Tuesday, September 8, 2009

புலிகள் அழிவதில்லை

உயிரடங்கும் வரையில்
உணர்வுகள் மரிப்பதில்லை,

தவிப்பிருக்கும் வரையில்
தாகம் அடங்குவதில்லை,

தீர்க்கப்படாத வரையில்
களத்துமேடுகள் சரிவதில்லை,

காடுகள் உள்ள வரையில்
புலிகளும் அழிவதில்லை.

பின்குறிப்பு: புலி புடிச்சா ஒட்டு போடுங்க, கிலிஅடிச்சா ஓடி போயிடுங்க.


12 comments:

தண்டோரா ...... said...

காடுகள் அழிந்துகொண்டு வருகின்றன.
புலிகள் ஊருக்குள் வரப்போகின்றன

சி. கருணாகரசு said...

காடுகள் உள்ள வரையில்
புலிகளும் அழிவதில்லை//

காடுகள் மட்டுமில்லை....

நாடுகள் இருக்கும் வரையிலும் கூட புலிகளை அழிக்கமுடியாது.

கவிதையை மிக ரசித்தேன்.
பாராட்டுக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மை..

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

துபாய் ராஜா said...

//காடுகள் உள்ள வரையில்
புலிகளும் அழிவதில்லை.//

ஆம்.புலிகளுக்கு பாயத் தெரியும். பதுங்கத் தெரியும். எப்போதுமே எதிரிகளைக் கண்டு பயப்படத் தெரியாது.

ஜெரி ஈசானந்தா. said...

தங்களின் அக்கறைக்கு நான் பாக்கியம் பெற்றவன் தண்டோரா.

ஜெரி ஈசானந்தா. said...

கருனாமிர்தமே தங்களின் வருகை பெருமிதம்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி கார்த்தி.

ஜெரி ஈசானந்தா. said...

துபாய் ராஜாவிற்கு வணக்கம், நான் மாத சம்பளம் பெரும் ஒரு அரசு ஊழியன், எனவே கவிதைகளில் கொஞ்சம் பதமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. கருத்துக்கு நன்றி.

ஹேமா said...

ஜெரி,கல்லறைகள் ஓய்வு பெறட்டும் இப்போதைக்கு மாத்திரம்.
பயணங்களும் போகும் இடமும் ஒன்றேதான்.பாதைகள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன.அவ்வளவே.காடுகளே வேண்டாம்.விடுங்கள்.

ஜெரி ஈசானந்தா. said...

கருத்துக்கு நன்றி ஹேமா.

சுந்தர் said...

//தீர்க்கப்படாத வரையில்
களத்துமேடுகள் சரிவதில்லை// புரிய வில்லை ஆசிரியரே ?