Monday, December 7, 2009

கழிசடைகளின் கடைசிப் புகலிடம்

மறைந்த முதல்வர் எம்.ஜி.யார் ஆட்சி காலத்தில் அவரது நல்லாசியுடன் சில பல வேலைகளை செய்து,தனது மீனாட்சி மிஷன் மருத்துவமனை ட்ரஸ்டுக்கு,வெளிநாட்டு நன்கொடைகளை பெற்று,பெரிய மருத்துவமனையை உருவாக்கியவர் தான் டாக்டர் சேதுராமன்.பணம் இருக்கும் இடத்தில் பிரட்சினைகளும் தேடி வருவதை சமாளிக்க,அவருக்கு அதிகார பீடங்களின் அருளாசி தேவைப்பட்டது.

எந்த ஆட்சி வந்தாலும்,அவர்களோடு ஒட்டிக்கொண்டு,அவர்களுக்கு காவடி தூக்கியே களைத்துப்போய்,நாம ஏன் சொந்தமாக கட்சி தொடங்கக்கூடாது? என யோசித்தார்.தென்மாவட்ட தேவரின ஓட்டு வங்கிகளை குறிவைத்து,
"மூவேந்தர் முன்னேற்றக்கழகம்"என்ற கட்சியை தொடங்கினார்.பணபலமும் ஆள்பலமும் சேர,கூடவே கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தும் சேர்ந்துகொள்ள அடுத்த ரவுண்டு ஆரம்ப மானது.

தொகுதிக்குஐநூறுஓட்டுதேறினாலேபெரியவிஷயம்.எப்படியோ தேர்தலுக்கு தேர்தல் வேட்டியையும்,சேலையையும் மாற்றி மாற்றி துவைக்கும் கம்யூனிஸ்டுகளை போல,இவரும் துவைப்பதில் ஸ்பெசலிஸ்ட்.

இப்போது லேட்டஸ்ட் காமெடி என்னவென்றால்?விபச்சார வழக்கில் இரண்டு தடவை கைதானவரும்,நிழல் உலக விபச்சார தாதாக்கும்பல்களோடு தொடர்பு உள்ளவருமான நடிகை புவனேஸ்வரி யை சேர்த்துகொண்டதுதான்.
[அட..கட்சியிலதாங்க.] அவருக்கு "மாநில மகளீரணி செயலாளர் " பதவி கொடுத்து,அடுத்த தேர்தலில் M.LA. சீட்டும்
தந்து ,கூட்டணி ஆட்சி என்றால்,கலவி அமைச்சர்[ சாரிங்க...புள்ளி வைக்க மறந்துட்டேன்.]கல்வி அமைச்சர் பதவியும்
வாங்கித்தருவதாகவும் வாக்கு கொடுத்து இருக்கிறாராம் டாக்டர் சேதுராமன்.

வாழ்க ஜனநாயகம், வளர்க பணநாயகம்.

ஆனால் ஒன்று, மிஸ்டர் சேதுராமன், நீங்கள் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள், அது உங்கள் தனிப்பட்ட விவாகம்,சாரி விவகாரம்.ஆனால் மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து வருகிறதே உங்களது "மகா சேமம்."என்ற மகளிர் சுய உதவி குழுக்களான தொண்டு நிறுவனம், அதில் மட்டும் அம்மிணியை மூக்கை நுழைக்க விட்டு விடாதீர்கள். அப்புறம் மகா சேமம் ....மகா ஷேமாகி ...."பப்பி ஷேமாகி விடும்."

கிஸ்கி: "அம்மிணிக்காக,அவசரப்பட்டு கட்சியில சேர்ந்து,அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது."


10 comments:

ஈரோடு கதிர் said...

//மாநில மகளீரணி செயலாளர்//

...க்கும்

ஆ.ஞானசேகரன் said...

//அது உங்கள் தனிப்பட்ட விவாகம்,சாரி விவகாரம்//

உங்கல் குசும்பும் நல்லாயிருக்கே

கிருஷ்ணமூர்த்தி said...

அரசியல் கழிசடைகளுடைய கடைசிப் புகலிடமாக இருந்ததெல்லாம் அந்தக் காலம்!

முதலும் முடிவான புகலிடமாகவும் மாறிக் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் ஆகிறது!

கோல்ட் மெடல் வாங்கிய மருத்துவர் சேதுராமனுக்கு முன்னோடிகள், இங்கே எல்லாக் கழகங்களிலுமே உண்டு!

அது ஏன், குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சினிமா நடிகைகள் எத்தனை பேர், காங்கிரசிலும் போய்க் கலைச் சேவை செய்து கொண்டிருந்தார்கள்!

புவனேஸ்வரிகள் எல்லா இடங்களிலும் தான் இருக்கிறார்கள்! என்ன, வேறு வேறு பெயர்களில், அவ்வளவுதான்!

வெட்கப்படவேண்டியது நாம் தான்! இன்னமும் இந்த மாதிரிக் கழிசடைகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம், அதற்காக.

ஜோதிஜி said...

புதிய செய்தி. அடித்து துவைத்து பிழிந்து விட்டீர்கள்.

பொதுவா ஆசிரியர்ன்ன பயமே இருக்காதோ?

சொன்ன விதம் சிறப்பு.

அடிப்படையில் சேவை மனப்பான்மை உள்ளவர் காலப்போக்கில் பாவை மனப்பான்மையாகி இன்று பாவமனப்பான்மைக்கு வந்து விட்டார்

ஜெரி ஈசானந்தா. said...

கதிருக்கு நன்றிகள் பல,உங்களை பார்க்க மிகுந்த பிரயாசையாய் உள்ளேன்

ஜெரி ஈசானந்தா. said...

ஞான்ஸ் உங்களின் தொடர்ந்த அன்பு தான் எனக்கு எழுத உற்சாகத்தை தருகிறது. நன்றிப்பா..

ஜெரி ஈசானந்தா. said...

கிருஷ்ண மூர்த்தி ஐயா, உங்களின் வருகையும் கருத்தும் என் பாக்கியம். வீட்டுக்கு நேரில் வந்து நன்றி சொல்கிறேன்

ஜெரி ஈசானந்தா. said...

ஜோதிஜி ஐயா வணக்கம், இந்த பதிவுலகில் நீங்கள் எழுதுவது பெரிய சேவை, உங்களது ஒவ்வொரு பதிவும் பொக்கிசம்.,காலபெட்டகம். ஈரோடு பதிவர் சந்திப்பில் உங்களை காண ஆவலாய் உள்ளேன்..

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

You say he has appointed her to the post of Women wing in her party. Why has he done that? Is he not aware of her background like the sex trade cases? He must have been aware.

Mr Jerry!

You should not put up half information. What was the stand of Sethuraman in this matter? On which grounds did he take her in?

You impply all along his act is bad. Why so? Why do you want to imply? Why don't tell us why he took?

Disappointing blogpost.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

You also imply she is a kazhisadai?

Why Mr? What did she do to get your ridicule?

Why not being a party and appoint all her clients as your party bearers and ring leaders?

You may call her clients saints. Why not?