Wednesday, December 30, 2009

"பிரபலபதிவர் மீது கொலைவெறித்தாக்குதல்."


வலையுலக நண்பர்களே வணக்கம்.இந்த பதிவுலகம் ஏராளமான நண்பர்களை பெற்றுத்தந்திருக்கிறது.அன்பே சிவமாக,வாழ்த்து காட்டிய இயேசு பிரான் பிறந்த திருநாளாம் "கிறிஸ்துமஸ்" தினத்தில் என்னை தொலைபேசியிலும், குறுஞ்செய்தி யிலும் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நான் பெற்ற அன்பையேதிரும்பத்தருகிறேன்.நாளும்அன்பிலதொடர்வோம்.நிற்க....மேற்கண்ட தலைப்பு சும்மா உங்களையெல்லாம் சுண்டி இழுக்கத்தான்...ஆனா உண்மை சம்பவங்க, தலைப்பு வெறும் டிரைலர் தான்...மெய்ன் பிச்சர் கீழ வருதுல்ல.
*******************************************************
கியூபாவிலிருந்து:"யானி மரியா சான்செஸ்".
தனது வலைப்பூவிற்கான முதல் பதிவை எழுதத்தொடங்கும்போது,மரியா [yoani mariya sanchez]நிச்சயமாய் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.வலைப்பூ தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் இப்படி சர்வதேச கவனம் பெற்று,மாதம் பத்து லட்சம் ஹிட்டுகள் பெறுமென்று,[10 lakhs hits per month.] தனது வலைப்பூ 17 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதைப்பற்றி,தனது வலைப்பூவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கே 7 கேள்விகளை கேட்க, உடனே அவரும் பதில் அளிப்பார் என்று..நினைத்துக்கூடபார்க்கவில்லை.மேலும் சர்வதேச செய்தி இதழான Time பத்திரிக்கையும்,CNN- ஊடக நிறுவனமும் சேர்ந்து
உலகெங்கும் எடுத்தாய்ந்த கருத்துக்கணிப்பின் முடிவின் படி "உலகின் செல்வாக்குப்பெற்ற நூறு மனிதர்களுள் தானும் வருவோமென,"மற்றும் உலகின் மிகச்சிறந்த வலைப்பூக்களுள் முதல் 25 வது இடத்தை பிடிப்போமென...தொடர்ந்து இன்று வரை பல சர்வதேச விருதுகளும்,பரிசுகளும், பெறுவோமென கனவு கூட காணவில்லை இவர்.

1.யார் இந்த யானி மரியா சான்செஸ்?
2. அப்படி என்ன செய்து விட்டார் மரியா?

கியூபாவில் உள்ள ஹவானாவில்[ septemper-4th-in 1975]ல் பிறந்த சான்செஸ் ,தனது பட்டப்படிப்பை மொழி இயலிலும்,முதுகலைப்படிப்பை - நவீன லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் கற்றுத்தேர்ந்தார்.பின் 1993- ல் "ரீனால்டோ எஸ்கோபர்"என்பவரை திருமணம் செய்து கொண்டு,1995- ல் ஆண்குழந்தையை பெற்றார்.பின் செப்டெம்பர் 2000- வரை "ஜென்டி நுவா "என்ற "குழந்தைகளுக்கான இலக்கியப்பத்திரிக்கையில் எடிட்டோரியலில் பணிசெய்தார்.மேலும் ஹவானாவிற்கு வருகை தரும் ஜெர்மானிய சுற்றுலா பயணிகளுக்கு ஸ்பானிய மொழி உதவியாளராக, பணிசெய்தார்.அதற்குப்பின் 2002-ல் கியூபாவில் ஏற்பட்ட,கடும் பொருளாதார நெருக்கடியால்,நாடே தவித்தபோது,பிழைப்பதற்கு வேறு வழியின்றி,நாட்டைவிட்டு வெளியேறிய,படித்த இளைஞர்களைபோல, இவரும் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு பஞ்சம் பிழைக்கபோனார்,
அங்கே,இரண்டு ஆண்டுகள் போராடிப்பார்த்து விட்டு,குடும்ப சூழ்நிலை காரணமாக 2004-ல் கியூபா திரும்பினார்.[தனது தாய் நாட்டிற்கு திரும்ப வருவதற்கு,கியூபா நாட்டின் கெடுபிடியான குடியேற்ற விதிகளுடன் போராட வேண்டியிருந்தது.]
.
வந்த கையோடு,2004-ல் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சிறு பத்திரிக்கை ஒன்றைத்தொடங்கி நடத்திவந்தார்.இந்த கால கட்டத்தில் கம்ப்யூட்டர் கல்வியிலும் தேர்ந்துகொண்டார்.சரியாக 3-வருடங்கள் கழித்து ஏப்ரல் -2007-ல்,[Generation Y ] தனக்கான பிரத்யேக வலைப்பூவை தொடங்கினார்.இலங்கையின் ராஜபக்சே சகோதரர்களைப்போல,கியூபா வின் காஸ்ட்ரோ சகோதரர்களின் கம்யூனிச ஆட்சியில் மக்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள்,மனித உரிமை மீறல்கள், இப்படி மக்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளை,தனது வலைப்பூவில் எழுதத்தொடங்கினார்.சும்மா விடுமா? கம்யுனிச அரசாங்கம்,அரசுக்கு எதிராக எழுதுவதை,அடக்கி,ஒடுக்கி வைக்க,மிரட்டிப்பார்த்தது,பணியவில்லை சான்செஸ்,தொடர்ந்து எழுதினார்.....ஆனால் அரசோ மார்ச் மாதம்-2008 ல் ,பொது மக்கள் அவரது வலைத்தளத்தை பார்க்க முடியாதபடி [filter ]தடை செய்துவிட்டது

அடக்குமுறைகளுக்கு பணியாத,மனம்தளராத மரியா,வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களுக்கு e-mail மூலம்,தன் பதிவுகளை அனுப்பி,அவர்களையே போஸ்ட் செய்யவைத்து,வலைப்பூவை மலர வைத்தார்....பிறகென்ன ?உலகங்கும் கொஞ்சம் ,கொஞ்சமாக நறுமணம் வீசத்தொடங்கியது.பொறுமை இழந்த காஸ்ட்ரோ சகோதரர்கள் இனி மரியாவை காலி செய்வதுதான் ஒரே தீர்வென முடிவுசெய்து,ஆளைத்தூக்க கூலிப்படையை ஏவினர். வெளியில் வந்த மரியாவை,கருப்பு நிறக்காரில் இருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள்,வலுக்கட்டாயமாக இழுத்து,உள்ளே திணித்துக்கடத்தி சென்றனர்.என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது,அரைமணிநேரம் கழித்து, காரிலிருந்து சாலையில் உருட்டி விடப்பட்டார்,உடலெங்கும் கன்றிப்போன காயங்களோடு,அழுதபடி வந்தார் yoani sanchez. மக்கள் முன்னால் நடந்த இந்த கொலை வெறித்தாக்குதலை ஆளும் கம்யுனிச அரசோ வாய்திறக்கவில்லை,ஆனால் அமெரிக்க உள்விவகாரத்துறை இதனை கண்டித்தது,அதிபர் பராக் ஒபாமாவோ மரியாவின் வலைப்பூவை புகழ்ந்து தள்ளினார்,கியூபா மக்களின் அன்றாட வாழ்கையின் நிதர்சனமான உண்மைகளை,வெளி உலகத்திற்கு காட்டும் தனித்துவமான சன்னல் உங்களது வலைத்தளம் என்று.

இப்படி சர்வதேச கவனத்தைபெற்ற யானி மரியா சான்செசுக்கு உலகெங்கும் பல விருதுகளும்,பரிசுகளும் கிடைத்த வண்ணம் உள்ளது,குறிப்பாக அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பிய பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை வழங்கிய 5000 டாலர் பரிசோடு,[maria moors cabot prize ] விருதும்,நியூ யார்க் சென்றுவர விமான டிக்கெட்டும் கிடைத்தது, அரசாங்கம் அனுமதிக்கவில்லை,மேலும் ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையான -EL-pais வழங்கிய, ortega Gasset Award,உலக பொருளாதார மாமன்றம் [young global leader honoree- WORLD ECONOMIC FORUM.] வழங்கிய விருது,இப்படி தன்னை பெருமை படுத்தும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு செல்ல கியூபா நாடு தொடர்ந்து தடைவிதித்து வருகிறது.

உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்களுக்கு பெருமையையும்,முக்கியத்துவத்தையும், போராடி பெற்றுத்தந்த யானி மரியா சான்செஸ் அடக்கு முறைகளின் சுவர்களையும் தாண்டி,கம்யூனிச அரச பயங்கர வாதத்திற்கும் அஞ்சாமல் "தனி மனித இராணுவமாக போராடிவருகிறார்.....உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்களின் வாழ்த்து மழையில் நனையும் மரியாவிற்கு உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்தி பெருமையாக பயணிக்கிறேன்.....தொடர்வோம். வணக்கம்..


36 comments:

குப்பன்.யாஹூ said...

Please do not try to bring people to your blog with wrong title.

ஜெரி ஈசானந்தா. said...

first you must read the article, then you throw a stone kuppan yahoo.

க.பாலாசி said...

நல்ல செய்தி. படிக்கும்போதே பிரமிப்பு ஏற்படுகிறது.

தேவன் மாயம் said...

பிளாகரின் ரீச் எவ்வளவு தூரம் உள்ளது பார்த்தீர்களா?

தேவன் மாயம் said...

அருமையான இடுகை! ஒரு பெண் பதிவரின் சமுதாய அக்கறை நம்மை வெட்கப்பட வைக்கிறது.

தேவன் மாயம் said...

தலைப்பு சரிதான்! அவர் பட்டிருக்கும் இன்னல்கள் இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்!

பலா பட்டறை said...

To spread a great post like this u can do anything ஜெரி ஈசானந்தா sir. Good post keep it up. Long live blogger. :))

சொல்லரசன் said...

பகிர்வுக்கு வாழ்த்துகள்

ஜெரி ஈசானந்தா. said...

பாலாசி சௌக்கியமா? உன்னை நேரில் பார்த்தது ரொம்ப சந்தோசம்,,நாளும் அன்பில் தொடர்வோம்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு. என்னைப் பொறுத்தவரை பொருத்தமான தலைப்புதான்.

ஸ்ரீ said...

உண்மையிலேயே மிகப் பெரிய விஷயம்.

ஜெரி ஈசானந்தா. said...

டாக்டர் தேவா,பகிர்வுக்கு நன்றி. உடம்பு சரியாயிடிச்சு தானே? பிறகென்ன களத்தில இறங்குங்க..

D.R.Ashok said...

:)

ஹேமா said...

முயற்சிக்குக் கிடைத்த பரிசு.
நல்ல பதிவு ஜெரி.

ஜெரி ஈசானந்தா. said...

பலாவின் அக்கறைக்கு என் நெஞ்சம் நிறை அன்பை தருகிறேன்,உங்களைப்போன்றவர்களின் ஊக்கத்தினால் தான் இந்த வெற்றிகள் சாத்தியமாகிறது.

தருமி said...

தொடர்பு முகவரி கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே ...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் ஜெர்ரி.. தலைப்பு கொஞ்சம் நெருடுகிறது.. ஆனாலும்முன்னெடுத்து வைத்திருக்கும் கருத்து எல்லாரையும்போய் சேர வேண்டும் என்பதானால்.. ஓகே..

வானம்பாடிகள் said...

பகிர்வுக்கு நன்றிங்க. படிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துகள் ஜெரி.

ஜெரி ஈசானந்தா. said...

சொல்லரசனுக்கு நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled '"பிரபலபதிவர் மீது கொலைவெறித்தாக்குதல்."' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th December 2009 04:35:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/161903

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

♠ ராஜு ♠ said...

காஸ்ட்ரோவா இப்ப்டி...?
ச்’சே’ ..!

ஜெரி ஈசானந்தா. said...

துபாய் ராஜா என்ன நலமா? அடிக்கடி வாங்க.

ஜெரி ஈசானந்தா. said...

பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ

யூர்கன் க்ருகியர் said...

gud info & thx 4 d' shrng. lemme knw d' lnk plz.

ஜெரி ஈசானந்தா. said...

ello friends here i enclosed a link which connects yoani sanchez.http://www.desdecuba.com/generationy/

ஜோதிஜி said...

புதிய நல்ல பிரமிப்பு ஊட்டிய இது வரை தெரியாத செய்தி. பகிர்வுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி அசோக்,புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

ஜெரி ஈசானந்தா. said...

தருமி ஐயா வணக்கம்,விக்கி பீடியாவில் சான்சஸ் பற்றி தகவல் தினமும் அப்டட் ஆகிறது,மேலும் கூகிள் செயர்ச்சில் yoani sanchez என்று தட்டி பாருங்கள்,"சும்மா அதுறுதுள்ள."

ஜெரி ஈசானந்தா. said...

நீயுமா கார்த்தி, நீ ...அப்ப...கட்டுரைய படிக்கவே இல்லையா?

ஜெரி ஈசானந்தா. said...

வானம் பாடும் பாலா அண்ணாவுக்கு நன்றி

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ராஜூ.

ஜெரி ஈசானந்தா. said...

ஜோதிஜி வணக்கம்,புத்தாண்டு வாழ்த்துகள்

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்க்கையே போராட்டமாக..
வியப்பாகவுள்ளது..

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி குணா.

தமிழ் வெங்கட் said...

எதிரிக்கு எதிரி நண்பன் ...இது அமெரிக்காவின் அணுகுமுறை..