Tuesday, January 19, 2010

"தமிழ்நாடு அரசு சிசுக்கள் விற்பனைக்கு"




வாக்கப்பட்டு வந்து
வருசமாயும்
வீங்காத வயுத்துக்கு
கதை கட்டிய
ஊர் வாயடைத்து,

மாமியார்,நாத்தனார்
இம்சைகள் பொறுத்து,

அஞ்சாம் மாசம் நடக்குறப்போ
அடிவயித்துல எத்துன
புருசனோட உதை தாங்கி,

ஏழாம் மாசத்துல
சொந்த பந்தம் கூட்டி
சீமந்தம் நடத்தி,

குலசாமிக்கு கடாவெட்டி
ஊரக்கூட்டி கஞ்சி ஊத்தி,

இடுப்புவலி வந்ததும்
நம்பி வந்த தர்மாஸ்பத்திரியில
பாவிப்பயலுக படிக்கணும்னு
வயித்தகிழிச்ச வலி தாங்கி,

"பெத்தெடுத்த பிள்ளைய
ரெண்டு நாளாக் காணலியே".,





31 comments:

ஈரோடு கதிர் said...

//பாவிப்பயலுக படிக்கணும்னு//

இது புதுசா இருக்கு

.....

கவிதை கனமாக இருக்கு

ஜெரி ஈசானந்தா. said...

கதிருக்கு நன்றியும்,நட்சத்திர வாழ்த்தும்.

Sangkavi said...

//அஞ்சாம் மாசம் நடக்குறப்போ
அடிவயித்துல எத்துன
புருசனோட உதை தாங்கி//

//இடுப்புவலி வந்ததும்
நம்பி வந்த தர்மாஸ்பத்திரியில
பாவிப்பயலுக படிக்கணும்னு
வயித்தகிழிச்ச வலி தாங்கி,//

//"பெத்தெடுத்த பிள்ளைய
ரெண்டு நாளாக் காணலியே".,//

ஏனோ இவ்வரிகளை படித்ததும் மனது வழிக்கிறது எனக்கு....

பிள்ளை காணவில்லையெ என ஏங்கும் தாய்க்கு....?

வானம்பாடிகள் said...

இன்றைய தினப்படி நிகழ்வாயிட்டுது இது. மிக மிக வீச்சான கவிதை. சொல்லாமல் விட்டாலும் இடையில் கைமாறிய லஞ்சப்பணமும் உணர முடிகிறாது.:)

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சங்கவி.

ஜெரி ஈசானந்தா. said...

வானம்பாடும் பாலா அண்ணா நன்றி.

Chitra said...

கனத்த இதயத்துடன், நிஜங்களை ஒதுக்கவும் முடியாமல்......... உதவவும் முடியாமல்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சித்ரா.

ஜோதிஜி said...

அரசாங்க மருத்துவமணையின் அவலம் என்று தொடங்கி எங்கங்கோ இழுத்துக்கொண்டு செல்கிறது. கடைசி வரியில் சிரிக்க அழ வைத்து விட்டீர்கள். நாகா வந்த போது சொன்னார். ஈரோட்டில் விசாரித்தமைக்கும் நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ஜோதிஜி,நீங்கள் ஈரோடு சங்கமம் வருவீர்கள் என எதிர்பார்த்தேன்,நாளும் அன்பில் தொடர்வோம்.

பலா பட்டறை said...

பாவிப்பயலுக படிக்கணும்னு
வயித்தகிழிச்ச வலி தாங்கி,//

பல்லு புடுங்க போனாலே.. இப்படித்தான்..பிரசவத்தையும் ஆக்கிட்டானுவ.. பாவிபயலுக..

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி பலா சங்கர்.

தேவன் மாயம் said...

அஞ்சாம் மாசம் நடக்குறப்போ
அடிவயித்துல எத்துன
புருசனோட உதை தாங்கி,//

கொடுமையின் உச்சம்!!

தேவன் மாயம் said...

பகுதிநேர வாத்தியாரே நலமா?

தருமி said...

நல்லா இருக்குங்க

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி டாக்டர்.

sarvan said...

வலி புரிகிறது

கமலேஷ் said...

வலியுடன் இருக்கிறது ரசித்தேன் தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி தருமி ஐயா.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சர்வன்..

கலகலப்ரியா said...

பதைச்சு போறது :(

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled '"தமிழ்நாடு அரசு சிசுக்கள் விற்பனைக்கு"' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th January 2010 10:50:01 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/171519

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி பிரியா.

Dr.Rudhran said...

i share your feelings. well written.

hayyram said...

ஆத்தி என்ன கொடும சரவணா!

ஜெரி ஈசானந்தா. said...

மருத்துவர் ஐயா,ருத்ரன் அவர்களுக்கு நன்றிகள்.

ஜெரி ஈசானந்தா. said...

thank you ram.

ஸாதிகா said...

அருமையான தலைப்பு,அதை விட அருமையான கவிதை.சூப்பர் ஹெட்மாஸ்டர் சார்.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

இந்த நிலை தொடர்ந்தபடி இருப்பது வருந்தத்தக்கது. நேரம் கிடைத்தால் இங்கு பாருங்கள்.

Priya said...

வலியுடன் இருக்கிறது!!!