Saturday, September 12, 2009

பதவி நாற்காலி

இந்த நாற்காலி
இலவசமாய் வந்த,
உதிரி பாகங்களை
ஒட்ட வைத்து செய்த
சுதேசி தயாரிப்பு தான்,
என்றாலும் ....
"இதனை இயக்கும்
ரிமோட் மட்டும்
இத்தாலிய இறக்குமதி."


12 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆகா.. அநியாய அரசியல் போல இருக்கே..

தேவன் மாயம் said...

உள்நாட்டு ரிமோட் சரியா வேலை செய்யலயாம்!

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

வார்த்தைகள் இல்லை. பாராட்டுகளைச் சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கு வலிவு இல்லை. எளிமை. எதார்த்தம். ஏற்றம். இதற்குப் பின்னால் பல வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வெகு நாளாகி விட்டது இப்படி கவிதை படித்து பரவசமானது. வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

கவிதை

:)

சி. கருணாகரசு said...

கவிதை அருமை. இன்னும் சொல்லனுமுன்னா... நச்!

ஹேமா said...

ஜெரி,கொஞ்சம் புரிஞ்சும் புரியாமலும் இருக்கு.ஈழப்போராட்டம் பட்டுத் தெறிக்கிற மாதிரியும் இருக்கு.ஊர் உலகம் கொடுத்த இலவசமான கழிவு ஆயுதங்களைப் பெற்றுக்
கொண்டார்களே அதுவா?

சினேகிதி said...

நல்லா இருக்கு!

ஜெரி ஈசானந்தா. said...

கார்த்திக்கும்,தேவாவுக்கும், நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

ஜோதிஜி அவர்களுக்கு, இதயம் கனிந்த நன்றி, தங்களின் பாராட்டு இன்னும் உயரங்களை எட்ட ஏணி படியாய் உள்ளது.

ஜெரி ஈசானந்தா. said...

கவிசக்கரவர்த்திகள் "நேசனுக்கும்,கருனாகரசுக்கும்,நன்றிகள் பல."

ஜெரி ஈசானந்தா. said...

புலம் பெயர் சொந்தங்கள் "ஹேமாவுக்கும், சினேகிதிக்கும் நன்றிகள், இந்த கவிதை
மக்களுக்கு இலவசமாய் பொருட்களை,சலுகைகளையும் அள்ளிவீசி,தேர்தலில் வென்று, தனி பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரஸ் ஆதரவோடு, இத்தாலி இறக்குமதியான "சோனியாவின்" கைப்பாவைகளாக, செயல்படும் தமிழக, மற்றும்,மத்திய மன்மோகன் ஆட்சியை விமர்சரித்து கவிதை. அதிலும் குறிப்பாக "ஈழ விடயத்தில் தமிழக அரசை, மிரட்டி, அரட்டி, பணிய வைத்தது,சோனியாதான்."
இந்த கவிதை மத்திய, மாநில,இரண்டுக்கும் பொருந்தும்.

nidurali said...

இறக்குமதியிலும் ஒரு கருத்து உள்ளது