Wednesday, January 27, 2010

"குடியரசு தின வாந்தி."

இலவச எரிவாயு அடுப்பில்....
கிண்டிய அல்வாவை,
ருசித்த படியே,
குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை,
இலவச வண்ணத்தொலைக்காட்சியில்,
கண்டுகளித்தேன்.

இடையில் வந்த நண்பனது....
இலவச அழைப்பின் பேரில்,
தமிழ்நாடு அரசு பார் [டாஸ்மாக்]
சென்றேன்.

கடைசியில்,
இலவசத் திணிப்புகள்
தாங்காது,
வாந்திஎடுத்தேன்.

எடுத்த வாந்தியை.....
உற்றுப்பார்த்தால்,
சிவப்பு,வெள்ளை,பச்சையென,
"மூவர்ணத்தில் ஜொலித்தது,
குடியரசு தின வாந்தி."


29 comments:

நேசமித்ரன் said...

:)

Finely expressed

ஜோதிஜி said...

எப்டிங்க இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?

Anonymous said...

இங்கு நீங்கள் எடுத்திருப்பதும் வாந்திதான்..

வானம்பாடிகள் said...

:).

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி நேசமித்திரன்.[ஊருக்கு எப்போ வர்ர்ரீங்க?]வரும் பொது மெயில் அனுப்பவும்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஜோதிஜி,எல்லாம் உங்களைப் போன்றோரின் அன்புதான்.

ஜெரி ஈசானந்தா. said...

வாப்பா அனானி வா,"வந்து நான் எடுத்த வாந்திய கழுவி விட்டுப்போ."

பலா பட்டறை said...

ஜெரி..:)) க க க போ..:))
உங்கள கூப்பிடனம்னு நினைச்சேன்.. மதுரை குழந்தைகள் கருத்தரங்குக்கு வாழ்த்துக்கள்..:))

வி.பாலகுமார் said...

என்ன சார் ஆச்சு ?

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி பாலா அண்ணா.

வி.பாலகுமார் said...

நான் "அண்ணா"வா உங்களுக்கு ? :)

Madurai Saravanan said...

good independent celebration .

துபாய் ராஜா said...

நல்லா கொண்டாடியிருக்கீங்க குடியரசை... :))

ஜெரி ஈசானந்தா. said...

பாலா,நான் வானம் பாடும் பாலா அண்ணாவை சொன்னேன். மத்தபடி நீ என் அன்பு தம்பி என்று ஊருக்கே தெரியுமே.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி பலா சங்கர்...மதுரைக்கு வரலாமே..

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled '"குடியரசு தின வாந்தி."' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 27th January 2010 06:56:01 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/175815

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி மதுரை சரவணன்.

Chitra said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... நாட்டில் இப்படியும் நடக்குது. very sad to see that happening in our country.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

க.பாலாசி said...

//உற்றுப்பார்த்தால்,
சிவப்பு,வெள்ளை,பச்சையென,
"மூவர்ணத்தில் ஜொலித்தது,
குடியரசு தின வாந்தி."//

அட ஆமால்ல...

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி துபாய் ராஜா,எனக்கு குடிக்கிற பழக்கமெல்லாம் இல்லீங்க,எதற்கெடுத்தாலும் இலவசத்தை நம்பி,ஏமாறும் மக்களை பற்றிய நையாண்டி கவிதை.அவ்வளோ தான்,தொடர்ந்து வாங்க, வாந்திஎடுப்போம்,சீ...பழகுவோம்.

சவுக்கு said...

உங்களின் கோபம் நியாயமானதே. நானும் உங்களின் கோபத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சித்ரா.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி பாலாசி.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சவுக்கு,தொடர்வோம்.

kutipaiya said...

:)arumaiyana expressive lines - super

ஜெரி ஈசானந்தா. said...

thank you bharathi.

பிரபு . எம் said...
This comment has been removed by the author.
பிரபு . எம் said...

காஸ்ட்லி கவிதை... இலவசமாய் ரசித்தேன்.... :)

//இடையில் வந்த நண்பனது....
இலவச அழைப்பின் பேரில்,
தமிழ்நாடு அரசு பார் [டாஸ்மாக்]
சென்றேன்.//

ஓகோ.. இதுக்கு பேருதான் "குடி" "அரசு" தினமோ!!

//எடுத்த வாந்தியை.....
உற்றுப்பார்த்தால்,
சிவப்பு,வெள்ளை,பச்சையென,
"மூவர்ணத்தில் ஜொலித்தது,
குடியரசு தின வாந்தி//

ரௌத்ரம்!!