Friday, January 29, 2010

வெற்றிலை.


எத்தனை தடவை,
சவைத்து துப்பினாலும்,
சிவப்பு மாறுமா?


Wednesday, January 27, 2010

"குடியரசு தின வாந்தி."

இலவச எரிவாயு அடுப்பில்....
கிண்டிய அல்வாவை,
ருசித்த படியே,
குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளை,
இலவச வண்ணத்தொலைக்காட்சியில்,
கண்டுகளித்தேன்.

இடையில் வந்த நண்பனது....
இலவச அழைப்பின் பேரில்,
தமிழ்நாடு அரசு பார் [டாஸ்மாக்]
சென்றேன்.

கடைசியில்,
இலவசத் திணிப்புகள்
தாங்காது,
வாந்திஎடுத்தேன்.

எடுத்த வாந்தியை.....
உற்றுப்பார்த்தால்,
சிவப்பு,வெள்ளை,பச்சையென,
"மூவர்ணத்தில் ஜொலித்தது,
குடியரசு தின வாந்தி."


Wednesday, January 20, 2010

"பியானோ வாசிக்கலாம் வாங்க."



மேலே உள்ள வீடியோவை முழுவதும் ஓடியபின் இப்ப உங்கள் மௌசை வீடியோவில், நகர்த்தி இஷ்டம் போல இசைக்கலாம்.கவிதை,கட்டுரையின்னு போரடிக்காம,அப்பப்ப ஒரு சேஞ்சுக்கு இது மாதிரி ட்ரை பண்ணலாம்,

Tuesday, January 19, 2010

"தமிழ்நாடு அரசு சிசுக்கள் விற்பனைக்கு"




வாக்கப்பட்டு வந்து
வருசமாயும்
வீங்காத வயுத்துக்கு
கதை கட்டிய
ஊர் வாயடைத்து,

மாமியார்,நாத்தனார்
இம்சைகள் பொறுத்து,

அஞ்சாம் மாசம் நடக்குறப்போ
அடிவயித்துல எத்துன
புருசனோட உதை தாங்கி,

ஏழாம் மாசத்துல
சொந்த பந்தம் கூட்டி
சீமந்தம் நடத்தி,

குலசாமிக்கு கடாவெட்டி
ஊரக்கூட்டி கஞ்சி ஊத்தி,

இடுப்புவலி வந்ததும்
நம்பி வந்த தர்மாஸ்பத்திரியில
பாவிப்பயலுக படிக்கணும்னு
வயித்தகிழிச்ச வலி தாங்கி,

"பெத்தெடுத்த பிள்ளைய
ரெண்டு நாளாக் காணலியே".,





Monday, January 11, 2010

சட்ட ஒழுங்கு மசுரும்,காற்றில் பறக்கும் மனித நேயமும்.


நண்பர்களே,இரண்டு அமைச்சர்கள்,ஒரு கலக்டர் முன்னால்,நடந்த இந்த கொலையில் "உயிர் பிச்சை" கேட்கும் இந்த மனிதனுக்கு இவர்களின் கரங்கள் நீள மறுத்ததேன்?
வாழ்க போலி ஜனநாயகம்.

காமமும்,பெருங்காமமும்.

இப்போதெல்லாம் ....
யாரும்,
யாரையும் ..
நம்பத்தயாரில்லை,
ஆணுறையைத்தவிர.
**********************************
பார்த்தவுடன் பழகி,
பழகியவுடன் பற்றி.
பற்றியபின் வற்றி,
வற்றியபின் தேடி,
தேடியதை பார்த்து ..
பார்த்தவுடன் பழகி ,
இப்படியே தான்,
துடிப்புடன் சுழல்கிறது,
பிறவிதரும் பெருங்காமம்.