Saturday, August 15, 2009

சுதந்திரதினமும் சூத்த கத்தரிக்காயும்

அப்பனுக்கு கடுங்காவல்
ஆத்தாளுக்கு யார்யாரோ காவல்,
நான் இப்ப அம்மாச்சி வீட்டில் வளர்கிறேன்.

அம்மாச்சி ...
இன்னைக்கி சுதந்திர தினம்,
கொடி வாங்க துட்டுதரியா?

சுருக்குப்பை கிளறி
கிழவி கொடுத்த ஒத்த ரூபாய்
நாணயத்தோடு ஓடுகையில்

எலேய் ... கொடிய வாங்கிகிட்டு ..
குழம்புக்கு ஏதாச்சும் கேட்டுபாருயா..
என்று அம்மாட்சி கத்துவது காதில்விழ..
கடைக்கு சென்று கொடிவாங்கி திரும்புகையில்


கடைக்காரர் தந்த ஒசிப்பையை பிரித்து பார்த்தேன்.
எப்பவும் வரும்கழிச்சு போட்ட காய்களோடு

புதுசா ரெண்டு சூத்த ..கத்திரிக்காய்.

8 comments:

சூர்யா ௧ண்ணன் said...

வலி உணர்த்தும் கவிதை!

தொடருங்கள்!

jerry eshananda. said...

நன்றி சுரேஷ் கண்ணன்,தங்களின் வருகையும்,கருத்துக்கும் நன்றிகள் பல,உங்களின் ப்ளாக் நன்றாக,செய்திகள் பல உள்ளது. சந்தேகம் தீர்க்க மெயிலில் போன் நம்பர் அனுப்பவும்.

jerry eshananda. said...

மன்னிக்கவும் சூர்யாகண்ணன், அவசரத்தில் சூர்யா,சுரேஷாகி போனார்.

jerry eshananda. said...

சுவிஸ் தமிழ்வெப் டாட்காம் விமல் அவர்களே,என் கவிதையை தங்கள் இணையத்தில் மீள் பிரசுரம் செய்ததற்கு நன்றி.
புலத்தில் வாழும் என் தமிழ் சாதி சொந்தங்களே, என் தொப்புள்கொடி சொந்தங்களே,
என் கவிதையை மீள் பிரசுரம் செய்தால் தயவுசெய்து "ஜெரி ஈசானந்தா"-மதுரை.
என்று என் பெயரையும் பிரசுரித்தால் நன்றாக இருக்குமே.
ஒவ்வொரு எழுத்தும்,வார்த்தையும்.எனது வலியாலும்,உணர்வாலும் சுகமாய்,சுயமாய் பிரசவித்தது.

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்லதொரு கவிதை !

jerry eshananda. said...

கவிதை உலக இளவரசர் எம்.ரிஷான் செரீப் அவர்களுக்கு நன்றி. தங்களின் வாழ்த்து ஆயிரம் வாழ்த்துகளுக்கு சமம். நான் தங்களுக்கு எழுதிய பின்னூட்டத்தில் "உயிர்மை"
என்று எழுதுவதற்கு பதில்,காலசுவடு என்று எழுதிவிட்டேன்,மன்னிக்கவும் நண்பா.

ஜோதிஜி said...

அற்புதம் Voted

தோழி said...

நல்ல கவிதை. வலி உணரமுடிகிறது. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்