Monday, February 22, 2010

சொப்பன ஸ்கலிதம்.

பிரிந்த சகியே....

முன்னஞ்சென்ற காதலர்களின்,
தின்று செரித்த எச்சங்கள்,
காட்டிய வழியில்...
தடம் பதித்து நடந்தோம்.

காதலின்..
அத்தனை,
சந்து,பொந்துகளிலும்,
விளையாடிக்களைத்தோம்.

மேலும்.....
உடல் கொண்டு,
வெட்டியெடுத்த,
தீராச்சுரங்கத்தின்
அந்தரங்க பொக்கிசங்களை,
நினைவுகளின்,
நிலவறைகளில்,
பரஸ்பரம்,
சேமித்தும் வைத்திருக்கிறோம்.

நீ..அறிவாயா?

என்..நிலவறைகளின்,
வெப்பம் தாங்காது,
நடு நிசி இரவுகளில்...
கசிந்து வரும் கனவுகளால்,
ஜனனம் தொலைத்த ஜடங்கள்,
ஆங்காங்கே....
சிதறிக்கிடப்பதை.

வா, வந்து ,
உனக்கான பங்கை,
பொறுக்கிக்கொண்டு போ.

நீ....அறிவாயா?

இங்கே உலர்வது,
வெறும் சொப்பன ஸ்கலித மல்ல,
நீர்த்துப்போன பந்தமென்று.61 comments:

தண்டோரா ...... said...

ஜெர்ரீ...அட்டகாசம்..கொஞ்சம் மொழி மாறியிருக்கு!

D.R.Ashok said...

விடியலில் அதே அதே...:)) (ஆச்சரியம்)

வெப்பமாய் தகித்தது கவிதை :)

பிரியமுடன்...வசந்த் said...

தல நேச சந்திப்பின் விளைவா?

நல்லாருக்கு...!

கலகலப்ரியா said...

மிக மிக அருமை ஜெரி....!!!! :)

பிரபு . எம் said...

அழகா இருக்கு மாமா...
ஃப்ளேவர் புதுசா இருக்கு... இது தொடருமா!!
எப்படியிருந்தாலும் வார்த்தைகள் அழகா செட்டாகுது அந்தந்த ஃபீலுக்கு ஏற்றமாதிரி..
சூப்பர்ப் மாமா...
ஹ்ம்ம்ம்ம்.... எனக்கு கவிதை எழுதத் தெரியலையேனு இருக்கு :(

ஜெரி ஈசானந்தா. said...

வணக்கம் தண்டோரா,வாழ்த்துக்கு நன்றி,[ என் புதிய நண்பியிடம் கற்றுக்கொண்டது தான்.]

துபாய் ராஜா said...

படமும், கவிதை வரிகளும் அருமை.

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க அசோக்,வருகைக்கு நன்றி

அகநாழிகை said...

ஜெரி, கவிதை மிகவும் அருமை.

(உங்களுக்கு தமிழ்மண ஓட்டு போட்டா வேறு ஒரு லிங்க் ஓப்பன் ஆகுது பாருங்க)

க.பாலாசி said...

ஆசிரியரே... பின்னிட்டீங்க...

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க வசந்த்,நலமா?நேற்று முழுவதும்,படிமக்கவிஞர் நேசமித்திரன் கூட இருந்தேன்,நிறைய பேசினோம்.,,அந்த effect ன்னு கூட வச்சுக்கலாம்..

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க வாசு,உங்க வாழ்த்து மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது,
//(உங்களுக்கு தமிழ்மண ஓட்டு போட்டா வேறு ஒரு லிங்க் ஓப்பன் ஆகுது பாருங்க)//
அடப்பாவி,எனக்கு ஒன்னும் தெரியாதே?நான் என்ன செய்யணும்?

நேசமித்ரன் said...

நல்லாருக்கு!

அருமை....!

ஹேமா said...

ம்ம்ம்ம்....நீர்த்துப்போன பந்தம்.
இது போதும்.

தேவன் மாயம் said...

நேற்று முழுவதும்,படிமக்கவிஞர் நேசமித்திரன் கூட இருந்தேன்,நிறைய பேசினோம்.,,அந்த effect ன்னு கூட வச்சுக்கலாம்..///


எஃபெக்ட் அதிகமாகவே இருக்கு நண்பா!!!

அண்ணாமலையான் said...

அருமையா இருக்கு

சி. கருணாகரசு said...

இது போன்ற கவிதைகளை உள்வாங்குவதில் மிக சிரமப்படுகிறேன்.....

உங்க கவிதையில்... சிதறிகிடக்கிறது ஜடங்கள் என்று வருகிறது..... இது சரியா?

ஏனெனில்.... வெறும் x ல் ஜடம் எப்படி?
xy ல் தானே ஜடம்....

இந்த என் கேள்வி சரியா?

Chitra said...

Attendance: Present, Sir.

vittalankavithaigal said...

சார் நானும் இருக்கேன் ..
http://vittalankavithaigal.blogspot.கம
கவிதை அருமை

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை கலக்கல் தலைவரே

சி. கருணாகரசு said...

நான்... தங்களுக்கு மின் மடல் அனுப்பினேன்.... கிடைத்ததா?

அன்புடன்... நான்.
சி. கருணாகரசு.

ஜோதிஜி said...

பிரபு சொல்வதை போல இதுவே விருப்பமானதாக தொடராமல் இருக்கட்டும். வந்து பின்னூட்டங்களும் பொறுப்பு.

ஜெரி ஈசானந்தா. said...

பிரியா சௌக்கியமா? வருகைக்கு,கருத்துக்கு,ஒரு சலுட்

ஜெரி ஈசானந்தா. said...

மாப்பு பிரபுவுக்கு,மாமன் கவிதையை படிச்சது,கருத்து சொன்னது,ஓட்டு போட்டது,எல்லாம் சந்தோசமாத்தான் இருக்கு,ஆனா ...உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமாத்தான் இருக்கு,..எங்கிட்டு நீ பாட்டுக்கு வீட்டுக்கு வந்து "மாமன் இப்படி எல்லாம் கவிதை எழுதுரார்னு போட்டுக்கொடுத்துருவியோனு ....

ஜெரி ஈசானந்தா. said...

துபாய் ராஜாவிற்கு நன்றி..

ஜெரி ஈசானந்தா. said...

பாலாசி நலமா?வருகைக்கு தேங்க்ஸ்.

ஜெரி ஈசானந்தா. said...

படிமக்கவிஞர் நேச மித்ரன் வணக்கம்,தங்கள் வாழ்த்து மகிழ்ச்சியை தருகிறது.[தொலை பேசுகிறேன்]

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமா நலம்தானே, கருத்துக்கு நன்றி.தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

நேற்று முழுவதும்,படிமக்கவிஞர் நேசமித்திரன் கூட இருந்தேன்,நிறைய பேசினோம்.,,அந்த effect ன்னு கூட வச்சுக்கலாம்..///


எஃபெக்ட் அதிகமாகவே இருக்கு நண்பா!!!தேவா வணக்கம், இருந்தாலும் கவிதை நல்லா எழுத நீங்க தான "ஊக்க மருந்து "தர்றீங்க.....

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க அண்ணா மலையான்,நன்றி,தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

கருணா,சாட்டில் பேசுகிறேன்,மத்தபடி நலம் தானே? வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

அன்பின் சித்ராவுக்கு ஒரு சல்யூட்......

Anonymous said...

முதல் முறைய உங்க பக்கம் வந்தேன்..கவிதை கதை சொல்கிறது....

தேவன் மாயம் said...

ஜெரி புகுந்து விளையாடுங்க!!

எம்.எம்.அப்துல்லா said...

:)

வி.பாலகுமார் said...

வார்த்தை பிரயோகம் நல்லா இருக்குண்ணே!

//தல நேச சந்திப்பின் விளைவா?//
அதே தான் போல.

டக்கால்டி said...

பிரமாதமாகயிருக்கு உங்கள் வாழ்ர்த்தை பிரயோகங்கள்..

ஜாக்கி சேகர் said...

கவிதை கவிதை படி.....
அற்புதம் வாத்தியாரே..

வால்பையன் said...

டிக்ஸ்னரி ப்ளீஸ்!

ஜெரி ஈசானந்தா. said...

தேசம் காக்கும் விட்டலனே,வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

ஸ்டார் ஜன்,வருகைக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

கருணாகரசு,படித்தேன்,சந்தோசம், பேசுவோம்.

ஜெரி ஈசானந்தா. said...

ஜோதிஜி நானும் சீரியஸ் ரைட்டர் தான்,,[நானும் ...ரவுடி தான்..] என்ன செய்ய நம்மள நம்பி இருக்குற பாசக்கார பயபுள்ளைகள் அடம்புடிக்குதுள்ள,.

ஜெரி ஈசானந்தா. said...

வணக்கம் தமிழ் அரசி,வருகைக்கு நன்றி,நாளும் அன்பில் தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'சொப்பன ஸ்கலிதம்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 23rd February 2010 02:00:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/190640

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஜெரி ஈசானந்தா. said...

// ஜெரி புகுந்து விளையாடுங்க!!//

நன்றி தேவா,வாங்க சேர்ந்து விளையாடுவோம்.

ஜெரி ஈசானந்தா. said...

அப்துல்லா சலாம் அலைக்கும்[,பெரிய எடமே வந்துருக்கு ]. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பும்,நன்றியும்.

ஜெரி ஈசானந்தா. said...

பாச தம்பி,பாலாவுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

வாங்க டக்கால்டி பெயரே ஒரு மார்க்கமா இருக்கு,கலக்குங்க.

ஜெரி ஈசானந்தா. said...

ஹாய் ஜாக்கி சௌக்கியமா?வீட்டுல என் தங்கச்சி சௌக்கியமா?வருகைக்கு நன்றி.தொடர்வோம்.,

ஜெரி ஈசானந்தா. said...

// டிக்ஸ்னரி ப்ளீஸ்!//
வணக்கம் வால்ஸ்,நலமா?அடுத்து மதுரைக்கு வர்றப்ப தர்றேன்.

விக்னேஷ்வரி said...

ம், நல்லாருக்குங்க.

நினைவுகளுடன் -நிகே- said...

படமும், கவிதை வரிகளும் அருமை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஜெரி சார், உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கிரிக்கெட் - தொடர்பதிவு ...

ராகவன் said...

அன்பு ஜெர்ரி,

சொப்பன ஸ்கலிதம், அழகாய் இருந்தது.

நேற்று முன் தினம் பேசிக்கொண்டிருந்தபோது, உங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார், சந்தித்ததாக...

மதுரையைச் சேர்ந்தவர் என்பது, கூடுதல் பிரியங்களை கொண்டு வந்துசேர்க்கிறது.

அன்புடன்
ராகவன்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நான் வருவது இதுவே முதல் முறை..

தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி..

தியாவின் பேனா said...

நல்லாருக்கு

nidurali said...

கனவிலும் கவிதையாக வந்தது மழை

ஜெரி ஈசானந்தா. said...

விக்கி-நன்றி,
நிகே-நன்றி,
ஸ்டார் ஜன்-நன்றி,
ராக்கி -நன்றி,
பிரகாஷ்-நன்றி,
தியா-நன்றி,
நிதுர்-நன்றி.
நாளும்...அன்பில்....தொடர்வோம்...

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

உங்களோடு... said...

'இங்கே உலர்வது,நீர்த்துப் போன பந்தம்' அருமை...