Wednesday, September 23, 2009

ஒரு கணப்பொழுதில்.


சாதாக் கட்டணத்தில் பயணம் செய்ய திணறுகிறான்,
சுவிஸ் வங்கியில் பணம் மறைத்த கதர்ச்சட்டைக்காரன்.

மண்ணெண்ணெய் இன்று இல்லை,
ரேஷன் கடை போர்டு படித்து திரும்பும்,
அயித்த மக விருமாயி.

ஜகன் மோகினிக்கு பிரமாண்ட கட்டவுட்,
தமிழ் ரசிகர்கள் ஆரவாரம்,
"அடுத்த முதல்வர் கோஷத்தோடு,
சிலைஎடுக்க சூளுரை."


வன்னி வதை முகாமில்,
பெண் போராளியின் -பிறப்புறுப்பில் ,
பூட்ஸ் கால் திணிக்கப்படுகிறது.


விண்வெளியில் குப்பை சேர்க்க,
அடுத்த கவுண்டவுன்.

சிக்னல் பிட்சைக்காரியின்,
முந்தானை பிடித்து வந்த,
ஐந்து வயதுமகள் பிரேக் பிடிக்காத லாரி மோதி பலி.


"நான் அள்ளி முடுஞ்சா-அறங்காவலர் பதவி"
"தூக்கி சொருகினா -துணை பொறுப்பு."
மேடை தோறும் முழங்குகிறாள்,
மகளிரணி தலைவி,அஞ்சு கொலை பண்ணிபுட்டு.


வேலூர் சிறையில் .....
"நளினி சாகும் வரையில் உண்ணாவிரதம்".


வாடிகன் கர்தினால்,
அமெரிக்க சுற்றுலா பயணம்.


லாஸ்வேகாஸ் இரவு விடுதியில்,
வெள்ளைக்கார சிறுமி ஒருத்தி,
தேம்பி தேம்பி அழுகிறாள்.


ஓசோன் படலம்,மெது..மெதுவாய் கிழிகிறது.


துருவத்து பனிமலை மெல்ல கரைகிறது.


"மாப்ள- என் புள்ளகள பாத்துக்கடா,"
என்றபடி,என் கன்னம் தட்டி ,பிரமை களைத்த,
மாயப்பாண்டி திரும்ப்பக்கிளம்புகிறான்,
பரோலில் வந்த லீவு முடிந்து.

"இப்பொழுது வாசிக்கிறேன்...
இந்த கணப்பொழுதை"

24 comments:

கதிர் - ஈரோடு said...

கனக்கிறது

கிருஷ்ணமூர்த்தி said...

நல்லாவே இருக்கு!

ஆனாலும்,

ஜென்னுன்னா,ஒரு உண்மையைச் சுருங்க உரைப்பது!

குலைகுலையாய்த் திராட்சைமாதிரிக் காய்ச்சுத் தொங்கறதும் இல்லே!

சம்பவங்கள் சேர்ந்தது தான் சரித்திரம்னு சொன்னாலும்,
சம்பவம் மட்டுமே சரித்திரம் ஆவதில்லை!

ஸ்ரீ said...

நன்று.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி கதிர்

ஜெரி ஈசானந்தா. said...

ஐயா,தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

ஸ்ரீ நமஸ்காரம், வாழ்த்துக்கு நன்

ஹேமா said...

ஜெரி,ஒவ்வொரு செய்தியும் உறைக்கிறது.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கவேணுமே !

இவற்றோடு தமிழக மீனவர்கள் என்றும் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகிறார்களே.சொல்லாமல் விட்டீர்கள் ஏன் ?

சொல்லரசன் said...

ஜகன் மோகினிக்கு பிரமாண்ட கட்டவுட்,
தமிழ் ரசிகர்கள் ஆரவாரம்,
"அடுத்த முதல்வர் கோஷத்தோடு,
சிலைஎடுக்க சூளுரை."


நடந்தாலும் நடக்கும்!!!!!!!!!!!!!!!

பாலகுமார் said...

நல்லா இருக்கு!

க.பாலாஜி said...

//"நான் அள்ளி முடுஞ்சா-அறங்காவலர் பதவி""தூக்கி சொருகினா -துணை பொறுப்பு."மேடை தோறும் முழங்குகிறாள்,
மகளிரணி தலைவி,அஞ்சு கொலை பண்ணிபுட்டு.//

நிதர்சனமான வரிகள்...

எல்லா பஞ்ச்களும் அருமை... கொஞ்சம் வலிகனின் சாயம் பூசி...

வாழ்த்துக்கள் அன்பரே...

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

கவிப்பேரரசு ஆகிவிடுவீர்கள் போல. கனத்து விட்டது மனம்.

ஜெரி ஈசானந்தா. said...

பாலாஜிக்கு என் கைகுலுக்கல்.

ஜெரி ஈசானந்தா. said...

ஜோதிஜி அவர்களுக்கு நட்பும்,அன்பும்,நன்றியும்

D.R.Ashok said...

சிறு
பெரு
நிகழ்வுகளை சொல்லிவிட்டு
கடைசி இரு பத்தியில்
வீடு திரும்புகிறீர்கள்.

நன்றி, நல்லதொர் கவிஞனை கண்டடைந்தேன் :)

சினேகிதி said...

ம் என்ன சொல்ல. எல்லாத்தையும் வாசிச்சிட்டும் தொடர்ந்து நம்ம பாட்டைப் பார்க்கணுமே.

தேவன் மாயம் said...

கலந்து கட்டி அடி பின்னீட்டிங்க ஜெரி!!!

தேவன் மாயம் said...

பல ச்ர்ய்திகளையும் ஒரு கட்டுக்குள் சொல்லியிருக்கிறீர்கள்!!

புலவன் புலிகேசி said...

அருமை..... வாழ்த்துக்கள்.........

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'ஒரு கணப்பொழுதில்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th September 2009 07:08:31 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/116616

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

சி. கருணாகரசு said...

சாட்டையடிங்க கவிதை.

ஜெரி ஈசானந்தா. said...

ஹேமா ,சொல்லரசன்,பாலகுமார்,அசோக்,சிநேகிதி,தேவன்மாயம், கருணாகரசு,புலவன் புலிகேசி, உங்களது அன்பினாலும், தொடர் அக்கறையினாலும்,இந்த வெற்றி சாத்யமாயிற்று.இது எனது முதல் முயற்சி.பழைய பதிவான,சுதந்திர தினமும் சூத்தக்கத்திரிகாயும்" கவிதை நடையில் எளிதாக வந்தது, ஆனால்,இந்த கவிதை "ஒரு கண நேரத்தில் வந்து போகும் எண்ணங்களை ஒன்றுக்கு ஒன்று,முற்றிலும் முரணாக, வரிசைபடுத்தி ,கடைசியில் நிகழ் கால நிஜத்தை உணர்த்தி முடித்தேன். தொடர்வோம்.நன்றி.

துபாய் ராஜா said...

ஒரு கணப்பொழுதில் நடக்கும் உலக நிகழ்வுகளை உறைக்கும்படி சொல்லி உறைய வைத்துவிட்டீர்கள்....

உங்களோடு... said...

//விண்வெளியில் குப்பை சேர்க்க,
அடுத்த கவுண்டவுன்.//
நல்ல காமெடி...

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு