தமிழ்நாட்டில் எங்காவது...எந்த நிகழ்ச்சியானாலும்....நடத்தவேனுமென்று முடிவுசெய்தால் ஈரோடு தமிழ் சொந்தங்களிடம் கலந்து கொண்டு செய்யுங்கள் என்பது என் தாழ்மையான கருத்து.]

பின் ஒரு வார காலத்திற்கு "வலைச்சர ஆசிரியராக"இருந்து புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தும் பணியை அன்பின் சீனா ஐயா வழங்கினார்,இது மறக்க முடியாத அனுபவம்,என்னை நானே மீட்டெடுக்க கிடைத்த வாய்ப்பு,பல புதிய நண்பர்களையும்,புதிய சொந்தங்களையும் இந்த வலைச்சரம் வழங்கியது.
இப்படியே தான் என் பயணம் தொடர்கிறது...நண்பர்களே.......
அவரவர்களுக்கான உலகம்....அதில் ....அவரவர்களுக்கான பயணம்.....இதில் ..நானும் ஒரு வழிப்போக்கன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே....
வாருங்கள் ....நாளும் ...அன்பில்....தொடர்ந்து .....பயணிப்போம்.
Monday, March 1, 2010

"என் உயிர் தோழா."

சதையினாலும்,குருதியினாலும்,நிறைந்திருந்த சாதாரண மனிதன் தான்,ஆனால்,சமரசமற்ற போராளி.
.உயிர்க்கொடை செய்துகொண்ட,W.R வரதராஜன்,அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டி இக்கவிதாஞ்சலி.
----------------------------------------------------------------------------------------------------------------------------
இனம் அழிந்தால் என்ன!
மொழி ஒழிந்தால் என்ன!

இசம் என்ற,
பித்து மட்டும்,
பிடித்திருந்தால் போதும்,
வேறு தகுதி தேவையில்லை.

பிறகென்ன,
உனக்கான....
மூக்கனாங்கயிறையோ,
கடிவாளத்தையோ..
கழுத்துப்பட்டையையோ ...
கட்சி பார்த்துக்கொள்ளும்.

"இது...
பொலிட் பீரோ
முடிவென்று"
தாயைப்புணர ச்சொன்னால் கூட,
தயாராக வேண்டும்.

ஆம் ..என்றால்,
காம் ரெட்.
முடியாது என்றால்,
அடிமாடு தான்.

கடைசி வரை....
உள்கட்சி,
பயங்கர வாதத்திற்கும்,
தப்பிப்பிழைக்கவேண்டும்.

எதிர்த்துப்போரிட்டால்,
இறுதியில்,
இரண்டே வாய்ப்புகள்,
எஞ்சி நிற்கும்.

நடை பிணமாய் திரிந்தலைவது....
உயிர்க்கொடை செய்துகொள்வது....

இதில் உனக்கு...
எது வாய்த்திருக்கிறது?
என் உயிர் தோழா.