Friday, October 23, 2009

முல்லைப்பெரியாறு: "கொடுங்கனவின் கானல் நீர்!"

பல ஆண்டு காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்பிரச்சனை,இப்பொழுது அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.கேரளா அரசின் ஏமாற்றுத்தனமும், தமிழக அரசின் ஏமாளித்தனமும் சேர்ந்து , "தென் தமிழக மக்களை தீராத தாகத்தில் தவிக்க வைத்திருக்கிறது."

புளுகு மூட்டைகளின் மீது,உட்காந்துகொண்டு சோசியலிசம் பேசும்,மார்க்சிய அச்சுதானந்தன் ,"முல்லைப்பெரியாறு அணை உடைந்தால்,பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது", என்பதெல்லாம் , "முப்பத்தியொரு ஆண்டுகளுக்குமுன்னால்,புனையப்பட்ட அரசாங்க ப்பொய்." என்பது நேற்றுக்காலை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழில் திரு.பாபு ஜெயக்குமார், எழுதியிருந்த கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொண்டேன்.

[இலங்கை - சந்திரிகாவிடம் கேல் விருது வாங்கியவரும்,சிங்கள -பௌத்த அரச பயங்கரவாதி ராஜ பக்செவின் தத்துப் பிள்ளையும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க்கட்சியின்
காட்பாதருமான,ஹிந்து நாளிதழை,என் வீட்டு கழிவறைக்காகிதமாக க்கூட பயன் படுத்துவதில்லை.மேலும் உறவினர்கள்,நண்பர்கள் ,ஏன் பயணத்தின் சக பயணிகளில் யாராவது 'ஹிந்து நாளிதழ் " படிப்பவராக இருந்தால்,அவர்களிடத்தில் ஹிந்து ராமின்
அதிரூப அம்சங்களை எடுத்துச்சொல்லி,தற்போது அவர்கள் கையில், ஹிந்துவைத் தவிர்த்து,மாற்று நாளிதழைப் பார்ப்பது, "எளிமையான,சிறிய கருத்துப் பிரச்சாரங்கள், பெரிய மாற்றங்களை உண்டுபண்ணும் என்ற என் கருத்துக்கு வலு சேர்த்து நிற்கிறது.]

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் நிமிர்ந்து நிற்கும் இரட்டை மலைகளான, குறவன்
மலை, குறத்தி மலையின் இடைவெளியை அடைத்து 555 -அடி உயரத்திற்கு கட்டப்பட்ட
இடுக்கி அணையானது,1922-லேயே அணை கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு ,
1932-ல் நீர் மின்நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அப்போதைய திருவாங்கூர் அரசிடம் அனுமதி பெற்று,1969-ல் திட்டத்தை தொடங்கி,1975-ல் 780
மெகாவாட் வரை மின்சாரம் தயாரித்துக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நின்ற இடுக்கி
நீர் தேக்கத்திற்கு, நினைத்த அளவில் நீர் வரத்து வந்து சேரவில்லை.

மனிதர்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால்,காட்டு வளங்கள் அழிக்கப்பட்டதால்,
பருவம் தப்பி சரியான மழை இல்லை.சுதாரித்துக் கொண்ட கேரள அரசு, இந்த திட்டத்திற்கு குறுக்கே நந்தி மாதிரி நிற்பது 152 [15.5 TMC ft] அடிவரை நீரைத் தேக்கி நிற்கும்
முல்லைபெரியாறு அணை தான்.எனவே முல்லைப் பெரியாறு அணைக்கு ஆப்பு வைத்து
பெரியாருக்கு மேற்கு நோக்கி ஓடும் நீர்வரத்தை அடைத்து,கிழக்கு நோக்கி திருப்ப,
குறுக்கே அணைகட்டி, நீரை இடுக்கி நீர்தேக்கத்திற்கு அனுப்ப சூது செய்து,1978-ல் கேரள
அரசால் கூட்டப்பட்ட,ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட, அப்போதைய
அரசியல் வாதிகளாலும்,அதிகாரிகளாலும், தொழில் நுட்ப வல்லுனர்கள் என்று சொல்லிகொண்டவர்களாலும் ,"ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக
எடுக்கப்பட்ட முடிவு, அல்லது ஒரு சேரப் புனையப்பட்ட பொய் செய்திதான்,
"முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது.எந்நேரமும் உடையலாம்,
அவ்வாறு உடைந்தால் பல லட்ச மனித உயிர்கள் பலியாகலாம்." என்பது.

சரி, இந்த பொய் செய்தியை எப்படி பரப்புவது? என்ற கேள்விக்கு,அந்த கூட்டத்திலிருந்த
பொறியாளர் "விசயம் ரொம்ப எளிது." ஒரு பத்திரிக்கை நிருபரை வரவழையுங்கள்.
கூட்டத்தின் முடிவைச்சொல்லுங்கள், மீதி வேலையை அவர் பார்த்துக்கொள்வார். என்று சொல்ல,அதன்படியே அன்றைய பிரபல மலையாள நாளிதழ் நிருபர் வரவழைக்கப்பட்டு,
அடுத்த நாளே, அது தலைப்புச்செய்தியாக,இதையே கருத்துப்பிரட்ச்சாரமாக ஒவ்வொரு
மலையாளியும் செய்யத்துவங்கினார்கள். இடையில் 1979-ல் ரிக்டர் அளவில் 2 புள்ளி
ஏற்பட்ட நிலநடுக்கமும் அவர்களது பொய்க்கு வலு சேர்க்க,இன்று வரை அந்த பொய்
மூட்டையை தூக்கி சுமக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால்,அப்படியே அணை உடைந்தாலும்,முல்லைப் பெரியாறு அணை நீரானது ," நீர் வழிந்தோடியதால் ஏற்பட்ட மலை இடுக்குகளின் வழி
ஓடி, நேராக இடுக்கி நீர் தேக்கத்தை தான் அடையும்."இடுக்கி அணைக்கு எந்த சேதாரமும்
ஏற்படாது,ஏன் என்றால் முல்லைப் பெரியாறு நீர்தேக்க கொள்ளளவை விட, இடுக்கி அணையானது, நான்கு மடங்கு பெரிய,அதாவது 72.6 TMCft அளவு கொள்ளளவு கொண்டது. இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்பது கட்டுக்கதை,என்ற உண்மையை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை.

இப்படியே கடந்த முப்பத்தொரு ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் இப்பிரட்சினை இன்று உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எது எப்படியோ? இங்கே
பருவ மழையும் தப்பிப்போக,வைகை அணையும்,"இந்தா-அந்தா" என்று ஏமாற்ற,
விதை நெல்லை, நாற்றுப்பாவி,தண்ணீர் இல்லாமல், நாற்றும் கருகிப்போய்,
நடவு செய்யமுடியாமல், விழி பிதுங்கி நிற்கும் ஏழை விவசாய சனங்களுக்கு
என்னபதில் சொல்லப்போகிறது.? "இத்தாலிய இறக்குமதியான சோனியாவின்
இந்திய இறையாண்மை."

32 comments:

ஆ.ஞானசேகரன் said...

//பல ஆண்டு காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்பிரச்சனை,இப்பொழுது அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.கேரளா அரசின் ஏமாற்றுத்தனமும், தமிழக அரசின் ஏமாளித்தனமும் சேர்ந்து , "தென் தமிழக மக்களை தீராத தாகத்தில் தவிக்க வைத்திருக்கிறது."//

சரியா சொன்னீர்கள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

விளக்கமான கட்டுரை பகிர்வுக்கு நன்றி

ஜெரி ஈசானந்தா. said...

தங்களின் தொடர் அக்கறையில் உள்ளபடியே மகிழ்கிறேன். நன்றி ஞானசேகரன்

தேவன் மாயம் said...

.கேரளா அரசின் ஏமாற்றுத்தனமும், தமிழக அரசின் ஏமாளித்தனமும் சேர்ந்து , "தென் தமிழக மக்களை தீராத தாகத்தில் தவிக்க வைத்திருக்கிறது."///

நல்ல அலசல்!!

தேவன் மாயம் said...

சரி, இந்த பொய் செய்தியை எப்படி பரப்புவது? என்ற கேள்விக்கு,அந்த கூட்டத்திலிருந்த
பொறியாளர் "விசயம் ரொம்ப எளிது." ஒரு பத்திரிக்கை நிருபரை வரவழையுங்கள்.
கூட்டத்தின் முடிவைச்சொல்லுங்கள், மீதி வேலையை அவர் பார்த்துக்கொள்வார். என்று சொல்ல,அதன்படியே அன்றைய பிரபல மலையாள நாளிதழ் நிருபர் வரவழைக்கப்பட்டு,
அடுத்த நாளே, அது தலைப்புச்செய்தியாக,இதையே கருத்துப்பிரட்ச்சாரமாக ஒவ்வொரு
மலையாளியும் செய்யத்துவங்கினார்கள். இடையில் 1979-ல் ரிக்டர் அளவில் 2 புள்ளி
ஏற்பட்ட நிலநடுக்கமும் அவர்களது பொய்க்கு வலு சேர்க்க,இன்று வரை அந்த பொய்
மூட்டையை தூக்கி சுமக்கிறார்கள்.///

கொடுமையான விசயம்!!

தேவன் மாயம் said...

நல்ல சமுதாய சிந்தனையுள்ள பதிவு!

தேவன் மாயம் said...

உங்களுக்கு ஓட்டும் போட்டுவிட்டேன்!

தேவன் மாயம் said...

என் தளத்தில் லின்க் கொடுத்துள்ளேன்!

ஜெரி ஈசானந்தா. said...

என் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் உங்களால் சாத்தியம் ஆயிற்று தேவன்மாயம்.

சொல்லரசன் said...

அருமையான பதிவு ஆசிரியரே,
//மார்க்சிய அச்சுதானந்தன் ,"முல்லைப்பெரியாறு அணை உடைந்தால்,பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது"//

அன்றாடும் குடிக்கும் பால் முதற்கொண்டு காய்கறி, கோழி, மாடு என அனைத்து உணவுகளையும் தமிழகத்திலிருந்து செல்வதை தடுத்தால் என்னவாகும் என்பது அச்சுவுக்கு தெரியாதா?

க.பாலாசி said...

நமக்கென்னவோ நீர்லதான் பிரச்சனை போலருக்கு....எத்தன பேருகிட்டதான் கையேந்நனுமோ தெரியல...

இந்த கொடுமையை வைச்சு கூத்தடிக்கிறானுங்களே அரசியல்வாதிங்க அவனுங்கள என்ன பண்றதுன்னே தெரியல.

நல்ல சிந்தனை பகிர்வு அன்பரே...

ஜெரி ஈசானந்தா. said...

சொல்லரசனுக்கு நன்றியும், அன்பும். நாளும் தொடர்வோம்

ஹேமா said...

ஜெரி,ஓட்டுக்கள் மட்டும்தான் போட்டேன்.

ஜெரி ஈசானந்தா. said...

பாலாசி வந்து நாளாச்சி . ஏதோ நாங்களும் இருக்கோம் ,கண்டுக்கங்க

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமாவிற்கு என் நட்பை காணிக்கை யாக்குகிறேன்.

துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம்.

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...

சி. கருணாகரசு said...

தங்களின் விரிவன விபரமான இக்கட்டுரை மிக பாராட்டுதலுக்கு உரியது... ஆன இங்க இருக்கிற அரசியல்வாதிகள்??????

இத்தாலிய இறக்குமதி????????

என்னத்த சொல்ல.

ஜெரி ஈசானந்தா. said...

துபாய் ராசா உங்க கவிதை என்ன லேசா. சும்மா பின்னியிருக்கீன்களே.

வானம்பாடிகள் said...

எப்பவும் போல ஏமாந்து நின்னுட்டு இத வெச்சி அரசியல் பண்ணத்தான் போறாங்க. முழுமையான கருத்துப் பகிர்வு. நன்றி.

ஸ்ரீ said...

நல்ல பதிவு,வாழ்த்துகள்.

T.V.Radhakrishnan said...

விளக்கமான கட்டுரை

thamizhthesiyan said...

தமிழனுக்கு தமிழ் தேசிய உணர்வு ஏற்பட்டால் தம் அடிப்படை தேவைகளுக்காக சோற்றுக்காக பருப்புக்காக முட்டைக்காக ..வேறு ஒருவனிடம் கையேந்த நேரிடும். அவன் இளித்தவாயன் தமிழனை போன்று இருக்கமாட்டான் என தொலை நோக்கு பார்வையுடன் இந்தி தேசியத்தில் தனி அடையாளம் எதுவும் இன்றி..ஒட்டுண்ணிகளாக ..தமிழனை காட்டிகொடுப்பதிலும்.. காவு வாங்குவதிலும் ..டெல்லி சவுத்பிளாக் முதல் ஐ.நா சபை வரை முதன்மையாக .. மனிதம் எதுவும் இன்றி திரியும் மலையாளி கும்பல்கள் தமிழன் மென்னியை திருகுகிறார்கள்

ஊர்விட்டு ஊர் வந்து டீ கடையும் பேக்கரியும் நடத்தும் இக்கும்பல்கள் தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை இம்சிப்பதும் தென்னிந்திய ரயில்வேயில் அனைத்து துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை அதட்டுவதும் திருச்சி BHEL-லில் அனைத்து மேலாளர்கள் பதவியிலும் குந்திகொண்டு வக்கனை பேசுவதும் நாமக்கல் முட்டையும் தமிழ்நாட்டு அரிசியையும் கொழுத்து தின்றுவிட்டு மீந்த நதி நீரை கடலில் போய் கொட்டுவேனே தவிர தமிழகத்திற்கு தரமாட்டேன் என சீன் காட்டுவதும் ஆய்வுக்காக சென்ற தமிழக பொறியாளர்களை சிறைசெய்வதும்,கண்ணகி கோயிலில் வருடம் தேறும் பிரச்சனை செய்வது அங்கு தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டபட்ட மண்டபத்தில் அந்த நாளில் மட்டும் பாரதமாதா சிலையை வைத்துவிட்டு பாரத மாதாக்கி ஜே! என ஊளையிடுவதும்.. இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம். ஏன் முல்லை பெரியாற்றில் பயனடையும் விவசாயிகள் பயிறிட்ட நெல்லை இவர்கள் உண்ண போவதில்லையா? பிறகு ஏன் இந்த காழ்புணர்ச்சி..தமிழனின் வரலாற்று தனித்துவத்தை கண்டு மனம் கொள்ளாமல் திரியும் கும்பல்கள் இடையே தமிழினம் தனித்து போராட வேண்டி உள்ளது

venkat said...

//சரி, இந்த பொய் செய்தியை எப்படி பரப்புவது? என்ற கேள்விக்கு,அந்த கூட்டத்திலிருந்த
பொறியாளர் "விசயம் ரொம்ப எளிது." ஒரு பத்திரிக்கை நிருபரை வரவழையுங்கள்.
கூட்டத்தின் முடிவைச்சொல்லுங்கள், மீதி வேலையை அவர் பார்த்துக்கொள்வார். என்று சொல்ல,அதன்படியே அன்றைய பிரபல மலையாள நாளிதழ் நிருபர் வரவழைக்கப்பட்டு,
அடுத்த நாளே, அது தலைப்புச்செய்தியாக,இதையே கருத்துப்பிரட்ச்சாரமாக ஒவ்வொரு
மலையாளியும் செய்யத்துவங்கினார்கள். இடையில் 1979-ல் ரிக்டர் அளவில் 2 புள்ளி
ஏற்பட்ட நிலநடுக்கமும் அவர்களது பொய்க்கு வலு சேர்க்க,இன்று வரை அந்த பொய்
மூட்டையை தூக்கி சுமக்கிறார்கள்.\\

malayaligal kolayalikal enbathu unmai

ஜெரி ஈசானந்தா. said...

கருணாவின் வருகைக்கு நன்றி.தொடர்வோம்

ஜெரி ஈசானந்தா. said...

வானம் பாடிகளின் தொடர்கானத்தில் மகிழ்கிறேன்..

ஜெரி ஈசானந்தா. said...

ஸ்ரீ ரொம்ப தாங்க்ஸ்பா

ஜெரி ஈசானந்தா. said...

ராதா கிருஷ்ணன, தங்களின் தொடர்ந்த அன்பில் நிறைவாய் இருக்கிறேன்.

ஜெரி ஈசானந்தா. said...

தமிழ் தேசியனுக்கு வணக்கம், நிட்சயமாக முடியும். தமிழ் தேசியம் காப்போம்,
தமிழ் இறையாண்மையை கட்டிஎழுப்புவோம்.

ஜெரி ஈசானந்தா. said...

வெங்கட் தங்களின் வருகைக்கும்,கருத்து ப்பகிர்வுக்கும்,நன்றி. தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'முல்லைப்பெரியாறு: "கொடுங்கனவின் கானல் நீர்!"' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 23rd October 2009 09:36:03 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/128863

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Josephine Baba said...

நீங்கள் சொல்கின்றீர்கள் தண்ணீர் இடுக்கி டாமுக்கு தான் செல்லும் என்று, ஊரோடி வீரகுமாரின் முல்லை பெரியாறு என்ற புத்தகத்தில் சொல்லபட்டுள்ளது தண்ணீர் கீழ் நோக்கி தமிழகம் செல்லும் என்று. மேலும் நான் வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர், அப்படி தண்ணீர் இடுக்கி நோக்கி செல்லும் போத்ஹு இருகரையிலும் வசிக்கும் மக்களையும் அழித்து விடும். கேரளா அரசு வீட்டு வீடு தோட்டம் போடுங்கள் என்று மக்களை காய்கறி தோட்டம் என உற்சாகப்படுத்தி வருகின்றது. கேரளா அரசு கூடன்குளம் போன்ர அணு உலைகள் வழி மின்சாரம் தயாரிப்பதையோ மணல் கொள்ளை வழி ஆறுகளை கொள்ளையிடுவதையோ விரும்புவதில்லை. கேரளாவில் மழையின் அளவு கூடுதலாக இருப்பினும் தண்ணீர் தட்டுப்பாடு அங்கு கொடியதே ஒரு குடம் தண்ணீருக்கு என ஒரு மலைகடந்து நடக்கும் சூழலுக்கு மக்கள் உள்ளனர். நம் தமிழகம் போல் நிரப்பான பிரதேசம் அல்ல அது. நம் நதிகளை, குளங்களை பராமரிப்பது பற்றி நாம் ஏன் அக்கரை கொள்வது இல்லை. தமிழக சாக்கடை அரசியல் முல்லைபெரியார் ஈழம் என்ற பெயரை சொல்லி கொள்ளையிட்டு கொண்டு இருக்கின்றது.