Saturday, October 3, 2009

அறுந்தும் விழாத வால்.

வாலறுந்து வந்தவன் மனிதன் என்கிறார்கள் ,
ஆனால்......
வாலுடன் வாழும் மனிதர்களாகவே
இன்னும் இருக்கிறோம்.


ஒவ்வொருவருக்கும்
இது..முளைத்தே பிறக்கும்.
நாம் இறந்தாலும் இருக்கும்.
இப்படி அதிசயமான இந்த வால்,
மந்திர வாதிகளால் கணவாய் கடந்து வந்த
தெய்வ உறுப்பு என்று சொல்லிக்கொள்கிறார்கள்.


இது அழகானது .. அது அசிங்கமானது
இது குட்டையானது ,அது நெட்டையானது,
இது மொட்டையானது,அது கூரானது,
என்று அடுத்தவர் வாலைப்பற்றி, வாயாடுகிறார்கள்.


இந்த வாலை வைத்துக்கொண்டு ,
சிலர் சிலிப்பிக்கிட்டே த்திரியவும்,
சிலர் சுருட்டியே வைத்திருக்கவும்
பழக்கப்படுத்திக்கொன்டார்கள்.


அவ்வப்போது....
அவரவர் எல்லைக்குள் ..
மயிலாட்டம், குயிலாட்டம்,
கரகாட்டம்,ஒயிலாட்டம் போல,
வாலாட்டம் ஆட..
வழக்கப்படுத்திக்கொண்டார்கள்.


அவ்வப்போது அவரவர் வாலை,
நீட்டிக்காட்டவும்,
ஒளித்துச்சுருட்டவும்
ஆசைப்படுகிறார்கள்.


சிலருக்கு ...இந்த வால்
"அவஸ்தையின் ரீங்காரம்,"
இன்னும் சிலருக்கு ..
"அவசிய அங்கீகாரம்".


பலருக்கு இந்த வால்..
நமட்டிச்சிரிக்கவும்,
நக்கி பிழைக்கவும்,
நடுங்கி ஒடுங்கவும்,
மிடுக்கி ஒடுக்கவும்,
வசதியாய் போனது.


என்ன செய்து தொலைக்க..
ஊரைப்போல, நாட்டைப்போல,
நானும்தான் சுமக்கிறேன்,
அறுந்தும் விழாத என் வாலை.

32 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

வால்புராணம் மிக நன்றாயிருக்கிறது!

யாரோட வால்? அல்லது எந்த வால் என்ற ஐயத்திற்குச் சற்றும் இடமளிக்காமல், மிகத்தெளிவாக:-))

கொஞ்சம் எழுத்துப்பிழைகளையும் கவனிக்கவும், பானகத் துரும்பு மாதிரி, சுவையான ஓட்டத்திற்கு இடைஞ்சல் செய்து விடாமல் இருப்பதற்காக மட்டுமே!

தண்டோரா ...... said...

நம்ம அலைவரிசைக்கு வந்துட்டீங்க போல....(வரியமைப்பை கொஞ்சம் மாற்றினால் மிகவும் நன்றாக இருக்கும் எஸ்.பி. சார்)

ஹேமா said...

வால் ஜெரி,கவனம் உங்களுக்கு வால்ன்னு பெயர் வைக்கப் போறாங்க.என்ன ஆச்சு.அறுந்தும் விழாத வாலுக்காக வால் வால் ன்னு சத்தம் போடறீங்க.நல்லாருக்கு ஜெரி.

பனங்காற்று. said...

வாலால் விளையும் பலது அதை வாலாட்டி திரிபவர் உணர்வார் வெகு விரைவில்.
வாத்தியார் வரிகள் நன்று .

ஆ.ஞானசேகரன் said...

//வாலறுந்து வந்தவன் மனிதன் என்கிறார்கள் ,
ஆனால்......
வாலுடன் வாழும் மனிதர்களாகவே
இன்னும் இருக்கிறோம்.//

நல்லாதான் இருக்கு அறுந்த வால்

கதிர் - ஈரோடு said...

விழாத வாலை தூக்கியெறியுங்கள்

ஜெரி ஈசானந்தா. said...

கிருஷ்ண மூர்த்தி ஐயாவுக்கு,தங்களின் கரிசனை எனக்கு ஆசிர்வாதம்.
இன்னும் தமிழ் டைப் எனக்கு தெரியவில்லை, விரைவில் கற்றுவிடுவேன்.
கூகிள் லில் டைப் செய்து ,காப்பி,பேஸ்ட் செய்து வருகிறேன். நன்றி..

ஜெரி ஈசானந்தா. said...

தண்டோராவிற்கு வணக்கம், அன்பின் அலைவரிசையில் நாளும் தொடர்வோம்

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமாவிற்கு நமஸ்காரம், வால்,வால், ன்னு தான கத்துறேன், "லொள்,லொள், ன்னு கொளைக்கலையே" கவிதை புரிந்ததுதானே? சாதிகளை, வாலென உருவகபடுத்தினேன்

ஜெரி ஈசானந்தா. said...

பணங்காற்றின் பாராட்டு "பனங்கள்ளு சாப்பிட்டது போல இருக்கு." நன்றி. தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

தங்களின் தொடர் அக்கறையில் நாளும் வளர்கிறேன்.ஞானசேகரன். நன்றி..

ஜெரி ஈசானந்தா. said...

ஈரோட்டு கவிஞரும், வார்த்தை நெசவாளருமான கதிருக்கு நன்றி..

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

விமர்சனம் அளிக்கும் போது கூட டென்ஷன் பட்டு விட்டேன் என்கிறர்வர்களை பார்க்கும் போது சற்று பயமாய் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் மின் அஞ்சல் வழியாக வந்து விழும் போது வேறு வழியே இல்லாமல் உங்களை பாராட்டத்தான் தோன்றுகிறது. ஒரு இனத்தின் கதை, ஒரு சேதத்தின் கதை, அல்லது மனுதர்மத்தின் மகோற்சவம் என்று எதை வேண்டுமானலும் யோசிக்கத் தோன்றுகிறது. கஷடப்பட்டு சுதந்திர கதையை இத்தனை நீளமாக எழுதும் போது உங்களைப் போன்றவர்கள் எத்தனை எளிதாக சிறப்பாக இஷ்டப்பட வைத்து விடுகிறீர்கள். ஆச்சரியம் நண்பரோ?

ஜெரி ஈசானந்தா. said...

ஜோதிஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்.தொடர்வோம்.

சி. கருணாகரசு said...

கவிதை வால் போல நீண்டு இருந்தாலும் ... திகட்டல நல்லாஇருக்கு.

நேசமித்ரன் said...

வால் என்பதை பல விஷயங்களை குறிக்கும் ஒரு குறியீடாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் வால் நீளம் கொஞ்சம் குறைக்கலாம்
நன்று நண்பரே வாழ்த்துக்கள்

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி கருணாகரசு, சாதிய கொடுமையை பற்றி எழுதியுள்ளேன்

ஜெரி ஈசானந்தா. said...

.நேசனுக்கு நெஞ்சம் இனிக்கும் நன்றிகள். சாதி என்ற வாலை நாம் எல்லோரும்பற்றிக்கொண்டு திரிவதை காட்டியுள்ளேன். ,

D.R.Ashok said...

நல்ல முயற்சி ஜெரி

T.V.Radhakrishnan said...

நல்லாஇருக்கு.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி அசோக்

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி ராதா கிருஷ்ணன்

சொல்லரசன் said...

இத்தனை வால்களையும் அறுத்து எரிய, உங்களை தினம்தினம் அவதிபடுத்தும் வால்களுக்கு கற்றுகொடுங்கள்,எதிர்காலத்தில் வால்கள் இல்லாத சமூதாயமாக‌
அவர்கள் வாழட்டும்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சொல்லரசன்.தொடர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'அறுந்தும் விழாத வால்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 4th October 2009 04:06:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/120611

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

பா.ராஜாராம் said...

நல்ல சிந்தனையும்,பகிர்வும்.ஜெரி.வாழ்த்துக்கள்!

ஜெரி ஈசானந்தா. said...

பா.ராவிற்கு நன்றி.தொடர்வோம்.

வால்பையன் said...

என் மேல எதோ கோபமோன்னு நினைச்சு வந்தேன்!

ஜெரி ஈசானந்தா. said...

வாலுக்கு நன்றி

க.பாலாஜி said...

//என்ன செய்து தொலைக்க..
ஊரைப்போல, நாட்டைப்போல,
நானும்தான் சுமக்கிறேன்,
அறுந்தும் விழாத என் வாலை.//

கொஞ்சம் இருங்க...என் பின்னாடி பாத்துக்கிறேன். அட ஆமா எனக்கும் இருக்கு...என்ன செய்வது?

ஜெரி ஈசானந்தா. said...

thank u balaji.

உங்களோடு... said...

ஒடுக்கி வைக்கப்பட்ட வால், நீளவும் செய்யும்.