Thursday, August 27, 2009

அதிசயங்களுக்காய் காத்திருக்கிறேன்

வார்த்தைகளற்ற வலிகளிலும்,
மானுடம் மறந்த மொழிகளிலும்
புதையுண்டு போனது
எனக்கான கவிதையும் தான்.


அரச பயங்கரவாதத்தின்
கோரப்பற்களால்
குத்திக்கிழிக்கப்படும்
நரமாமிசமாய் நான்.


ஆனாலும்
காத்திருக்கிறேன்....
சில அதிசயங்களுக்காய்.


ஜெரி ஈசானந்தா-மதுரை.


7 comments:

ஹேமா said...

ஜெரி,புதிசாலித்தனமாகச் செய்த - செய்துகொண்டிருக்கும் தவறுகளுக்கெல்லாம் காரண காரியம் சொல்லிகொண்டிருக்கும் அரசாங்கம் அதிசயம் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கிறீர்களா?நாங்கள்தான் ஏமாளிகள்.

jerry eshananda. said...

ஹேமா,தங்களின் தொடர்ச்சியான அக்கறைக்கு,என் நட்பை பரிசாக தருகிறேன்.
நன்றிப்பா

துபாய் ராஜா said...

அதிசயங்களுக்காய் நாங்களும் காத்திருக்கிறோம்......

நேசமித்ரன் said...

சூட்சுமம் புரியாத வெளியொன்றில்
பசியால் தவித்த கர்ப்பிணி
பிள்ளையைப் பிரசவித்துத் தின்னத் துணிகிறாள்

- selvanaayakiyin indha kavithai varigal ninivuku varugindrana

:)

D.R.Ashok said...

:)

jerry eshananda. said...

துபாய் ராஜாவுக்கு என் அன்பின் வாசங்கள்.

jerry eshananda. said...

நேசத்தின் நண்பனே,தங்களின் அக்கறை என்னை மேலும் மிருதுவாக்குகிறது.