Saturday, August 8, 2009

வதை முகாம் கவிதை.

ஓய்வறியா கொலைக் கருவிகள்
ஒவ்வொன்றும் ஒரு வகை.

விழி தோண்ட ஒன்று
நகம் பிடுங்க ஒன்று,

தலை பிளக்க ஒன்று
முலை அறுக்க ஒன்று

குறி நசுக்க ஒன்று
குதம் துளைக்க ஒன்று

ஒ ..... சிங்கள பேரினவாதமே
வகை வகையாய் ஆயிரம் இருப்பினும்
ஒன்றேனும் கொண்டு வா
என்... ஆன்மாவை தொட்டுவிட.

8 comments:

ஈழநேசன் said...

உங்கள் கவிதை ஈழத்தின் நிலையை எடுத்து சொல்கிறது.

நன்றி

சி.கருணாகரசு said...

உணர்வுள்ளக் கவிதை. அவ்வளவே! வலியை பாரட்டமுடியாது.

முல்லைமண் said...

வதை முகாம்கள் எங்கள் இனத்தை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் முகாம்களாகி வருகின்றன.

எங்கள் இனத்தை நினைத்த உங்கள் கவிதைக்கு நன்றிகள்.

சாந்தி

jerry eshananda. said...

ஈழ நேசனுக்கு நன்றிகள் பல. உங்களை போல நானும் ஈழத்தை நேசிப்பதால்
இது சாத்தியமாயிற்று

jerry eshananda. said...

சக மனிதனின் வலியை, உணர்வை உள்வாங்கினால் கவிதை எளிது.
கடமைக்கு எதற்கு பாராட்டு? பின்னூட்டத்திற்கு நன்றி கருணாகரசு

jerry eshananda. said...

பிரிய சாந்தி. "எங்கள் இனம்" என்று எழுதி என்னை பிரித்து பார்ப்பது வேதனை.
"ஜெரி ஈசானந்தா" என்ற பெயரில் வேற்று கிரக வாசி என்று நினைத்து விட்டீர்களோ? சங்கம் வளர்த்த மதுரையில் வாழும் பச்சை தமிழன் நான்.
தலைவர் பிரபாகரனின் உயிர்சொந்தம், செந்தமிழன் சீமானின் அன்புத்தம்பி நான்,
உண்மைக்கு சாட்சியம் பகரும் அருட்தந்தை "ஜெகத் கஸ்பாரின்" உண்மை சீடன்.
அடுத்த உலக மகா யுத்தம் வரை உயிர் வாழப்போகும் இந்த போலியான ஜனநாயகத்தை தூக்கி பிடிக்கும் பெருவணிக உலக வல்லாதிக்கங்களும்,
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதமும் சேர்ந்து என் இனத்தின் மீது திட்டமிட்ட படுகொலைகளை பாத்துவிட்டு தொலைக்காட்சியில் "மானாட..மயிலாட"
நிகழ்ச்சி பார்க்கும் சராசரி மனிதனாக இருக்க முடியாமல், "எழுத்தாயுதம்" ஏந்தி
நிற்கும் "தனிமனித ராணுவம்" நான். போதுமா?
வலைப்பதிவிற்கு நான் புதியவன் தான், ஆனாலும் என்
கண்முன் என் தொப்புள்கொடி சொந்தம் அழிவதை பார்த்துவிட்டு,வடகம் செய்வது
எப்படி?என்றும், நமீதாவின் பிரமாண்டத்தையும் பற்றி பதிவெழுத நான் ஒன்றும்
"ரத்தம் கெட்டவன்" அல்ல. சக மனிதனின் வலியை, உணர்வை உள்வாங்கி
எளிய கவிதையாய் "வெடிக்க" தெரிந்த இனிய ஜீவன் நான்.போதுமா?
பிரித்தும் பிரிந்தும் நிற்காதீர்கள். ஒன்றாய் இனைந்து வெல்வோம் ஈழத்தை. நன்றி.

தேவன் மாயம் said...

நான் காரைக்குடிதான் நண்பரே!!!
உங்கள் பதிலை என் பதிவில் கண்டேன். நன்றி.
தொடர்புக்கு: 97512 99554.
தேவா.

முல்லைமண் said...

ஜெரி ஈசானந்தா ,
தமிழனாய் நீங்கள் கொண்ட அன்புக்கும் நன்றிகள். (நன்றியென்பதும் பிரிதல்தான் ஆனால் அன்புடன் சொல்லிக்கொள்ளலாம்)

சீமான் யெகத் அடிகளார் என ஈழத்தான் துயரில் உணர்வோடிருக்கும் அத்தனை பேரின் அன்புக்குரிய உங்களை எங்களோடு சேர்த்துக் கைகுலுக்கிக் கொள்கிறேன்.


///தொலைக்காட்சியில் "மானாட..மயிலாட"
நிகழ்ச்சி பார்க்கும் சராசரி மனிதனாக இருக்க முடியாமல், "எழுத்தாயுதம்" ஏந்தி
நிற்கும் "தனிமனித ராணுவம்" நான். போதுமா?///


போதும் தோழனே !
தனிமனித இராணுவம் என நீங்கள் எழுதியதே ஒரு பெரும் இராணுவபலம் போலிருக்கிறது.

தொடர்ந்து குரலிடுங்கள் எங்களோடு.

நன்றி

சாந்தி