Monday, August 10, 2009

போதி மர நிழலில் வாதைகளின் கூடாரம்

* * *
போதி மர நிழலில் ..
வாதைகளின் கூடாரம்.

வதைகூட மூலையில் .....
புத்தனின் பல்லில்
கூர் ஏற்றிக்கொண்ட
கொடுங்கருவிகள்,
சபிக்கப்பட்ட கடவுளர்களால்
கைவிட்ட உயிர்களை
சிதைத்து ... சிதைத்து ...
சிவப்பேறி காத்திருக்கிறது.

சுவற்றில் .....
மேய்ப்பன் அற்ற ஆடுகளின்
உயிர் தெறித்த சிதறல்கள்.

தரையில் .....
மீட்க மறுத்த மீட்பர்கள் மீது,
சாபங்களை துப்பியவர்களின்
சதைத்துணுக்குகள்.

சிறகுகளை பிரிந்த
இறகுகளை கட்டிப்போட..
இரும்பு சங்கிலிகள்.
சதையோடும் ..தரையோடும்..
புரண்டளுத்தும் சத்தம்
காதைப்பிளக்கிறது.....

காற்றில் கரைந்து வரும்
சாட்சியமற்ற சடலங்களின் ,
கருகல் நெடியில்
நாசி .. நடுங்க .....

விழி மலங்க .....
காத்திருக்கிறேன்,
என் முறை .. எப்போதென ..

***
"ஜெரி ஈசானந்தா"-மதுரை.


11 comments:

கலையரசன் said...

எப்ப எழுதினா என்ன பாஸ்..?
இப்பவும் வீரியம் இருக்கு!!!

முல்லைமண் said...

///காற்றில் கரைந்து வரும்
சாட்சியமற்ற சடலங்களின் ,
கருகல் நெடியில்
நாசி .. நடுங்க .....

விழி மலங்க .....
காத்திருக்கிறேன்,
என் முறை .. எப்போதென ..///


எங்கள் தோழரும் தோழியரும் இப்படித்தான் தோழனே முட்கம்பிகளின் பின்னால் வதைபடுகிறார்கள்.

சாந்தி

jerry eshananda. said...

நன்றி கலையரசன். தொடர்ந்து வரவும்

jerry eshananda. said...

பிரிய சாந்தி,தங்களின் தொடர்ந்த வாசிப்பும், பின்னூட்டங்களும் மனசுக்கு நிறைவை தருகிறது..என் பக்கத்தை புலம் பெயர் சொந்தங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். நன்றி

Pilot said...

awesome awesome mindblowing..

jerry eshananda. said...

hello pilot,thanks for safe landing on my blog.your lively comment heals my pain.keep safe landing always.

Jawarlal said...

//புத்தனின் பல்லில்
கூர் ஏற்றிக்கொண்ட
கொடுங்கருவிகள்,//

அருமையான வரிகள்! மனசை உலுக்கின கவிதை! பாராட்டுக்கள்..

http://kgjawarlal.wordpress.com

jerry eshananda. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'போதி மர நிழலில் வாதைகளின் கூடாரம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th August 2009 11:55:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/97412

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

jerry eshananda. said...

தமிளிஷ் நிர்வாகத்திற்கு நன்றிகள் பல.

பிரபு . எம் said...

//புத்தனின் பல்லில்
கூர் ஏற்றிக்கொண்ட
கொடுங்கருவிகள்,//

கூர் ஏற்றிய பேனாமுனையால் நெஞ்சைக் குத்தும் பதங்கள்...
வலியை வலியோடு பதிவு செஞ்சிருக்கீங்க மாமா...

உங்களோடு... said...

நெருடலும்,எதுவும் செய்ய முடியாமல் போன இயலாமையும்...