Saturday, August 29, 2009

என்றும் இனிக்கும் ரஜினி பாடல் வீடீயோவுடன்

சொந்தங்களே, வணக்கம்.

வேற ஒண்ணுமில்ல,சும்மா ஒரு சேஞ்சுக்கு ...தான். நம்ம எழதி போடுற, நாலு வரி கவிதையை படிக்க,ஆளுகளை எப்படியெல்லாம்,புடிக்க வேண்டியிருக்கு பார்தீர்களா? வீடீயோவை பார்த்துட்டு ,நம்ம கவிதைகளை படிச்சுட்டு போங்க.

அப்புறம் இந்த பாடலை பத்தி சொல்லலும்னா, எனக்கு எப்பவெல்லாம் சார்ஜ் குறையுதோ, இதை பார்த்து ஏத்திகுவேன்.உங்களுக்கும் ஏதாவது ஏறுதான்னு டெஸ்ட் பண்ணிக்குங்க .

அன்புடன் ஜெரி.

Thursday, August 27, 2009

அதிசயங்களுக்காய் காத்திருக்கிறேன்

வார்த்தைகளற்ற வலிகளிலும்,
மானுடம் மறந்த மொழிகளிலும்
புதையுண்டு போனது
எனக்கான கவிதையும் தான்.


அரச பயங்கரவாதத்தின்
கோரப்பற்களால்
குத்திக்கிழிக்கப்படும்
நரமாமிசமாய் நான்.


ஆனாலும்
காத்திருக்கிறேன்....
சில அதிசயங்களுக்காய்.


ஜெரி ஈசானந்தா-மதுரை.


Monday, August 24, 2009

பால்ய குரூரம்


எப்போதும்...
தன்னுடன் வைத்திருக்கும்
குண்டூசியை,
இமை திறந்து
நடுவில் நிற்கும்
கண் பாவையில்...
மெல்ல செருகி
கசிந்து வரும் துளிகளில் ...
களைத்துப்போகிறான்,
மொட்டுகளை நுகரும்
முடவன்.
"ஜெரி ஈசானந்தா"


Wednesday, August 19, 2009

தமிழக அரசின் உத்தரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

"தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல' என்று உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தீர்ப்பளித்துள்ளன. அதன் அடிப்படையில் தான் "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான் (பழ.நெடுமாறன்), வைகோ உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டோம். நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களின் படங்கள், கொடிகள் மற்றும் சின்னங்களை வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று ஊடகங்களையும் தலைமைச் செயலாளர் மிரட்டியுள்ளார்.

முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதம் அல்ல என்று 3-2-2009-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தை சட்ட விரோதமானது என எச்சரித்து தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும், கட்சிகளையும், ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதல்வர் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

ஈழத் தமிழர் பிரச்னை சுமுகமாக தீர்ந்து விட்டது என்று சில நாள்களுக்கு முன்னாள் கூறிய முதல்வர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார்.. இப்படி முன்னுக்கு பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் ஒடுக்க முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்று நெடுமாறன்
"ஜெரி ஈசானந்தா"-மதுரை.


Monday, August 17, 2009

சாக்கடைப்புழுக்கள்

ஊர்ந்து ... நெளியுது
வளைந்து ...அலையுது,
சாக்கடைப்புழுக்களாக்கப்பட்ட
தமிழ் தேசிய இனம்.

மழையும் சேந்துக்கிட்டு

தாலிய போட்டு அறுக்க ,

தாகம் அடங்கிப்போச்சு...

தவிப்பு தொடங்கிப்போச்சு.

"ஜெரி ஈசானந்தா"-மதுரை.

...Saturday, August 15, 2009

சுதந்திரதினமும் சூத்த கத்தரிக்காயும்

அப்பனுக்கு கடுங்காவல்
ஆத்தாளுக்கு யார்யாரோ காவல்,
நான் இப்ப அம்மாச்சி வீட்டில் வளர்கிறேன்.

அம்மாச்சி ...
இன்னைக்கி சுதந்திர தினம்,
கொடி வாங்க துட்டுதரியா?

சுருக்குப்பை கிளறி
கிழவி கொடுத்த ஒத்த ரூபாய்
நாணயத்தோடு ஓடுகையில்

எலேய் ... கொடிய வாங்கிகிட்டு ..
குழம்புக்கு ஏதாச்சும் கேட்டுபாருயா..
என்று அம்மாட்சி கத்துவது காதில்விழ..
கடைக்கு சென்று கொடிவாங்கி திரும்புகையில்


கடைக்காரர் தந்த ஒசிப்பையை பிரித்து பார்த்தேன்.
எப்பவும் வரும்கழிச்சு போட்ட காய்களோடு

புதுசா ரெண்டு சூத்த ..கத்திரிக்காய்.

Thursday, August 13, 2009

பின்னூட்டமிட வாடகைப்பதிவர் தேவை.

மதுரை ஜெரி ஈசானந்தாவின் "சிலேடையில் ஒரு செல்ல .. சிணுங்கல்".

சமைந்ததும்

இலைக்கு வரும்

அன்னபூரணி நான்...

வீடும்; காடுமென,

மேய்பவருக்கு,

எடுத்துண்ண ...

அக்கறையில்லை.

எனக்கு பின்னூட்டமிட

வாடகைப்பதிவர்

உடனே தேவை.

பின்குறிப்பு: வலை பதிவர்களுக்குள் மகா.. மெகா.. கூட்டணி எல்லாம் இருக்குமோ என மனதில் பட்டதால் வந்த கவிதை இது. பரிந்துரையா? தெரிந்துரையா? ஒன்றும் புரியவில்லை. இந்த சிணுங்கலில் யாராவது வழிந்தாலோ ..யாருக்காவது வலித்தாலோ? நான் பொறுப்பல்ல.Monday, August 10, 2009

போதி மர நிழலில் வாதைகளின் கூடாரம்

* * *
போதி மர நிழலில் ..
வாதைகளின் கூடாரம்.

வதைகூட மூலையில் .....
புத்தனின் பல்லில்
கூர் ஏற்றிக்கொண்ட
கொடுங்கருவிகள்,
சபிக்கப்பட்ட கடவுளர்களால்
கைவிட்ட உயிர்களை
சிதைத்து ... சிதைத்து ...
சிவப்பேறி காத்திருக்கிறது.

சுவற்றில் .....
மேய்ப்பன் அற்ற ஆடுகளின்
உயிர் தெறித்த சிதறல்கள்.

தரையில் .....
மீட்க மறுத்த மீட்பர்கள் மீது,
சாபங்களை துப்பியவர்களின்
சதைத்துணுக்குகள்.

சிறகுகளை பிரிந்த
இறகுகளை கட்டிப்போட..
இரும்பு சங்கிலிகள்.
சதையோடும் ..தரையோடும்..
புரண்டளுத்தும் சத்தம்
காதைப்பிளக்கிறது.....

காற்றில் கரைந்து வரும்
சாட்சியமற்ற சடலங்களின் ,
கருகல் நெடியில்
நாசி .. நடுங்க .....

விழி மலங்க .....
காத்திருக்கிறேன்,
என் முறை .. எப்போதென ..

***
"ஜெரி ஈசானந்தா"-மதுரை.


Saturday, August 8, 2009

வதை முகாம் கவிதை.

ஓய்வறியா கொலைக் கருவிகள்
ஒவ்வொன்றும் ஒரு வகை.

விழி தோண்ட ஒன்று
நகம் பிடுங்க ஒன்று,

தலை பிளக்க ஒன்று
முலை அறுக்க ஒன்று

குறி நசுக்க ஒன்று
குதம் துளைக்க ஒன்று

ஒ ..... சிங்கள பேரினவாதமே
வகை வகையாய் ஆயிரம் இருப்பினும்
ஒன்றேனும் கொண்டு வா
என்... ஆன்மாவை தொட்டுவிட.

Monday, August 3, 2009

"நீதியின் அரசன் -கே.சந்துரு"

ஏதாவது ஒரு பிரச்சினையில் நம் பக்கத்தில் உண்மை,நியாயம்,தர்மம் இருக்கிறது என்று தெரிந்திருந்தும்,சரி,தவறுகள் தெரிந்திருந்தும் ,நமக்கானஉரிமை ,வாய்ப்பு மறுக்கபடுகிறபோது ேலி,அவதூறு செய்யப்படுகிறபோதுபலர் ஏமாற்றத்தில்கரைந்துபோய்விடுகின்றனர்,இன்னும் பலர் விரக்தியில் தன்னை புதைத்துக்கொண்டு,ஒதுங்கி,எதிர்கொள்ள திராணியற்று, இவ்வுலகையும்,மக்களையும் சபித்து விட்டு, சராசரி வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். இன்னும் பலர் வேதனையை மறக்க நினைத்து ஏதாவது பலவீனங்களில் சிக்கி கொள்கின்றனர்.

மிக சிலர்மட்டும் கடைசி வரை போராடி பார்த்து விடுவதென முடிவு செய்து இந்த ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நீதி துறையை நம்பி வருகின்றனர்.இப்படியாக நம்பி வந்தவர்களுக்கு சரியான நியாயம் கிடைத்துவிட்டால் நாம் வாழும் வாழ்க்கை மீதும் இச்சமுகம் மீதும் நம்பிக்கை வருகிறது.

இப்பதிவின் நோக்கம் அண்மைக்காலமாக நீதியரசர் கே. சந்துரு அவர்கள் வழங்கிவரும்"தீர்ப்புகள்"மனிதநேயம்மிகுந்ததாக,எல்லோரும் கைதட்டி வரவேற்க கூடியதாக இருக்கிறது. இனி நீங்களும் அவரது தீர்ப்புகளை கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான். உதாரணமாக திராவிடர் கழகத்திற்கும், பெரியார் திராவிடர் கழகத்திற்கும்,பெரியாரின் உரையை புத்தகம் போட்டு மக்களிடம் கொண்டு செல்வதில் எழுந்த பிரட்சினையில் "பெரியார் -உலக தமிழர் அனைவருக்கும் பொதுச்சொத்து"- தனிஒருவரோ,தனி நிறுவனமோ உரிமை கொள்ளக் கூடாது?என்ற தீர்ப்பாகட்டும், சன் தொலைக்காட்சியில் ஆறாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று முன்மொழியப்பட்டு,மக்களால் பரவலாக பேசப்பட்ட அந்த பிரட்சினையும் அதனோடு தொடர்பு படுத்தி மத்திய அமைச்சர் ராசாவின் பழைய, புதிய வாழ்கையை ஒப்பிட்டு எழுதிய பத்திரிக்கை செய்திக்கு அமைச்சர் ராசா "தடை" வாங்க முற்பட்டபோது,அமைச்சருக்கே பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டு அறிவுரை சொன்ன தீர்ப்பு ஆகட்டும் நீதி அரசர் "கே.சந்துரு" அவர்கள் மக்கள் மனதில் நிற்கிறார்.

என் மனதை தொட்ட தீர்ப்பாக, கடந்த வாரம் சென்னையை சேர்ந்த ஜார்ஜ் கிறிஸ்டோபர் "ஏர் -இந்தியா" நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரும் இவர் மனைவி கிறிஸ்டி சந்திராவும் சேர்ந்து "தான்யா" என்ற பெண் குழந்தையை "தத்து"எடுத்தனர். குழந்தையை தனது மகள் என்ற முறையில் அக்குழந்தைக்கு "ஏர் -இந்தியா" நிறுவனத்தில் வழங்கப்படும் சலுகைகளை கேட்டு விண்ணப்பிக்க ,நிர்வாகமோ "நீங்கள் சட்டபூர்வமாக தத்து எடுக்கவில்லை",எனவே உங்களை குழந்தையின் பாதுகாவலராக தான் கருத முடியும்,என்று தெரிவித்தது.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் சோர்ந்து போய்விடாமல், குழந்தையோடு நீதிமன்ற கதவுகளை தட்ட,நீதியரசர் "கே.சந்த்ரு" இந்த வழக்கை விசாரித்து தனது தீர்ப்பில்,"கிறீஸ்தவ தம்பதியினர் மைனர் குழந்தையை தத்து எடுப்பதற்கு முன்பாக அதற்கு பாது காவலர்களாக இருந்த்துள்ளனர். அதன் பிறகு அந்த குழந்தையை தத்து எடுப்பதற்கான ஞானஸ்தான சடங்க்குகளை செய்துள்ளனர்.இவ்வாறு செய்வதை சட்டபூர்வமானது அல்ல என்று ஒதுக்கி தள்ளுவது அநியாயம்.

இளஞ்சிறார்கள் சட்டப்படி விருப்ப பட்டவர்கள் தத்து எடுக்க வழி உள்ளது.மேலும் ரோமன் கத்தோலிக்க கிறீஸ்தவ சட்டமானது "ஒரு நாட்டில் உள்ள சிவில் சட்டம் அனுமதித்தால் தத்து எடுக்கலாம் என்று கூறுகிறது".இவர்கள் மத சடங்குகள் மூலம் குழந்தையை தத்து எடுத்தது திருச்சபை சட்டப்படி பொருந்தும்.மேலும் தத்து எடுப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல.ஆகவேஇயற்கையாக பெற்று எடுத்த குழந்தைக்கு உரிய எல்லா உரிமையும் இந்த தத்து குழந்தை தான்யாவும் பெற உரிமை உள்ளது.எனவே ஏர்-இந்தியா நிறுவனம் விதி முறைப்படி வழங்க வேண்டிய சலுகைகளை இந்த கிறீஸ்தவ தம்பதியின் தத்து குழந்தைக்கும் வழங்கவேண்டும் என்று மனித நேய தீர்ப்பு வழங்கி தான்யாவின் வாழ்கையை வசந்தமாக்கி இருக்கிறார்.

என் பார்வையில் நீதியரசர் சந்த்ரு ,மக்கள் நல,சமூக நல போராளியாகவே தெரிகிறார். இப்படி யாரோ? எங்கேயோ? யாருக்காகவோ? போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.அதனால் தான் இன்னும் தர்மச்சக்கரம் சுழல்கிறது என நம்புகிறேன். நீங்கள்.........எப்படி?