Thursday, September 10, 2009

ஜெலட்டின் உதடுகள்

பார்த்தவுடன்
பச்சக் கென்று ,
பற்றிக்கொள்ளத்துடிக்கும்
பரவசப்பிரதேசம்.

இது...
அன்னத்தாலானதுகள்
நுழையும் வாசல்.
உணர்ச்சிகளை தேக்கி நிற்கும்
உடலாயுத கிடங்கின்
தலைவாசல்.
ஈரத்தை துப்ப ....
அவ்வப்போது
நீளும் ..நாவினால்
நமத்துப்போய்
வெடிக்காமலிருக்கிறது
"அவளது..
ஜெலட்டின் உதடுகள்."


17 comments:

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

உங்கள் கவிதை என்னை கிரங்கடிதுவிட்டது............
வாழ்த்துக்கள்..........

லோகு said...

பெண்ணின் உதடுகளை இப்படி கூட வர்ணிக்க முடியுமா.. பிரமிப்பு தரும் கவிதை..

கதிர் - ஈரோடு said...

//அவ்வப்போது
நீளும் ..நாவினால்
நமத்துப்போய்
வெடிக்காமலிருக்கிறது//

ம்ம்ம்ம்...
சரிதான்

ஹேமா said...

ம்ம்ம்ம்...நல்லாவே இருக்கு ஜெரி.

நேசமித்ரன் said...

:)

ம்ம்ம்ம்...கவிதை..

க.பாலாஜி said...

//உணர்ச்சிகளை தேக்கி நிற்கும்
உடலாயுத கிடங்கின்
தலைவாசல்.//

ஆகா...அருமையான வரிகள்...உண்மைதானோ?.....

//நாவினால் நமத்துப்போய் வெடிக்காமலிருக்கிறது"அவளது..ஜெலட்டின் உதடுகள்."//

அழகான புனைவு வரிகள்....

முனைவர்.இரா.குணசீலன் said...

ஈரத்தை துப்ப ....
அவ்வப்போது
நீளும் ..நாவினால்
நமத்துப்போய்
வெடிக்காமலிருக்கிறது
"அவளது..
ஜெலட்டின் உதடுகள்."/

வித்யாசமான சிந்தனை....
அழகு!!!!!!!

பிருந்தன் said...

நமத்து எனப்தின் பொருள் என்ன ? நான் அறிந்த வரை பழுதானது என பொருள் படுகிறது அந்த வகையான அர்த்தம் கொள்கிறதா? உதாரணமாக நமத்து போன வடை என்கிறோம்.

துபாய் ராஜா said...

ஆஹா,ஆஹா அருமை ஆசிரியரே..

வார்த்தைகளும், வர்ணனைகளும் அட்டகாசம்.

Jawarlal said...

ஜெர்ரி,வெடிப்பதால் ஜெலட்டின் உதடுகளா! very innovative...

http://kgjawarlal.wordpress.com

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

ஸ்ரீ said...

அடேங்கப்பா!!!!

ஜெரி ஈசானந்தா. said...

லோகு,ஈரோடு கதிர் ,தோழி ஹேமா,பாலாஜி,முனைவர் குணா,பிருந்தன்,துபாய் ராஜா, ஜவஹர், ஸ்ரீ, உங்கள் அனைவருக்கும்,என் நட்பின் முத்தங்களை, இதயத்தின் உதடுகளால் பிரதிஎடுக்கிறேன். உங்களால் வளர்கிறேன்,உங்களின் கரம் பற்றி.
நன்றி,ஒவ்வொரு நொடியிலும் ரசித்து வாழ்வோம், வளர்வோம்.

ஜெரி ஈசானந்தா. said...

வணக்கம் தங்கமணி பிரபு, இமெயில் அனுப்பிவிட்டேன்,நண்பர்களுக்கும் அனுப்பிஉள்ளேன். உங்களை போன்றோர் இருப்பதால் தான்,தமிழனின் வீரம் இன்னும் வீழ்ந்து விடவில்லை. தொடர்வோம் நண்பரே.

ஜெரி ஈசானந்தா. said...

நேசனுக்கு நன்றி, உலவு திரட்டிக்கும் நன்றி.

சி. கருணாகரசு said...

புதிய சிந்தனை பாராட்டுக்கள்.

nidurali said...

கற்பனையில்தான் இனி நமக்கு காலம் ஓடும் ,அதிலும் இனிமை உண்டு .
படம் அருமை. கிளு கிளு