Wednesday, December 23, 2009

மார்கழி மகா உற்-சவம்.


அடாணாவிலும்
சுப பந்துவராளியிலும்,
உருப்படிகள் பாடிவிட்டு,
காம்போதியில் எடுத்த
உச்சஸ்தாயியை,
சிக்னலில் ...
"அம்மா பசிக்குதே"-என்ற,
மெலிந்த சாரீரம் இடைமறிக்க,

"ஸ்டுபிட் டிரைவர்,
அறிவில்ல உனக்கு,
கிளாச ஏத்து,
எவ்வளவு தைரியமா,
கையை உள்ள நீட்டி,
பிச்சை கேக்குறா பாரு."?என்றதும்,
பச்சை விளக்கெரிந்தது,
பறந்தது கார்,
இறந்தது இசை.

[உரையாடல் கவிதை போட்டிக்காக ---உங்கள் ஜெரி-மதுரை.]


34 comments:

ராமலக்ஷ்மி said...

வலிக்கும் இசை. கவிதை நன்று.

D.R.Ashok said...

உன்னால் முடியும் தம்பியும்
அனுஜன்யாவின் ஒரு கவிதையும்
ஞாபகத்திற்கு வந்து போனது :)

நல்ல முயற்சி, வாழ்த்துகள் ஜெரி

ஈரோடு கதிர் said...

இசை மட்டுமா

சி. கருணாகரசு said...

கவிதைக்குள் நிறைந்திருக்கும்...விடயம் மிக அருமை... பாராட்டுக்கள்..... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பலா பட்டறை said...

superb...வாழ்த்துக்கள்.:))

வானம்பாடிகள் said...

"மார்கழி மகா உற்-சவம்."

தலைப்பே சொல்லிடுச்சி கருவை. அருமை ஜெர்ரி.

தண்டோரா ...... said...

கான்செப்ட் ஓகே.வாழ்த்துக்கள் டிஎஸ்பி

பாலகுமார் said...

படத்தை பார்த்ததும், தோன்றிய கவிதையா சார்?

நிதர்சனம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் ஜெரி... அருமையா இருக்கு...

ஹேமா said...

ஜெரி,நல்லதொரு அனுபவம் கவிதையாக.வெற்றிக்கு வாழ்த்துகள்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ராமலஷ்மி. வலியை பீல் பண்ணியதற்கு.

ஜெரி ஈசானந்தா. said...

அசோக் வணக்கம், கருத்துக்கு நன்றிகள்..

ஜெரி ஈசானந்தா. said...

கதிருக்கு நன்றிகள் நிறைய..[நல்லா...சுத்தி ..போடுங்க.. ஊரு கண்ணு..]

ஜெரி ஈசானந்தா. said...

கருணையின் அரசே உங்களின் கருத்துகள் உற்சாகத்தை தருகிறது.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'மார்கழி மகா உற்-சவம்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 23rd December 2009 08:00:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/158336

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஜெரி ஈசானந்தா. said...

பலாப் பட்டறை ரொம்ப நன்றிங்க

ஜெரி ஈசானந்தா. said...

வானம் பாடும் பாலாண்ணா சந்தோசம்.

ஜெரி ஈசானந்தா. said...

தமிழ்மணத்துல "தண்டோரா சத்தம் பலமா இருக்கு."

ஜெரி ஈசானந்தா. said...

பாலா சௌக்கியமா? வாங்க பழகலாம்..

ஜெரி ஈசானந்தா. said...

கலக்கலான கருத்துக்கு பிரியா.

தேவன் மாயம் said...

பச்சை விளக்கெரிந்ததும்,
பறந்தது கார்,
இறந்தது இசை./

பின்னீட்டிங்க ஜெரி!!

தேவன் மாயம் said...

உண்மையை அழகாச்சொல்லியிருக்கீங்க!!

க.பாலாசி said...

வெளுத்து வாங்கிட்டீங்க...

ஸ்ரீ said...

சூப்பர்.

ஜெரி ஈசானந்தா. said...

கொங்கு நாட்டின் என் தமிழ் சாதி சொந்தமே, பாலாசி சங்கமத்தை கலக்கிபுட்ட்டியே.நன்றிபா.

ஜெரி ஈசானந்தா. said...

ஸ்ரீ, சௌக்கியமா? உனது சூப்பர் என்ற ஒரு வார்த்தைக்காக போட்டிக்கு வேறு கவிதையை அனுப்பவில்லை.நன்றி

butterfly Surya said...

கவிதை நன்று.

வாழ்த்துகள்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சூர்யா.

சக்தியின் மனம் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ஜெரி.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நாணல் said...

பறந்தது கார்
இறந்தது இசை.
நலிவிழந்தன பிச்சைக்கரங்கள்
உழைப்பைத்தேடின.

அருகிலே ஒரு கட்டிடம்.
வந்து செங்கல்லைப் போடு என்றது
ஒரு கங்காணிக்குரல்

செங்கல் போடபோட
ஒரு தன்னம்பிக்கை
வாழ்க்கையிலொரு பிடிப்பு
உணமையில் ஒரு மனமலர்ச்சி

பிச்சைக்கரங்கள்
உழைக்கும் கரங்களாக மாறின.

திரும்பிப்பார்க்கிறேன்
பிச்சைக்காரியின் மகன்
இன்றொரு கணனி ஆய்வாளன்.

அக்கார் மட்டும் நின்று
இசைத்து
என் கரங்களில் சிலகாசுகளை
விட்டிச்சென்றிருந்தால்?

நான் இன்னும் பிச்சைக்காரி!
ஒரு வேளை கிழட்டுப்பிச்சைக்காரி!

என் மகன், மருமகள், பெயரக்குழந்தைகள்
மேலைத்தெரு சந்திப்பில்!

யான் கீழைத்தெரு சந்திப்பில்!!

சிவப்பு, ஆரஞ்சாகும்
பச்சையாகும்,
மீண்டும் சிவப்பாகும்

நாங்கள் மாறாமல் இருந்திருப்போம்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சக்தி..

ஜெரி ஈசானந்தா. said...

பா.ரா.வாழ்த்தியது பரிசே கிடைத்தது போல இருக்கு.நன்றிப்பா.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி நாணல்,நல்லாயிருக்கு.