Thursday, August 13, 2009

பின்னூட்டமிட வாடகைப்பதிவர் தேவை.

மதுரை ஜெரி ஈசானந்தாவின் "சிலேடையில் ஒரு செல்ல .. சிணுங்கல்".

சமைந்ததும்

இலைக்கு வரும்

அன்னபூரணி நான்...

வீடும்; காடுமென,

மேய்பவருக்கு,

எடுத்துண்ண ...

அக்கறையில்லை.

எனக்கு பின்னூட்டமிட

வாடகைப்பதிவர்

உடனே தேவை.

பின்குறிப்பு: வலை பதிவர்களுக்குள் மகா.. மெகா.. கூட்டணி எல்லாம் இருக்குமோ என மனதில் பட்டதால் வந்த கவிதை இது. பரிந்துரையா? தெரிந்துரையா? ஒன்றும் புரியவில்லை. இந்த சிணுங்கலில் யாராவது வழிந்தாலோ ..யாருக்காவது வலித்தாலோ? நான் பொறுப்பல்ல.



16 comments:

டக்ளஸ்... said...

நல்லாருக்கு தலைவா...!

ஒரே ஒரு சந்தெகம்..
சிணுங்கல்
சிணுங்களில்

எது சரி..?
:)

முரளிகண்ணன் said...

ஆ நீங்களும் மதுரையா?

உங்க பேர் வித்தியாசமா இருக்கே?

வால்பையன் said...

வாடகை எவ்வளவு தருவிங்க!?

jerry eshananda. said...

அட ..நம்ம.. டக்லஸ் அண்ணே, பாத்தியா? எப்பவும் இந்த லானா பிரச்சினை தான்.
டக்ளஸ் அண்ணே, சிணுங்கல் தான் சரி. பிலோவ்ள வந்துருச்சு

jerry eshananda. said...

ஆ? நீங்களும் நம்ம மதுரையா? கோபியரோடு குழலூதும் முரளி கண்ணனுக்கு
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். பிறந்ததும் இனைந்தது "ஜெரால்டு ராஜ்.",இடையில்
புணைந்தது "ஜெரி ஈசானந்தா". வாசிப்புக்கும், பின்னூட்டுக்கும் நன்றி.
தொடர்புக்கு:9791390002

jerry eshananda. said...

பின்னூட்டமிட வந்ததற்கு நன்றி. பதிவர் கூட்டம் "வழிவதால்" மதுரையில் ஒரு சிறப்பு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்."வால் பையனுக்கு" வாய்ப்பு கிடைக்க சிபாரிசு செய்கிறேன்

வால்பையன் said...

//."வால் பையனுக்கு" வாய்ப்பு கிடைக்க சிபாரிசு செய்கிறேன் //

வந்துட்டேன்!

நிகழ்காலத்தில்... said...

வாடகை விபரம் என்ன

பணமா? காசோலையா ??

முழுவிபரம் தரவும்

jerry eshananda. said...

வாசிப்புக்கு,நன்றி,உங்க அவசர,அவசியம் புரியுது. அப்ப,நீங்களும் மதுரைக்கு வந்துருங்க.
நிகழ் காலம்.

தேவன் மாயம் said...

ஜெரி!!
பின்னூட்டத் திலகங்கள்
வர ஆரம்பித்துவிட்டார்கள்!!

தேவன் மாயம் said...

பதிவர் சந்திப்பு ஏற்பாடெல்லாம் அதற்குள் ஆரம்பித்துவிட்டீரா!!
ஜெரி!!

சி. கருணாகரசு said...

கவிதை நல்லா இருக்கு எனக்கு துளியும் வவிக்கவில்லை!... அதென்ன நம்ம மதுரையா? அடுத்தவங்க மதுரையா? எல்லாமே தமிழ் என்ற வட்டத்துக்குள்ளேதானே? ஜெரி நீங்க முல்லைமண் சாந்திக்கு எவ்வளவு ஆதங்கத்தோட ... நானும் ஈழ உணர்வாளந்தான் என்று சொன்னிங்க. இப்பமட்டும் எங்களையெல்லாம் தனிமைபடுத்துவது சரியா?

jerry eshananda. said...

மன்னிக்கவும் கருணாகரசு, தங்களின் அக்கறைக்கு நன்றி, மதுரை பேச்சு வழக்கில யாரையாவது ஊர் காரங்களை பார்த்தா "அட நம்ம ஊரா?"என்று கேட்பது போல,ஏதோ என்னை அறியாம பிலோவ்ள வந்திரிச்சு.இனி கவனமாக இருப்பேன்.
தங்களின் அக்கறைக்கு என் நட்பை பரிசாக தருகிறேன். தொடர்வோம்

துபாய் ராஜா said...

//வலை பதிவர்களுக்குள் மகா.. மெகா.. கூட்டணி எல்லாம் இருக்குமோ என மனதில் பட்டதால் வந்த கவிதை//

ஜெரி சார். வலையுலகில் நல்ல மனசுங்க கூட்டணிதான் அதிகம். நாம நாலு வீட்டுக்குப் போனா நம்ம வீட்டுக்கு நாலு பேரு வருவாங்க. அவ்வளவுதான் விஷ்யம்.

jerry eshananda. said...

நானும் இந்த வலை பதிவு குடும்பத்தில் ஒருவன் என்ற முறையில் மிக மகிழ்ச்சி யாக உள்ளேன். துபாய் ராஜாவின் அக்கறைக்கு "என் நட்பை பரிசா தருகிறேன்".

சுந்தர் said...

இதோ வந்துட்டேன்