Wednesday, December 30, 2009

"பிரபலபதிவர் மீது கொலைவெறித்தாக்குதல்."


வலையுலக நண்பர்களே வணக்கம்.இந்த பதிவுலகம் ஏராளமான நண்பர்களை பெற்றுத்தந்திருக்கிறது.அன்பே சிவமாக,வாழ்த்து காட்டிய இயேசு பிரான் பிறந்த திருநாளாம் "கிறிஸ்துமஸ்" தினத்தில் என்னை தொலைபேசியிலும், குறுஞ்செய்தி யிலும் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நான் பெற்ற அன்பையேதிரும்பத்தருகிறேன்.நாளும்அன்பிலதொடர்வோம்.நிற்க....மேற்கண்ட தலைப்பு சும்மா உங்களையெல்லாம் சுண்டி இழுக்கத்தான்...ஆனா உண்மை சம்பவங்க, தலைப்பு வெறும் டிரைலர் தான்...மெய்ன் பிச்சர் கீழ வருதுல்ல.
*******************************************************
கியூபாவிலிருந்து:"யானி மரியா சான்செஸ்".
தனது வலைப்பூவிற்கான முதல் பதிவை எழுதத்தொடங்கும்போது,மரியா [yoani mariya sanchez]நிச்சயமாய் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.வலைப்பூ தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் இப்படி சர்வதேச கவனம் பெற்று,மாதம் பத்து லட்சம் ஹிட்டுகள் பெறுமென்று,[10 lakhs hits per month.] தனது வலைப்பூ 17 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதைப்பற்றி,தனது வலைப்பூவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கே 7 கேள்விகளை கேட்க, உடனே அவரும் பதில் அளிப்பார் என்று..நினைத்துக்கூடபார்க்கவில்லை.மேலும் சர்வதேச செய்தி இதழான Time பத்திரிக்கையும்,CNN- ஊடக நிறுவனமும் சேர்ந்து
உலகெங்கும் எடுத்தாய்ந்த கருத்துக்கணிப்பின் முடிவின் படி "உலகின் செல்வாக்குப்பெற்ற நூறு மனிதர்களுள் தானும் வருவோமென,"மற்றும் உலகின் மிகச்சிறந்த வலைப்பூக்களுள் முதல் 25 வது இடத்தை பிடிப்போமென...தொடர்ந்து இன்று வரை பல சர்வதேச விருதுகளும்,பரிசுகளும், பெறுவோமென கனவு கூட காணவில்லை இவர்.

1.யார் இந்த யானி மரியா சான்செஸ்?
2. அப்படி என்ன செய்து விட்டார் மரியா?

கியூபாவில் உள்ள ஹவானாவில்[ septemper-4th-in 1975]ல் பிறந்த சான்செஸ் ,தனது பட்டப்படிப்பை மொழி இயலிலும்,முதுகலைப்படிப்பை - நவீன லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் கற்றுத்தேர்ந்தார்.பின் 1993- ல் "ரீனால்டோ எஸ்கோபர்"என்பவரை திருமணம் செய்து கொண்டு,1995- ல் ஆண்குழந்தையை பெற்றார்.பின் செப்டெம்பர் 2000- வரை "ஜென்டி நுவா "என்ற "குழந்தைகளுக்கான இலக்கியப்பத்திரிக்கையில் எடிட்டோரியலில் பணிசெய்தார்.மேலும் ஹவானாவிற்கு வருகை தரும் ஜெர்மானிய சுற்றுலா பயணிகளுக்கு ஸ்பானிய மொழி உதவியாளராக, பணிசெய்தார்.அதற்குப்பின் 2002-ல் கியூபாவில் ஏற்பட்ட,கடும் பொருளாதார நெருக்கடியால்,நாடே தவித்தபோது,பிழைப்பதற்கு வேறு வழியின்றி,நாட்டைவிட்டு வெளியேறிய,படித்த இளைஞர்களைபோல, இவரும் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு பஞ்சம் பிழைக்கபோனார்,
அங்கே,இரண்டு ஆண்டுகள் போராடிப்பார்த்து விட்டு,குடும்ப சூழ்நிலை காரணமாக 2004-ல் கியூபா திரும்பினார்.[தனது தாய் நாட்டிற்கு திரும்ப வருவதற்கு,கியூபா நாட்டின் கெடுபிடியான குடியேற்ற விதிகளுடன் போராட வேண்டியிருந்தது.]
.
வந்த கையோடு,2004-ல் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சிறு பத்திரிக்கை ஒன்றைத்தொடங்கி நடத்திவந்தார்.இந்த கால கட்டத்தில் கம்ப்யூட்டர் கல்வியிலும் தேர்ந்துகொண்டார்.சரியாக 3-வருடங்கள் கழித்து ஏப்ரல் -2007-ல்,[Generation Y ] தனக்கான பிரத்யேக வலைப்பூவை தொடங்கினார்.இலங்கையின் ராஜபக்சே சகோதரர்களைப்போல,கியூபா வின் காஸ்ட்ரோ சகோதரர்களின் கம்யூனிச ஆட்சியில் மக்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள்,மனித உரிமை மீறல்கள், இப்படி மக்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளை,தனது வலைப்பூவில் எழுதத்தொடங்கினார்.சும்மா விடுமா? கம்யுனிச அரசாங்கம்,அரசுக்கு எதிராக எழுதுவதை,அடக்கி,ஒடுக்கி வைக்க,மிரட்டிப்பார்த்தது,பணியவில்லை சான்செஸ்,தொடர்ந்து எழுதினார்.....ஆனால் அரசோ மார்ச் மாதம்-2008 ல் ,பொது மக்கள் அவரது வலைத்தளத்தை பார்க்க முடியாதபடி [filter ]தடை செய்துவிட்டது

அடக்குமுறைகளுக்கு பணியாத,மனம்தளராத மரியா,வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களுக்கு e-mail மூலம்,தன் பதிவுகளை அனுப்பி,அவர்களையே போஸ்ட் செய்யவைத்து,வலைப்பூவை மலர வைத்தார்....பிறகென்ன ?உலகங்கும் கொஞ்சம் ,கொஞ்சமாக நறுமணம் வீசத்தொடங்கியது.பொறுமை இழந்த காஸ்ட்ரோ சகோதரர்கள் இனி மரியாவை காலி செய்வதுதான் ஒரே தீர்வென முடிவுசெய்து,ஆளைத்தூக்க கூலிப்படையை ஏவினர். வெளியில் வந்த மரியாவை,கருப்பு நிறக்காரில் இருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள்,வலுக்கட்டாயமாக இழுத்து,உள்ளே திணித்துக்கடத்தி சென்றனர்.என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது,அரைமணிநேரம் கழித்து, காரிலிருந்து சாலையில் உருட்டி விடப்பட்டார்,உடலெங்கும் கன்றிப்போன காயங்களோடு,அழுதபடி வந்தார் yoani sanchez. மக்கள் முன்னால் நடந்த இந்த கொலை வெறித்தாக்குதலை ஆளும் கம்யுனிச அரசோ வாய்திறக்கவில்லை,ஆனால் அமெரிக்க உள்விவகாரத்துறை இதனை கண்டித்தது,அதிபர் பராக் ஒபாமாவோ மரியாவின் வலைப்பூவை புகழ்ந்து தள்ளினார்,கியூபா மக்களின் அன்றாட வாழ்கையின் நிதர்சனமான உண்மைகளை,வெளி உலகத்திற்கு காட்டும் தனித்துவமான சன்னல் உங்களது வலைத்தளம் என்று.

இப்படி சர்வதேச கவனத்தைபெற்ற யானி மரியா சான்செசுக்கு உலகெங்கும் பல விருதுகளும்,பரிசுகளும் கிடைத்த வண்ணம் உள்ளது,குறிப்பாக அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பிய பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை வழங்கிய 5000 டாலர் பரிசோடு,[maria moors cabot prize ] விருதும்,நியூ யார்க் சென்றுவர விமான டிக்கெட்டும் கிடைத்தது, அரசாங்கம் அனுமதிக்கவில்லை,மேலும் ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையான -EL-pais வழங்கிய, ortega Gasset Award,உலக பொருளாதார மாமன்றம் [young global leader honoree- WORLD ECONOMIC FORUM.] வழங்கிய விருது,இப்படி தன்னை பெருமை படுத்தும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு செல்ல கியூபா நாடு தொடர்ந்து தடைவிதித்து வருகிறது.

உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்களுக்கு பெருமையையும்,முக்கியத்துவத்தையும், போராடி பெற்றுத்தந்த யானி மரியா சான்செஸ் அடக்கு முறைகளின் சுவர்களையும் தாண்டி,கம்யூனிச அரச பயங்கர வாதத்திற்கும் அஞ்சாமல் "தனி மனித இராணுவமாக போராடிவருகிறார்.....உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்களின் வாழ்த்து மழையில் நனையும் மரியாவிற்கு உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்தி பெருமையாக பயணிக்கிறேன்.....தொடர்வோம். வணக்கம்..


Wednesday, December 23, 2009

மார்கழி மகா உற்-சவம்.


அடாணாவிலும்
சுப பந்துவராளியிலும்,
உருப்படிகள் பாடிவிட்டு,
காம்போதியில் எடுத்த
உச்சஸ்தாயியை,
சிக்னலில் ...
"அம்மா பசிக்குதே"-என்ற,
மெலிந்த சாரீரம் இடைமறிக்க,

"ஸ்டுபிட் டிரைவர்,
அறிவில்ல உனக்கு,
கிளாச ஏத்து,
எவ்வளவு தைரியமா,
கையை உள்ள நீட்டி,
பிச்சை கேக்குறா பாரு."?என்றதும்,
பச்சை விளக்கெரிந்தது,
பறந்தது கார்,
இறந்தது இசை.

[உரையாடல் கவிதை போட்டிக்காக ---உங்கள் ஜெரி-மதுரை.]


Friday, December 11, 2009

மொழியின் பிரசவம்.

அம்மை அப்பனால்
அமுதூறி ......
ஆதிமூலத்திடை முயங்கி,
ஐந்தால் சுகித்ததை,
ஆறால் கருத்தாங்கி,
பின் ...
சுகமாய்..
நழுவி விழுகிறது,
கவிதைக்குழந்தை.


Wednesday, December 9, 2009

நீ தமிழனா? இதைப்படி முதல்ல.

புலிகளின் 20 விழுக்காட்டை, நூறு விழுக்காடாய் ஊதிப்பெருக்கி பழியை புலிகள் மீது சுமத்துகிற வன்மம் இங்குள்ள சிலருக்குள் ஆணிவேர் போட்டுள்ளது. இலங்கை இராசபக்சேக்களும் இந்திய மன்மோகன்களும் இந்தப் பழியிலிருந்து தப்பி விடுகிறார்கள். இலங்கை அரச பயங்கரவாதம், இந்திய ஏகாதிபத்தியம் இணைந்து எதைப் பேசி, எவ்வழியில் நடக்கிறார்களோ அதையே பேசுவது, அதே வழிநடப்பது என்பதைச் செய்கிறார்கள் இந்த மகானுபாவர்கள். இதற்கான ஆதாரம்- இவர்கள் எதைப் பேசுகிறார்கள் என்பதை விட, எதைப் பேசாமல் விடுகிறார்கள் என்பதில் அடங்கி உள்ளது.

புலிகளின் பாசிஸம் பற்றி மேளம் அடிப்பவர்கள், புலிகளுக்கும் முந்தி - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த சிங்களப் பாசிசம் பற்றி மௌனம் காப்பார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பக்கங்களை விட, ஒளித்துவைக்கும் பக்கங்கள் அநாகரிகமானவை. இவை இவர்களை யாரென வெளிச்சப்படுத்துபவை.

இருபத்தேழாயிரம் பேர் விடுதலைப் புலிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம். ஆள் காட்டிகளின் துணையோடு முகாம்களிலிருந்து அகற்றப்பட்டதும், ஆம் அவர்கள் புலிகளே தான் என்ற குதூகலம் அரசுக்கு. இராணுவத்தால முகாம்களிலிருந்து அகற்றப்பட்டு, தனி சித்திரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட 27ஆயிரம் பேர் பற்றி இவர்கள் பேசியதில்லை. 8 - வயது முதல் 14 வயது வரையுடையோர் நமக்குச் சிறுவர்கள்; இலங்கை இனவெறிக்கு அவர்கள் இளைஞர்கள். பெற்றோர்களிடமிருந்து, சேக்காளிகளிடமிருந்து விசாரணைக்காக பிரிக்கப்பட்ட 14ஆயிரம் சிறுவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எல்லோரும் கேட்டாயிற்று. இவர்கள் மட்டும் கேட்கவில்லை.

கைதுசெய்யப்பட்ட போராளித் தலைவர்கள் - பெயர் வெளியுலகுக்குத் தெரியவந்தது; ஒருவர், இருவராய், குழுக் குழுவாய் அழித்தொழிப்பு செய்ததும் உலகத்துக்குத் தெரியவந்தது. உலகமட்டம் வரை தெரிந்த சேதி - இவர்களுடைய கண்னோட்டத்தில் ஒரு கண்டன சம்பவமாகக்கூட பதிவாகவில்லை. கேட்டால் புலிகள் செய்யவில்லையா என எதிர்க்கேள்வி எழுப்பத் தயார். பதிலாய், அரசபயங்கரவாதம் பழி எடுக்கிறது என்பார்கள்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அ.மார்க்ஸ் அவர்களே?

வதைமுகாம்களில் சாகிறவர்களை, அவரவர் ஊர்களில், நிலத்தில், வீடுகளில் போய் சாகவிடுங்கள் என்று கேட்டதுண்டா? கொன்று போட்டவனின் கரங்களுக்கு பூமாலை சுற்றுவது மட்டுமே செய்கிறவர்களை எந்த மனித உரிமைப் போராளி ரகத்தில் சேர்ப்பது?

இந்தக் கட்டுரை எழுதுகிற நேரத்தில் தினமணி நாளிதழில் (9.9.2009) “இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைக்குக் காரணம்” - எனும் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் - 19.8%

இலங்கை அரசு - 21.33%

இந்திய அரசு - 58.69%

- மக்களின் கருத்துக்கள் முடிவுகளாய் வந்துள்ளன.

தமிழகத்தில் செயல்படும் பலமனித உரிமை அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து ‘வன்னி வதைமுகாம் தமிழர் விடுதலைக்கான இயக்கம்’ என்றொரு அமைப்பை சென்னையில் உருவாக்கியுள்ளன. மூன்று தீர்மானங்கள் அடிப்படையில் செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1. தமிழகத்தில் பரப்புரை செய்து, எழுச்சியை உருவாக்கி அழுத்தம் தருவது.

2. இந்தியாவில் பிற மாநிலமனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு - இந்திய அளவில் விழிப்பை உருவாக்குதல்.

3. இராசபக்சேக்களை போர்க் குற்றவாளிகள் என விசாரித்து தண்டிக்க - ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்வது.

என மூன்று நடைமுறைகளை மேற்கொள்ளும் நேரத்தில், இலங்கையில் இதே முனைப்போடு செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களை அழைத்து இங்கே பேச வைப்பது, அவர்களை நம்முடன் இணைந்து செயல்பட வைப்பது. இந்த குரலில் ஒன்றில் கூட உங்கள் குரல் காணப்படவில்லையே அ.மார்க்ஸ் அவர்களே!

நீங்கள் எப்போதுமே தன்னடையாளத்தை முன்நிறுத்தி தனித்து செயற்படும் நபர். இவர்களோடு இணைய முடியவில்லை என்றால் அவர்கள் எழுப்பும் இந்தக் குரல்களில் ஏதாவது ஒன்றையாவது நீங்கள் எடுத்துக் கொண்ண்டிருக்க வேண்டும். தன்னடையாளத்தை எப்போதுமே பிரதானப்படுத்தி வருகிற நீங்கள் தனியாக மனித உரிமைத் தளத்தை உருவாக்கி உடுக்கடித்திருக்கலாமே! தனித்து செயற்படும் உங்களுடன் இணைந்து செயற்பட்டதால் நாம் அறிந்தவை இவை. இம்மாதிரி அனுபவத் தொகுப்பின் அடிப்படையில் பாவப்பட்ட வன்னிமுகாம் மனிதர்களை மீட்க குரல் கொடுத்திருக்கலாம்.

அம்னெஸ்டி இன்டர்நேசனலின் முன்னாள் இயக்குனரும் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் மனித உரிமைத் தளத்தில் செயல்படுகிற ஒருவர். மனித உரிமைத் தளத்திலேயே நடந்து, இனப்படு கொலைக்கு தீர்வு என்னவாக இருக்கமுடியும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பன்னாட்டுச் சட்டங்களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். எனினும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது, எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்”

(தலித் முரசு ஜூலை 2009 - பேராசிரியர் பாய்ல் நேர்காணல்)

மனித உரிமைத் தளத்தில் நீங்கள் ஒரு நேர்மையான பயணியாக இருந்திருந்தால், பிரான்சிஸ் பாய்ல் வந்தடைந்த அந்தப் புள்ளியில் வந்து சேர்ந்திருப்பீர்கள். நீங்களோ விடுதலைப் புலிகளின் மீதான வன்மத்தை ஒரு இனத்தின் விடுதலைப் போருக்கு எதிராக மாற்றியுள்ளீர்கள்.

நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து மேடை தயார் செய்கிறீர்கள். ஷோபா சக்திகளுடன், சுகன்களுடன் கூட்டாய் சேர்த்துக் கொண்டு விடுதலைப்போராட்டத்திற்கு எதிராய் விதைதூவச் செய்கிறீர்கள்.

“அவர்கள் புலிகளின் அரசியல் தவறுகளைப் பற்றிப் பேசுவதின் வழியே தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மாபெரும் இனப்படுகொலையை சமன்படுத்தி விடக் கூடும்.” என கவிஞர் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல் பணியாற்றும் இந்த இலங்கையர்களை தமிழகம் அழைத்துவந்தீர்கள்.

“இந்தக் காயம், இந்த வீழ்ச்சி - புலிகளின் வீழ்ச்சி அல்ல. வேட்டையாடப்பட்ட சமூகத்தின் வீழ்ச்சியின் சரித்திரம் இது” - மனுஷ்யபுத்திரன் போல ஆவேசம் கொள்ள முடியாத நீங்கள் எதிர் நிலையில் நின்று கொண்டாடுகிறவர்களுக்கு தளம் உண்டாக்கித் தருவீர்கள்.

வீரச் சாவுகளுக்கு எதிர் நிலையில் நின்று மரணத்தைக் கொண்டாடும் மனம் பாசிஸ்டுகளுக்கு மட்டுமே வாய்க்கும். ஒரு இலட்சம் மனிதர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட நிகழ்வு - ஒரு இனத்தின் இரத்தசாட்சியமாக உணரப்படாமல், துயரங்களின் சாம்பலில் கும்மியடித்துக் கொண்டாடும் மனத் துணிவு இனவெறியர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்குக் கிட்டும்?

II

கடந்த ஆறேழு மாதங்களாக ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் பரவலாய் ஏற்பட்ட எந்த எழுச்சிகளிலும் அ.மார்க்ஸின் முகம் இல்லை. இனப்படுகொலை முற்றுப் பெற்று, ஈழப்பிரதேசம் அவலத்தின் உச்சத்தில் நிற்கிறபோதும் இவருடைய குரல் இல்லை. ஆனால் மரணவாசனை உலக நாசியைப் புடைக்கச் செய்யும் சூழலிலும், விடுதலைப் புலிகள் மீதான அ.மார்க்ஸின் வன்மம் தீர்ந்த பாடில்லை.

இவருக்கும், இவரைப் போல் குரல் தரும் ஷோபாசக்தி, சுகன், சுசீந்திரன், புதிதாய் இணைந்து கொண்ட ஆதவன் தீட்சண்யா வகையறாக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. பாசிசம் இவர்களை உள்வாங்கி அங்கீகரித்துக் கொண்டதின் இன்னொரு பக்கம்தான், சிங்களப் பாசிசத்தை நேரடியாய் கண்டிக்காத, அதற்கென அணிதிரளாமல் இருக்கிற இவர்களின் செயல்.

லசங்த விக்கிரமதுங்கே - என்ற உலகறிந்த ஊடகவியலாளர் படுகொலை, யாரால், எதற்காக நடத்தப்பட்டது என்பதை உலகறியும். தன் கொலைக்கு முன் அவர் எழுதிவைத்துச் சென்ற மரண சாசனத்தையும் உலகறியும். அந்தக் கொலையைக் கூட புலிகள் செய்திருப்பதாக சந்தேகப்படுகிறார் சுகன். ‘வாழ்க நீ எம்மான்’ என கருணா அம்மானுக்கு வாழ்த்துப் பா இசைக்கிறார். லண்டன் புகழ் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் ஜெர்மனியின் சுசீந்திரன் வரை பங்கேற்ற திருவனந்தபுரத்தில் ஒரு திங்கள் முன்பு நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இலங்கை அரசாங்கச் செலவு 60 இலட்சம் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்த புலம்பெயர் அறிவு ஜீவிகளை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியத்துக்கு எதிராய் பரப்புரை செய்ய அழைக்கிறது. வரிந்து கட்டிக்கொண்டு இவர்கள் முதலில் உள்ளேன் ஐயா சொல்கிறார்கள். தமிழ்த் தேசியம், இஸ்லாமியத் தேசியம் எல்லாவற்றுக்குமான அச்சுறுத்தலாக சிங்களத் தேசியம் மாறியுள்ளது அது தேசியத்திலிருந்து பாசிசமாக உருக்கொண்டுள்ளது. நாமெல்லாம் இலங்கையர்கள் என்னும் மஹிந்தராசபக்சேயின் அழைப்பு - பிற இனங்களை மயிருக்குச் சமமாக கருதும் குரல்தான். இலங்கையர் எனும் ஒற்றை அடையாளம் போதுமென்றால் மதம் சார்ந்த குழும அடையாளத்துக்கு, வட்டார அடையாளத்துக்கு (மலையகம்), தலித் அடையாளத்துக்கு எந்த வித அவசியமும் இல்லை. தமிழ்த் தேசியம் பேசியவர்களைக் கொன்றொழித்த சிங்கள தேசியம், பிற அடையாளங்களையும் கொன்றொழிக்கும். பிற தேசியங்களை இலங்கையில் ஒரு புள்ளி கூட இல்லாமல் அழிப்பதற்குரியவன் யார்? இன்றைய மஹிந்தாதான். இவனை விட உயரம் கூடியவர்களாக எதிர்கால மஹிந்தாக்கள் வருவார்கள். மக்களை சனநாயகத்துக்கு எதிரானவர்களாய் பயங்கரவாதியாய் கருதும் உலக அரசுகள், தமிழ் மக்களையே பயங்கரவாதிகளாய்க் காணுகிற இலங்கைக்கு துணையாகின.

அனைத்துத் தேசியங்களையும் அடக்கும் சிங்களத் தேசியத்தைக் கண்டிக்கும் அவசியத்தைக் கருதாமல் பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் புலிகள் என்று பேச வைப்பது தனக்கிருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தக் கையாளுகிற உத்தியாக மட்டுமே மிஞ்சும். சிராஜ் மசூரின் கணிப்பில் விடுதலைப்புலிகள் மட்டுமே ஆயுதக் குழுக்களாம். இலங்கையிலிருந்து இங்கு வந்து, இலங்கையின் தூதுவராய் எதை வேண்டுமானாலும் பேசலாம்; கேள்விகேட்க நாதியில்லை எனத் துணிந்து விட்டார் போல.

புதுவிசை இதழில் (2009 - ஜூலை-செப்டம்பர்) இலங்கையில் ‘இஸ்லாமிய ஜிகாத் ஆபத்து என்று பாலசந்திரன் போன்றோர் எழுதுகிறார்களே என்ற கேள்விக்கு “புலிகளுக்கு பிந்திய சூழலை ‘இஸ்லாமிய ஜிகாத்’ என்ற போலிக் கண்டுபிடிப்பின் மூலம் மாற்றீடு செய்யலாம் என சில சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன... தனது மனஅரிப்புகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறான புதிய அபாயங்களை இவர்கள் கட்டமைக்கின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

இல்லாத ஒன்றைக் கட்டமைப்பது அல்ல இருக்கிற ஒன்றைத்தான் பாலசந்திரன் போன்றோர் எடுத்து வைக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராய் அவர்களை ஒழிக்கவும் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அரட்டி ஒடுக்கவும் இலங்கை ராஜதந்திரிகளால் பாகிஸ்தானிய மூளையால் உருவாக்கப்பட்ட ஜிகாத் அமைப்பினர் ஆயுததாரிகளாய் வலம் வந்தார்கள். ஆயுதங்களால் பேசினார்கள். அரசாங்கத்தின் ஆசியில் ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கியாகி விட்டது. இன்று ஜிகாத் அமைப்பிடமிருந்து ஆயுதங்களைக் களைவது எப்படி என்பது அரசபயங்கரவாதத்துக்கே பெரும் சிக்கலாகியுள்ளது. ஜிகாத் அமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அது முடிந்துவிட்டது (புலிகள் அழிப்பு) இனி ஜிகாத் அமைப்பினர் ஆயுதக் குழுவாக செயல்படாமல், ஒரு மத அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று கெஞ்சும் வேண்டுகோள் அரசிடமிருந்து வெளியாகி ஊடகங்களிலும் இடம் பிடித்தது. இத்தனைக்குப் பிறகும், யதார்த்தத்தை மறைக்கிற. அறிவுஜீவிப் பணியை சிராஜ் மசூர் தன்தோள் மேல் எடுத்துப் போட்டுக் கொள்கிறார்.

“போர் உக்கிரமாக நடைபெற்ற சூழல் ஆயுத சூனிய சூழலாக இருக்குமென்று யாரும் கனவு காணத் தேவையில்லை” என்று ஆயுதக் குழுக்கள் நீடிப்பதற்கான நியாயத்தை முன்வைக்கிறபோது, இதற்குமுன் ஒரு பொய்யை முன்னுரைத்தார் என்பது வெளிப்பட்டுப் போகிறது. இதையேதான் நாங்களும் பேசுகிறோம். ஒடுக்குமுறை எல்லை கடந்து விட்டபோது, ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்வினைகள் அழகானவையாக இருக்க முடியாது என இதையே தான் நாங்களும் முன்வைக்கிறோம்.

நாங்கள் மட்டுமே இதைப் பேசவில்லை. இந்தியாவிலுள்ள தாரிக் அலி போன்ற இடது சாரிகள், தீர்க்கமாய் இதைப் பரிந்துரைக்கிறார்கள். “நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்கையில், உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது” என்கிறார் தாரிக் அலி.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் நடத்தும் தற்கொலைத் தாக்குதல்கள், ஈராக்கியர் நடத்தும் கார்க் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த வாசகம் பொருந்துமானால் விடுதலைப் புலிகளின் எதிர்வினைக்கு ஏன் பொருந்தாது?

III

அ.மார்க்ஸின் புதுவிசை (ஜூலை - செப்டம்பர் - 2009) கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, சில விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாய்க்கு வந்தபடி பேசுவது போலவே கைக்கு வந்தபடி எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் அது. புதுவிசை இதழ் சனநாயகத்தின் மிகப் பெரிய திறந்த வெளி என கருதப்படுவதால், புதுவிசையின் சனநாயக வெளியைச் சோதிப்பதற்காக இக்கட்டுரையை புதுவிசைக்கும் அனுப்பியுள்ளேன்.

புதுவிசையில் அ.மார்க்ஸ் எழுதுகிறார்: தமிழ் அறிவு ஜீவிகள் மத்தியில் மரண அமைதி நிலவுகிறதாம்; அதையும் வேறொருவர் சொல்லி வருத்தப்பட்டாராம். பொய் பேசுகையில் மற்றொருவரை துணைக்கழைத்துக் கொள்வது அ.மார்க்ஸின் வழக்கம். தனது குடும்ப அட்டையைத் அரசிடம் திருப்பிக் கொடுக்கப் போவதாக கன்னியாகுமரியிலிருந்து ஒரு எழுத்தாளர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாராம். எழுத்தாள நண்பர் பெயரைத் துணிவாய்க் குறிப்பிட வேண்டியது தானே? தான் முன்வைக்க வருகிற கருத்துக்கு இட்டுக்கட்டல்களை முன்வைப்பது அ.மார்க்ஸின் சிந்தனைக் கலாச்சாரத்தின் ஒரு கூறு.

அலட்சியப்படுத்தப்பட்ட சில பிரச்னைகளை முன்னிறுத்திப் போராடும் மக்கள் - குறிப்பான போராட்ட வடிவமாக ரேஷன் அட்டைகளை அரசிடம் திருப்பிக் கொடுக்கின்றனர். அவர்களது ஒற்றுமையை எடுத்துரைக்கும் புதுமையான, யுக்தியான போராட்ட முறை இது. தான் சொல்லவருவதற்கு வலுச் சேர்க்க அதையும் கொச்சைப்படுத்துகிறார்.

எழுத்தாளர்களின் ஆறுமாதகால பருவ நிலையை கணிக்கிற வானிலை அதிகாரியாக தன்னைத் தீர்மானித்துக் கொண்டார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிக் கணிப்பது - இவருக்கு அல்வா சாப்படுவது போல. கணிப்பு அல்ல, விமர்சனமும் அல்ல, அவதூறுகளின் மட்டத்துக்கே அது மிஞ்சும்.

அ.மார்க்ஸின் பெரும்பாலான ஒதுக்குதல்கள், அரவணைப்புகள் பிரச்னையின் தாரதம்மியத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. தனி மனிதர்கள் மீதான அவருடைய வெளிப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் மீது எழுபவை. பிறரோடு கொள்ளும் உறவையும் இந்த வகையிலேயே அமைத்துக் கொள்வார். நேற்றிருந்தார் இன்றில்லை, இன்றிருப்பார் நாளை இல்லை - இவருடைய அறிவு ஜீவிப் பயணிப்பில்.

புதுவிசை கட்டுரையில், தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் மீது தனக்குப் பெரிய மரியாதை கிடையாது எனத் தெரிவிக்கிறார். இவர் எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதைப் பொறுத்து தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் தமது பணியை முன்னெடுக்கவில்லை. தமக்கு ஒரு சமுகக் கடமையுள்ளது எனத் தீர்மானித்து போரை நிறுத்து என ஒருநாள் உண்ணா நிலைப் போராட்டத்தையும் பின்னர் தொடர்ச்சியான பணிகளையும் மேற்கொண்டனர். போர் என்ற பெயரில் நிறைவேறிய இனப்படுகொலையைக் கண்டித்து இருமாதங்கள் முன்பு பேரணி நடத்தினர். அவர்களுடன் இணைந்திருக்க வேண்டும். ஈழப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுடைய இவரால் அவர்களுடன் இணைய முடியவில்லை. ஈழப் போராட்டம் பற்றி, ஈழவிடுதலைப் போராளிகள் பற்றி இவருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது தான் அதற்கு ஆதரவானவர்கள் மீதும் எந்த மரியாதையும் கிடையாது என்பதாக வெளிப்பட்டிருக்கிறது.

நக்கீரன், ஜீ.வி, ரிப்போர்ட்டர் போன்ற வாரஇதழ்கள் வியாபாரப் போட்டியில் கடந்த ஆறுமாதங்களாக புலிகளைப் பற்றிய செய்திகளை - ஆதாரப்பூர்வமற்ற செய்திகளை வெளியிட்டன என்கிறார் அ.மார்க்ஸ். வார இதழ்களுக்கிடையேயான வியாபாரப் போட்டியை நாங்கள் அறிவோம். நக்கீரன் - வெளிப்படையாக புலிகளை வைத்து - வியாபாரம் பண்ணுவதையும் அறிவோம். அதனுடைய ஒற்றைத் தனத்தோடு எல்லா இதழ்களையும் சமனப்படுத்தி விடக்கூடாது.

தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், புலி ஆதரவு மாவோயிசம் பேசும் இளைஞர்கள் நாளிதழ்களைக் கூடத் தேடிப் படிப்பதில்லை என்கிறார். தமிழ் நாட்டின் நாளிதழ்கள் மட்டுமல்ல இந்திய நாளிதழ்களும் இராசபக்சேயிசம் பேசின; பரப்பின. இலங்கை அரசும் இந்திய ஏகாதிபத்திய அரசும் என்ன கொடுக்கிறரர்களோ அந்தச் செய்திகளை அப்படியே ‘ஈயடிச்சாங் காப்பி’ பண்னின. எந்த நாளிதழ்களைத் தேடிப் படிக்கச் சொல்கிறார்? தினமலரையா? தினமணியையா? தி ஹிந்துவா, இன்டியன் எக்ஸ்பிரஸ்ஸா? ஈழப்பிரச்னை பற்றி துளி அக்கறையும் காட்டாத இந்திய நாளிதழ்களில் எதைத் தேடி இளைஞர்களை வாசிக்கச் சொல்கிறார்?

அதே பொழுதில் வார இதழ்கள் ஓரளவு சுயத்தன்மையுடன் அவர்களே தேடி, விசாரித்து எடுத்த ஈழச் செய்திகளைத் தந்தனர். அதனாலேயே கடந்த ஐந்தாறு மாதங்களில் அவைகளின் விற்பனை பெருகின. களப்பிர தேசத்திலிருந்து தமிழகத்தை ஏதோ ஒருவகையில் வந்து சேரும் சிலரையும் பலரையும் சந்தித்து செய்திகள் சேகரித்து, அலசி, பெருமுயற்சிக்குப் பின் வெளியிட்ட வார இதழ்ககளின் இந்த நடைமுறைக்கும், இலங்கை இந்தியா நாடுகளின் ஊதுகுழல்களாகச் செயற்பட்ட நாளிதழ்களின் நடைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படையாகக் காணமுடியும். வாரஇதழ்கள் வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள் புலிகளுக்கு ஆதரவாகவும் அந்த மக்கள் பக்கம் இருந்தன என்பதும் இயல்பானது. அதன் காரணமாகவே அ.மார்க்ஸுக்கு ஏற்படுகிற ஆத்திரமும் இயல்பானது. இலங்கைப் பாசிசத்தின் தூண்களாய் செயற்பட்ட இந்திய நாளிதழ்களை தேடிப் படியுங்கள் என்று அவர் சொல்வது ஒன்றை உறுதிப்படுத்துகிறது. அவருடைய இந்தப் பார்வை அவரை நோக்கியே விரல் நீட்டுகிறது. “நீர் ஒரு விடுதலை எதிர்ப்பாளர்”

அவர் குற்றம் சுமத்துகிற தமிழ்த் தேசியர்கள், புலிகளின் முகவர்கள் இதையே வேறொரு மொழியில் சொல்வார்கள். “நீரொரு தமிழினப் பகைவர்”

இதன் பொருள் வேறொன்றுமில்லை. மக்களின் எதிரி என்பதே.

கிறித்துவப் பாதிரிமார்கள், போதகர்கள், கன்னியர் எல்லோரும் இணைந்து ஈழத்தமிர்களுக்கு ஆதரவாக இருமாதங்களுக்கு முன் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தியபோது தொடங்கிவைக்க இவரை அழைத்தார்களாம். அழைத்திருக்கக் கூடாது; அழைத்தார்கள். இவரும் போயிருக்கக் கூடாது, போனார். ஏனெனில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் அது. ஈழத்தமிழருக்கு ஆதரவாய் போரை நிறுத்து என்ற முழக்கம் விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவானது தானே என்று அவர்களும் நினைத்துப் பார்க்கவில்லை, இவரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கிறபோது மட்டுமே எந்த மேடையையும் பயன்படுத்திக் கொள்வது என்ற சந்தர்ப்பவாதம் இல்லாமல் போகும்.

முதிய வயதில் முதல்வர் கருணநிதி ஓய்வு பெறுவது நல்லது என்ற கருத்தை பரிக்ஷா ஞாநி முன்வைத்தார். இன்ஸ்டன்ட் காப்பி என்பது போல் ஞாநியை சாடுவதற்காகவே உடனே ஒரு புதிய அமைப்பை உருவாக்கி அதன் பேரில் வாணிமகாலில் ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்தார்கள். அதில் ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர்), இமயம், அ.மார்க்ஸ் போன்றோர் பங்கேற்றார்கள். என்னையும் பங்கேற்குமாறு தொலைபேசியில் கேட்டார்கள். ‘ஞாநி எழுதிய அந்தக் குறிப்பிட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அதனால் கலந்து கொள்ள இயலாது’ என மறுத்தேன். அ.மார்க்ஸ் கலந்த கொள்கின்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளித்தது. தொலைபேசியில் அவரிடம் கேட்டபோது, “என்ன இருந்தாலும் ஞாநிக்குள் ஒரு பார்ப்பன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. கலைஞரைப் பற்றி விமரிசிக்கிறபோது எதிர்வினையாற்றுகிற இவர்கள் பெரியாரை காமுகன், பெண் விடுதலைக்கு எதிரானவர் என்று பழிசுமத்திய போது எங்கே போய் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பப் போகிறேன்” என்றார். அவ்வாறு பேசியதாகவும் நான் கேள்விப்பட்டேன். கலைஞரைத் தாக்கி எழுதியதைக் கண்டிப்பது மட்டுமே ஏற்பாட்டாளர்களின் நோக்கம். இதை தாண்டி வேறொரு பிரச்னையை அங்கு பேசுவது விவாதிப்பது அவர்களின் நோக்கம் அல்ல. அதனால் அவர்கள் அதற்குப் பதிலளிக்கவும் இல்லை. இதிலிருந்து கூட்ட ஏற்பாட்டாளர்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவதை விட, எந்த அரங்கையும் பயன்படுத்தி தனது அறிவாளி மேன்மையை நிறுவுகிறவர் இவர் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

புலிகள் எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டும் உறுதியாய் நின்றிருந்தால் கூட கிறித்துவ பாதிரியார்கள், கன்னியர் நடத்திய ஈழ ஆதரவு கூட்டத்துக்கு அ.மார்க்ஸ் போயிருக்கக் கூடாது. அந்தக் கூட்டத்தில் பேராசிரியர் சரசுவதி பேசிய பேச்சில் சென்னையில் நந்தம்பாக்கத்தில் பாதுகாப்புத் துறை மருத்துவனையில் இலங்கையில் படுகாயமுற்ற 122 இந்திய இராணுவ வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தான் கூறும் செய்திகள் ஆதாரபூர்வமானவை என வலியுறுத்தியதாகவும் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் வரும் கேள்வி தான் மிகப்பெரிய முரண் நகைச்சுவை.

“பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தாங்கள் ஏன் அந்த மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றைச் செய்ய முனையவில்லை?” என்று அ.மார்க்ஸ் எழுப்புகிற கேள்விதான் அது. என்ன அபத்தம்! பெரியார் தி.க.வினர் ஈழ ஆதரவுப் போராட்டங்களை மட்டுமே நடத்தவில்லை. இந்திய அரசுக்கு எதிராக – விமான நிலையத்தை முற்றுகையிடுதல், மத்திய அரசின் வருமான வரி அலுவலகங்களை இழுத்துப் பூட்டுதல், ஆயுதங்களுடன் வந்த இராணுவ லாரிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தல் என அவர்கள் தொடர்ந்து போராடித்தான் வருகின்றனர். அ.மார்க்ஸ் போல் அறிக்கை விட்டு காணாமல் போகிறவர்கள் அல்ல.

அ.மார்க்ஸ் பல்வேறு பிரச்னைகளுக்காக உண்மை அறியும் குழு அமைப்பார். விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார். மனித உரிமைத்தளத்தில் அதன்பின் மூச்சுக் காட்ட மாட்டார். ஏப்ரல் 2008-ல், கருத்துரிமைக்கான மனித உரிமைகளின் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் அமைப்பாளர் அ.மார்க்ஸ்.

“மனித உரிமைக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் போக்கை எதிர்க்கும் விதமாக இனி கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, பொதுக் கூட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் அதற்கு போலீஸ் அனுமதி வாங்கமாட்டோம். என்ன செய்கிறது இந்த அரசு என்பதையும் பார்த்து விடுகிறோம்” என்று அரசுக்கு அறைகூவல் விடுத்தார். பாராட்டுக்குரியது. ஆனால் அரசு தொடர்ந்து கருத்துரிமைப் பறிப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பின் எத்தனை நிகழ்வுகளை அ.மார்க்ஸ் அனுமதியில்லாமல் நடத்தினார்? உண்மையில் தமிழ்தேசிய உணர்வாளர்கள் தான் அனுமதியின்றியும், தடையை மீறியும் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அ.மார்க்ஸ் உருவாக்கிய எத்னையோ அமைப்புக்கள் எந்த செயற்பாடுகளும் அற்று முடங்கிக் கிடக்கின்றன. அமைப்பு உருவாக்கியதாக அறிக்கை வரும். அதன் பின் அனாதையாய் அந்த அமைப்பு விடப்படும். அறிக்கை விடுதல் - அதன் பின் செயலற்ற தன்மை - இது தான் அ.மார்க்ஸ். எந்தப் போராட்ட களத்திலும் தெண்பட மாட்டார். அறிக்கை விட்டுக் கொண்டே இருப்பது ஒரு செயல் தன்மையாக ஆகிவிடுமல்லவா? இவர் மட்டுமல்ல, இவருடைய சீடர்கள் எனப்படும் ஷோபா சக்தி போன்ற ஆட்களும் அறிக்கை திலகங்கள் என்று பெயரெடுத்தவர்கள் தாம். இவர்கள்தான் தொடர்ச்சியாக களத்தில் நிற்கும் பெரியார் தி.க. மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது சேற்றை வாரியிறைக்க முற்படுகிறார்கள்.

அ.மார்க்ஸின் கற்றல் நேர்மை, சிந்திப்பு நேர்மை, செயல்பாட்டு நேர்மை ஆகியவை குறித்த கேள்விகள் முக்கியமானவை. கற்றதும் பெற்றதுமான கருத்து எந்தச் சூழலுக்கு சொல்லப்பட்டதோ அதில் இருந்து பிரித்து வேறொன்றிற்குப் பொருத்தி விடுவதை ஒரு புதிய கண்டுபிடிப்புப் போல செய்வது அதன் பயன்பாட்டு நேர்மை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. புதிதாக கற்றுப் பெற்ற ஒன்றை உடனே தன் சுயசிந்தனையிலிருந்து பெற்றது போல் இறக்கி வைத்து விடுவது சிலருக்கு கைவந்த கலை. எந்த விசயத்திலும் தானே அத்தாரிட்டி என்ற அறிவின் கர்வம் உச்சமாக வெளிப்படும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை சார்பில் நடைபெற்ற அரங்கில் ருசியாவில் நிலவிய சர்வாதிகாரத்திற்கு வித்திட்டவர் லெனின் என்று பேசினார். அந்த இடத்திலேயே அவருடைய கருத்துக்கு எதிர் வினையாற்றியிருக்க முடியும். நிகழ்ச்சியின் தன்மை குறித்தும், அரங்க நாகரிகம் கருதியும் அமைதி காத்தோம் - அதற்கு முன்னான தருக்கம் எதுவுமின்றி, திடு, திப்பென்று ஒன்றை கையெறி குண்டாய் வீசி விட்டு போய்கொண்டிருக்கிற ஆத்மா அவர். அதன் பின்னான உரையாடல், விவாதம், விளக்கம் எதற்குமே இடமில்லை.

உலகமயமாதல் இன்றைய காலத்தின் அவசியம்; அந்த ஜோதியில் கலப்பதற்கு அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என வக்காலத்து வாங்குவார். தலித்துகள் ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம் என்பார். தலித்துகளின் வாழ்வு நிலை பூமிக்கு அடியில் இருக்கிற போது, ஆரம்பக் கல்வி கூட வாய்க்கப் பெறாமல் அவலம் நிலவுகிற போது தலித்தோ அடித்தட்டு மக்களோ ஆங்கிலத்தை கைப்பற்றுவது எங்ஙனம் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அதற்கான எந்தப் பதிலும் அவருடைய விவாதத்தில் இருக்காது.

இறுதியாக ஒன்றைச் சொல்லி வைப்போம். சிதிலங்களில் இருந்து மேலெழுந்து வருவது பற்றி சமூக விஞ்ஞானி சிந்திப்பான். அவ்வாறு இல்லாமல் மாட்டுப்புண்னைக் கொத்திக் கொண்டேயிருக்கும் காக்கை போல் இருப்பவன் குதர்க்க விஞ்ஞானி.

“மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சைத் தத்துவங்கள், புரட்சிகர தத்துவங்கள், மனித நேயக் கோட்பாடுகள், உரிமைச் சாசனங்கள் இவை எவையாலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சிங்களத்தின் முன்னே காந்திய அகிம்சை தோற்றுள்ளது. மார்க்சியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது. சர்வதேச நெறிமுறைச் சட்டங்கள் அமைதியாகி உள்ளன. இந்நிலைமைகள் இதுவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமூகக் கோட்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்யக் கோருகிறது. அவற்றில் நமது தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாகக் கைவிட வேண்டும். தேவையான புதிய எதார்த்தமான கோட்பாடுகளை நாம் தயக்கமின்றி ஏற்க வேண்டும். இவற்றிலிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தின் தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வகுத்தாக வேண்டும்.”

ஈழம் - விடுதலைக்கான இறுதிக் கணக்கீடு - என்ற கட்டுரையில் சிதிலங்களில் இருந்து மேலெழும் பார்வையில் பிரபா எழுதிய அறிவாந்திரமான சிந்திப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதுதான் புதிய சிந்தனையின் அடையாளம். வாய் புளித்ததோ கைபுளித்ததோ என்று விமர்சனம் என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொண்டிருப்பதை விட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்குரிய சிந்தனைகளை முன்வைப்பது மட்டுமே சமூகவிஞ்ஞானம்.

- சூரியதீபன் ( jpirakasam@gmail.com )

Bookmark and Share
நன்றி :கீற்று. இணைய இதழ்


Monday, December 7, 2009

கழிசடைகளின் கடைசிப் புகலிடம்

மறைந்த முதல்வர் எம்.ஜி.யார் ஆட்சி காலத்தில் அவரது நல்லாசியுடன் சில பல வேலைகளை செய்து,தனது மீனாட்சி மிஷன் மருத்துவமனை ட்ரஸ்டுக்கு,வெளிநாட்டு நன்கொடைகளை பெற்று,பெரிய மருத்துவமனையை உருவாக்கியவர் தான் டாக்டர் சேதுராமன்.பணம் இருக்கும் இடத்தில் பிரட்சினைகளும் தேடி வருவதை சமாளிக்க,அவருக்கு அதிகார பீடங்களின் அருளாசி தேவைப்பட்டது.

எந்த ஆட்சி வந்தாலும்,அவர்களோடு ஒட்டிக்கொண்டு,அவர்களுக்கு காவடி தூக்கியே களைத்துப்போய்,நாம ஏன் சொந்தமாக கட்சி தொடங்கக்கூடாது? என யோசித்தார்.தென்மாவட்ட தேவரின ஓட்டு வங்கிகளை குறிவைத்து,
"மூவேந்தர் முன்னேற்றக்கழகம்"என்ற கட்சியை தொடங்கினார்.பணபலமும் ஆள்பலமும் சேர,கூடவே கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தும் சேர்ந்துகொள்ள அடுத்த ரவுண்டு ஆரம்ப மானது.

தொகுதிக்குஐநூறுஓட்டுதேறினாலேபெரியவிஷயம்.எப்படியோ தேர்தலுக்கு தேர்தல் வேட்டியையும்,சேலையையும் மாற்றி மாற்றி துவைக்கும் கம்யூனிஸ்டுகளை போல,இவரும் துவைப்பதில் ஸ்பெசலிஸ்ட்.

இப்போது லேட்டஸ்ட் காமெடி என்னவென்றால்?விபச்சார வழக்கில் இரண்டு தடவை கைதானவரும்,நிழல் உலக விபச்சார தாதாக்கும்பல்களோடு தொடர்பு உள்ளவருமான நடிகை புவனேஸ்வரி யை சேர்த்துகொண்டதுதான்.
[அட..கட்சியிலதாங்க.] அவருக்கு "மாநில மகளீரணி செயலாளர் " பதவி கொடுத்து,அடுத்த தேர்தலில் M.LA. சீட்டும்
தந்து ,கூட்டணி ஆட்சி என்றால்,கலவி அமைச்சர்[ சாரிங்க...புள்ளி வைக்க மறந்துட்டேன்.]கல்வி அமைச்சர் பதவியும்
வாங்கித்தருவதாகவும் வாக்கு கொடுத்து இருக்கிறாராம் டாக்டர் சேதுராமன்.

வாழ்க ஜனநாயகம், வளர்க பணநாயகம்.

ஆனால் ஒன்று, மிஸ்டர் சேதுராமன், நீங்கள் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள், அது உங்கள் தனிப்பட்ட விவாகம்,சாரி விவகாரம்.ஆனால் மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து வருகிறதே உங்களது "மகா சேமம்."என்ற மகளிர் சுய உதவி குழுக்களான தொண்டு நிறுவனம், அதில் மட்டும் அம்மிணியை மூக்கை நுழைக்க விட்டு விடாதீர்கள். அப்புறம் மகா சேமம் ....மகா ஷேமாகி ...."பப்பி ஷேமாகி விடும்."

கிஸ்கி: "அம்மிணிக்காக,அவசரப்பட்டு கட்சியில சேர்ந்து,அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது."


Friday, December 4, 2009

ஏக்கம்.

சாருக்கு ஏர் டெல்,

மேடத்துக்கு வோடபோன்,

பெரியண்ணாவுக்கு ரிலையன்ஸ்,

அக்காவுக்கு டாட்டா இண்டிகாம்,

எனக்குமட்டும் BSNL..லேண்ட் லைன்.

வீட்டோட இருக்கும் வேலைக்காரிக்கு,
பதில் மட்டும் சொல்ல,
இது போதும்தானே.


Saturday, November 28, 2009

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடுமீது பெட்ரோல் குண்டுவீச்சு.

நேற்று தமிழகமெங்கும் பரவலாக,மாவீரர் தினத்தை "தமிழ் உணர்வாளர்கள் வீரவணக்க அஞ்சலி கூட்டங்கள் நடத்தினர்."
குறிப்பாக ஈரோடு நகரெங்கும் வைக்கப்பட்டிருந்த "இன விடுதலைக்காக தனது இன்னுயிர் ஈந்த மாவீரன் பிரபாகரன்" திரு உருவப்படம்
தாங்கிய பேனர்களை,குவாட்டர் பிராந்திக்காகவும்,பிரியாணி பொட்டல த்திற்கும்,ஈ.வி.கே.எஸ்.உடன் வந்தவர்கள் அடித்து நொறுக்கினர்.
இந்த கொடுமையை சில தமிழ் உணர்வாளர்கள் நேற்று இரவே சென்னை அடையாரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எசின்
வீட்டில் 12 மணியளவில் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினர்.அவை வீட்டு முற்றத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. மந்திரி உட்பட வீட்டில்
யாரும் தூங்கவேயில்லையாம். [நெறி கட்டுற மேட்டர் தொடங்கிருச்சோ]


Thursday, October 29, 2009

"நிறம் மாறாப் பச்சோந்தி."

துட்டகை முனு தந்த தூமை தோய்த்து,

பொது விகடம் பேசி சிரித்து,

சாதிய வம்பு திரித்து,

தமிழரபி வன்மம் புனைந்து,

வர்க்க முலாம் பூசிய,

பாசிச நாக்கு நீட்டி,

விதி மெலிந்த விட்டில் பூச்சிகளை,

விழுங்கித் தீர்க்கிறது,

நிறம் மாறாப் பச்சோந்தி.


Monday, October 26, 2009

"மச்சினிக் -கா - துஷ்மன்."

1"மச்சினிக் -கா - துஷ்மன்."

2."தீரமூதி."

3."நட்டுவாக்காலி."

4."எசக்கி முத்துவும் நம்ம இஸ்மாயில் பேரனும்."

5."பிரண்டை."

6."தித்துலி-புத்துலி ராவுத்தர்."

7."ஜிந்தாபாத் -கி- ராணி."

8."புண்ணாக்கு."

9."கவட்டை."

10."இடிபாட்டுக்கு பிறந்தவனின் ஒப்பாரிக்கவிதைகள்."

11."உலகத்தொழிலாளர்களின் ஒட்டுமொத்தக் குத்தகைத்தாரர்கள்."

இவையெல்லாம் என்னுடைய "ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக் காலத்தில்
எழுதித் தீர்த்த, சிறுகதைகள்,கவிதைகளின் தலைப்புக்கள்."

மேலும் மேற்கண்ட தலைப்புகளை "அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள
லாஸ் ஏஞ்செலஸ் நகரில் இருக்கும் புனைவு சார் அறிவியல் கழகத்தில் -ஆசிய தமிழ் இலக்கியப் பிரிவில் பதிந்து வைத்து பிரத்தியேக உரிமை,அதாவது பேடன்ட் ரைட்ஸ் வாங்கி உள்ளேன்."

எனவே தயவுசெய்து யாரும் என் அனுமதி பெறாமல் மேற்கண்ட தலைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என வம்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Friday, October 23, 2009

முல்லைப்பெரியாறு: "கொடுங்கனவின் கானல் நீர்!"

பல ஆண்டு காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்பிரச்சனை,இப்பொழுது அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.கேரளா அரசின் ஏமாற்றுத்தனமும், தமிழக அரசின் ஏமாளித்தனமும் சேர்ந்து , "தென் தமிழக மக்களை தீராத தாகத்தில் தவிக்க வைத்திருக்கிறது."

புளுகு மூட்டைகளின் மீது,உட்காந்துகொண்டு சோசியலிசம் பேசும்,மார்க்சிய அச்சுதானந்தன் ,"முல்லைப்பெரியாறு அணை உடைந்தால்,பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது", என்பதெல்லாம் , "முப்பத்தியொரு ஆண்டுகளுக்குமுன்னால்,புனையப்பட்ட அரசாங்க ப்பொய்." என்பது நேற்றுக்காலை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழில் திரு.பாபு ஜெயக்குமார், எழுதியிருந்த கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொண்டேன்.

[இலங்கை - சந்திரிகாவிடம் கேல் விருது வாங்கியவரும்,சிங்கள -பௌத்த அரச பயங்கரவாதி ராஜ பக்செவின் தத்துப் பிள்ளையும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க்கட்சியின்
காட்பாதருமான,ஹிந்து நாளிதழை,என் வீட்டு கழிவறைக்காகிதமாக க்கூட பயன் படுத்துவதில்லை.மேலும் உறவினர்கள்,நண்பர்கள் ,ஏன் பயணத்தின் சக பயணிகளில் யாராவது 'ஹிந்து நாளிதழ் " படிப்பவராக இருந்தால்,அவர்களிடத்தில் ஹிந்து ராமின்
அதிரூப அம்சங்களை எடுத்துச்சொல்லி,தற்போது அவர்கள் கையில், ஹிந்துவைத் தவிர்த்து,மாற்று நாளிதழைப் பார்ப்பது, "எளிமையான,சிறிய கருத்துப் பிரச்சாரங்கள், பெரிய மாற்றங்களை உண்டுபண்ணும் என்ற என் கருத்துக்கு வலு சேர்த்து நிற்கிறது.]

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் நிமிர்ந்து நிற்கும் இரட்டை மலைகளான, குறவன்
மலை, குறத்தி மலையின் இடைவெளியை அடைத்து 555 -அடி உயரத்திற்கு கட்டப்பட்ட
இடுக்கி அணையானது,1922-லேயே அணை கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு ,
1932-ல் நீர் மின்நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அப்போதைய திருவாங்கூர் அரசிடம் அனுமதி பெற்று,1969-ல் திட்டத்தை தொடங்கி,1975-ல் 780
மெகாவாட் வரை மின்சாரம் தயாரித்துக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நின்ற இடுக்கி
நீர் தேக்கத்திற்கு, நினைத்த அளவில் நீர் வரத்து வந்து சேரவில்லை.

மனிதர்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால்,காட்டு வளங்கள் அழிக்கப்பட்டதால்,
பருவம் தப்பி சரியான மழை இல்லை.சுதாரித்துக் கொண்ட கேரள அரசு, இந்த திட்டத்திற்கு குறுக்கே நந்தி மாதிரி நிற்பது 152 [15.5 TMC ft] அடிவரை நீரைத் தேக்கி நிற்கும்
முல்லைபெரியாறு அணை தான்.எனவே முல்லைப் பெரியாறு அணைக்கு ஆப்பு வைத்து
பெரியாருக்கு மேற்கு நோக்கி ஓடும் நீர்வரத்தை அடைத்து,கிழக்கு நோக்கி திருப்ப,
குறுக்கே அணைகட்டி, நீரை இடுக்கி நீர்தேக்கத்திற்கு அனுப்ப சூது செய்து,1978-ல் கேரள
அரசால் கூட்டப்பட்ட,ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட, அப்போதைய
அரசியல் வாதிகளாலும்,அதிகாரிகளாலும், தொழில் நுட்ப வல்லுனர்கள் என்று சொல்லிகொண்டவர்களாலும் ,"ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக
எடுக்கப்பட்ட முடிவு, அல்லது ஒரு சேரப் புனையப்பட்ட பொய் செய்திதான்,
"முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது.எந்நேரமும் உடையலாம்,
அவ்வாறு உடைந்தால் பல லட்ச மனித உயிர்கள் பலியாகலாம்." என்பது.


சரி, இந்த பொய் செய்தியை எப்படி பரப்புவது? என்ற கேள்விக்கு,அந்த கூட்டத்திலிருந்த
பொறியாளர் "விசயம் ரொம்ப எளிது." ஒரு பத்திரிக்கை நிருபரை வரவழையுங்கள்.
கூட்டத்தின் முடிவைச்சொல்லுங்கள், மீதி வேலையை அவர் பார்த்துக்கொள்வார். என்று சொல்ல,அதன்படியே அன்றைய பிரபல மலையாள நாளிதழ் நிருபர் வரவழைக்கப்பட்டு,
அடுத்த நாளே, அது தலைப்புச்செய்தியாக,இதையே கருத்துப்பிரட்ச்சாரமாக ஒவ்வொரு
மலையாளியும் செய்யத்துவங்கினார்கள். இடையில் 1979-ல் ரிக்டர் அளவில் 2 புள்ளி
ஏற்பட்ட நிலநடுக்கமும் அவர்களது பொய்க்கு வலு சேர்க்க,இன்று வரை அந்த பொய்
மூட்டையை தூக்கி சுமக்கிறார்கள்.


ஆனால் உண்மை என்னவென்றால்,அப்படியே அணை உடைந்தாலும்,முல்லைப் பெரியாறு அணை நீரானது ," நீர் வழிந்தோடியதால் ஏற்பட்ட மலை இடுக்குகளின் வழி
ஓடி, நேராக இடுக்கி நீர் தேக்கத்தை தான் அடையும்."இடுக்கி அணைக்கு எந்த சேதாரமும்
ஏற்படாது,ஏன் என்றால் முல்லைப் பெரியாறு நீர்தேக்க கொள்ளளவை விட, இடுக்கி அணையானது, நான்கு மடங்கு பெரிய,அதாவது 72.6 TMCft அளவு கொள்ளளவு கொண்டது. இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்பது கட்டுக்கதை,என்ற உண்மையை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை.

இப்படியே கடந்த முப்பத்தொரு ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் இப்பிரட்சினை இன்று உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எது எப்படியோ? இங்கே
பருவ மழையும் தப்பிப்போக,வைகை அணையும்,"இந்தா-அந்தா" என்று ஏமாற்ற,
விதை நெல்லை, நாற்றுப்பாவி,தண்ணீர் இல்லாமல், நாற்றும் கருகிப்போய்,
நடவு செய்யமுடியாமல், விழி பிதுங்கி நிற்கும் ஏழை விவசாய சனங்களுக்கு
என்னபதில் சொல்லப்போகிறது.? "இத்தாலிய இறக்குமதியான சோனியாவின்
இந்திய இறையாண்மை."

Thursday, October 15, 2009

"ஏர் டெல்-போனில் டிவிட்டர் சேவை.".


நாளுக்கு நாள்,ட்விட்டிக்கொண்டு இருப்பவர்கள் அதிகமாவதால்,தனது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சேவையாக,இந்தியாவில் நூறு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர் -டெல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ள ட்விட்டர்
நிறுவனம் இன்றுமுதல் மொபைல் போனில் -எஸ் எம் எஸ் செய்வதன் மூலம் ட்விட்டிக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.

சேவையை தொடங்க ட்விட்டர் கணக்கில் டிவைசெஸ் கிளிக் செய்து உங்களது மொபைல் என்னை கொடுக்கவும். மேலும் விபரங்களுக்கு ஹெல்ப் பகுதியை படிக்கவும்.

Friday, October 9, 2009

"பார் கோடில் உங்கள் பெயர்".பார் கோடில் உங்களது பெயரையோ,அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரையோ,இப்படி எதை வேண்டுமானாலும் பார்கோடில் பார்க்க ஆசை இருக்கிறதா,நண்பர்களே.?
ரொம்ப சுலபம். கீழே உள்ள இணைய தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய பெயரை க்கொடுத்து அழகு பாருங்கள்.

http://www.morovia.com/free-online-barcode-generator/

தடுப்பு முகாம் கவிதைகள்.

பாலைவெளியின் சூன்யம் புரளும்

நீளமான இரவுகளில்

கொட்டி நிற்கும் கொடுக்குகளை

பிடுங்கிப்போட யாருமில்லை .

பால்வற்றிய தனங்களில்

வாயலையும் குழந்தைகளுக்கு

கொஞ்சம் கள்ளிபாலேனும்

தாருங்களேன்.

வக்கிர ஊளையிட்டு

சிங்கள ஓநாய்கள் காவலிருக்க

செம்மறி கிடைகளாய்

எம் தமிழ்தேசிய இனம்.

தொப்புள்கொடி சொந்தங்களே

தமிழ்சாதி உறவுகளே .....

மானாட மயிலாடிவிட்டு

எப்போதாவது ....

நேரமும்...ஈரமும் இருந்தால்

எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்.
===================================================================================

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.
===================================================================================

வல்லுறவும்
சீருடைப்பேய்களின்
குரங்கிடைப்பண்டமாய்
பெற்றவள் கிடப்பதை
கண்பொத்தி விலகாமல்
பதைத்துப் பார்க்கிறான்
விதி மெலிந்த சிறுவன்.
===================================================================================

புதை குழி மேவித்திரும்பும்
இரும்புச்சக்கர வாகனமொன்று
கிளறிவிட்ட புழுதியில்
மின்னி....மறையுது
தமிழச்சியின் தங்கத்தாலி.
===================================================================================

Saturday, October 3, 2009

அறுந்தும் விழாத வால்.

வாலறுந்து வந்தவன் மனிதன் என்கிறார்கள் ,
ஆனால்......
வாலுடன் வாழும் மனிதர்களாகவே
இன்னும் இருக்கிறோம்.


ஒவ்வொருவருக்கும்
இது..முளைத்தே பிறக்கும்.
நாம் இறந்தாலும் இருக்கும்.
இப்படி அதிசயமான இந்த வால்,
மந்திர வாதிகளால் கணவாய் கடந்து வந்த
தெய்வ உறுப்பு என்று சொல்லிக்கொள்கிறார்கள்.


இது அழகானது .. அது அசிங்கமானது
இது குட்டையானது ,அது நெட்டையானது,
இது மொட்டையானது,அது கூரானது,
என்று அடுத்தவர் வாலைப்பற்றி, வாயாடுகிறார்கள்.


இந்த வாலை வைத்துக்கொண்டு ,
சிலர் சிலிப்பிக்கிட்டே த்திரியவும்,
சிலர் சுருட்டியே வைத்திருக்கவும்
பழக்கப்படுத்திக்கொன்டார்கள்.


அவ்வப்போது....
அவரவர் எல்லைக்குள் ..
மயிலாட்டம், குயிலாட்டம்,
கரகாட்டம்,ஒயிலாட்டம் போல,
வாலாட்டம் ஆட..
வழக்கப்படுத்திக்கொண்டார்கள்.


அவ்வப்போது அவரவர் வாலை,
நீட்டிக்காட்டவும்,
ஒளித்துச்சுருட்டவும்
ஆசைப்படுகிறார்கள்.


சிலருக்கு ...இந்த வால்
"அவஸ்தையின் ரீங்காரம்,"
இன்னும் சிலருக்கு ..
"அவசிய அங்கீகாரம்".


பலருக்கு இந்த வால்..
நமட்டிச்சிரிக்கவும்,
நக்கி பிழைக்கவும்,
நடுங்கி ஒடுங்கவும்,
மிடுக்கி ஒடுக்கவும்,
வசதியாய் போனது.


என்ன செய்து தொலைக்க..
ஊரைப்போல, நாட்டைப்போல,
நானும்தான் சுமக்கிறேன்,
அறுந்தும் விழாத என் வாலை.

Wednesday, September 23, 2009

ஒரு கணப்பொழுதில்.


சாதாக் கட்டணத்தில் பயணம் செய்ய திணறுகிறான்,
சுவிஸ் வங்கியில் பணம் மறைத்த கதர்ச்சட்டைக்காரன்.

மண்ணெண்ணெய் இன்று இல்லை,
ரேஷன் கடை போர்டு படித்து திரும்பும்,
அயித்த மக விருமாயி.

ஜகன் மோகினிக்கு பிரமாண்ட கட்டவுட்,
தமிழ் ரசிகர்கள் ஆரவாரம்,
"அடுத்த முதல்வர் கோஷத்தோடு,
சிலைஎடுக்க சூளுரை."


வன்னி வதை முகாமில்,
பெண் போராளியின் -பிறப்புறுப்பில் ,
பூட்ஸ் கால் திணிக்கப்படுகிறது.


விண்வெளியில் குப்பை சேர்க்க,
அடுத்த கவுண்டவுன்.

சிக்னல் பிட்சைக்காரியின்,
முந்தானை பிடித்து வந்த,
ஐந்து வயதுமகள் பிரேக் பிடிக்காத லாரி மோதி பலி.


"நான் அள்ளி முடுஞ்சா-அறங்காவலர் பதவி"
"தூக்கி சொருகினா -துணை பொறுப்பு."
மேடை தோறும் முழங்குகிறாள்,
மகளிரணி தலைவி,அஞ்சு கொலை பண்ணிபுட்டு.


வேலூர் சிறையில் .....
"நளினி சாகும் வரையில் உண்ணாவிரதம்".


வாடிகன் கர்தினால்,
அமெரிக்க சுற்றுலா பயணம்.


லாஸ்வேகாஸ் இரவு விடுதியில்,
வெள்ளைக்கார சிறுமி ஒருத்தி,
தேம்பி தேம்பி அழுகிறாள்.


ஓசோன் படலம்,மெது..மெதுவாய் கிழிகிறது.


துருவத்து பனிமலை மெல்ல கரைகிறது.


"மாப்ள- என் புள்ளகள பாத்துக்கடா,"
என்றபடி,என் கன்னம் தட்டி ,பிரமை களைத்த,
மாயப்பாண்டி திரும்ப்பக்கிளம்புகிறான்,
பரோலில் வந்த லீவு முடிந்து.

"இப்பொழுது வாசிக்கிறேன்...
இந்த கணப்பொழுதை"

Friday, September 18, 2009

வலியை பிரதியெடுங்கள்.

வலியை பிரதியெடுங்கள். ஒரு நிமிடம் "இந்த உசுரை பொசுக்கும் இசையை கேளுங்களேன்."Thursday, September 17, 2009

கிளர்ந்தெழுந்தவளின் படுக்கை விரிப்பு.

அந்தரங்க நூலிழையாடி

காயம் கசிந்த ..

சாயமேற்றி,

உடல் புரண்ட

உஷ்ணம் தாங்கி,

கால் பரப்பிக்கிடக்கிறது,

கிளர்ந்தெழுந்தவளின்

படுக்கை விரிப்பு.Tuesday, September 15, 2009

இன்று தேவன் மாயம் பிறந்தநாள்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும், பிரபல பதிவர் " டாக்டர் - தேவன் மாயம்"அவர்கள் இறைவன் அருளால்,மன மகிழ்ச்சியோடு, உடல் நல சுகத்தோடு, பல்லாண்டு காலம், பெருவாழ்வு -வாழ, அவரது குடும்பத்தாரோடு சேர்ந்து, நாமும்,வாழ்த்துவோம். பதிவுலக வாழ்த்து மழை,தொடரட்டும்.


Saturday, September 12, 2009

பதவி நாற்காலி

இந்த நாற்காலி
இலவசமாய் வந்த,
உதிரி பாகங்களை
ஒட்ட வைத்து செய்த
சுதேசி தயாரிப்பு தான்,
என்றாலும் ....
"இதனை இயக்கும்
ரிமோட் மட்டும்
இத்தாலிய இறக்குமதி."


Thursday, September 10, 2009

ஜெலட்டின் உதடுகள்

பார்த்தவுடன்
பச்சக் கென்று ,
பற்றிக்கொள்ளத்துடிக்கும்
பரவசப்பிரதேசம்.

இது...
அன்னத்தாலானதுகள்
நுழையும் வாசல்.
உணர்ச்சிகளை தேக்கி நிற்கும்
உடலாயுத கிடங்கின்
தலைவாசல்.
ஈரத்தை துப்ப ....
அவ்வப்போது
நீளும் ..நாவினால்
நமத்துப்போய்
வெடிக்காமலிருக்கிறது
"அவளது..
ஜெலட்டின் உதடுகள்."


Tuesday, September 8, 2009

புலிகள் அழிவதில்லை

உயிரடங்கும் வரையில்
உணர்வுகள் மரிப்பதில்லை,

தவிப்பிருக்கும் வரையில்
தாகம் அடங்குவதில்லை,

தீர்க்கப்படாத வரையில்
களத்துமேடுகள் சரிவதில்லை,

காடுகள் உள்ள வரையில்
புலிகளும் அழிவதில்லை.

பின்குறிப்பு: புலி புடிச்சா ஒட்டு போடுங்க, கிலிஅடிச்சா ஓடி போயிடுங்க.


Sunday, September 6, 2009

நாய்ப்பாவம் பொல்லாதது.

எந்த நாய்களை பார்த்தாலும்
அழகாய் தானிருக்கிறது.


வாலை ஆட்டி,
அவைகளோடு கூடி..குலாவ,
ஆசை கொப்பளிக்கிறது.


என்ன செய்வது?
"மனித வேடத்தில் குரைப்பது பாவமாம்."

Saturday, August 29, 2009

என்றும் இனிக்கும் ரஜினி பாடல் வீடீயோவுடன்

சொந்தங்களே, வணக்கம்.

வேற ஒண்ணுமில்ல,சும்மா ஒரு சேஞ்சுக்கு ...தான். நம்ம எழதி போடுற, நாலு வரி கவிதையை படிக்க,ஆளுகளை எப்படியெல்லாம்,புடிக்க வேண்டியிருக்கு பார்தீர்களா? வீடீயோவை பார்த்துட்டு ,நம்ம கவிதைகளை படிச்சுட்டு போங்க.

அப்புறம் இந்த பாடலை பத்தி சொல்லலும்னா, எனக்கு எப்பவெல்லாம் சார்ஜ் குறையுதோ, இதை பார்த்து ஏத்திகுவேன்.உங்களுக்கும் ஏதாவது ஏறுதான்னு டெஸ்ட் பண்ணிக்குங்க .

அன்புடன் ஜெரி.

Thursday, August 27, 2009

அதிசயங்களுக்காய் காத்திருக்கிறேன்

வார்த்தைகளற்ற வலிகளிலும்,
மானுடம் மறந்த மொழிகளிலும்
புதையுண்டு போனது
எனக்கான கவிதையும் தான்.


அரச பயங்கரவாதத்தின்
கோரப்பற்களால்
குத்திக்கிழிக்கப்படும்
நரமாமிசமாய் நான்.


ஆனாலும்
காத்திருக்கிறேன்....
சில அதிசயங்களுக்காய்.


ஜெரி ஈசானந்தா-மதுரை.


Monday, August 24, 2009

பால்ய குரூரம்


எப்போதும்...
தன்னுடன் வைத்திருக்கும்
குண்டூசியை,
இமை திறந்து
நடுவில் நிற்கும்
கண் பாவையில்...
மெல்ல செருகி
கசிந்து வரும் துளிகளில் ...
களைத்துப்போகிறான்,
மொட்டுகளை நுகரும்
முடவன்.
"ஜெரி ஈசானந்தா"


Wednesday, August 19, 2009

தமிழக அரசின் உத்தரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

"தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல' என்று உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தீர்ப்பளித்துள்ளன. அதன் அடிப்படையில் தான் "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான் (பழ.நெடுமாறன்), வைகோ உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டோம். நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களின் படங்கள், கொடிகள் மற்றும் சின்னங்களை வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று ஊடகங்களையும் தலைமைச் செயலாளர் மிரட்டியுள்ளார்.

முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதம் அல்ல என்று 3-2-2009-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தை சட்ட விரோதமானது என எச்சரித்து தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும், கட்சிகளையும், ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதல்வர் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

ஈழத் தமிழர் பிரச்னை சுமுகமாக தீர்ந்து விட்டது என்று சில நாள்களுக்கு முன்னாள் கூறிய முதல்வர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார்.. இப்படி முன்னுக்கு பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் ஒடுக்க முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்று நெடுமாறன்
"ஜெரி ஈசானந்தா"-மதுரை.


Monday, August 17, 2009

சாக்கடைப்புழுக்கள்

ஊர்ந்து ... நெளியுது
வளைந்து ...அலையுது,
சாக்கடைப்புழுக்களாக்கப்பட்ட
தமிழ் தேசிய இனம்.

மழையும் சேந்துக்கிட்டு

தாலிய போட்டு அறுக்க ,

தாகம் அடங்கிப்போச்சு...

தவிப்பு தொடங்கிப்போச்சு.

"ஜெரி ஈசானந்தா"-மதுரை.

...Saturday, August 15, 2009

சுதந்திரதினமும் சூத்த கத்தரிக்காயும்

அப்பனுக்கு கடுங்காவல்
ஆத்தாளுக்கு யார்யாரோ காவல்,
நான் இப்ப அம்மாச்சி வீட்டில் வளர்கிறேன்.

அம்மாச்சி ...
இன்னைக்கி சுதந்திர தினம்,
கொடி வாங்க துட்டுதரியா?

சுருக்குப்பை கிளறி
கிழவி கொடுத்த ஒத்த ரூபாய்
நாணயத்தோடு ஓடுகையில்

எலேய் ... கொடிய வாங்கிகிட்டு ..
குழம்புக்கு ஏதாச்சும் கேட்டுபாருயா..
என்று அம்மாட்சி கத்துவது காதில்விழ..
கடைக்கு சென்று கொடிவாங்கி திரும்புகையில்


கடைக்காரர் தந்த ஒசிப்பையை பிரித்து பார்த்தேன்.
எப்பவும் வரும்கழிச்சு போட்ட காய்களோடு

புதுசா ரெண்டு சூத்த ..கத்திரிக்காய்.

Thursday, August 13, 2009

பின்னூட்டமிட வாடகைப்பதிவர் தேவை.

மதுரை ஜெரி ஈசானந்தாவின் "சிலேடையில் ஒரு செல்ல .. சிணுங்கல்".

சமைந்ததும்

இலைக்கு வரும்

அன்னபூரணி நான்...

வீடும்; காடுமென,

மேய்பவருக்கு,

எடுத்துண்ண ...

அக்கறையில்லை.

எனக்கு பின்னூட்டமிட

வாடகைப்பதிவர்

உடனே தேவை.

பின்குறிப்பு: வலை பதிவர்களுக்குள் மகா.. மெகா.. கூட்டணி எல்லாம் இருக்குமோ என மனதில் பட்டதால் வந்த கவிதை இது. பரிந்துரையா? தெரிந்துரையா? ஒன்றும் புரியவில்லை. இந்த சிணுங்கலில் யாராவது வழிந்தாலோ ..யாருக்காவது வலித்தாலோ? நான் பொறுப்பல்ல.Monday, August 10, 2009

போதி மர நிழலில் வாதைகளின் கூடாரம்

* * *
போதி மர நிழலில் ..
வாதைகளின் கூடாரம்.

வதைகூட மூலையில் .....
புத்தனின் பல்லில்
கூர் ஏற்றிக்கொண்ட
கொடுங்கருவிகள்,
சபிக்கப்பட்ட கடவுளர்களால்
கைவிட்ட உயிர்களை
சிதைத்து ... சிதைத்து ...
சிவப்பேறி காத்திருக்கிறது.

சுவற்றில் .....
மேய்ப்பன் அற்ற ஆடுகளின்
உயிர் தெறித்த சிதறல்கள்.

தரையில் .....
மீட்க மறுத்த மீட்பர்கள் மீது,
சாபங்களை துப்பியவர்களின்
சதைத்துணுக்குகள்.

சிறகுகளை பிரிந்த
இறகுகளை கட்டிப்போட..
இரும்பு சங்கிலிகள்.
சதையோடும் ..தரையோடும்..
புரண்டளுத்தும் சத்தம்
காதைப்பிளக்கிறது.....

காற்றில் கரைந்து வரும்
சாட்சியமற்ற சடலங்களின் ,
கருகல் நெடியில்
நாசி .. நடுங்க .....

விழி மலங்க .....
காத்திருக்கிறேன்,
என் முறை .. எப்போதென ..

***
"ஜெரி ஈசானந்தா"-மதுரை.


Saturday, August 8, 2009

வதை முகாம் கவிதை.

ஓய்வறியா கொலைக் கருவிகள்
ஒவ்வொன்றும் ஒரு வகை.

விழி தோண்ட ஒன்று
நகம் பிடுங்க ஒன்று,

தலை பிளக்க ஒன்று
முலை அறுக்க ஒன்று

குறி நசுக்க ஒன்று
குதம் துளைக்க ஒன்று

ஒ ..... சிங்கள பேரினவாதமே
வகை வகையாய் ஆயிரம் இருப்பினும்
ஒன்றேனும் கொண்டு வா
என்... ஆன்மாவை தொட்டுவிட.

Monday, August 3, 2009

"நீதியின் அரசன் -கே.சந்துரு"

ஏதாவது ஒரு பிரச்சினையில் நம் பக்கத்தில் உண்மை,நியாயம்,தர்மம் இருக்கிறது என்று தெரிந்திருந்தும்,சரி,தவறுகள் தெரிந்திருந்தும் ,நமக்கானஉரிமை ,வாய்ப்பு மறுக்கபடுகிறபோது ேலி,அவதூறு செய்யப்படுகிறபோதுபலர் ஏமாற்றத்தில்கரைந்துபோய்விடுகின்றனர்,இன்னும் பலர் விரக்தியில் தன்னை புதைத்துக்கொண்டு,ஒதுங்கி,எதிர்கொள்ள திராணியற்று, இவ்வுலகையும்,மக்களையும் சபித்து விட்டு, சராசரி வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். இன்னும் பலர் வேதனையை மறக்க நினைத்து ஏதாவது பலவீனங்களில் சிக்கி கொள்கின்றனர்.

மிக சிலர்மட்டும் கடைசி வரை போராடி பார்த்து விடுவதென முடிவு செய்து இந்த ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நீதி துறையை நம்பி வருகின்றனர்.இப்படியாக நம்பி வந்தவர்களுக்கு சரியான நியாயம் கிடைத்துவிட்டால் நாம் வாழும் வாழ்க்கை மீதும் இச்சமுகம் மீதும் நம்பிக்கை வருகிறது.

இப்பதிவின் நோக்கம் அண்மைக்காலமாக நீதியரசர் கே. சந்துரு அவர்கள் வழங்கிவரும்"தீர்ப்புகள்"மனிதநேயம்மிகுந்ததாக,எல்லோரும் கைதட்டி வரவேற்க கூடியதாக இருக்கிறது. இனி நீங்களும் அவரது தீர்ப்புகளை கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான். உதாரணமாக திராவிடர் கழகத்திற்கும், பெரியார் திராவிடர் கழகத்திற்கும்,பெரியாரின் உரையை புத்தகம் போட்டு மக்களிடம் கொண்டு செல்வதில் எழுந்த பிரட்சினையில் "பெரியார் -உலக தமிழர் அனைவருக்கும் பொதுச்சொத்து"- தனிஒருவரோ,தனி நிறுவனமோ உரிமை கொள்ளக் கூடாது?என்ற தீர்ப்பாகட்டும், சன் தொலைக்காட்சியில் ஆறாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று முன்மொழியப்பட்டு,மக்களால் பரவலாக பேசப்பட்ட அந்த பிரட்சினையும் அதனோடு தொடர்பு படுத்தி மத்திய அமைச்சர் ராசாவின் பழைய, புதிய வாழ்கையை ஒப்பிட்டு எழுதிய பத்திரிக்கை செய்திக்கு அமைச்சர் ராசா "தடை" வாங்க முற்பட்டபோது,அமைச்சருக்கே பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டு அறிவுரை சொன்ன தீர்ப்பு ஆகட்டும் நீதி அரசர் "கே.சந்துரு" அவர்கள் மக்கள் மனதில் நிற்கிறார்.

என் மனதை தொட்ட தீர்ப்பாக, கடந்த வாரம் சென்னையை சேர்ந்த ஜார்ஜ் கிறிஸ்டோபர் "ஏர் -இந்தியா" நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரும் இவர் மனைவி கிறிஸ்டி சந்திராவும் சேர்ந்து "தான்யா" என்ற பெண் குழந்தையை "தத்து"எடுத்தனர். குழந்தையை தனது மகள் என்ற முறையில் அக்குழந்தைக்கு "ஏர் -இந்தியா" நிறுவனத்தில் வழங்கப்படும் சலுகைகளை கேட்டு விண்ணப்பிக்க ,நிர்வாகமோ "நீங்கள் சட்டபூர்வமாக தத்து எடுக்கவில்லை",எனவே உங்களை குழந்தையின் பாதுகாவலராக தான் கருத முடியும்,என்று தெரிவித்தது.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் சோர்ந்து போய்விடாமல், குழந்தையோடு நீதிமன்ற கதவுகளை தட்ட,நீதியரசர் "கே.சந்த்ரு" இந்த வழக்கை விசாரித்து தனது தீர்ப்பில்,"கிறீஸ்தவ தம்பதியினர் மைனர் குழந்தையை தத்து எடுப்பதற்கு முன்பாக அதற்கு பாது காவலர்களாக இருந்த்துள்ளனர். அதன் பிறகு அந்த குழந்தையை தத்து எடுப்பதற்கான ஞானஸ்தான சடங்க்குகளை செய்துள்ளனர்.இவ்வாறு செய்வதை சட்டபூர்வமானது அல்ல என்று ஒதுக்கி தள்ளுவது அநியாயம்.

இளஞ்சிறார்கள் சட்டப்படி விருப்ப பட்டவர்கள் தத்து எடுக்க வழி உள்ளது.மேலும் ரோமன் கத்தோலிக்க கிறீஸ்தவ சட்டமானது "ஒரு நாட்டில் உள்ள சிவில் சட்டம் அனுமதித்தால் தத்து எடுக்கலாம் என்று கூறுகிறது".இவர்கள் மத சடங்குகள் மூலம் குழந்தையை தத்து எடுத்தது திருச்சபை சட்டப்படி பொருந்தும்.மேலும் தத்து எடுப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல.ஆகவேஇயற்கையாக பெற்று எடுத்த குழந்தைக்கு உரிய எல்லா உரிமையும் இந்த தத்து குழந்தை தான்யாவும் பெற உரிமை உள்ளது.எனவே ஏர்-இந்தியா நிறுவனம் விதி முறைப்படி வழங்க வேண்டிய சலுகைகளை இந்த கிறீஸ்தவ தம்பதியின் தத்து குழந்தைக்கும் வழங்கவேண்டும் என்று மனித நேய தீர்ப்பு வழங்கி தான்யாவின் வாழ்கையை வசந்தமாக்கி இருக்கிறார்.

என் பார்வையில் நீதியரசர் சந்த்ரு ,மக்கள் நல,சமூக நல போராளியாகவே தெரிகிறார். இப்படி யாரோ? எங்கேயோ? யாருக்காகவோ? போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.அதனால் தான் இன்னும் தர்மச்சக்கரம் சுழல்கிறது என நம்புகிறேன். நீங்கள்.........எப்படி?


Monday, July 13, 2009

"இயேசு கிறிஸ்துவும் பிரபாகரனும் "

மக்களையும்
மண்ணையும் மீட்க
அன்பையே ஆயுதமாகவும்
ஆயுதத்தையே அன்பாகவும் ஏந்தி
பன்னிருவரிலும்
பன்னிருமடங்கிலும்
விடுதலை வீரர்களை
சீடர்களாக்கிநீர்கள்
மக்களை மன்னித்தவன்
மத விரோதியாம்
மண்ணை நேசித்தவன்
தீவிர வாதியாம்
இது....
ஆட்சியாளர்களின்
கொலைக்கள தீர்ப்பு
கேத்செமனியிலும்
முள்ளி வாய்க்காலிலும்
காட்டிக் கொடுக்கப்பட்டு
சிலுவை பாடுகளையும்
சித்தர வதைகளையும்
தோள் மாற்றி சுமந்தீர்கள்
கல்வாரியின் கதறல்
நந்திக்கடலில் எதிரொலித்தது
பேயின் ஆட்சியாளர்களுக்கு
புரிவதில்லை ...
உடல்
வெட்ட..வெட்ட..
முளைக்குமென்று .
மீட்பின் பயணத்தை
முப்பத்தி மூன்று ஆண்டுகளில்
முடித்துக்கொண்டாலும்
உயிர்த்து நிற்கிறீர்கள்
உங்களின் கனவுகளை
எங்களுள் விதைத்து

Friday, July 10, 2009

இவர்களை எனக்கு பிடிக்கவில்லை.

ஐந்து நிமிட பழக்கத்தில்
அடுத்தக்கேள்வியாய்
நீங்கள் தேவரா? பிள்ளையா?
என்பவனை.

தீபாவளி இனாம் கேட்டு
வீட்டிற்கே வரும்
மத்திய,மாநில,பொதுத்துறை
தர்மக்காரர்களை.

ஓட்டுப்போட
பூத் சிலிப்புடன்
கவரையும் நீட்டும்
கரை வேட்டிக்காரர்களை .


Thursday, July 9, 2009

முகாமிலிருந்து ஒரு முராரி.

நந்திக்கடலோரத்தில....
நான் தொலைச்ச முத்துக்கள
கண்டெடுத்தா சொல்லுங்களேன்...
மீட்டெடுப்போம் வாருங்களேன்.
ஆண்டு பல காலமா ஏத்திவச்ச பெருநெருப்பு
மண்ணுக்குள்ள போனதடி நெஞ்சுக்குழி வேகுதடி,
மண்ணுக்குள்ள போனாலும் விருட்சமாக வளருமடி
தலவிருட்சமாகி காக்குமடி.


Wednesday, July 8, 2009

புத்தர் தப்பியோட்டம்.

யுத்தம் சரணம் கச்சாமி
மர்மம் சரணம் கச்சாமி
பங்கம் சரணம் கச்சாமி.

Tuesday, July 7, 2009

தடுப்பு முகாம் கவிதைகள்- காட்சி ஐந்து.

புதை குழி மேவித்திரும்பும்
இரும்புச்சக்கர வாகனமொன்று
கிளறிவிட்ட புழுதியில்
மின்னி....மறையுது
தமிழச்சியின் தங்கத்தாலி.

Monday, July 6, 2009

தடுப்பு முகாம் கவிதைகள்; காட்சி மூன்று.

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.
காட்சி நான்கு.
வல்லுறவும்
சீருடைப்பேய்களின்
குரங்கிடைப்பண்டமாய்
பெற்றவள் கிடப்பதை
கண்பொத்தி விலகாமல்
பதைத்துப் பார்க்கிறான்
விதி மெலிந்த சிறுவன்.

Thursday, July 2, 2009

பெயர் தொலைத்த கதை.

ஆதி காலந்தொட்டே
எங்களின் பெயர்
பூனைகள்.

இல்லவே இல்லை
நீங்கள்......
புலிகள்.

சரி நாங்கள் புலிகள்.

கண்கள் சிவக்க
கர்ஜித்த சிங்கம்
கறாராய் கூப்பிட்டது
கானகத்து
கட்டப் பஞ்சா யத்தர்களை .

கழுகும் மயிலும் வந்தது,
கணக்காய் தீர்ப்பும் சொன்னது.

புலியும் வேண்டாம்,
பூனையும் வேண்டாம்.
பிடித்துப்போடு இவர்களை
'' இனி நீங்கள்
சொந்த நாட்டின் அகதிகள்."

Wednesday, July 1, 2009

தடுப்பு முகாம் கவிதைகள்.பாலைவெளியின் சூன்யம் புரளும்

நீளமான இரவுகளில்

கொட்டி நிற்கும் கொடுக்குகளை

பிடுங்கிப்போட யாருமில்லை .

பால்வற்றிய தனங்களில்

வாயலையும் குழந்தைகளுக்கு

கொஞ்சம் கள்ளிபாலேனும்

தாருங்களேன்.

வக்கிர ஊளையிட்டு

சிங்கள ஓநாய்கள் காவலிருக்க

செம்மறி கிடைகளாய்

எம் தமிழ்தேசிய இனம்.

தொப்புள்கொடி சொந்தங்களே

தமிழ்சாதி உறவுகளே .....

மானாட மயிலாடிவிட்டு

எப்போதாவது ....

நேரமும்...ஈரமும் இருந்தால்

எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்.

ஜெரி ஈசானந்தா.

மதுரை.
Saturday, April 11, 2009

divine voice