Wednesday, September 23, 2009

ஒரு கணப்பொழுதில்.


சாதாக் கட்டணத்தில் பயணம் செய்ய திணறுகிறான்,
சுவிஸ் வங்கியில் பணம் மறைத்த கதர்ச்சட்டைக்காரன்.

மண்ணெண்ணெய் இன்று இல்லை,
ரேஷன் கடை போர்டு படித்து திரும்பும்,
அயித்த மக விருமாயி.

ஜகன் மோகினிக்கு பிரமாண்ட கட்டவுட்,
தமிழ் ரசிகர்கள் ஆரவாரம்,
"அடுத்த முதல்வர் கோஷத்தோடு,
சிலைஎடுக்க சூளுரை."


வன்னி வதை முகாமில்,
பெண் போராளியின் -பிறப்புறுப்பில் ,
பூட்ஸ் கால் திணிக்கப்படுகிறது.


விண்வெளியில் குப்பை சேர்க்க,
அடுத்த கவுண்டவுன்.

சிக்னல் பிட்சைக்காரியின்,
முந்தானை பிடித்து வந்த,
ஐந்து வயதுமகள் பிரேக் பிடிக்காத லாரி மோதி பலி.


"நான் அள்ளி முடுஞ்சா-அறங்காவலர் பதவி"
"தூக்கி சொருகினா -துணை பொறுப்பு."
மேடை தோறும் முழங்குகிறாள்,
மகளிரணி தலைவி,அஞ்சு கொலை பண்ணிபுட்டு.


வேலூர் சிறையில் .....
"நளினி சாகும் வரையில் உண்ணாவிரதம்".


வாடிகன் கர்தினால்,
அமெரிக்க சுற்றுலா பயணம்.


லாஸ்வேகாஸ் இரவு விடுதியில்,
வெள்ளைக்கார சிறுமி ஒருத்தி,
தேம்பி தேம்பி அழுகிறாள்.


ஓசோன் படலம்,மெது..மெதுவாய் கிழிகிறது.


துருவத்து பனிமலை மெல்ல கரைகிறது.


"மாப்ள- என் புள்ளகள பாத்துக்கடா,"
என்றபடி,என் கன்னம் தட்டி ,பிரமை களைத்த,
மாயப்பாண்டி திரும்ப்பக்கிளம்புகிறான்,
பரோலில் வந்த லீவு முடிந்து.

"இப்பொழுது வாசிக்கிறேன்...
இந்த கணப்பொழுதை"

Friday, September 18, 2009

வலியை பிரதியெடுங்கள்.

வலியை பிரதியெடுங்கள். ஒரு நிமிடம் "இந்த உசுரை பொசுக்கும் இசையை கேளுங்களேன்."Thursday, September 17, 2009

கிளர்ந்தெழுந்தவளின் படுக்கை விரிப்பு.

அந்தரங்க நூலிழையாடி

காயம் கசிந்த ..

சாயமேற்றி,

உடல் புரண்ட

உஷ்ணம் தாங்கி,

கால் பரப்பிக்கிடக்கிறது,

கிளர்ந்தெழுந்தவளின்

படுக்கை விரிப்பு.Tuesday, September 15, 2009

இன்று தேவன் மாயம் பிறந்தநாள்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும், பிரபல பதிவர் " டாக்டர் - தேவன் மாயம்"அவர்கள் இறைவன் அருளால்,மன மகிழ்ச்சியோடு, உடல் நல சுகத்தோடு, பல்லாண்டு காலம், பெருவாழ்வு -வாழ, அவரது குடும்பத்தாரோடு சேர்ந்து, நாமும்,வாழ்த்துவோம். பதிவுலக வாழ்த்து மழை,தொடரட்டும்.


Saturday, September 12, 2009

பதவி நாற்காலி

இந்த நாற்காலி
இலவசமாய் வந்த,
உதிரி பாகங்களை
ஒட்ட வைத்து செய்த
சுதேசி தயாரிப்பு தான்,
என்றாலும் ....
"இதனை இயக்கும்
ரிமோட் மட்டும்
இத்தாலிய இறக்குமதி."


Thursday, September 10, 2009

ஜெலட்டின் உதடுகள்

பார்த்தவுடன்
பச்சக் கென்று ,
பற்றிக்கொள்ளத்துடிக்கும்
பரவசப்பிரதேசம்.

இது...
அன்னத்தாலானதுகள்
நுழையும் வாசல்.
உணர்ச்சிகளை தேக்கி நிற்கும்
உடலாயுத கிடங்கின்
தலைவாசல்.
ஈரத்தை துப்ப ....
அவ்வப்போது
நீளும் ..நாவினால்
நமத்துப்போய்
வெடிக்காமலிருக்கிறது
"அவளது..
ஜெலட்டின் உதடுகள்."


Tuesday, September 8, 2009

புலிகள் அழிவதில்லை

உயிரடங்கும் வரையில்
உணர்வுகள் மரிப்பதில்லை,

தவிப்பிருக்கும் வரையில்
தாகம் அடங்குவதில்லை,

தீர்க்கப்படாத வரையில்
களத்துமேடுகள் சரிவதில்லை,

காடுகள் உள்ள வரையில்
புலிகளும் அழிவதில்லை.

பின்குறிப்பு: புலி புடிச்சா ஒட்டு போடுங்க, கிலிஅடிச்சா ஓடி போயிடுங்க.


Sunday, September 6, 2009

நாய்ப்பாவம் பொல்லாதது.

எந்த நாய்களை பார்த்தாலும்
அழகாய் தானிருக்கிறது.


வாலை ஆட்டி,
அவைகளோடு கூடி..குலாவ,
ஆசை கொப்பளிக்கிறது.


என்ன செய்வது?
"மனித வேடத்தில் குரைப்பது பாவமாம்."