Monday, August 3, 2009

"நீதியின் அரசன் -கே.சந்துரு"

ஏதாவது ஒரு பிரச்சினையில் நம் பக்கத்தில் உண்மை,நியாயம்,தர்மம் இருக்கிறது என்று தெரிந்திருந்தும்,சரி,தவறுகள் தெரிந்திருந்தும் ,நமக்கானஉரிமை ,வாய்ப்பு மறுக்கபடுகிறபோது ேலி,அவதூறு செய்யப்படுகிறபோதுபலர் ஏமாற்றத்தில்கரைந்துபோய்விடுகின்றனர்,இன்னும் பலர் விரக்தியில் தன்னை புதைத்துக்கொண்டு,ஒதுங்கி,எதிர்கொள்ள திராணியற்று, இவ்வுலகையும்,மக்களையும் சபித்து விட்டு, சராசரி வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். இன்னும் பலர் வேதனையை மறக்க நினைத்து ஏதாவது பலவீனங்களில் சிக்கி கொள்கின்றனர்.

மிக சிலர்மட்டும் கடைசி வரை போராடி பார்த்து விடுவதென முடிவு செய்து இந்த ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நீதி துறையை நம்பி வருகின்றனர்.இப்படியாக நம்பி வந்தவர்களுக்கு சரியான நியாயம் கிடைத்துவிட்டால் நாம் வாழும் வாழ்க்கை மீதும் இச்சமுகம் மீதும் நம்பிக்கை வருகிறது.

இப்பதிவின் நோக்கம் அண்மைக்காலமாக நீதியரசர் கே. சந்துரு அவர்கள் வழங்கிவரும்"தீர்ப்புகள்"மனிதநேயம்மிகுந்ததாக,எல்லோரும் கைதட்டி வரவேற்க கூடியதாக இருக்கிறது. இனி நீங்களும் அவரது தீர்ப்புகளை கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான். உதாரணமாக திராவிடர் கழகத்திற்கும், பெரியார் திராவிடர் கழகத்திற்கும்,பெரியாரின் உரையை புத்தகம் போட்டு மக்களிடம் கொண்டு செல்வதில் எழுந்த பிரட்சினையில் "பெரியார் -உலக தமிழர் அனைவருக்கும் பொதுச்சொத்து"- தனிஒருவரோ,தனி நிறுவனமோ உரிமை கொள்ளக் கூடாது?என்ற தீர்ப்பாகட்டும், சன் தொலைக்காட்சியில் ஆறாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று முன்மொழியப்பட்டு,மக்களால் பரவலாக பேசப்பட்ட அந்த பிரட்சினையும் அதனோடு தொடர்பு படுத்தி மத்திய அமைச்சர் ராசாவின் பழைய, புதிய வாழ்கையை ஒப்பிட்டு எழுதிய பத்திரிக்கை செய்திக்கு அமைச்சர் ராசா "தடை" வாங்க முற்பட்டபோது,அமைச்சருக்கே பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டு அறிவுரை சொன்ன தீர்ப்பு ஆகட்டும் நீதி அரசர் "கே.சந்துரு" அவர்கள் மக்கள் மனதில் நிற்கிறார்.

என் மனதை தொட்ட தீர்ப்பாக, கடந்த வாரம் சென்னையை சேர்ந்த ஜார்ஜ் கிறிஸ்டோபர் "ஏர் -இந்தியா" நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரும் இவர் மனைவி கிறிஸ்டி சந்திராவும் சேர்ந்து "தான்யா" என்ற பெண் குழந்தையை "தத்து"எடுத்தனர். குழந்தையை தனது மகள் என்ற முறையில் அக்குழந்தைக்கு "ஏர் -இந்தியா" நிறுவனத்தில் வழங்கப்படும் சலுகைகளை கேட்டு விண்ணப்பிக்க ,நிர்வாகமோ "நீங்கள் சட்டபூர்வமாக தத்து எடுக்கவில்லை",எனவே உங்களை குழந்தையின் பாதுகாவலராக தான் கருத முடியும்,என்று தெரிவித்தது.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் சோர்ந்து போய்விடாமல், குழந்தையோடு நீதிமன்ற கதவுகளை தட்ட,நீதியரசர் "கே.சந்த்ரு" இந்த வழக்கை விசாரித்து தனது தீர்ப்பில்,"கிறீஸ்தவ தம்பதியினர் மைனர் குழந்தையை தத்து எடுப்பதற்கு முன்பாக அதற்கு பாது காவலர்களாக இருந்த்துள்ளனர். அதன் பிறகு அந்த குழந்தையை தத்து எடுப்பதற்கான ஞானஸ்தான சடங்க்குகளை செய்துள்ளனர்.இவ்வாறு செய்வதை சட்டபூர்வமானது அல்ல என்று ஒதுக்கி தள்ளுவது அநியாயம்.

இளஞ்சிறார்கள் சட்டப்படி விருப்ப பட்டவர்கள் தத்து எடுக்க வழி உள்ளது.மேலும் ரோமன் கத்தோலிக்க கிறீஸ்தவ சட்டமானது "ஒரு நாட்டில் உள்ள சிவில் சட்டம் அனுமதித்தால் தத்து எடுக்கலாம் என்று கூறுகிறது".இவர்கள் மத சடங்குகள் மூலம் குழந்தையை தத்து எடுத்தது திருச்சபை சட்டப்படி பொருந்தும்.மேலும் தத்து எடுப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல.ஆகவேஇயற்கையாக பெற்று எடுத்த குழந்தைக்கு உரிய எல்லா உரிமையும் இந்த தத்து குழந்தை தான்யாவும் பெற உரிமை உள்ளது.எனவே ஏர்-இந்தியா நிறுவனம் விதி முறைப்படி வழங்க வேண்டிய சலுகைகளை இந்த கிறீஸ்தவ தம்பதியின் தத்து குழந்தைக்கும் வழங்கவேண்டும் என்று மனித நேய தீர்ப்பு வழங்கி தான்யாவின் வாழ்கையை வசந்தமாக்கி இருக்கிறார்.

என் பார்வையில் நீதியரசர் சந்த்ரு ,மக்கள் நல,சமூக நல போராளியாகவே தெரிகிறார். இப்படி யாரோ? எங்கேயோ? யாருக்காகவோ? போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.அதனால் தான் இன்னும் தர்மச்சக்கரம் சுழல்கிறது என நம்புகிறேன். நீங்கள்.........எப்படி?


No comments: